Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரூ.2.5 லட்சத்திற்கு மேல் 'டிபாசிட்' செய்தவர்களுக்கு... நோட்டீஸ்!:நடைமுறையை துவக்கியது வருமான வரித்துறை:தக்க ஆதாரங்களுடன் வருமாறு அழைப்பு

Posted: 19 Nov 2016 05:16 AM PST

புதுடில்லி:'பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு கள் செல்லாது' என, மத்திய அரசு அறிவித்த பின், தங்கள் வங்கிக் கணக்குகளில், திடீரென அதிகளவில் பணம், 'டிபாசிட்' செய்தவர்களுக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது.

இதனால், கறுப்புப் பண முதலைகளின் பணத்தை, கமிஷனுக்காக, தங்களது கணக்கில் டிபாசிட் செய்து உதவியோர் பீதியடைந்து உள்ளனர்.
போலி ரூபாய்
நோட்டுகளை ஒழிக்கும் வகையிலும்,கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும், '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என,நவ., 8ல், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டுகளை ...

காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர்கள்... அலறல்!:பிரதமரை நிதிஷ் குமார் பாராட்டியதால் கலக்கம்

Posted: 19 Nov 2016 05:23 AM PST

பாட்னா:'பழைய,500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாராட்டு தெரிவித்துள்ளது, அவரது கூட்டணி கட்சிகளான, ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., ஆகியவற்றுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 'மீண்டும், பா.ஜ.,வுடன், நிதிஷ் குமார், கை கோர்த்து விடுவாரோ' என, அந்த கட்சிகளின் தலைவர்கள் பீதியடைந்து உள்ளனர்.

பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணி ஆட்சியில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.நிதிஷ் ...

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய விமானப்படை தயார்

Posted: 19 Nov 2016 08:47 AM PST

புதுடில்லி: எல்லை பகுதியில், ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாக்., ராணுவம், திடீரென போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், எந்த தாக்குதலையும் எதிர் கொள்ளும் வகையில், இந்திய விமானப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில், நம் ராணுவம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி, 40க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றுவிட்டு, வெற்றிகரமாக திரும்பியது. 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என, பெயரிடப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்திற்கு பின், இந்திய எல்லையோர கிராமங்களில், பாக்., ராணுவம் தாக்குதல் நடத்துவது ...

10 - 15 நாட்களில் ஏ.டி.எம்., மையங்களில் நிலைமை... சீராகும்!:புதிய நோட்டுகளுக்கு ஏற்ப இயந்திரம் மாற்றியமைப்பு

Posted: 19 Nov 2016 09:23 AM PST

புதுடில்லி:நாடு முழுவதும், இரண்டு லட்சம் ஏ.டி.எம்., இயந்திரங்களில், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை வைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும், 10 - 15 நாட்களுக்குள், பணத் தட்டுப்பாடு கட்டுக்குள் வரும் எனவும், ஏ.டி.எம்., இயந்திரங்களை சீரமைக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு புழக் கத்தை ஒடுக்க, மத்திய அரசு அதிரடி நடவடிக் கையில், ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, 500 - 1,000 ரூபாய் நோட்டு களை செல்லாதவை யாக,8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 'மக்கள், தங்களிடம் உள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகள், தபால் நிலை ...

மோடியின் அடுத்த அதிரடி?

Posted: 19 Nov 2016 09:25 AM PST

பழைய, 500 - - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. இதனால் கறுப்புப் பணம் வெளியே வரும் என்றார்.

இந்த திட்டத்தால் பொது மக்களுக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இதைப் பெரிதாக்கி பார்லிமென்ட் நடவடிக் கைகளை முடக்கி வருகின்றன. பார்லிமென்டின் மத்திய வளாகத்தில் கூடும் பா.ஜ., - எம்.பி.,க் கள் மிகவும் சோர்ந்து காணப்படுகின்றனர். மோடியின் திட்டத்தால் பா.ஜ., மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் இவர்கள். ஆனால், மோடியோ எதைப் பற்றியும் கவலைப்படவில்லையாம். சில நாட்களுக்கு இந்த பிரச்னை ...

இதுவரை வங்கிகளில் 'டிபாசிட்' ஆன தொகை...ரூ.6,00,000 கோடி!:நிலைமையை கண்காணிக்க குழுக்கள் அமைக்கிறது அரசு

Posted: 19 Nov 2016 09:33 AM PST

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில், 10 நாட்களில், ஆறு லட்சம் கோடி ரூபாய், 'டிபாசிட்' குவிந்துள்ளது. இதற்கிடையில், பொது மக்களின் பாதிப்பை அறியவும், நிலைமையை கண்காணிக்கவும், 27 குழுக்களை, மத்திய அரசு அமைக்கிறது. உச்ச நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, '8ம் தேதி நள்ளிரவு முதல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. அந்த நோட்டுகளை வங்கிகளில், டிச., 30 வரை மாற்றிக் கொள்ளலாம்' என்ற, அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். பின், வங்கிகணக்கில் பணம் எடுப்பதற்கும், ஏ.டி.எம்., களில் பணம் எடுப்பதற்கும், உச்சவரம்பு ...

அரவக்குறிச்சியில் 82 சதவீத ஓட்டுப்பதிவு:தஞ்சை, திருப்பரங்குன்றத்தில் குறைவு

Posted: 19 Nov 2016 09:37 AM PST

மூன்று தொகுதிகளுக்கான சட்டசபை தேர்த லில், அரவக்குறிச்சி தொகுதியில் அதிகபட்ச மாக, 82 சதவீத ஓட்டுகள் பதிவாகின. குறைந்த பட்சமாக, தஞ்சாவூர் தொகுதியில், 69 சதவீதம் பதிவானது.

தஞ்சாவூர்,அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு துவங்கியது. இடைத்தேர்தல் என்றாலே ஓட்டுப் பதிவு சதவீதம் அதிகரிக்கும். எனவே, மூன்று தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு சதவீதம், 80ஐ தாண்டும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை நடந்த இடைத்தேர்தலில் அதிகபட்ச மாக, 2013ல், ஏற்காடு தொகுதியில், 89.75 சதவீதஓட்டுகள் பதிவாகின. ...

58 நாள் சிகிச்சைக்கு பின் தனி அறைக்கு ஜெ., மாற்றம்

Posted: 19 Nov 2016 09:40 AM PST

அப்பல்லோ மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, முதல்வர் ஜெயலலிதா, 58 நாட்களுக்கு பின், நேற்று தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக் குறைவு காரணமாக, செப்., 22ல், சென்னை,அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க, லண்டனில் இருந்து, டாக்டர் ஜான் பீலே மற்றும் டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து, ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இயல்பு நிலை
அதை தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து, பிசியோ தெரபி ...

ரூபாய் நோட்டு விவகாரம்; மக்களின் சிரமம் தவிர்க்க முடியாதது: குருமூர்த்தி

Posted: 19 Nov 2016 11:24 AM PST

புதுடில்லி: ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையில் மக்களின் சிரமங்கள் தவிர்க்க முடியாதது என பொருளாதார நிபுணர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கை தொடர்பாக அவர் தொலைகாட்சி ஒன்றிற்கு விரிவான பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் குருமூர்த்தி பேசிய முக்கிய அம்சங்கள்: ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கை முன்னெப்போதும் எடுக்கப்படாத, மிகுந்த ஆபத்துகள் நிறைந்த அரசியல் முடிவு. இந்த நடவடிக்கை ஊழல், கறுப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றிற்கு ...

மூன்று தொகுதி முடிவு: கட்சிகள் காத்திருப்பு

Posted: 19 Nov 2016 11:29 AM PST

மூன்று தொகுதிகளின் தேர்தல் முடிவு, தமிழக கட்சிகளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், சட்டசபை பொதுத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுக்கப்பட்டதாக, புகார் எழுந்தது; அதன்படி, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
நேரடி போட்டி :
அந்த இரு தொகுதிகளுக்கும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவேல் மறைவு காரணமாக காலி யான, திருப்பரங்குன்றம் தொகுதிக்கும், நேற்று தேர்தல் நடந்தது. மூன்று தொகுதிகளிலும், ஆளுங்கட்சியான, அ.தி.மு.க., வுக்கும், எதிர்க் கட்சியான, ...

மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு டிரம்ப் ரூ.167 கோடி இழப்பீடு

Posted: 19 Nov 2016 01:39 PM PST

வாஷிங்டன்:டிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு கொடுப்பதற்கு டிரம்ப் தர ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அந்த வழக்கு முடிவுக்கு வருகிறது.

ரூ.167 கோடி இழப்பீடு
டிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.167 கோடி இழப்பீடு தருவதற்கு டிரம்ப் தர ஒப்புக்கொண்டார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொழில் அதிபரான டொனால்டு டிரம்ப், நியூயார்க் நகரில் டிரம்ப் பல்கலைக்கழகம் நடத்தி வந்தார். இந்தப் பல்கலைக்கழகம் கடந்த 2010-ம் ஆண்டு மூடப்பட்டது.இதில் தேர்ந்த ...

திருப்பதி உண்டியலில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள்

Posted: 19 Nov 2016 02:30 PM PST

திருப்பதி;பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டு, நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வந்தபோதிலும், திருப்பதி கோவில் உண்டியல் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள்.

புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள்
இதுகுறித்து கோவிலின் மக்கள் தொடர்பு அதிகாரி தாலரி ரவி கூறுகையில், ''9-ந்தேதியில் இருந்து 10 நாட்களில் உண்டியலில் ரூ.30 கோடியே 36 லட்சம் வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஆன ...

ஏமனில் 48 மணி நேர சண்டை நிறுத்தம் அறிவிப்பு

Posted: 19 Nov 2016 03:09 PM PST

துபாய்: ஏமனில் 48 மணி நேர சண்டை நிறுத்தத்தை அறிவித்தது சவுதி அரசு. இதை உள்ளூர் மீடியாக்கள் மூலம் தெரிவித்தது .ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் களம் இறங்கி, கிளர்ச்சியாளர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

48 மணி நேர சண்டை ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™