Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'2.O' பர்ஸ்ட் லுக் - ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம் - லைக்கா

Posted:

'2.O' படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டும் தான் மும்பையில் வெளியிடப்படுகிறது, மற்றவையெல்லாம் தென்னிந்தியாவில் தான் நடைபெறும் என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ரோபோ படம் 'எந்திரன்'. இதன் இரண்டாம் முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாய் சுமார் ரூ.350 கோடி செலவில் '2.O' என்ற பெயரில் உருவாகி ...

நடனம் எனக்கு ஆபத்தானது - ஜான் ஆபிரஹாம்

Posted:

பாலிவுட்டின் ஸ்டைல் மற்றும் ஹேண்ட்சம் ஹீரோவான ஜான் ஆபிரஹாம், டிஸ்யும் படத்தின் வெற்றிக்கு பிறகு நடித்துள்ள படம் போர்ஸ் 2. போர்ஸ் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகவுள்ள இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் ஜான் ஆபிரஹாம் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

போர்ஸ் 2 படம் போர்ஸ் படத்திலிருந்து எந்தளவுக்கு ...

சீனியர் நடிகரின் சிகிச்சைக்கு மம்முட்டி உதவி..!

Posted:

மலையாள சினிமாவில் சீனியர் நடிகர் முன்ஷி வேணு.. 74 வயதான இவர் தற்போது சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கென குடும்பம் எதுவும் இல்லாத நிலையில் கடந்த பத்து வருடங்களாக ஒரு லாட்ஜில் வசித்து வந்தார். இப்போது இவரை அங்கிருந்தும் விரட்டி விட்டார்கள்.. ஒவ்வொரு முறை மருத்துவனையில் டயாலிசிசுக்காக செல்லும்போதெல்லாம் ...

சஞ்சய் தத் ஜோடியாக சித்ரங்காடா சிங்

Posted:

சிறை சென்று திரும்பியிருக்கும் சஞ்சய் தத், மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அவர் பல படங்கள் கைவசம் வைத்திருப்பவர் அடுத்தப்படியாக இயக்குநர் கிரிஷ் மாலிக் இயக்கத்தில் 'டார்பாஸ்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் சஞ்சய், ராணுவ வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சித்ரங்காடா சிங் நடிக்க உள்ளார். ...

காட்பாதர்' படத்தின் 25ஆம் வருட கொண்டாட்டத்தில் சித்திக்-லால்..!

Posted:

1991ல் மலையாளத்தில் வெளியான படம் 'காட்பாதர்'.. முகேஷ், கனகா, திலகன் மற்றும் பலர் நடித்திருந்த இந்தப்படத்தை பிரபல இரட்டை இயக்குனர்களான சித்திக்-லால் இருவரும் இணைந்து இயக்கியிருந்தார்கள்.. கூட்டணியாக படம் இயக்க ஆரம்பித்தபின் இவர்கள் இயக்கிய மூன்றாவது படம் இது.. முகேஷ் தான் ஹீரோ என்றாலும் இந்தப்படத்தில் காட்பாதர் கேரக்டரில் ...

முத்தத்தில் சுஷாந்தை விட ரன்வீர் பெஸ்ட் : வாணி கபூர்

Posted:

'ஆஹா கல்யாணம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வாணி கபூர். நல்ல அழகும், திறமையும் இருந்தும் அவரால் தமிழில் நீடிக்க முடியவில்லை. மீண்டும் ஹிந்திக்கே போனார். தமிழில் நடிப்பதற்கு முன்பே ஹிந்தியில் சுசாந்த் சிங் ராஜ்புட் உடன் 'சுத் தேசி ரொமான்ஸ்' என்ற படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே ...

எப்போதாவது தான் என் கணவர் பாராட்டுவார் - கஜோல்

Posted:

பாலிவுட்டில் தனக்கு என்று ஒரு தனியிடத்தை பிடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஜோல். அஜய்யை திருமணம் செய்த பின்னர் நடிப்பை கைவிட்டார் கஜோல். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் ஷாரூக்கானின் ‛தில்வாலே'படத்தின் மூலம் பாலிவுட்டில் ரீ-என்ட்ரி ஆனார். ஆனால் இப்படம் கஜோலுக்கு தோல்வி படமாகவே அமைந்து.
சமீபத்தில் ...

‛காபில்', ‛ரயீஸ்' மோதல் - ஹிருத்திக் கருத்து

Posted:

பாலிவுட்டின் இரு முன்னணி நடிகர்கள் ஷாரூக்கானும், ஹிருத்திக் ரோஷனும்.தற்போது இயக்குநர் ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வரும் படம் ‛ரயீஸ், இப்படத்தில் ஷாரூக், கள்ளச் சாரயம் விற்கும் தாதாவாக நடித்து வருகிறார். இதைப்போன்று இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ‛காபில் படத்தில் நடித்து ...

குவைத்தில் மிரட்டப்பட்டாரா ரீமா கல்லிங்கல்..!

Posted:

மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் ரொம்பவே துணிச்சலானவர் தான். சமூக அக்கறையுடன் தன் மனதில் பட்டதை பளிச்சென கூறுபவர் தான்.. ஆனால் அப்படிப்பட்டவரே, சமீபத்தில் ஒரு கலைநிகழ்ச்சிக்காக குவைத் சென்றிந்தபோது அங்கிருக்கும் சில அமைப்புகளால் மிரட்டப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. குவைத்தில் உள்ள கலை நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடுவதற்காக அவரை ...

காதலிக்காக நடிகர் திலீப்பின் தியேட்டரில் திருடியவன் பிடிபட்டான்.!

Posted:

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம் இது.. நாமும் இதுபற்றிய செய்தியை வெளியிட்டிருந்தோம். மலையாள ஜனப்ரிய நாயகன் என்றழைக்கப்படும் நடிகர் திலீப் 'டி சினிமாஸ்' என்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸ் ஒன்றை சாலக்குடியில் சொந்தமாக வைத்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த தியேட்டரில் இருந்து சுமார் 6.82 ...

நாட்டு நலனுக்காக பிரதமர் ரிஸ்க் எடுத்துள்ளார் : விவேக் ஓபுராய்

Posted:

நாட்டின் நலனுக்காக பிரதமர் மோடி ரிஸ்க் எடுத்துள்ளார் என நடிகர் விவேக் ஓபுராய் கூறியுள்ளார். கடந்தவாரம் நாட்டு மக்களுக்கு பிரதமர் அளித்த ஒரு பெரிய சர்ஜிக்கல் ஸ்டிரைக் ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது. கறுப்பு பணத்தை ஒழிக்கவும் நடவடிக்கையாக பிரதமர் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தார். சிரமங்கள் பல இருந்தாலும் மக்கள் ...

கீதாவை தொடர்ந்து ஊர்வசியும் சர்ச்சையில் சிக்கினார்..!

Posted:

'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி மூலமாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வேண்டுமானால் பப்ளிசிட்டி தேவைப்பட்டிருக்கலாமே தவிர, பிரபல நடிகைகளான ஊர்வசிக்கோ, கீதாவுக்கோ, அல்லது குஷ்புவுக்கோ நிச்சயம் அப்படி ஒரு பப்ளிசிட்டி தேவையும் இல்லை.. தேடி அலைய வேண்டிய நிலையிலும் அவர்கள் இல்லை.. ஆனால் அவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் ...

பவன் கல்யாண் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் 'இது என்ன மாயம்' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். 80களில் தமிழ், மற்றும் மலையாளப் படங்களில் நாயகியாக நடித்த மேனகாவின் மகள். 'ரஜினி முருகன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் அதிகம் கவனிக்கப்பட்ட நடிகையானார். சமீபத்தில் வெளிவந்த 'ரெமோ' படத்தின் வெற்றி அவரை தமிழின் முன்னணி ...

'காற்று வெளியிடையில்' பிரிவின் வலியைச் சொல்லும் வைரமுத்துவின் பாடல்

Posted:

மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் - வைரமுத்து கூட்டணி 'ரோஜா' படத்திலிருந்து 'ஓ காதல் கண்மணி' வரை எத்தனையோ படங்களில் இணைந்திருக்கிறது. இந்தக் கூட்டணி இணைந்தாலே படத்தின் மொத்தப் பாடல்களும் சூப்பர் ஹிட் வரிசையில் சேர்ந்துவிடும். அதை ஒவ்வொரு படமும் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. இப்போது 'காற்று வெளியிடை' படத்திற்காக இந்தக் கூட்டணி ...

6வது ஆண்டில் ஒய் திஸ் கொலவெறி

Posted:

அனிருத் இசையமைப்பில், தனுஷ், எழுதி பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் வெளிவந்து நேற்றுடன் 5 வருடங்கள் முடிந்துவிட்டது. 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி யு டியூபில் வெளியான ஒய் திஸ் கொலவெறி பாடல் வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே வைரலாகி இந்தியாவை மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதுவரை ...

வெற்றிப்படம் கொடுத்தும் தயாரிப்பாளர்கள் நம்பவில்லை: பார்த்திபன் வருத்தம்

Posted:

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கும் புதிய படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. இதில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமய்யா உள்பட பலர் நடித்துள்ளனர். சிம்ரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். பார்த்திபன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சத்யா இசை அமைத்துள்ளார். அர்ஜுன் ஜெனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ...

செல்பி எடுத்து பேஸ்புக்கில் போட்டால் தான் கணவன்-மனைவியா? வித்யா பாலன் கோபம்

Posted:

பாலிவுட் நடிகை வித்யாபாலன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான சித்தார்த்ராய் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் வித்யாபாலன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு கணவன்-மனைவி இருவரையும் ஒன்றாக சேர்ந்து பார்க்க முடிவதில்லை. விழாக்களுக்கு ...

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் லிட்டில் ஜீனியஸ்

Posted:

விஜய் டி.வி., 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் லிட்டில் ஜீனியஸ் என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது. இதில் ஒரே பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் ஒரு குழுவாக பங்கேற்கலாம். தமிழ், கணிதம், பொது அறிவு, மற்றும் சினிமா அறிவுமிக்கவர்களாக இருக்க வேண்டும். போட்டி இதையொட்டியே இருக்கும். பல சுற்றுகள் ...

பிளாஷ்பேக்: சினிமா ரகசியங்களை உடைத்த சினிமா

Posted:

அந்தக்காலத்தில் சினிமாக்கள் ஸ்டூடியோவுக்குள்ளேயே படமாக்கப்பட்டது. அவுட்டோரில் படப்பிப்பு நடப்பது அபூர்வமாக இருக்கும். அப்படி ஏதாவது நடந்தால் அது பரம ரகசியமாக இருக்கும். காரணம் அப்போது மக்கள் சினிமாவை உண்மை என்று நம்பிக் கொண்டு பார்த்தார்கள். சினிமா ரகசியம் தெரிந்து விட்டால் சினிமா மீதுள்ள மோகம் குறைந்து விடும் என்று ...

ராமாயணம் தொடரில் விபீஷணனாக நடித்த முகேஷ் ராவல் மர்மச்சாவு: தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்

Posted:

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் விபீஷணனாக நடித்து புகழ் பெற்றவர் முகேஷ் ராவல். அதன்பிறகு சீரியல்களிலும், திரைப்படங்களிலும் குணசித்ர வேடத்தில் நடித்து வந்தார். மும்பையில் வசித்து வந்த முகேஷ் நேற்று முன்தினம் வங்கியில் ரூபாய் நோட்டை மாற்றச் செல்வதாக கூறி காட்கோபருக்கு சென்றுள்ளார். அன்று முழுவதும் வீடு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™