Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவிய கோவா முதல்வர்

Posted: 17 Nov 2016 08:25 AM PST

பனாஜி:கோவாவில், விபத்தில் சிக்கிய பெண்ணை, மருத்துவமனையில் சேர்த்து, உடனடி சிகிச்சை பெற உதவிய, அம்மாநில முதல்வர் லஷ்மிகாந்த் பர்சேகரை, அனைவரும் பாராட்டி வருகின்றனர். கோவாவில், பா.ஜ.,வைச் சேர்ந்த, லஷ்மிகாந்த் பர்சேகர் முதல்வராக உள்ளார். அவர், பனாஜி நகர பஸ் ஸ்டாண்ட் அருகே, பாதுகாவல் வாகனங்களுடன், காரில் சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண், எதிர்பாராதவிதமாக, எதிரே வந்த ஒரு வாகனத்தில் மோதினார். இதில், அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உதவிய முதல்வர்
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லஷ்மிகாந்த், தன் வாகனத்தை ...

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தில் பார்லிமென்ட் முடங்கியது!:பிரதமர் விளக்கம் அளிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளி;காவிரி பிரச்னையை எழுப்பி அ.தி.மு.க.,வும் ஆவேசம்

Posted: 17 Nov 2016 08:18 AM PST

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, பிரதமர் விளக்கமளிக்க கோரி, ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் அமளியில் இறங்கியதால், பார்லிமென்டின் இரு சபைகளும் நேற்று, நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அ.தி.மு.க., - எம்.பி.,க்களும் ஆவேசமாக குரல் எழுப்பி, ராஜ்யசபாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், ராஜ்யசபாவில், ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தது. அந்த விவாதத்தின் தொடர்ச்சி, நேற்று நடந்திருக்க வேண்டும்; ஆனால், எதிர்பாராத திருப்பம் நடந்தது.முக்கிய எதிர்க்கட்சியான ...

சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி 24ம் தேதி வரை செல்லலாம்

Posted: 17 Nov 2016 09:01 AM PST

புதுடில்லி:தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், கட்டணமின்றி வாகனங் கள் செல்ல அளிக்கப்பட்ட அவகாசம், 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லா தென அறிவிக்கப்பட்ட பின்,தேசிய நெடுஞ் சாலைகளில், வாகனப் போக்குவரத்து சுமுக மாக நடக்க வேண்டும் என்பதால், 11ம் தேதி நள்ளிரவு வரை, சுங்கச் சாவடிகளில் கட்டண மின்றி வாகனங்கள் செல்லலாம் என, மத்திய அரசு அறிவித்தது. பின், இந்த அவகாசம், 14 வரையும், அதன் பின்னர், 18வரையும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. இந்நிலை யில்,மக்களிடையே போதிய அளவு பணப்புழக்கம் ஏற்படாததால், ...

'ரூபாய் நோட்டு விவகாரம் அம்பானிக்கு முன்பே தெரியும்'

Posted: 17 Nov 2016 09:03 AM PST

கோடா:''மத்திய அரசு, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிப்பதற்கு முன்பே,அது பற்றிய விபரம், அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்கு தெரிந்து விட்டது,'' என, ராஜஸ்தானை சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., கூறியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பே, அதுகுறித்த தகவல், சிலருக்கு கசிந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன; இதை, மத்திய அரசு மறுத்தது. இந்நிலையில், முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் ராஜஸ் தான் மாநிலத்தின், ஆளும் கட்சி, ...

முதல்வர் ஜெ., வீடு திரும்புவது எப்போது?

Posted: 17 Nov 2016 09:05 AM PST

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் தேறி விட்டதால், அவர் எப்போது வீடு திரும்புவார் என, கட்சியினரும், பொதுமக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால், செப்.,22 முதல்,சென்னை அப்பல்லோ மருத்து வமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். நுரையீரல் தொற்று பாதிப்பால், வீடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. லண்டன் டாக்டர் ஜான்பால் ரிச்சர்டு மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் குழு, அப்பல்லோ டாக்டர்களுடன் இணைந்து, சிகிச்சை அளித்தது. சிங்கப்பூரில் இருந்து வந்த இரண்டு டாக்டர்களும், பிசியோதெரபிசிகிச்சை அளித்தனர். 'தொடர் ...

சிவசேனாவை சமாதானப்படுத்த பா.ஜ., மேலிடம் தீவிர முயற்சி

Posted: 17 Nov 2016 09:08 AM PST

புதுடில்லி:ரூபாய் நோட்டு விவகாரத்தில், எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்த சிவசேனா வை சமாதானப்படுத்த, அதன் தலைவர் உத்தவ் தாக்கரேவுடன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தொலைபேசியில் பேசினார்.

மத்திய அரசு, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்துள்ளது; இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.பார்லி.,குளிர்கால கூட்டத்தொடர், நேற்று முன்தினம் துவங்கியது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள ...

பழைய நகையா அள்ளலாம் இனி

Posted: 17 Nov 2016 09:20 AM PST

கறுப்பு பணம் பதுக்கியவர்களால், வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற முடியாததால், கூடுதல் விலை கொடுத்து, பழைய தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். சவரன், 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதால், பழைய நகைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.

சென்னை, வேலுார், திருச்சி, தஞ்சை, அதிராம் பட்டினம், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில், பழைய நகை வியாபாரம் களைகட்டியுள்ளது. இல்லத்தரசியர் ஆதரவு இருப்பதால், இந்த கள்ளச்சந்தை வியாபாரம் சுறுசுறுப்பாகி உள்ளது. நேற்றைய நிலவரப்படி, 1 கிராம் புதிய தங்கம், 22 காரட், 2,870 ரூபாய்க்கும்; 1 சவரன், 23 ஆயிரம் ...

இன்று முதல் ரூ.4,500க்கு பதிலாக ரூ.2,000!: பணம் மாற்றுவதில் ஆர்.பி.ஐ., உத்தரவு :விவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகை:மணமக்கள் பெறலாம் ரூ.2.5 லட்சம்

Posted: 17 Nov 2016 09:38 AM PST

வங்கிகளில் பழைய 500 - 1,000 ரூபாய் நோட்டு களை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டி ருந்த உச்சவரம்பு 4,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக இன்று முதல் குறைக்கப்படுகிறது.

அதிக மக்கள், பணத்தை பெற வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித் துள்ள மத்திய அரசு, பணம் எடுப்பதில் விவசா யிகள், வியாபாரிகளுக்கு சலுகை அளித்துள் ளது. திருமணச் செலவுக்காக மணமக்கள் வீட் டார் வங்கி கணக்குகளில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் பெறவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டி இருப்ப தால், பொதுமக்கள் பெரிதும் ...

விவசாயி குடும்பத்திற்கு ஸ்டாலின் நிதியுதவி

Posted: 17 Nov 2016 09:44 AM PST

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே, பயிர் கருகிய தால், அதிர்ச்சியில் இறந்த விவசாயி குடும்பத் திற்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.

தஞ்சாவூர்மாவட்டம்,கீழதிருப்பூந்துருத்தி பகுதி யைசேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன்,42; விவசாயி. தண்ணீரின்றி பயிர்கள் கருகிய அதிர்ச்சியில்,
5ம்தேதி உயிரிழந்தார். இந்நிலையில், தஞ்சை யில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்துள்ள, தி.மு.க., பொருளா ளர் ஸ்டாலின்,நேற்று காலை, ராஜேஷ் கண்ணன் வீட்டிற்கு சென்று, அவரது படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு, 1 லட்சம் ரூபாய் நிதியுதவி ...

மத்திய மின் உற்பத்தி நிறுத்தம்:தமிழகம் மின் வாரியம் திணறல்

Posted: 17 Nov 2016 10:43 AM PST

மத்திய மின் நிலையங்களில், உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதால், தேவையை பூர்த்தி செய்ய, தமிழக மின் வாரியம் திணறி வருகிறது.

மத்திய அரசுக்கு, தமிழகத்தில், நெய்வேலி, கல்பாக்கம், துாத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டம் - வல்லுார் மற்றும் கூடங்குளத்தி லும், ஆந்திரா - சிம்ஹாத்ரி; தெலுங்கானா - ராமகுண்டம்; கர்நாடகா - கைகா; ஒடிசா - தால்ச்சரிலும், அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், தினமும் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில், தமிழகத்திற்கு, 5,464 மெகாவாட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், தினமும், 4,500 மெகாவாட் மட்டுமே வழங்கப்படுகிறது. ...

பயங்கரவாத தாக்குதல் இந்தியாவில் அதிகம்

Posted: 17 Nov 2016 11:45 AM PST

லண்டன் : உலகம் முழுவதும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில், 50 சதவீதம், இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளில் நடந்துள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் அதிகம்:
பயங்கரவாத தாக்குதல்கள் அதிகம் நடந்த நாடுகள் குறித்து, ஆய்வு நடத்திய, சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம், இந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த, 2015ல் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, உலகளவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில், 50 சதவீதம், இந்தியா, பாக்., ஈராக் மற்றும் ஆப்கன் ஆகிய நான்கு நாடுகளில் நடந்துள்ளது; இதில், 30 ஆயிரம் பேர் ...

ஜம்மு- காஷ்மீர் முன்னாள் கவர்னர் சின்ஹா காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்

Posted: 17 Nov 2016 12:31 PM PST

புதுடில்லி : ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் கவர்னர் எஸ்.கே.சின்ஹா(92), உடல் நலக்குறைவால் காலமானார்.
முன்னாள் கவர்னர்:
ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் கவர்னர் எஸ்.கே.சின்ஹா தொடை மற்றும் விலா எலும்பு முறிவு காரணமாக டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி(நவ.,1) அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று(நவ.,17) காலமானார். இவர், நேபாளத்துக்கான இந்தியத் தூதராகவும், அசாம் மாநில கவர்னராகவும் பணியாற்றியிருந்தார். இவரது மகன் ஒய்.கே.சின்ஹா இலங்கைக்கான இந்தியத் தூதராக பணியாற்றி வருவது ...

பண தட்டுப்பாடு: அசாம் எல்லை கிராமங்களில் பூட்டான் கரன்சிகளை பயன்படுத்தும் மக்கள்

Posted: 17 Nov 2016 01:02 PM PST

கவுகாத்தி: அசாம் எல்லை கிராமங்களில் புதிய நோட்டுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்கள் பக்கத்து நாடான பூட்டான் நாட்டு கரன்சிகளை பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.:ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழித்து கட்ட, , 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வாங்குவதற்காக பொதுமக்கள் ஏ.டி.எம்.களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது..

பூட்டான் கரன்சிகள்
இந்நிலையில் அசாமின் எல்லை கிராமங்களில் போதிய வங்கி சேவை மற்றும் ஏ.டி.எம்.மையங்கள் இல்லாததால் ...

'இந்தியா தான் எனக்கு முக்கியம்'; அமெரிக்க எம்.பி., பிரமிளா உறுதி

Posted: 17 Nov 2016 01:17 PM PST

வாஷிங்டன் : ''இந்தியா தான், எனக்கு மிகவும் முக்கியம்; இந்தியாவின் வளர்ச்சி பணிகளுக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவு தரும்,'' என, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி., பிரமிளா ஜெயபால் கூறினார்.
முதல் இந்திய - அமெரிக்க பெண்:
சமீபத்தில் நடந்த அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, பிரமிளா ஜெயபால், 51, வெற்றி பெற்றார்; இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அமெரிக்க பார்லிமென்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல், இந்திய - அமெரிக்க பெண் இவர் தான்.
உறவை ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™