Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பாண்டியன் ரயிலில் கூடுதல் பெட்டிகள் ரயில்வேக்கு ஐகோர்ட் கேள்வி

Posted: 01 Nov 2016 10:43 AM PDT

மதுரை: பாண்டியன் அதிவிரைவு ரயிலில், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பொது, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில், கூடுதல் பெட்டிகளை ஏன் இணைக்கக் கூடாது? என்பதற்கு, ரயில்வே துறை விளக்கம் அளிக்குமாறு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பூதிப்புரம் ராஜசெல்வன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை -சென்னை இடையே, பாண்டியன் அதிவிரைவு ரயில், தினமும், 24 பெட்டிகளுடன் சென்று வந்தது. அதில், முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்காக, மூன்று பொதுப் பெட்டிகள், பெண்களுக்கு ஒரு பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, நவீன ரக ...

என்கவுன்டர் பற்றிய எதிர்க்கட்சிகள் கேள்விகளால் ம.பி., முதல்வர் கொதிப்பு..! பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை அரசியலாக்குவதா என ஆவேசம் நடந்த சம்பவம் உண்மையானது என போலீஸ் தரப்பும் விளக்கம்

Posted: 01 Nov 2016 09:29 AM PDT

போபால்: மத்திய பிரதேசத்தில், 'சிமி' பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால், கொதிப்படைந்துள்ள அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், ''இதை அரசியலாக்க வேண்டாம்,'' என, ஆவேசத்துடன் கூறியுள்ளார். இதற்கிடையில், 'என்கவுன்டர் சம்பவம் உண்மையானது' என, போலீஸ் தரப்பும் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இம்மாநில தலைநகரான போபால் மத்திய சிறையில் இருந்து, நேற்று முன்தினம் தப்பிய, 'சிமி' அமைப்பை சேர்ந்த எட்டு பயங்கரவாதிகளை, போலீசார் சுட்டுக் ...

சமாஜ்வாதியில் அகிலேஷ் - சிவ்பால் கோஷ்டி பலப்பரீட்சை..! செல்வாக்கை நிரூபிக்க தனித்தனியாக நிகழ்ச்சி

Posted: 01 Nov 2016 09:37 AM PDT

லக்னோ:உ.பி.யில் ஆளும் கட்சியான சமாஜ்வாதியில், அடுத்தடுத்து மோதல்கள் நிகழ்ந்து வரும் நிலையில், முதல்வர் அகிலேஷும், மாநில தலைவர் சிவ்பால் யாதவும், தனித்தனியே நிகழ்ச்சிகளை நடத்தி, முலாயமிடம், தங்கள் செல்வாக்கை நிரூபிக்க முயன்று வருகின்றனர். இதனால், கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

உ.பி., மாநிலத்தில், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், முலாயம் சிங்கின் தம்பி சிவ்பால் யாதவுக்கும், முதல்வர் அகிலேஷுக்கும் ...

உணவு பாதுகாப்பு சட்டம் அமல் : ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு

Posted: 01 Nov 2016 09:41 AM PDT

உணவு பாதுகாப்பு சட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்ததால், அதிகாரிகள், ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

தமிழக ரேஷன் கடைகளில், 1.91 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி வழங்கப்படுகிறது. தமிழக அரசு, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தை நேற்று முதல் அமல்படுத்தியது. அதன்படி, நான்கு பேருக்கு கீழ் உள்ள குடும்பத்துக்கு, தற்போது ரேஷனில் வழங்கப்படும் அதே அளவில் இலவச அரிசி வழங்கப்படும்.
25 கிலோ இலவச அரிசி
ஐந்து பேர் உள்ள குடும்பத்துக்கு வழங்கப்படும், 20 கிலோ அரிசிக்கு பதில், 25 கிலோ இலவசம்; அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு ...

தொழில் திறனை வளர்த்துக்கணும்; பிரதமர் மோடி வலியுறுத்தல்

Posted: 01 Nov 2016 09:41 AM PDT

நயா ராய்ப்பூர் : ''இளைஞர்களின் தொழில் திறன் மேம்பாடே, நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ள சத்தீஸ்கர் மாநிலம் உருவான, 16வது ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:தொழில் திறன் உள்ள இளைஞர்களே, நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கக் கூடியவர்கள்; தொழில் திறன் பெறுவதன் மூலம் தங்கள் மற்றும் மற்றவர்களுடைய வறுமையை போக்கும் திறமையை இளைஞர்கள் பெறுகின்றனர். சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில், ...

போபால் சிறையில் இருந்து பயங்கரவாதிகள் தப்பியது எப்படி? திட்டமிட்டு செயல்படுத்திய 'பகீர்' தகவல்

Posted: 01 Nov 2016 09:45 AM PDT

போபால்:மத்திய பிரதேச மாநிலம் போபாலில், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட, 'சிமி' எனப்படும், இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், சிறையில் இருந்து தப்பிக்க, மிகவும் தெளிவான முறையில் திட்டம் தீட்டியது, தற்போது தெரிய வந்துள்ளது.

மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள, சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், ம.பி.,யின் போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
கேள்வியும் சந்தேகமும்
நேற்று முன்தினம், சிறை காவலரை கொன்றுவிட்டு, சிறையில் இருந்து தப்பிய எட்டு ...

இடைத்தேர்தலில் எழுதப்படாத விதி: முற்றுப்புள்ளி வைப்பாரா ஸ்டாலின்?

Posted: 01 Nov 2016 09:56 AM PDT

தமிழகத்தில், இடைத்தேர்தல் என்றால், ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்ற எழுதப்படாத விதியை, ஸ்டாலின் மாற்றி அமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு, தி.மு.க.,வினரிடம் ஏற்பட்டுள்ளது.

கடந்த, 1980ல் இருந்து, 49 தொகுதிகளுக்கு, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்துள்ளது. இதில், 41 தொகுதிகளில், ஆளும் கட்சியும், எட்டு இடங்களில், எதிர்க்கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. 2006க்கு பின் நடந்த இடைத்தேர்தல் எதிலும், எதிர்க்கட்சி வெற்றி பெற்றதில்லை; ஆளும் கட்சியின் வெற்றி தொடர் கதையாக உள்ளது.
உத்தி
இடைத்தேர்தல் வெற்றிக்காக, ஆளும் கட்சியாக இருந்த, தி.மு.க., மற்றும் ...

மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் இன்று இடிப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்; அதிகாரிகள், போலீசார் உஷார்

Posted: 01 Nov 2016 10:09 AM PDT

சென்னை:தமிழகத்தில் முதல் முறையாக, சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் வெடிகுண்டு வைத்து, இன்று தகர்க்கப்பட உள்ளது.

மவுலிவாக்கத்தில், தனியார் கட்டுமான நிறுவனம் கட்டிய, 11 மாடி குடியிருப்பு கட்டடம், 2014 ஜூன், 28ல் இடிந்து விழுந்தது; இதில், 61 பேர் உயிரிழந்தனர். இடிந்து விழுந்த கட்டடத்தின் அருகே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள, 11 மாடி, 'ஏ பிளாக்' கட்டடத்தை இடிக்க, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
கட்டடத்தை வெடி வைத்து தகர்க்க, திருப்பூரை சேர்ந்த, 'மேக் லிங்க்' நிறுவனத்தை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., தேர்வு ...

ம.ந.கூ., ஆதரவை நாடும் விஜயகாந்த்

Posted: 01 Nov 2016 10:22 AM PDT

கடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து, 124 தொகுதிகளில் போட்டியிட்ட, தே.மு.தி.க., அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது; இதையடுத்து, கூட்டணியில் இருந்து விலகியது.

தற்போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், தே.மு.தி.க., போட்டியிடுகிறது; ம.ந.கூ., புறக்கணிக்கிறது. எனினும், தே.மு.தி.க., கேட்டுக் கொண்டால், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கலாம் என்ற முடிவில், ம.ந.கூ., தலைவர்கள் இருப்பதாக தெரிகிறது.பலவீனமான நிலையில், இந்த தேர்தலை சந்திக்கும், தே.மு.தி.க.,வும், ம.ந.கூ., ...

தமிழக - இலங்கை மீனவர்களிடையே டில்லியில் இன்று நான்காம் கட்ட பேச்சு

Posted: 01 Nov 2016 12:05 PM PDT

சென்னை,:தமிழக - இலங்கை மீனவர்களிடையே, நான்காம் கட்ட சமரச பேச்சு, டில்லியில் இன்று நடக்கிறது. இதற்காக, டில்லி புறப்பட்ட தமிழக மீனவ பிரதிநிதிகள், 'இந்தப் பேச்சில் நிச்சயம் தீர்வு கிடைக்கும்' என, நம்பிக்கை தெரிவித்தனர்.

பாக் ஜலசந்தி பகுதியில், மீன் பிடிப்பது தொடர்பாக, தமிழக - இலங்கை மீனவர்கள் இடையே, நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும் தொடர்கிறது. இதற்கு தீர்வு காண, இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள் பங்கேற்ற, மூன்று கட்ட பேச்சு நடந்தது. இரண்டு முறை சென்னையிலும், ஒரு முறை ...

அனைவருக்கும் கழிப்பறை: சாதனை பட்டியலில் கேரளா

Posted: 01 Nov 2016 12:31 PM PDT

திருவனந்தபுரம்: திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம் இல்லாத மாநிலங்களின் பட்டியலில், கேரளாவும் இணைந்துள்ளது.
நிதியுதவி:
'துாய்மை இந்தியா' இயக்கத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும், திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலத்தை போக்குவதற்காக, கழிப்பறைகள் கட்டுவதற்கு, மத்திய அரசு நிதியுதவி செய்து வருகிறது. இதன்படி, நாடு முழுவதும், ஒரு லட்சம் கிராமங்களில் முழுமையாக கழிப்பறை கட்டப்பட்டு, அவை, திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டன. ...

பாகிஸ்தானில் விபத்து: 14 பேர் பலி

Posted: 01 Nov 2016 12:52 PM PDT

கராச்சி: பாகிஸ்தானில், பழைய கப்பல் உடைக்கும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.

டேங்க், வெடித்தது :
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கதானியில், பழைய கப்பல்களை உடைக்கும் தளம் உள்ளது. அங்கு, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று, கப்பல் ஒன்றை உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் டேங்க், வெடித்து சிதறியது. இதில், தொழிலாளர்கள் பலர் சிக்கினர்; சிலர், கப்பலில் இருந்து கடலில் குதித்து தப்பினர்.
பலர் கவலைக்கிடம்:
மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு ...

டில்லியில் புகை மண்டலம்: தீர்வு காண உயர்மட்ட கூட்டம்

Posted: 01 Nov 2016 01:45 PM PDT

புதுடில்லி : டில்லியில், அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், காற்றில் அபாய அளவில் புகை மாசு கலந்துள்ளது; இதற்கு தீர்வு காண, உயர்மட்டக் கூட்டத்தை, அம்மாநில துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூட்டினார்.
காற்றில் அதிக மாசு:
டில்லியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், தீபாவளி பண்டிகையின் போது, பொதுமக்கள் அதிகளவில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இதனால், நகரின் பெரும்பகுதிகளில் அபாயகரமான அளவில், காற்றில் மாசு கலந்து, மக்கள் சுவாசிக்க சிரமப்பட்டனர். சாலைகளில் புகை ...

தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுகிறது பாகிஸ்தான்

Posted: 01 Nov 2016 02:54 PM PDT

புதுடில்லி: இந்தியாவுக்கான, பாக்., துாதரகத்தில் பணியாற்றும், நான்கு அதிகாரிகளை திரும்பப் பெற, பாக்., அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா உத்தரவு:
இந்தியா - பாக்., இடையேயான உறவு மோசமடைந்துள்ள நிலையில், பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,க்காக உளவு பார்த்ததாக, இந்தியாவுக்கான, பாக்., துாதரகத்தில் பணியாற்றும், மெஹ்மூத் அக்தர் என்ற ஊழியர், சமீபத்தில் பிடிபட்டான். அவனை வெளியேற்றும்படி, பாகிஸ்தானுக்கு இந்தியா உத்தரவிட்டது; அதன்படி அக்தரை, பாக்., திரும்பப் பெற்றது.
விரைவில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™