Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!

Posted: 17 Nov 2016 01:55 PM PST

இன்று (நவம்பர்-14) கரண்ட் பில் கட்டுவதற்கு கடைசி நாள். என்னிடம் 3 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. கடந்த மூன்று நாட்களாக கரண்ட் பில் கட்டுவதற்காக சென்றபோது பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க முடியாது என்று திருப்பியனுப்பிவிட்டனர். அதனால் ATM ல் டெபாசிட் செய்ய முயன்றபோது கூட்டம் அலைமோதியதால் ஒரு நாள் காலதாமதமானது. அதன் பிறகு வங்கியில் மாற்றலாம் என்று வங்கிக்கு சென்றபோது அங்கும் அதே நிலைதான். மறுநாள் மீண்டும் ஈ.பி ஆபீஸிற்கு சென்று நிலைமையை எடுத்து சொன்னேன். ஆனால், அவர்கள் என்னிடம் உள்ள 1000 ...

இணையத்தில் சில சமயம் நல்லவர்கள் போல் உங்களை அழைக்கும் வல்லுனர்கள் பற்றி தெரியுமா?

Posted: 17 Nov 2016 09:11 AM PST

இணையத்தில் சில சமயம் கணினி விளையாட்டு,காணொளி, இப்படி சிலவற்றை பதிவிறக்கும் போது அல்லது கணினியில் கேட்க-பார்க்க முயலும் போது வரும் கணினி வல்லுனர்கள் தரும் -அபாய அறிவிப்புகள். codec, player, browser update இப்படி சிலவற்றை பதிவிறக்கம் செய்யுங்கள் அல்லது அப்டேட் செய்யுங்கள் எனச் செய்தி வரும். அப்படி வருமானால் உடனே OK கொடுக்காதீர்கள். இது ஆபத்தானது. Adobe's Flash Player plug-in நேரடியாக அடோப் தளத்தில் இருந்து தரவிறக்கலாம். you need to update Java அல்லது you need to update Flash ...

நான் இரசித்த பாடல் - 9

Posted: 17 Nov 2016 08:52 AM PST

சிந்துபைரவி படத்தில் K.J.ஜேசுதாஸ் நாட்டை இராகத்தில் பாடிய மகா கணபதிம் என்று தொடங்கும் பாடலுக்கு நடிகர் சிவகுமார் வாயசைத்திருப்பார். அதே பாடலை பாடகர் கார்த்திக் பாடியிருக்கிறார்.  கர்நாடக இசைப்பாடலை கார்த்திக் மேல் நாட்டு வாத்தியங்கள் இசைக்க பாடி இருக்கிறார்.இது கர்நாடக இசைப்பிரியர்களுக்காக.

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Posted: 17 Nov 2016 07:49 AM PST

கட்டுரையாளர் கவனத்திற்கு, தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம். ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும். அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் ...

TV டவரில் ஏறி வினோதமான போராட்டம்

Posted: 17 Nov 2016 06:53 AM PST

TV டவரில் ஏறி வினோதமான போராட்டம்

500 /1000 செல்லாது என்ற அரசின் அறிவிப்பை ,வாபஸ் பெற கோரி
ஒரு வாலிபர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார் . அவரை காப்பாற்ற
தீயணைப்பு படையினர் முயற்சி . அவரை நெருங்கி இடுப்பில் கயிறை
கட்டி அவரை இறங்குகின்றனர் .

ரமணியன்

அரசியல் சட்டத்தை அவமதிக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்!

Posted: 17 Nov 2016 06:46 AM PST

- மத்திய அரசு ஜனநாயக / அரசியல் சட்ட விரோத நடவடிக்கை. இந்தி மொழியில் வெளியிடப்படும் மத்திய அரசின் ஆவணங்களில் தேவநாகரி எண்கள் பயண்படுத்தப்படலாம். ஆனால், வெளியிடப்பட்டுள்ள ரூபாய் தாள்கள் மத்திய அரசின் ஆவணங்கள் அல்ல. மத்திய அரசின் ஆவணங்கள் அல்லாத போது நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் எண்களை, அதாவது இந்தோ - அரேபிய எண்களை, அதாவது சர்வதேச எண்கள் முறையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு அரசியல் சட்டம் மற்றும் மொழிக் கொள்கையை மீறி இந்தி எண்களைப் பயன்படுத்தியிருக்கிறது. - ---------------------------------------------- தமிழ் ...

புதிய ரூ.2000 நோட்டுதான் லஞ்சமாக வேண்டும்..

Posted: 17 Nov 2016 06:22 AM PST

புதிய ரூ.2000 நோட்டுதான் லஞ்சமாக வேண்டும்.. அடம்பிடித்த கல்வி அதிகாரியை மாட்டிவிட்ட ஆசிரியர் புதிய ரூ. 2000 நோட்டுதான் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்த கல்வித்துறை அதிகாரி லஞ்ச ஒழிப்பி துறையினரிடம் சிக்கினார். இந்த மனுவை பரிசீலித்த கல்வித்துறை அதிகாரி ஏக்நாத் 40 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். பணத்தைக் கொடுத்தால்தான் பதவி உயர்வு என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் பணத்தை புரட்டுவதற்காக முற்பட்ட சோம்நாத்திடம், கொடுக்கும் பணம் முழுவதும் அரசு அண்மையில் வெளியிட்ட 2000 ...

முதல்வருக்காக தொகுதியை விட்டுக் கொடுத்தவர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

Posted: 17 Nov 2016 05:35 AM PST

புதுச்சேரியில் முதல் அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுவதற்காக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக் கொடுத்தவர் ஜான்குமார். இவரது வீட்டில் சென்னை மத்திய வருமான வரித்துறையினர் அதிகாலை 4 மணியிலிருந்து அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம் ரெய்டு நடத்தி 1.5 கோடி பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. - ----------------------------------------------- - ஜெ.முருகன்

திருமணத்துக்கு ரூ.2.5 லட்சம் வரை நம் கணக்கில் எடுப்பது எப்படி?

Posted: 17 Nov 2016 05:32 AM PST

திருமண வீட்டார் ரூ.2.5 லட்சம் வரை பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் இன்று (வியாழக்கிழமை) அறிவித்தார். மத்திய அரசின் நோட்டு நடவடிக்கையால் திருமண வைபவங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த சாதாரண மக்கள் பணத்துக்கு பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது. சலுகையை பெறுவது எப்படி? திருமண வீட்டார் ரூ.2.5 லட்சம் வரை வங்கிக் கணக்கில் ...

இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Posted: 17 Nov 2016 05:29 AM PST


-

-
ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஓரணியில் எதிர்க்கட்சிகள்'-
கடும் அமளியால் மக்களவை முடக்கம்

பட்டணத்துக் குறிப்புகள்

Posted: 17 Nov 2016 05:26 AM PST

டிரம்ஸ் வாசிப்பில் அசத்தும் 6-ம் வகுப்பு மாணவர்: 78 மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

Posted: 17 Nov 2016 04:47 AM PST

--- டிரம்ஸ் வாசிப்பில் மொத்தம் 8 கிரேடுகள் உள்ளன. இந்த 8 கிரேடுகளை முடித்துள்ள ராம்ஜி, தற்போது டிரம்ஸ் இசைக் கருவி வாசிப்பில் குட்டி சிவமணியாக வலம் வருகிறார். இதுகுறித்து ராம்ஜி கூறும்போது, "டிவியில் கேட்கும் பாடல்களுக்கு ஏற்ப தாளம் போடுவது ரொம்பப் பிடிக்கும். அப்படித்தான் டிரம்ஸ் வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இசை அமைப்பாளராக வேண்டும் என்பதுதான் ஆசை. உலகம் முழுவதும் சென்று டிரம்ஸ் வாசிக்க வேண்டும். அதற்காக இப்போது மிருதங்கம், தப்பாட்டம் (பறை) உள்ளிட்ட கருவிகளை வாசிக்கக் ...

சாயம் போனால்தான் ஒரிஜினல்....!

Posted: 16 Nov 2016 09:27 PM PST

புதிய வரவான 2000 ரூபாய் நோட்டுக்களில் சாயம் போனால்தான் ஒரிஜினல் என்ற தகவலும் வெளியானதால் பொது மக்கள் பெரிதும் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த தகவல்கள் உண்மையா என்ற கேள்வியை ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் அல்பானா கில்வாலா முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், "பணத்தை மாற்ற மட்டுமே விரலில் மை வைக்கப்படுகிறது. வங்கியிலிருந்து பணத்தை எடுப்பதற்கு மை வைப்பதில்லை. முதலில் மெட்ரோ நகரங்களில் மை வைக்கப்படும். அதன்பிறகு நகரங்களிலும் கிராம பகுதிகளிலும் மை வைக்கும் பணி விரிவுப்படுத்தப்படும். ...

ஓய்வில்லாமல் ஓடி ஏடிஎம்களை நிரப்பும் ஹீரோக்கள்!

Posted: 16 Nov 2016 09:23 PM PST

-- 1000, 500ரூபாய் நோட்டுகள் செல்லாது புதிய நோட்டுகள் வாங்கிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து நாடு முழுவதும் மக்கள் ஏடிஎம் களிலும் வங்கி வாசலிலும் பணம் எடுக்க நீண்ட வரிசையில் நிற்கின்றனர். புதிய நோட்டுகளை மாற்றும் முயற்சியில் இதுவரைக்கும் 33 பேர் இறந்துள்ளனர். மோடியின் இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. ஆனால் பணத்தை மாற்றுவதில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக எதிர்ப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள் ...

வாட்சப் நகைச்சுவை

Posted: 16 Nov 2016 09:17 PM PST

கட்செவி தந்தது நோயாளி : நர்ஸிடம் , சிஸ்டர் நீங்க என் மனதை திருடிவிட்டீர்கள் தெரியுமா ? நர்ஸ் : யோவ் , டாக்டர் ஏற்கனவே உன் கிட்னியை திருடிவிட்டார்     தெரியுமா ? ----------------------------------------------------------------------------- ராகுல் காந்தி ATM க்யூவில் நிற்கிறார் .இவருக்கு பின்னால்நீண்ட க்யூ.  கண்ணில் இருந்து நீர் வழிகிறது . கூட இருப்பவர் ,ராகுல் ,இந்த ஜனங்கள் படும் கஷ்டம் கண்டு கண்ணீர்விடுகிறீர்களா ? ராகுல் : இல்லை இது ஆனந்த கண்ணீர் . என் வாழ்வில் எனக்கு பின் இவ்வளவு ...

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 16 Nov 2016 09:14 PM PST

மெல்ல வரும் காற்று… சொல்லித்தரும் பாட்டு….

Posted: 16 Nov 2016 08:16 PM PST

- திரைப் படம்: கலாட்டா கல்யாணம் (1968) பாடியவர்கள்: T M S, P சுசீலா பாடல்: வாலி இயக்கம்: C V ராஜேந்திரன் நடிப்பு: சிவாஜி, ஜெயலலிதா —- மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுதி சேர்த்து மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு – கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுதி சேர்த்து ஆணிப்பொன் மேனியை ஆசையில் அணைத்திட காணிக்கை கொடுத்ததும் நேற்றல்லவோ – பனிமலர் அழகினில் மயங்கிட அருகினில் வந்தால் இன்றே வா மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு – கண் ...

நம்பிக்கை ஊட்டும் ஒரு பாடல் - டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி

Posted: 16 Nov 2016 07:37 PM PST

' எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி மற்றுஆங்கே விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி வேண்டினேன் எனக்கு அருளினன் காளி... ' - இந்தப் பாடலில் கூறும் முக்கியமான விஷயம். 'எதையும் நல்லவிதமாக நடக்கும் என்று நம்புங்கள்! ' என்பது தான். 'எதை எண்ணுகிறோமோ அதுவாக ஆகிறோம்! ' எனும் ஜேம்ஸ் ஆலன் என்ற பெரும் ஆன்மிகவாதி கூறும் பொன்மொழி உண்டு. எதை அடிக்கடி மனதில் நினைத்து அதே நினைவாக, அதை அடைய வேண்டும் என்ற உணர்வு ரீதியாகவும் செயல் பட்டோமானால், அது நிச்சயம் நடக்கும் ...

வரலாற்று நாயகன்!

Posted: 16 Nov 2016 06:47 PM PST

வரலாற்று நாயகன்!
துள்ளலாக திரிபவர்
வள்ளலாக வாழ்பவர் - என்பதைவிட
வாழ்நாளில் பிறருக்கு
எள்ளளவு தீங்கில்லாமல்
இயன்றளவு துயரில்லாமல்
வாழ்ந்து வருபவரே
வான்புகழ் கொண்ட
வரலாற்று நாயகன்!

மிச்செல் ஒபாமாவுக்கு எதிராக இனவெறி பதிவு: அமெரிக்க மேயர் ராஜினாமா

Posted: 16 Nov 2016 06:44 PM PST

- அமெரிக்காவின் முதல் பெண்மணியான மிச்செல் ஒபாமாவை அந்நாட்டு மேயர் ஒருவர் குரங்கு என்று ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. - இதனையடுத்து தன் மேயர் பதவியை பமிலா ராஜினாமா செய்தார். - மேற்கு வெர்ஜினியாவின் மேயரான பமிலா ராம்சே டெய்லர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "வெள்ளை மாளிகையில் ஹீல்ஸ் அணிந்த குரங்கைப் பார்த்து நான் சோர்வடைந்து விட்டேன். புதிதாக வந்துள்ள அதிபரின் மனைவியைப் பார்ப்பது புத்துணர்ச்சியாக இருக்கும்" என்று பதிவிட்டிருந்தார். -

3 தொகுதிகளில் ரூ.13.69 கோடி பறிமுதல்

Posted: 16 Nov 2016 06:32 PM PST

சென்னை: தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளில் ரூ.13.69 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். அவர் கூறியதாவது: அரவக்குறிச்சியில் ரூ.45 லட்சமும், தஞ்சாவூரில் ரூ.9.14 கோடியும், திருப்பரங்குன்றத்தில் ரூ.4.09 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் 2 சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சியில் 4 சிறப்பு தேர்தல் பார்வையாளர்களும், தஞ்சாவூரில் 3 சிறப்பு பார்வையாளர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர். 3 ...

இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் - (தினமணி)

Posted: 16 Nov 2016 06:23 PM PST

- ஹிஜ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியின் மரணத்தைத் தொடர்ந்து, கடந்த ஐந்து மாதங்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறை, கலவரங்கள் என்று தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது. சையத் அலி ஷா கிலானி தலைமையிலான பிரிவினைவாதிகள் வன்முறையைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார்கள். அரசு அலுவலகங்கள் எதுவும் செயல்படவில்லை என்பது மட்டுமல்ல, பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும்கூட முற்றிலுமாக செயல்படாத நிலைமை. கடந்த ஐந்து மாதங்களில் முப்பத்தைந்துக்கும் அதிகமான பள்ளிக்கூடங்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. ...

புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது எப்போது? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 16 Nov 2016 06:17 PM PST

புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது எப்போது? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு By DIN | Published on : 17th November 2016 03:41 AM | அ+அ அ- | புதிய ரூ. 500 நோட்டுகள் தமிழகத்தில் எப்போது புழக்கத்தில் விடப்படும் என்பது குறித்து வெள்ளிக்கிழமை பதிலளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கும், பழைய நோட்டுகளை மாற்றும் வசதிகளை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தித் தர வேண்டும் ...

ரயிலில் தங்க நகை கடத்தப்படுவதாக ரகசியத் தகவல்: ஐ.ஜி. சென்ற பெட்டியில் சோதனையிட்ட சிபிஐ

Posted: 16 Nov 2016 06:12 PM PST

ரயிலில் பல கோடி மதிப்புள்ள தங்கநகை, பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததால், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) ஐ.ஜி. சென்ற பெட்டியில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். இது குறித்து சிபிஐ தரப்பில் கூறப்பட்டதாவது: திருச்சியில் இருந்து ஹெளராவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்ற விரைவு ரயிலில் பல கோடி மதிப்புள்ள தங்க நகையும், பணமும் கடத்தப்படுவதாக சென்னை சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் வந்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு ...

3 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு

Posted: 16 Nov 2016 06:10 PM PST

3 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு By DIN | Published on : 17th November 2016 12:46 AM | அ+அ அ- | rajeshlakhani தமிழகத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறும் மூன்று தொகுதி சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் வியாழக்கிழமையுடன் (நவ. 17) ஓய்கிறது. இதனிடையே, வாக்களிப்பதற்கான 11 வகையான ஆவணங்கள் அடங்கிய பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ...

நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை

Posted: 16 Nov 2016 05:58 PM PST

நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை: ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் - "ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பே, அந்தத் தகவல் சிலருக்கு மட்டும் கசியவிடப்பட்டுள்ளது; இதுதொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. - தேசத்தின் நலன் கருதியே ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் ...

ஜல்லிக்கட்டை அனுமதிக்க முடியாது

Posted: 16 Nov 2016 05:52 PM PST

- ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. - ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் பங்கேற்க வகை செய்யும் அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜனவரி 7- ஆம் தேதி வெளியிட்டது. இதை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம், "பீட்டா' பிராணிகள் நல அமைப்பு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. அவற்றின் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. விசாரணை: ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™