Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தனிவிமானத்தில் ரூ.3.5 கோடி பழைய நோட்டுகளுடன் வந்த தொழிலதிபர் கைது

Posted: 22 Nov 2016 08:30 AM PST

திமாப்பூர், நாகாலாந்து மாநிலம், திமாப்பூருக்கு தனி விமானத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளுடன் வந்த தொழிதிபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: - பிகார் மாநிலம், மங்கேர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.சிங் என்பவர் ஹரியாணா மாநிலம், சிர்சா நகரிலிருந்து தனி விமானத்தில் திமாப்பூர் விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்தார். அவரது உடைமைகளை மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) ...

Kudiarasu by Plato in tamil

Posted: 22 Nov 2016 07:54 AM PST

பிளாட்டோ எழுதிய குடிஅரசு தமிழில் மின்னிறக்கம் செய்ய முடியுமா?
தயவு செய்து உதவுங்கள்.

சுப்பிரமணியம்


புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு!

Posted: 22 Nov 2016 07:36 AM PST

- சென்னை: புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் பாலமுரளி கிருஷ்ணா. இந்நிலையில், சென்னை, ஆர்.கே.சாலையிலுள்ள இல்லத்தில் பாலமுரளி கிருஷ்ணா உயிர் இன்று பிரிந்தது. - சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக இரு முறை தேசிய விருது பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா. - பத்ம விபூஷன், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுகளையும் அவர் பெற்றவர். சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி ...

4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி

Posted: 22 Nov 2016 06:05 AM PST

தஞ்சையில் அதிமுக வெற்றி: தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றார். 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 97,855 வாக்குகள் பெற்றார். - அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 71,402 வாக்குகள் பெற்றார். 26,483 வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார். தஞ்சாவூரில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ரங்கசாமி கூறும்போது, "என்னை ஆதரித்து வாக்களித்து மக்களுக்கு நன்றி ...

என்னுடைய ஹைக்கூ

Posted: 22 Nov 2016 05:43 AM PST

கோவில் உண்டியல்கள் நிரம்பி வழிந்தன வேண்டுதலா ?இல்லை இல்லை மோடியின் புண்ணியத்தால் ... கறுப்புப் பணம் மேலும் கறுப்பாகியது தீயிலிட்டுப் பொசுக்கியதால் ! கப்பல் செய்யக் காகிதம் தேடிய மகனுக்குக் கப்பல் செய்துதந்தார் அப்பா ஆயிரம் ரூபாய் நோட்டில் ! சில முதலைகளைப் பிடிப்பதற்காக குளத்து நீரை இறைத்தான் ஒருவன் பாவம் ! மீன்கள் அகப்பட்டுக் கொண்டன ! முதலைகள் தப்பி விட்டன ! ATM வரிசையில் எமனும் நின்றான் பணமெடுக்கவா ? இல்லை இல்லை .. பணமெடுக்க வந்தவர்களின் உயிரெடுக்க !

சபரிமலை கோயில் பெயர் மாற்றம்

Posted: 22 Nov 2016 04:20 AM PST

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்ப சுவாமியை தரிசினம் செய்து வருகின்றனர். பெயர் மாற்றம்: சபரிமலை கோயிலை திருவாங்கூர் தேவஸ்வம் ...

கலாதர் அவர்களின்வீ டியோ தேவை

Posted: 22 Nov 2016 03:42 AM PST

எழுத்தாளர் கலாதர் அவர்களின் (2000 ஆண்டு) வெளியிடப்பட்ட வீடியோ (தற்காப்பு கலை) தேவை. வைத்திருப்பவர்கள் அளிக்கவும்.

கான்பூர் ரயில் விபத்து : ரூ.3 லட்சம், 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்!

Posted: 22 Nov 2016 03:40 AM PST

பாட்னா- இந்தூர் ரயில் விபத்தில் 133 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் கான்பூர் அருகே பொக்ரியான் என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில் பத்து பெட்டிகள் தடம் புரண்டன.விபத்து நடந்த இடத்தில் பயணிகளின் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பயணிகளின் பெட்டிகளில் இருந்து ஏராளமான பொருட்கள் வெளியே ...

எப்படியோ கோயிலுக்கு வருமானம் வந்தால் சரி

Posted: 22 Nov 2016 02:27 AM PST


-
எல்லா குடும்பங்களிலும் குறைந்த பட்சம் ஒரு
தடைபட்ட திருமணமாவது இருப்பதால், எப்படியோ
கோயிலுக்கு வருமானம் வந்தால் சரி

———————————–
படித்ததில் பிடித்தது

அறிமுகம்

Posted: 22 Nov 2016 02:24 AM PST

பெயர்:சு.மகேஸ் பாண்டி
சொந்த ஊர்:சிவகாசி
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:
பொழுதுபோக்கு:புத்தகம் படித்தல்
தொழில்:முனைவர் பட்ட ஆய்வாளர்
மேலும் என்னைப் பற்றி:கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல் வாசிப்பதில் மிக்க ஆர்வமுண்டு

மேன்மக்கள் –

Posted: 22 Nov 2016 02:23 AM PST

இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Posted: 22 Nov 2016 02:16 AM PST


-

-
ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஓரணியில் எதிர்க்கட்சிகள்'-
கடும் அமளியால் மக்களவை முடக்கம்

செல்லாக்காசு: பாவலர் கருமலைத்தமிழாழன்

Posted: 21 Nov 2016 07:00 PM PST

- பாயினிலே   அமர்ந்துதொலைக்   காட்சி  கண்டோர்            பதறிடவே   வந்ததிந்தச்   செல்லாச்   செய்தி மாயிருள்தான்   சூழவரும்   இரவுப்   போதில்            மக்களெல்லாம்   ஒருநொடிக்கள்   பிச்சை   யானார் வாயிருந்தும்   பசியிருந்தும்   உணவி   ருந்தும்            வந்தநோயால்    சுவைக்கதடை    யான   போல ஆயிரமாய்   ஐந்நூறாய்   பணமி  ருந்தும்            அதைகொடுத்துப்   பொருள்வாங்க   முடிய   வில்லை ! அன்றாடக்  காய்ச்சியர்தாம்   ஓரி   ரண்டாய்            அவர்கையில்   இருந்ததாளை  மாற்று   தற்குத் தன்கூலி ...

மேற்கு வங்க மாநில அரசு ஊழியருக்கு ரொக்கமாக சம்பளம்; மம்தா அறிவிப்பு

Posted: 21 Nov 2016 05:11 PM PST

கோல்கட்டா: ''மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாக அளிக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். ரொக்கமாக... செல்லாத நோட்டுகள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்நிலையில், மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாக அளிக்கப்படும் என, நேற்று அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™