Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இந்தியாவை மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்!

Posted: 20 Nov 2016 12:14 PM PST

இந்தியாவில் புலக்கத்தில் இருந்த 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய்களை தாமதமாக வெளியிட்டு மத்திய அரசு பண நெருக்கடி ஏற்படுத்தியிருப்பதால் நாட்டின் பல பகுதிகளில் சின்ன சின்ன போராட்டங்களும், கலவரங்களும் நடந்து வருகின்றது. இதே நிலைமை நீடித்தால் பெரிய அளவில் கலவரம் ஏற்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், மக்கள் நிதானமாகவும், அறிவுபூர்வமாகவும் சிந்தித்தால் இந்த கலவரங்களை மாற்றி இந்தியாவில் "ரீமிக்ஸ்"ஐ கையாளலாம்! ஆம், ஆரம்ப காலத்தில் மாட்டைக் கொடுத்து ஆட்டையும், ...

ரமணியனின் ஹைக்கூ

Posted: 20 Nov 2016 09:42 AM PST

[b]ரமணியனின் ஹைக்கூ[/b]


மழை
வருகின்ற மழையை  
வரவேற்கிற அழகு
தும்பிகளின் கோலாகலம்  

அரசியல்வாதி வாரிசு
நடைப்பயிற்சி மேடையில்
யாவரும்  வலம்  வருகையில்
எதிரே இடமாக வருபவன்  

வாழை மரம்
 தொங்கிய வாழை குலை
வாழைபூச்சொரிந்து
கன்னுகளை  வாழ்த்தியது

ரமணியன்

அழகான பெண்களைக் கண்டால் …!!

Posted: 20 Nov 2016 08:12 AM PST


-

அழகர்மலைக் குரங்குகள் !

Posted: 20 Nov 2016 08:10 AM PST

அழகர்மலைக் குரங்குகள் ! அழகர்மலைக்குச் சென்றால் அடிவாரம் முதல் உச்சி வரை , வழி நெடுகிலும் குரங்குகள்தாம் ! ஒருகாலத்தில் பாதைக்கு வராத குரங்குகள் மக்கள் தரும் உணவுக்காகக் கீழே இறங்கி இன்று பாதைகளை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன!  இந்தக் குரங்குகளிடையேயும் குழுக்கள் இருக்கின்றன!  ஒரு குழுவைக் கண்டால் மற்ற    குழு விரட்டுகிறது ! மலைப் பாதைகளை இவைகள் 'இன்ன குழுவுக்கு இது எல்லை' என்று பிரித்துக்கொண்டுள்ளன!   நான் தாவர ஆராய்சியோடு குரங்கு ஆராய்ச்சியையும் செய்யலாமா? என்ற அளவுக்குப் போய்விட்டேன் என்றால் ...

வேல ராமமூர்த்தியின் புத்தகங்கள் வேண்டும்

Posted: 20 Nov 2016 08:06 AM PST

வேல ராமமூர்த்தி அவர்கள் எழுதிய குற்றப் பரம்பரை மற்றும் பட்டது யானை ஆகிய புத்தகங்கள் வேண்டும்.

துபாயில் வசிக்கும் இந்திய சிறுமி : சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு தேர்வு

Posted: 20 Nov 2016 07:59 AM PST

- துபாய்: சர்வதேச குழந்தைகள் தினம் இன்று கொண்டாப்படுகிறது. இதை முன்னிட்டு 'கிட்ஸ் ரைட்ஸ்' என்ற சர்வதேச குழந்தைகள் உரிமை அமைப்பு, அமைதி விருதை வழங்கி வருகிறது. இவ்விருதை பெற உலகம் முழுவதிலும் இருந்து 120 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் இருந்து 3 பேர் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் துபாயில் வசிக்கும் 16 வயது இந்திய சிறுமி கேஹாசன் பாசு. இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரசாரத்தை தனது 8வது வயதிலேயே தொடங்கியுள்ளார். துபாயில் கழிவுகளை மறுசுழற்சி ...

பொன்னியின் செல்வன்-ஒலி புத்தகம் (சுருக்கபட்ட கோப்புகள்)

Posted: 20 Nov 2016 07:51 AM PST

வணக்கம் உறவுகளே                 தமிழ்நேசன் அளித்த பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் Google drive இல் கோர்க்க படாமல் இருப்பதால் பதிவிறக்கம் செய்ய சிரமமாக இருக்கிறது. அதனால் இந்த சுருக்கபட்ட media fire  zip   கோப்பை உங்களிடம் பகிர்கிறேன்.....   பதிவிறக்க இணைப்பு

பதினாறு தலைமுறைக்கு சொத்து சேர்த்திட்டாரு!

Posted: 20 Nov 2016 07:05 AM PST

வாங்கின பட்டாசுகளில் கொஞ்சம் கார்த்திகை தீபத்துக்கு எடுத்து வெக்க சொன்னேனே, செஞ்சியா? – ஓ! அப்படியே பலகாரத்தையும் கொஞ்சம் எடுத்து வச்சிட்டேன் மம்மி! – ஜெயாப்ரியன் – ————————————- – எங்க தலைவர் பதினாறு தலைமுறைக்கு சொத்து சேர்த்திட்டாரு! ஏழு தலைமுறைனுதானே சொல்வாங்க…? – தலைவரோட சின்ன வீட்டு தலைமுறையையும் சேர்த்து சொன்னேன்…!! – வி.பார்த்தசாரதி – ————————————— – இவர் போலி சோசியரா, எப்படி சொல்றே? – குருமேடும், செவ்வாய் மேடும், ரொம்ப பள்ளமா இருக்குங்கறாரே…!! – தே.ராஜாசிங் – ———————————— – பல் ...

மாப்பிள்ளைக்கு வயசு கொஞ்சம் ஜாஸ்தி…!

Posted: 20 Nov 2016 07:02 AM PST

கல்யாண மாப்பிள்ளைக்கு வயசு கொஞ்சம் ஜாஸ்திதான் போலிருக்கு…! – எப்படிசொல்றே?_ – மாப்பிள்ளையை வாழ்த்த வயசில்லை, வணங்குகிறோம்னு பேனர் வச்சிருக்காங்களே! – ரவீந்திரன் – ———————————— – உங்க உடல் எடை எவ்வளவு? – மேக்-அப்போடயா, மேக்-அப் இல்லாமலா…? – முகமது யூசுப் – ———————————— – இந்த ஆட்டை எப்ப வாங்கினீங்க..? – 'மே'…மாதம்தான்…! – கே.அருள்சாமி – ————————————- – என்ன ராப்பிச்சை…நைட்ல வீதி வீதியா பாடிட்டுப் போனே? – 'ராப்'பிச்சை தாயி….! – சி.சாமிநாதன் – ———————————— – ஏன் ...

அரசியல்............

Posted: 20 Nov 2016 03:32 AM PST

சுப்பு : என்ன அப்பு நாட்டில் சட்டத்தை மதிப்பதே இல்லை .காவல்துறை இருந்தும் களவு நடக்காமல் இல்லை, ஊழல் ஒழிப்பு துறை இருந்தும் ஊழல் நடைபெறாமல்இல்லை, லஞ்ச ஒழிப்பு துறை இருந்தும் லஞ்சம் ஒழியவில்லை இதெல்லாம் இல்லாத ஆட்சி யாரால் நடத்தமுடியும் நினைக்கிற.... அப்பு : என்ன சுப்பு இப்படி கேட்டிட்ட மனசாட்சியே இல்லாம எல்லா தவறையும் துணிச்சலா செய்கிறார்களே..!!!இதெற்கெல்லாம் முற்று புள்ளி வைக்க அரசியல் கட்சிங்க ஆட்சி நடத்தக்கூடாதுங்க ......திறமைக்கு வேலை என்ற நிலைவரனுங்க...நீங்களே ..சொல்லுங்க சுப்பு......

பேஷண்ட் ரொம்ப அடம் பண்றாரு!”

Posted: 20 Nov 2016 02:13 AM PST

- உங்க ஓட்டலில் பேமிலி ரூமுக்கு கூடுதல் கட்டணம்ங்கிறீங்களே… அதிலே ஏ.சி. இருக்கோ? இல்லே! காஸ் அடுப்பு, இட்லி, தோசை மாவு இருக்கு. குடும்பமா வர்றவங்க அவங்களே டிபனைத் தயாரிச்சு சூடா சாப்பிட்டுக்கலாம். – க.ரத்னம், கோயமுத்தூர். – ————————————— * "பஸ்ல ஏறி உட்கார்ந்ததும் தூக்கம் தூக்கமா வருது, டாக்டர்" "தூங்க வேண்டியதுதானே?" "அப்புறம், பஸ்ûஸ யார் ஓட்டுறது…?" – ஏ.ஞானசேகர், மதுரை. – —————————————- – * "டாக்டர்! பேஷண்ட் ரொம்ப அடம் பண்றாரு!" "சரி… அடம் பண்ணினதுக்கு தனியா ஃபீஸ் ...

பாம்பன் பாலக் காட்சிகள் !

Posted: 20 Nov 2016 01:52 AM PST

பாம்பன் பாலக் காட்சிகள் ! மண்டபத்திற்கும் இராமேசுவரத்திற்கும் இடையே உள்ளது பாம்பன் என்ற ஊர் ! இங்குள்ள பாலம் , 'பாம்பன் பாலம்' எனப்படுகிறது! 1 .  பாமபன் கடற்கரைப்பகுதி - 2 . பாம்பன் பாலம் - 3 . பாம்பன் பாலத்திற்குள் , நடுவே தொடர்வண்டி வரும் காட்சி !-

தென்மாவட்டங்களில் அடுத்த 2 நாள் கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted: 19 Nov 2016 06:45 PM PST

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் – தென்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. – வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. – ஆனால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. சென்னையில் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இருப்பினும் மழைக்கான அறிகுறி தெரியவில்லை. – இதற்கிடையில், ...

திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல் வங்கிகள் தகவல்

Posted: 19 Nov 2016 06:43 PM PST

புதுடெல்லி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில், திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மணமகன் அல்லது அவரது பெற்றோரோ, மணமகள் அல்லது அவரது பெற்றோரோ வங்கியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் கணக்கில் இருந்து இந்த பணத்தை எடுக்க முடியும். – இந்த அறிவிப்பு கடந்த வாரமே வெளியிடப்பட்டாலும் அது தொடர்பான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் வங்கிகளுக்கு ...

கடவுள் இருக்கான் குமாரு – திரை விமரிசனம்

Posted: 19 Nov 2016 06:38 PM PST


-
நன்றி- தமிழ் வெப்துனியா

மீண்டும் உதயமாகும், ‘எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்!’

Posted: 19 Nov 2016 06:36 PM PST

-- கடந்த, 1956ல், 'எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்' என்ற, பட நிறுவனம் துவக்கி, நாடோடி மன்னன், அடிமைப்பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களை தயாரித்து, நடித்தார், எம்.ஜி.ஆர்., பின், அந்நிறுவனத்தின் மூலம், படங்கள் தயாரிக்கப் படாத நிலையில், வரும் ஜனவரியில் எம்.ஜி.ஆரின், 100வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வளர்ப்பு மகன் அப்புவின் வாரிசுகள், 'எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்' நிறுவனத்தின் மூலம், மீண்டும் படங்கள் தயாரித்து வெளியிட, முடிவு செய்துள்ளனர். – ———————————– — சினிமாபொன்னையா

ஷங்கர் படத்தில் பறவைகள்!

Posted: 19 Nov 2016 06:34 PM PST

- ரஜினியை வைத்து, ஷங்கர் இயக்கி வரும், 2.0 படத்தின் கதை, பறவைகளை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. அத்துடன், இப்படத்தில் வில்லன்களாக நடித்துள்ள, அக் ஷய்குமார் மற்றும் ரியாஸ்கான் உள்ளிட்ட பலரும், ரஜினியுடன், பறவை வேடத்தில் தான் மோதுகின்றனர். மேலும், இப்படத்தில், பல்வேறு விதமான பறவைகள் நடித்திருப்பதால், அவற்றின் குரலை, துல்லியமாக பதிவு செய்வதற்காக, ஆஸ்கர் விருது பெற்ற, 'சவுண்ட் இன்ஜினியர்' ரசூல் பூக்குட்டியை, ஒப்பந்தம் செய்துள்ளார், ஷங்கர். – ———————————– — சி.பொ.,

உனக்கு ‘ஒண்ணு’னா என்னால…!

Posted: 19 Nov 2016 06:31 PM PST

உனக்கு 'ஒண்ணு'னா என்னால தாங்கிக்கவே முடியாது, டார்லிங்க் – அதனாலதான் நான் இன்னொருத்தரையும் காதலிக்கிறேன், டியர்! – கே.அருள்சாமி – ———————————- என் கணவர் 'காலை அமுக்கிவிடு'னு கேட்டதுக்கு அதுக்கு வேற ஆளைப்பாருங்கனு சொன்னேன். அது தப்பாப் போச்சு…! – ஏன்? – காலை அமுக்கிவிட ஒரு பெண்ணை கூட்டியாந்து வச்சுக்கிட்டார்…! – —————————————- – அனைவரையும் நம்பு. ஆனால் அனைத்து சூழ்நிலைகளையும் நம்பதே, இங்கு வீரமாக வீழ்த்தப்படவர்களை விட சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டவர்களே ...

பணம் மாற்ற வந்த முதியவர் வங்கி வாசலில் மரணம் : பலி எண்ணிக்கை 56 ஆனது

Posted: 19 Nov 2016 06:06 PM PST

பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டவுடன், பலர் அதை தவறாக புரிந்து கொண்டு, மன உளைச்சல் மற்றும் நெஞ்சுவலி மற்றும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் கூட்ட நெரிசல் ஆகிய காரணங்களால் இதுவரை 55 பேருக்கும் பேர் பலியானதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஒரு மைசூரு வங்கி கிளையில், தன்னிடம் இருந்த பழைய நோட்டை மாற்றுவதற்காக, முதியவர் ஒருவர் வரிசையில் நின்றிருந்தார். அப்போது ஏற்பட்ட மாராடைப்பு காரணமாக அவர் மயங்கி கீழே விழுந்தார். சிறுது நேரத்தில் அவர் ...

எங்கு தேடுவது?

Posted: 19 Nov 2016 04:16 PM PST

- பிஞ்சுக் குழந்தைகள் குடிக்கும் பாலிலும் கலப்படம்! - எளியவர் அருந்தும் தேயிலையிலும் கலப்படம்! - வாயை புண்ணாக்கும் புகையிலை தூளிலும் கலப்படம்! - உயிர் காக்கும் மருந்து வகைகளிலும் கலப்படம்! - ஏழை - பணக்காரர் பேதமின்றி குடிக்கும் மதுவிலும் கலப்படம்! - கைக்கு கை மாறும் பண நோட்டுக்களிலும் கலப்படம்! - பதவி பெறும் தேர்தல் ஓட்டுக்களிலும் கலப்படம்! - விமானம் ஏறும் கடவுச் சீட்டுகளிலும் கலப்படம்! - தண்ணீரில், எண்ணெயில் பழரசங்களில் எல்லாம் கலப்படம்! - எங்கு, எப்படி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™