Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பாஜக அமைச்சரின் காரில் கட்டுக்கட்டாக ரூ.91.5 லட்சம் பணம் பறிமுதல்: செல்லாத நோட்டுதாங்க

Posted: 18 Nov 2016 08:27 AM PST

ஓஸ்மனாபாத்: மகாராஷ்டிராவைச் சேர்ந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக்கின்  காரில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.91.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர காவல்துறையும், லஞ்ச ஒழிப்புத் துறையும் இணைந்து நடத்திய அதிரடி ரகசிய சோதனையில், தேஷ்முக்கின் காரில் இருந்து செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.1000 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது. இந்தத் தொகைக்கு எவ்வித ஆவணங்களும் இல்லாமல் இருந்ததால் அவை பறிமுதல் செய்யப்பட்டன. காரை ஓட்டி வந்த ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார். ...

சுவரைப் பிளக்கும் விழுது !

Posted: 18 Nov 2016 07:17 AM PST

சுவரைப்  பிளக்கும் விழுது !

உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல்

Posted: 18 Nov 2016 07:05 AM PST

இடையூறுஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால் கடைதுறத்தல் சல்லே கனை. என்கிறது 'அருங்கலச் செப்பு' என்னும் சமணநூல். பொறுத்துக் கொள்ள இயலாமல் பிறரால் ஏற்படும் தொல்லை, தீராமல் தொடர்ந்து துன்பம் தருகின்ற நோய், தாங்க இயலா முதுமைத் தொல்லை, ஆகியன வரும் பொழுது 'சல்லேகனை' என்னும் உண்ணாநோன்புச் செயலால் உயிர்விடலாம் என்கிறது இந்நூல். ' இரத்தின கரண்டக சிராவகாசாசரம்' என்னும் மற்றொரு சமண நூல் பெரும்பஞ்சம் வந்து துயர்ப்படும்பொழுதும் இவ்வுண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தலை மேற்கொள்ளலாம் என்கிறது. அதே நேரம் இம்முறையைத் ...

நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...!

Posted: 18 Nov 2016 06:52 AM PST

Bank officer:  
மூஞ்ச கொஞ்சம் தள்ளி வைமா. ஏன் இவ்ளோ
பக்கத்தில காட்ற?
-
Customer:  
நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே, சார் அதான்
-
Bank officer:  
அட  கண்ணுல இல்லம்மா. வெரல்ல.
கைய நீட்டு.!
-
-----------------------------------------

பச்சை வீட்டில் சிவப்பு வாசல் - விடுகதைகள்

Posted: 18 Nov 2016 06:52 AM PST

1. இரண்டு குழந்தைகள், மூன்று ஆசிரியர்கள். அது என்ன? - 2. சீப்பு உண்டு; தலை வார முடியாது. பூ உண்டு; மாலை கட்ட உதவாது. அது என்ன? - 3. சிவப்புப் பெட்டியில் மஞ்சள் முத்துக்கள். அது என்ன? - 4. உமி போலப் பூப்பூக்கும். சிமிழ் போலக் காய் காய்க்கும். அது என்ன? - 5. அம்மா சேலையை மடிக்க முடியாது. அப்பா சில்லறையை எண்ண முடியாது. அது என்ன? - 6. பச்சை வீட்டில் சிவப்பு வாசல். அது என்ன? - 7. சின்னஞ்சிறு கதவுகள், செய்யாத கதவுகள், திறந்தாலும் மூடினாலும் சத்தம் போடாத கதவுகள். அது என்ன? - 8. ...

ரசனை: ஊடுருவிச் செல்கிறாள் கண்ணம்மா

Posted: 18 Nov 2016 06:34 AM PST

- 'என்றன் வாயினிலே அமுதூறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும்போதிலே…' என்றான் மகாகவி. 'காற்று வெளியிடை கண்ணம்மா' என்ற அந்தக் கொண்டாட்டக் கவிதையை பி.பி. ஸ்ரீனிவாஸ்- பி சுசீலா இருவரின் காதல் களிப்புக் குரல்களில் இசைப் பாடலாகக் கேட்கத் தொடங்கிய பின் எத்தனை எத்தனை கண்ணம்மா பாடல்களைத் திரை இசையில் ரசித்துக் கேட்டாயிற்று. 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா'வை விடவா? தேர்ச்சியான சங்கீதக்காரர்கள் முதற்கொண்டு எத்தனை எத்தனை மழலைக் குரல்களிலும் வழிந்தோடிய ரசமான கீதம் அது! கண்ணம்மா… என்று ...

சேமிப்புக் கணக்கு தொடங்கினால் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை அஞ்சலகங்களில் பணம் எடுக்கலாம்

Posted: 18 Nov 2016 06:25 AM PST

தமிழக வட்ட தலைமை அஞ்சல் அதிகாரி தகவல் அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங் கினால் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்று தமி ழக அஞ்சல் வட்ட தலைமை அதிகாரி சார்லஸ் லோபோ கூறினார். பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மாற்றுவதற்காக நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலகங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று முதல் வங்கிகளில் ஒரு நாளைக்கு ஒரு நபர் ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற புதிய அறிவிப்பு ...

சித்தர் சுவாமிகள் ஒரு அபூர்வ தேடல்

Posted: 18 Nov 2016 05:24 AM PST

சித்தர் சுவாமிகள் ஒரு அபூர்வ தேடல்   ஒரு தெளிவான மின்னூல்  ஈகரை உறவுகளுக்காக  mediafire.com download/1so36624m5d70bo/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.pdf

அழகிய குரலில் கடவுள் வாழ்த்து.

Posted: 18 Nov 2016 04:48 AM PST

பாடியவர்கள்............
Dr. மதுமிதா,Dr.அனிதா பிரியா.

என்னைப் பற்றி -ராஜேஷ் கோபால க்ரிஷ்ண

Posted: 18 Nov 2016 04:25 AM PST

பெயர்: ராஜேஷ் கோபால க்ரிஷ்ண
சொந்த ஊர்: KUMBAKONAM
ஆண்/பெண்: Male
ஈகரையை அறிந்த விதம்: google
பொழுதுபோக்கு: ரீடிங் கிரிம் ஸ்டோரீஸ், திரில்லர் ஸ்டோரீஸ், ஜோக்ஸ், கம்ப்யூட்டர் ரிலேட்..
தொழில்:ஒர்கிங் in  ஹாஸ்பிடல் at நியூ டெல்லி
மேலும் என்னைப் பற்றி:

சுற்றும்போது ஆனந்த சுகம் -விடுகதைகள்

Posted: 18 Nov 2016 04:18 AM PST

1. சுற்றும்போது ஆனந்த சுகம். அது என்ன? 2. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன? 3. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன். பள்ள நீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன? 4. கலர்ப்பூ கொண்டைக்காரி. காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன? 5. கந்தல் துணி கட்டியவன். முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன? 6. படபடக்கும், பளபளக்கும், மனதுக்குள் இடம் பிடிக்கும். அது என்ன? 7. தலையில் கிரீடம் வைத்த தங்கப் பழம். அது என்ன? 8. நிலத்தில் நிற்காத செடி, நிமிர்ந்து நிற்காத ...

வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Posted: 18 Nov 2016 03:47 AM PST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை 68 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை 68 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அண்மையில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மியான்மர் வழியாகச் சென்றது. அது தமிழகக் கடல் பகுதியில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துச் சென்றுவிட்டது. அடுத்த சில நாள்களுக்கும் மிதமான மழையே பெய்யக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர். வியாழக்கிழமை காலை ...

என்னைப்பற்றி==சாசலின்

Posted: 18 Nov 2016 03:46 AM PST

பெயர்:   சாசலின்
சொந்த ஊர்:  மதுரை
ஆண்/பெண்:
ஈகரையை அறிந்த விதம்: இணையம்
பொழுதுபோக்கு: எழுதுதல், படித்தல்.
தொழில்: ஆசிரியர்
மேலும் என்னைப் பற்றி: திருமணமானவர். இரு குழந்தைகள்.

சுய அறிமுகம்..sramalingam

Posted: 18 Nov 2016 03:45 AM PST

பெயர்:இராமலிங்கம்
சொந்த ஊர்:காஞ்சிபுரம்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:இணைய தேடலில்
பொழுதுபோக்கு:புத்தகம் படிப்பது, ஆலய தரிசனம்
தொழில்:தனியார் துறை
மேலும் என்னைப் பற்றி:எனக்கு சிறந்த புத்தகங்களை தேடிப்படிபதில் ஆர்வம் அதிகம். என்னுடய புத்தக தேடலுக்கு இந்த வலைத்தளம் உதவும் என்று நம்புகிறேன். இந்த வலைத்தலத்தில் நண்பர்கள் உதவி கிடைக்கும் என்று நம்பி வந்துளேன். உதவுங்கள் நண்பர்களே.....

சினிமாத திரைக்கு வராத சினிமாப பாடல்.

Posted: 18 Nov 2016 02:56 AM PST

தூரத்தில் நான் கண்ட உன் முகம்..... என்ற பாடல்,பாரதிராஜாவின் நிழல்கள் (1980) படத்திற்காக இளையராசா இசையில் எஸ். ஜானகி பாடியது.  இந்தப் படம் தோல்வியடைந்தது. இந்தப் படத்திற்காக உருவான பாடல்  என்றாலும் படத்தில் இடம்பெறவில்லை. தமிழுக்கு கிடைக்காத அல்லது தமிழ் சினிமா நழுவ விட்ட அதிஷ்டம் தெலுங்கில் அதே மெட்டில் பாடிய ஜானகிக்கு தேசியவிருதை பெற்றுக் கொடுத்தது. அதே மெட்டில் இளையராசா, சித்தாரா (1984) என்ற தெலுங்கு படத்தில் வரும் வெண்ணெல்லோ என்று தொடங்கும் பாடலுக்கு இசை அமைத்திருந்தார்.பானுப்பிரியாவின் ...

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள்- மின்நூல் தொகுப்பு இதுவரை

Posted: 18 Nov 2016 01:35 AM PST

நண்பர்களே..

இதுவரை பதிவிட்ட இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் தெளிவான மின்நூல்களை இங்கு தொகுத்து
இருக்கிறேன். விடுபட்ட நாவல்களை தரவிறக்கவும் தரவிறக்கம் செய்யாதவர்கள் ஒரு இடத்தில் அனைத்து நாவல்களை பெறவேண்டியும் இந்த பதிவு...

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் பதிவிறக்க இங்கே வரவும் !

Posted: 18 Nov 2016 01:24 AM PST

நாக வனம் =இந்திரா சௌந்தர்ராஜன்

பதிவிறக்க இங்கே சொடுக்கவும்


சாம்ராட் சத்திரகுப்தன் : வரலாறு

பதிவிறக்க இங்கே சொடுக்கவும்

ஸ்டெரெச்சர் தராததால் கணவனை இழுத்து சென்ற கொடுமை : மருத்துவமனையில் அதிர்ச்சி (வீடியோ)

Posted: 18 Nov 2016 12:26 AM PST

- ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குண்டக்கல் அரசு மருத்துவமனையில் ஸ்ரீனிவாச்சாரி என்பவர், உடல் நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக அவரது மனைவியுடன் சென்றுள்ளார். அவர் மிகவும் பலவீனமாக இருந்ததால், அவரால் நடக்க கூட முடியவில்லை. அதனால், அவரை முதல் தளம் அழைத்துச் செல்ல, அவரின் மனைவி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஸ்ரெச்சர் கேட்டுள்ளார். ஆனால், அதை கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. எனவே, வேறு வழியின்றி தனது கணவரை முதல் மாடிக்கு இழுத்தே சென்றுள்ளார் அந்த பெண். அவருக்கு உதவ யாரும் ...

12 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும்

Posted: 17 Nov 2016 10:44 PM PST

வெள்ளி, 18 நவம்பர் 2016 தமிழகம் Train(C) 3 அ+ அ- சென்னை, கீழ்கண்ட ரெயில்கள் அடுத்த மாதம் 14-ந்தேதியிலிருந்து 2017-ம் வருடம் பிப்ரவரி 9-ந்தேதி வரை 'தற்காலிகமாக' மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. - சபரிமலை சீசன் மற்றும் தைபூச திருவிழாவை முன்னிட்டு கீழ்கண்ட ரெயில்கள் அடுத்த மாதம் 14-ந்தேதியிலிருந்து 2017-ம் வருடம் பிப்ரவரி 9-ந்தேதி வரை 'தற்காலிகமாக' மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ...

புதிய சாதனை படைக்க 43 ரன்களுக்காக காத்திருக்கும் கோலி!!

Posted: 17 Nov 2016 10:38 PM PST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்தது. இதில் கோலி மற்றும் புஜாரா சதம் அடித்தனர். கோலி 151 ரன்களுடனும், புஜாரா 119 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் கோலி மேலும் 49 ரன்கள் எடுத்து இரட்டை சதம் அடித்தால் ஒரே வருடத்தில் மூன்று இரட்டை சதங்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ...

இன்றைய தங்க விலை நிலவரம்

Posted: 17 Nov 2016 10:35 PM PST

- சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 976 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,872-க்கு விற்கிறது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.180 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.48 ஆயிரத்து 380ஆக உள்ளது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.51.80 ஆகவும் உள்ளது. - -------------------------- தமிழ் வெப்துனியா

அரவிந்த்நீலகண்டன்

Posted: 17 Nov 2016 09:17 PM PST

அரவிந்த்நீலகண்டன் புத்தகங்கள் இருந்தால் யாராவது தரவேற்றுங்களேன் ...  நன்றி

புதிய புத்தக தேவை

Posted: 17 Nov 2016 06:14 PM PST

அன்பர்களே,

எனக்கு திரு. பாலகுமாரன் எழுதிய "நானே எனக்கொரு போதிமரம்" புத்தகத்தினை PDF அல்லது EPUB வடிவில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

காவிரி: மாநிலங்களவையில் அதிமுக அமளி

Posted: 17 Nov 2016 05:42 PM PST

மாநிலங்களவையில் காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தை வியாழக்கிழமை எழுப்பி அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியவுடனேயே மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மையப் பகுதிக்குச் சென்று "காவிரி நீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும்'; "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது' என்று குரல் எழுப்பினர். அதிமுகவில் இருந்து சில ...

விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வெளிநாட்டுப் பயணிகள் படகில் இலவசமாகச் செல்லலாம்: மத்திய அரசு உத்தரவு

Posted: 17 Nov 2016 04:50 PM PST

- ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி, கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு அவர்கள் இலவசமாக படகில் செல்லலாம் எ ன மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் நிலவும் பணத் தட்டுப்பாடு காரணமாக, கன்னியாகுமரிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படாத வகையில், விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் சென்றுவர அவர்களுக்கான கட்டணத்தை ...

பஞ்சாப்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்த காங்கிரஸ் கோரிக்கை

Posted: 17 Nov 2016 04:46 PM PST

- பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு, சட்டப் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை வியாழக்கிழமை நேரில் சந்தித்து, மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, மனு ஒன்றையும் நஜீம் ஜைதியிடம் அவர்கள் கொடுத்தனர். அதில், கூறப்பட்டிருப்பதாவது: தற்போதைய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™