Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரூ.91 லட்சம் பறிமுதல்:பா.ஜ., அமைச்சருக்கு நெருக்கடி

Posted: 18 Nov 2016 07:34 AM PST

மும்பை:மஹாராஷ்டிர மாநில, பா.ஜ., அமைச் சருக்கு சொந்தமான வாகனத்தில் இருந்து, 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதையடுத்து, 'அமைச்சர், உடனடியாக பதவி விலக வேண்டும்' என, எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தீவிர வேட்டை
மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் தேவேந்திர பட்ன விஸ் தலைமையி லான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப் பட்டு உள்ளதால், நாடு முழுவதும், கறுப்பு பண பதுக்கல்காரர் களை பிடிக்க, போலீசார் மற்றும் வருமான ...

முக்கோண கோஷங்களால் பார்லி., முடக்கம்:காவிரியிலிருந்து மீனவருக்கு தாவிய அ.தி.மு.க.,

Posted: 18 Nov 2016 07:39 AM PST

ரூபாய் நோட்டு விவகாரத்தில், பா.ஜ.,வும், காங்கிரசும், மாறி மாறி அமளியில் ஈடுபட்ட தால்,பார்லிமென்டின் இரு சபைகளும், நேற் றும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

நேற்று முன்தினம் காவிரி பிரச்னையை வலி யுறுத்திய, அ.தி.மு.க., நேற்று, மீனவர் பிரச் னையை வலியுறுத்தி, அமளியில் இறங்கியது. ரூபாய் நோட்டு விவகாரத்தை முன்வைத்து, பார்லி., குளிர்கால கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாட்களிலும் காங்கிரஸ், திரிணமுல், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் குரல் எழுப்பின.
ஒத்திவைப்பு
அ.தி.மு.க., மட்டும், திடீரென, ...

ரூபாய் விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!:வீதிகளில் கலவரம் நடக்கும் அபாயம் உள்ளது என்கிறது

Posted: 18 Nov 2016 08:07 AM PST

'வங்கிகள், ஏ.டி.எம்., முன், பணம் எடுப்பதற் காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பது, மிக தீவிரமான பிரச்னை; இதற்கு தீர்வு காணாவிட்டால், வீதிகளில் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது' என, மத்திய அரசை, சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.

'பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது. மக்களின் சிரமத்தைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் ...

நீதிபதிகள் பட்டியல்: திருப்பி அனுப்பியது சுப்ரீம் கோர்ட்

Posted: 18 Nov 2016 08:41 AM PST

புதுடில்லி: 'கொலிஜியம்' தேர்வு செய்த ஐகோர்ட் நீதிபதிகள் பரிந்துரை பட்டியலை,சுப்ரீம் கோர்ட், மீண்டும், மத்திய அரசின் பரிசீலனைக் காக திருப்பி அனுப்பியது.

பல்வேறு ஐகோர்ட்டுகளில், நீதிபதிகள் பணி யிடங்கள் காலியாக உள்ளன; இவற்றை நிரப்புவதற் காக, 77 நீதிபதிகளின் பெயர்களை, சுப்ரீம் கோர்ட்டின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய தேர்வுக் குழுவான, 'கொலிஜியம்' மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இதில், 34 பேரை ஏற்ற மத்திய அரசு, 43 இடங் களுக்கு புதிய நபர்களை பரிந்துரைக்கும் படி, சுப்ரீம் கோர்ட்டுக்கு, அந்த பட்டியலை திருப்பி அனுப்பியது.இந்நிலையில், ஐகோர்ட் நீதிபதி ...

கறுப்புப் பணத்தை மாற்ற உதவுபவர்களுக்கு அபராதம்!:கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை

Posted: 18 Nov 2016 08:49 AM PST

புதுடில்லி:'கறுப்புப் பணத்தை மாற்ற உதவு பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கறுப்புப் பணத்தை, தங்கள் வங்கி கணக்கில் செலுத்த அனுமதிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டு களை வங்கிகளில் மாற்றுவதற்கு, டிசம்பர், 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கறுப்புப் பணம் வைத்துள்ள நபர்கள், இடைத்தரகர்கள் மூலம், 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, வங்கிகளில் ...

'இந்த மாதத்திற்குள் நிலைமை சீராகும்'

Posted: 18 Nov 2016 08:49 AM PST

புதுடில்லி: 'பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு களை மாற்றும் விவகாரத்தில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம், இந்த மாத இறுதிக்குள் சீராகும்' என, மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

'பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வழங்க, மத்திய அரசு, சரியான முறையில் திட்டமிட வில்லை' என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதையடுத்து, விரைவாக புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கவும், மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்தவும், மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: பழைய ரூபாய்
நோட்டு களை மாற்றும் ...

'ஜெ., பணிக்கு திரும்ப ஏழு வாரம்' :அப்பல்லோ தலைவர் தகவல்

Posted: 18 Nov 2016 09:19 AM PST

சென்னை:''முதல்வர் ஜெயலலிதா குணமடை ந்து விட்டார். அவர், வழக்கமான பணிகளில் ஈடுபட, ஏழு வாரங்கள் ஆகலாம்,'' என, அப்பல்லோ மருத்துவ குழும தலைவர், பிரதாப் ரெட்டி கூறினார்.

அப்பல்லோ மருத்துவமனையின், 'பக்கவாத சிகிச்சை மைய துவக்க விழா' சென்னையில், நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, அப்பல்லோ மருத்துவ குழும தலைவர், பிரதாப் ரெட்டி கூறியதாவது:அப்பல்லோவின் மிகச்சிறந்த டாக்டர்கள், முதல்வர் ஜெயலலிதாவை, 24 மணி நேரமும் கண்காணித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, அவர் முழுமையாக குணமடைந்து விட் டார்.அவருக்கு, செயற்கை சுவாசமும் அளிக்கப்படு கிறது. ...

அரசு பள்ளிகளில் கழிப்பறை: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Posted: 18 Nov 2016 09:27 AM PST

மதுரை:தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி யாக, அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற் படுத்த தாக்கலான வழக்கில், 'மேலும் அவகா சம் தேவை' என்ற அரசுத்தரப்பு பதிலை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 'ஏன் போர்க்கால நடவடிக்கை எடுக்கக்கூடாது?' என கேள்வி எழுப்பி விசாரணையை ஒத்தி வைத்தது.

மதுரை ஆனந்தராஜ் 2014ல் தாக்கல் செய்த மனு:'தமிழகத்தில் 5720 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை' என 2014 ஆக.,8 தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. திறந்தவெளியை கழிப் பிடமாக பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும். ...

ரயிலில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் எங்கே? ரிசர்வ் வங்கி உதவியை நாடிய போலீஸ்

Posted: 18 Nov 2016 09:31 AM PST

ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு, ஆறு கோடி ரூபாய் கொள்ளையடித்த மர்ம நபர்களை வளைக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார், ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் உதவியை நாடி உள்ளனர்.

ஆகஸ்ட், 8ல், சேலம் - சென்னை விரைவு ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு, மர்ம நபர்கள், ஆறு கோடி ரூபாயை கொள்ளை அடித்து தப்பினர். விசாரணையில், சேலம், ஈரோடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வங்கிகளில் சேகரிக்கப்பட்டு, சென்னை ரிசர்வ் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட, பழைய, கிழிந்த, 500 ரூபாய் நோட்டு கட்டு கள் என, தெரிய வந்தது.இதுகுறித்து, தமிழக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், பல கோணங்களில் விசாரணை நடத்தியும், ...

வங்கி கடன் ஏய்ப்பு: சுப்ரீம் கோர்ட் கவலை

Posted: 18 Nov 2016 10:51 AM PST

புதுடில்லி: 'வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாத, ஏய்ப்பாளர்களின் பெயர்களை வெளியிடுவது முக்கியமல்ல; அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

விசாரணை முக்கியம் :
பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு கூறியதாவது: பல வங்கிகளில், 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாத நபர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவது முக்கியமல்ல; அதை விட, அந்த பணத்தை என்ன செய்தனர்; அதை சொத்துக்களாக குவித்தனரா என, விசாரிக்க வேண்டும். இதன் ...

சீசன் இல்லாத நாட்களில் ரயில் கட்டணம் குறையும்

Posted: 18 Nov 2016 11:05 AM PST

புதுடில்லி: கூட்டம் இல்லாத நாட்களில், சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை குறைக்க, ரயில்வே முடிவு செய்துள்ளது.

கூட்டம் குறைவு:
தீபாவளி, பொங்கல், ஹோலி போன்ற பண்டிகை நாட்களில், சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக, சிறப்புக் கட்டண, சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ மற்றும் பிரீமியம் ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது, பண்டிகைக் காலம் முடிந்து விட்டதால், ரயில்களில் செல்லும் பயணிகளின் கூட்டம் குறைந்து விட்டது.
நஷ்டம் ஏற்படுவதை தடுக்க...
இந்நிலையில், சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ...

சுஷ்மாவுக்கு சிறுநீரகம்; தெலுங்கு தேச எம்.பி., தயார்

Posted: 18 Nov 2016 01:59 PM PST

விஜயவாடா; சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு, தன் சிறுநீரகத்தை தானமாக வழங்க, தெலுங்கு தேச எம்.பி., முன்வந்துள்ளார்.

மருத்துவமனையில் சுஷ்மா:
வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ், 64, சிறுநீரக கோளாறு காரணாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான சோதனைகளை, டாக்டர்கள் மேற்கொண்டு உள்ளனர்.
தானம் வழங்க ...

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சீன விஞ்ஞானிகள்

Posted: 18 Nov 2016 02:54 PM PST

பீஜிங்: சீனா விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு மையத்தில், ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த 2 விஞ்ஞானிகள், ஒரு மாத பயணத்துக்குப் பின் நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
நிரந்தர விண்வெளி ஆய்வு மையம்:
சீனா வரும் 2022ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தர விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக விண்வெளிக்கு சென்று திரும்பும் வகையிலான விண்கலத்தை அனுப்பி வருகிறது. இதற்காக இதுவரை 5 முறை விண்வெளிக்கு விஞ்ஞானிகளை அனுப்பியுள்ளது.
விண்வெளி பயணம்:
ஆறாவது முறையாக ...

பேரிடர் சூழலில் விவசாயிகள்: அகிலேஷ்

Posted: 18 Nov 2016 03:25 PM PST

லக்னோ : அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றதால், ஒரு பேரிடர் சூழலை விவசாயிகள் எதிர்கொண்டு வருவதாக உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
பணக்காரர்களுக்கு பாதிப்பில்லை:
உ.பி., மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று(நவ.,19) நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் கூறியதாவது: அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது, எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இதனால் பணக்காரர்கள் யாரும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™