Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பார்லி.,யை முடக்குவதில் எதிர்க்கட்சிகள்...பிடிவாதம்!:பிரதமர் வந்தால் தான் சபை நடக்குமாம்

Posted: 22 Nov 2016 08:14 AM PST

'செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து, விவாதம் நடக்கும்போது, சபைக்கு பிரதமர் வந்தே ஆக வேண்டும். இல்லையேல், எத்தனை நாட்களானாலும் சபையை நடத்த அனுமதிக்க மாட்டோம்' என, எதிர்க்கட்சிகள் கோபாவேசம் காட்டியதால், பார்லிமென்ட் நேற்றும் முடங்கியது.

பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் துவங்கி, ஏற்கனவே நான்கு நாட்களும் அமளியால் முடங்கிவிட்ட நிலையில், ஐந்தாவது நாளான நேற்றும், இரண்டு சபைகளிலும் பெரும் ரகளை நிகழ்ந்தது.ராஜ்யசபா துவங்கியதுமே, இந்த பிரச்னை குறித்து பேச, எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுந் தனர். அப்போது குறுக்கிட்ட துணைத் தலைவர் குரியன், ''பிரதமரை, ...

செல்லாத நோட்டு விவகாரம் மோடி நடத்தும் கருத்துக் கணிப்பு

Posted: 22 Nov 2016 08:17 AM PST

செல்லாத நோட்டுகள் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருவதுடன், பார்லிமென்ட்டையும் முடக்கி வரும் நிலையில், இது குறித்து பொதுமக்களின் கருத்தை, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளார்.

கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். செல்லாத நோட்டு களை மாற்றுவதற்கு வங்கிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.இந்நிலையில்,மத்திய அரசின் இந்த முயற் சியை எதிர்த்து, பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த திட்டத்தை கைவிடக் கோரி, எதிர்க்கட்சிகள் ...

அமோகம்!:மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி : தி.மு.க., தவிர பிற கட்சிகளின் 'டிபாசிட்' காலியான பரிதாபம் : தே.மு.தி.க.,வை பின்னுக்கு தள்ளி பா.ஜ., வந்தது மூன்றாமிடம்

Posted: 22 Nov 2016 09:24 AM PST

தேர்தல் நடந்த, மூன்று சட்டசபை தொகுதிக ளிலும், ஆளும் கட்சியான அ.தி.மு.க., வேட் பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். எதிர்க் கட்சியான தி.மு.க., இரண்டாமிடம் பெற்றது. இக்கட்சியை தவிர, பிற கட்சிகள் அனைத்தும், 'டிபாசிட்' இழந்தன. இந்த தேர்தலில், தே.மு.தி.க., வை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., மூன்றாமிடத் துக்கு வந்துள்ளது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு, 19ம் தேதி தேர்தல் நடந்தது. மூன்று தொகுதிகளிலும், நேற்று காலை, 8:00 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. ஆரம்பத்தில் இருந்தே, முன்னிலை வகித்த அ.தி.மு.க., மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியது. ...

ஏமாற்றும் அதிகாரிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Posted: 22 Nov 2016 09:31 AM PST

மும்பை:செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்று வதற்கு, மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில், கமிஷன் பெற்று மோசடியில் ஈடு படும் வங்கி அதிகாரிகள் கண்காணிக்கப் படுவ தாக, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில், சில வங்கி அதிகாரிகள் கமிஷன் பெற்று, மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள் ளன.இது குறித்து, ரிசர்வ் வங்கி, நேற்று வெளி யிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:ஒவ்வொரு வங்கி கிளையிலும், 'டிபாசிட்' செய்யப்படும் மற்றும் மாற்றப்படும், செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட ...

'பா.ஜ., - காங்கிரஸ் விதிகளை மீறவில்லை'

Posted: 22 Nov 2016 09:34 AM PST

'வெளிநாட்டில் உள்ள நிறுவனத்திடம் இருந்து, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பெற்ற நன்கொடையில், எந்த விதிமீறலும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

வேதாந்தா குழுமம் மற்றும் வெளிநாட்டில் உள்ள அதன் துணை நிறுவனங்களிடம் இருந்து, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நன்கொடை பெற்றன;இதில்,வெளிநாட்டு நன்கொடை கட்டுப் பாட்டு சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன என, பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த, டில்லி ஐகோர்ட், 'இதுகுறித்து விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கும், ...

'தோல்வி பற்றி கவலை படாமல் மக்களுக்கு தி.மு.க., பணியாற்றும்'

Posted: 22 Nov 2016 09:37 AM PST

சென்னை:''தேர்தல் தோல்வி குறித்து கவலைப் படாமல், மக்களுக்கு, தி.மு.க., தொடர்ந்து பணியாற்றும்,'' என, சட்டசபை எதிர் கட்சித் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய, மூன்று சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து, ஸ்டாலின், நேற்று சென்னையில் அளித்த பேட்டி:ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, தேர்தல் கமிஷன் செயல்பட்டுள்ளது. பண பட்டுவாடாவை தேர்தல் கமிஷன் கண்டு கொள்ளவில்லை. தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றிருந்தாலும், வருங் காலத்தில் தோல்வியை தழுவும். தேர்தல் தோல்வி குறித்து கவலைப்படாமல், தி.மு.க., தொடர்ந்து மக்களுக்கு ...

மூன்று தொகுதிகளில் நான்காம் இடம்:தே.மு.தி.க.,வினர் கடும் அதிர்ச்சி

Posted: 22 Nov 2016 09:39 AM PST

தமிழக்தில், மூன்று தொகுதிகளிலும், நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டதால், தே.மு.தி.க.,வினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சட்டசபை தேர்தல் தோல்வியால், தே.மு.தி.க.,வினர் பலரும், அ.தி.மு.க., - தி.மு.க.,விற்கு தாவினர். ஆனால், தொண்டர் பலம் அப்படியே இருப்பதாக, தே.மு.தி.க., தலைமை கூறி வந்தது. இதை நிரூபிக்க, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில்,வேட்பாளர் களை நிறுத்தியது. கட்சி தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மூவரும், தீவிரபிரசாரம் செய்தனர். 'அ.தி.மு.க., - தி.மு.க.,விற்கு அடுத்த, மூன்றாவது இடத்தை பிடித்து ...

ரேஷன் பொருட்களின் அளவு குறைப்பு மாதந்தோறும் ரூ.56 கோடி 'ஸ்வாகா'

Posted: 22 Nov 2016 09:43 AM PST

கோவை:ரேஷன் கடைக்கு பொருட்களை, குறைந்த அளவு வழங்குவதன் மூலம், மாதந் தோறும், 56 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில், ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' எனும், கருவி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கார்டுக்கும் பில் போடும்போது, பதிவு செய்யப்பட்ட ரேஷன் கார்டுதாரரின், மொபைல் எண்ணுக்கு, 'எஸ்.எம்.எஸ்.,' செல் லும் வகையில், திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.இதனால், பொருட்கள் வினியோகத்தில், ஊழியர்கள் முறைகேடு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதே வேளையில், ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் பொருட் களின் எடை, குறைவாக ...

மத்திய குழு தமிழகம் வந்தது: இன்று ஆய்வு

Posted: 22 Nov 2016 09:48 AM PST

செல்லாத நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கியதால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய குழு தமிழகம் வந்ததுள்ளது. இக்குழு, வேலுார், கோவை மற்றும் திருச்சி மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்கிறது.

'பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, நவ., 8 இரவு, மத்திய அரசு அறிவித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக, நவ., 19ல், பிரதமர் மோடி, 27 குழுக்களை அமைத்தார். இதில், மூன்று பேர் கொண்ட குழு, நேற்று, தமிழகம் வந்தது. இதில், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை கூடுதல் செயலர், மனிதவள மேம்பாட்டுத் துறை இணை செயலர் மற்றும் மத்திய ...

பயங்கரவாதிகளிடம் ரூ.2,000 நோட்டுகள்

Posted: 22 Nov 2016 09:58 AM PST

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட, இரண்டு பயங்கரவாதிகளிடம் இருந்து, சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள, 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சுட்டுக் கொலை :
கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒடுக்கவும், பயங்கரவாதிகள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதை தடுக்கவும், செல்லாத நோட்டு திட்டம், சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் நேற்று சுட்டுக் ...

பசிபிக் வர்த்தக ஒப்பந்தம்: வெளியேற அமெரிக்கா முடிவு

Posted: 22 Nov 2016 10:37 AM PST

நியூயார்க்: ''அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, பசிபிக் பெருங்கடல் நாடுகளின் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற நடவடிக்கை எடுப்பேன்,'' என, அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அதிரடியாக அறிவித்துள்ளார்.

செயல் திட்டங்கள் :
அமெரிக்காவில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட, டொனால்டு டிரம்ப், 70, வெற்றி பெற்றார். 2017 ஜனவரியில் பதவி ஏற்க உள்ள அவர், தன் செயல் திட்டங்களை நேற்று அறிவித்தார். அவர் கூறியுள்ளதாவது: பசிபிக் பெருங்கடல் நாடுகளிடையேயான வர்த்தக ...

வழக்கை சந்தித்தே ஆகணும் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி

Posted: 22 Nov 2016 12:06 PM PST

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்த அவதுாறு வழக்கை ரத்து செய்யக் கோரி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், வழக்கை சந்திக்கும்படி உத்தரவிட்டது.டில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பாக, அதன் முன்னாள் தலைவராக இருந்த, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி குறித்து, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கெஜ்ரிவால் மீதும், அவரது கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் மீதும், டில்லி கோர்ட்டில், கிரிமினல் ...

ரயில் விபத்து; பலி எண்ணிக்கை 150ஆக உயர்வு

Posted: 22 Nov 2016 01:52 PM PST

புக்ராயன்: உத்தர பிரதேசத்தின் கான்பூர் அருகே, இந்துார் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு கவிழ்ந்த விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை, 150 ஆக உயர்ந்தது.

ரயில் தடம் புரண்டது :
மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் இருந்து பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், உத்தர பிரதேசத்தின் கான்பூர் அருகே, நேற்று முன்தினம் தடம் புரண்டது. இந்த விபத்தில், 143 பேர் பலியாயினர். படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 7 பேர் பலி :
இந்நிலையில் ...

டிரம்ப் அமைச்சரவை பட்டியல் தயார்

Posted: 22 Nov 2016 02:42 PM PST

வாஷிங்டன்: டொனால்டு டிரம்ப் தனது அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்களின் பட்டியலை இறுதி செய்துள்ளார்.இதில் மிட்ரோமனியும், மேத்திசும் இடம் பிடித்துள்ளனர்.

பட்டியல் :
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் தனது அமைச்சரவையில் நியமிக்கப்படும் அமைச்சர்களின் பட்டியலை தயார் செய்துள்ளார். இதில் வெளியுறவுதுறைக்கு மிட்ரோமனியும், ஜேம்ஸ் மேத்திஸ் ராணுவ அமைச்சராக நியமிக்கப்படுவர். இதை உறுதிப்படுத்தும் வகையில் டிரம்ப் தனது 'டுவிட்டரில்' மேத்திசை புகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேத்திஸ் 2010- ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™