Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மை-இன் அருமை

Posted: 23 Nov 2016 09:20 AM PST

மை

கன்னத்தில் கரு மை
கண் படாது காக்க
கிண்ணத்தில் கரு மை
நரை தெரியாது காக்க

எண்ணத்தில் பொறுமை
எல்லோரையும் காக்க
அன்னத்தில் மென்மை
அனைவரையும் காக்க

வலக்கையில் கரு மை
வங்கிக்கு வராமல் தடுக்க
இடக்கையில் கரு மை
இரண்டாம் ஓட்டை தடுக்க
ச.சந்திரசேகரன்

ஏளனத்தின் எதிர்காலம்

Posted: 23 Nov 2016 09:12 AM PST

ஏளனத்தின் எதிர்காலம் நீண்ட நெடு வரிசையிலே நிற்கும் பாரத மக்களே மாண்டு விட்ட என்னை மாற்ற வந்த மக்களே வேண்டி நானும் கேட்கிறேன் வரி ஏய்ப்பு செய்யாதீர் மீண்டும் ஏய்ப்பு செய்தாலோ மரணம் வரை ரணமே ஐநூறு ரூபாய்நான் அலட்சியமாய்ச் சிரித்தேன் நூறு ரூபாயைப் பார்த்து நோகும்படி சிரித்தேன் யாருக்கும் தேவையின்றி என்சுயத்தை இழந்தேன் பாரதத்தில் பாமரர்க்கும் பலனின்றி இறந்தேன் நூறுரூபாய் என்னிலும் நூறுமடங்கு உயரத்தில் பத்துரூபாய் என்னிலும் பலமடங்கு பயன்பாட்டில் ஆகவேதான் மானிடரே அகந்தை ...

கூகுள் செயற்கை நுண்ணறிவு போன் !

Posted: 23 Nov 2016 08:41 AM PST

- ரொம்ப காலமாய் நம் பாக்கெட்டுக்கு பழுதில்லாமல் பலசரக்கு விற்ற அண்ணாச்சி தான்... இப்போது முன்னேறி சூப்பர் மார்க்கெட் வைத்து விட்டார். 'உள்ளே போகலாமா? வேண்டாமா?' - இதுதான் கூகுள் விசிறிகளின் இன்றைய இன்றியமையா கேள்வி. 'ஹார்டுவேரும் நானே சாஃப்ட்வேரும் நானே' என ஆரம்பம் முதலே அடம் பிடிக்கும் ஆப்பிளுக்கு போட்டியாக, பல்வேறு ஹார்டுவேர் நிறுவனங்களுடன் கைகோர்த்து தனது ஆண்ட்ராய்டை முன்னேற்றியது கூகுள். இப்போது அதே கூகுள் ஆப்பிள் வழிக்கே திரும்பி முழுக்க முழுக்க தனது தயாரிப்பாக ...

மொழி

Posted: 23 Nov 2016 08:34 AM PST

மொழிகளற்ற அவள் பாஷை அவளுக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லை! அவள் கண்களாலேயே பேசிவிடுவாள்! கைகளாலே மொழிகளை விடவும் அழகாய் சொல்லி விடுவாள்! கண்கள் பேசும் அழகை ரசித்தவன் கட்டிக் கொண்டான்! அழகாய்த்தானிருந்தது அவள் வாழ்க்கை பெண் பிள்ளைகள் பிறக்கும் வரை! அவள் அடி வயிறு கனத்தது மது மயக்கத்தில் மதகஜயானைப்போல் மிதித்தான்! யோனியின் வழியே வழிந்தோடும் குருதியை கண்ணீரால் கழுவினால்! மொழிகள் ஏதும் இல்லை அவளிடம்! ஆம் அவள் ஊமை!! சசி . க

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள்- மின்நூல் தொகுப்பு இதுவரை

Posted: 23 Nov 2016 04:31 AM PST

நண்பர்களே..

இதுவரை பதிவிட்ட இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் தெளிவான மின்நூல்களை இங்கு தொகுத்து
இருக்கிறேன். விடுபட்ட நாவல்களை தரவிறக்கவும் தரவிறக்கம் செய்யாதவர்கள் ஒரு இடத்தில் அனைத்து நாவல்களை பெறவேண்டியும் இந்த பதிவு...

புதிய ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை 82,500 ஆக அதிகரிப்பு

Posted: 23 Nov 2016 03:30 AM PST

புதுடில்லி: நாடுமுழுவதும் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் வகையில் 82 ஆயிரத்து 500 ஏ.டி.எம்.கள் மாற்றப்பட்டுள்ளது. ஏடிஎம் அதிகரிப்பு: இது குறித்து கேஷ்லாஜிஸ்டிக்ஸ் அசோசியேசன் தலைவர் ரித்துராஜ் சின்ஹா தெரிவித்திருப்பதாவது: நாடுமுழுவதும் 2.2 லட்சம் ஏ.டி.எம் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடியின் ரூபாய் மாற்றம் அறிவிப்பிற்கு பின்னர் ஏ.டி.எம்.,களை புதியதாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் வரையில் சுமார் 40 ஆயிரம் ...

சாண்டில்யன் நாவல்களில் வெளிவந்த ஓவியர் லதா அவர்களின் படங்கள் தேவை

Posted: 23 Nov 2016 12:22 AM PST

சாண்டில்யன் நாவல்களில் வெளிவந்த ஓவியர் லதா அவர்களின் படங்கள் தேவை.
குமுதம் வார பத்திரிகையில் வெளிவந்த சாண்டில்யன் நாவல்களில் ஓவியர் லதா அவர்கள் வரைந்த படங்கள் தேவை. பகிரவும்.

மறைந்த ஓவியர் கோபுலுவின் காலத்தால் அழியாத ஓவியங்கள் மற்றும் ஜோக்ஸ்

Posted: 23 Nov 2016 12:02 AM PST

நன்றி- விகடன்
-

சத்குரு அறிவுரை

Posted: 22 Nov 2016 10:15 PM PST

சத்குரு அறிவுரை அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி; ஓடிப் போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் குரு - இந்த பழமொழி எந்த அளவிற்கு உண்மை? சத்குருவிடம் இதைப் பற்றி கேட்டபோது.. 'பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு துரதிர்ஷ்டம், துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். தட்டிக் கழித்துவிட்டுப் போனவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். சுகமாயிருக்கிறார்கள்' என்பதுபோல இதைப் புரிந்து கொள்வது முற்றிலும் தவறு. துன்பமோ, ஆனந்தமோ, அது சூழ்நிலைகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில்தான் முடிவாகிறது. சனி, குரு என்று கிரகங்களை எதற்காக ...

"சதுப்பு நிலங்களை பத்திரப் பதிவு செய்யக் கூடாது:

Posted: 22 Nov 2016 06:01 PM PST

சதுப்பு நிலங்கள் தொடர்பான எந்தவித ஆவணத்தையும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அல்லது வேறு எந்த வித சொத்துகளுடனோ பத்திரப்பதிவு செய்யக் கூடாது என, மாநிலம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு சென்னை மண்டல பத்திரப்பதிவு ஐஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 66.70 ஏக்கர் பரப்பளவை மோசடி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து ரூ.66 கோடிக்கு விற்பனை செய்த வழக்கில், லட்சுமணன், அழகிரி ஆகிய ...

நடைபாதை பக்தர்களுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்

Posted: 22 Nov 2016 06:00 PM PST

திருமலை கோயிலுக்கு நடைபாதை வழியாக நடந்தே செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி உள்ளது. திருமலையில் தற்போது வாடகை அறை பெறுதல், தரிசன டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவற்றிற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடைபாதை மற்றும் தர்ம தரிசனம் வழியாக வரும் பக்தர்களுக்கும் தேவஸ்தானம் ஆதார் அட்டையை இனி கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, கடந்த 17-ஆம் தேதி முதல் திருமலைக்கு நடைபாதை மூலம் நடந்து வந்த பக்தர்களிடம் பரீட்சார்த்தமாக இதை செயல்படுத்தியது. ...

நாளைமுதல் பிக் பஜாரில் ரூ.2,000 பணம் எடுக்கலாம்

Posted: 22 Nov 2016 05:58 PM PST

பணப் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால், அனைத்து பிக் பஜார் ஸ்டோர்களிலும் பொதுமக்கள் தங்களது வங்கி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பிக் பஜார் ஸ்டோர்ஸின் தலைமை நிறுவனமான "ஃபியூச்சர் ஃபார்ம்' குழுமம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வசதி, நாடு முழுவதும் நாற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 258 பிக் பஜார் ஸ்டோர்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரும் வியாழக்கிழமை ...

2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம்

Posted: 22 Nov 2016 05:39 PM PST

வரும் 2018-ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு ஸ்விஸ் வங்கிகளில் தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை இந்தியாவிடம் அளிக்க ஸ்விட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளில் முக்கிய முன்னேற்றமாக இது கருதப்படுகிறது. ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குத் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தை செயல்படுத்துவது தொடர்பான கூட்டறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. எனினும், ...

கருப்பு...வெள்ளை...தொல்லை...11

Posted: 22 Nov 2016 05:10 PM PST

1. பொறியில் சிக்காத பெருச்சாளிகள் சிரிக்கின்றன. 2. பொறியில் சிக்கிய சுண்டெலிகள் தவிக்கின்றன. 3. எலிகளை விரட்ட கருப்புப் பூனைகள் பாதுகாப்பு. 4. எந்த மக்களுக்காக பிரதமர் அழுகிறார்? 5. குழம்பிய குளத்தில் தத்தளிக்கின்றன தாமரைமலர்கள். 6. A T M சொல்கிறது. At a Time no Money. 7. சுவாமி தரிசனத்திற்கு நின்று பழகியவர்கள். இப்பொழுது ATM வாசலில் நிற்கிறார்கள். ந.க.துறைவன். *


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™