Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பத்திரப்பதிவு வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி:அரசு திட்டங்களுக்கு சிக்கல்

Posted: 20 Nov 2016 08:09 AM PST

தமிழகத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில், சொத்து பரிமாற்ற பத்திரப்பதிவு முடங்கி உள்ளதால், அரசின் திட்டங்களுக்கு நிதி கிடைப்பது சிக்கலாகி உள்ளது.

நேரடி வருவாய்:தமிழகத்தில், சொத்து பரி மாற்ற ஆவணங்களை பதிவு செய்ய, 8 சதவீதம் முத் திரைத் தீர்வை, ஒரு சதவீதம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். 2011 நிலவரப்படி, ஆண்டுக்கு, 35 லட்சம் பத்தி ரங்கள் பதிவாகி, 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்தது. மக்களிடம் இருந்து அரசுக்கு நேரடியாக கிடைக்கும் இந்த.
குறையத் துவங்கியது. இதனால், ஆண்டு தோறும் பட்ஜெட்டில், பத்திர பதிவு வருவாய் இலக்கை, அரசு குறைத்து ...

கறுப்புப் பண முதலைகளின் ஆசை வார்த்தைக்கு... ஏமாறாதீங்க!:ஏழை, எளிய மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

Posted: 20 Nov 2016 08:26 AM PST

ஆக்ரா:''கறுப்புப் பண முதலைகளின் ஆசை வார்த்தைகளை நம்பி, உங்களது, 'ஜன் தன்' வங்கிக் கணக்கில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்ய அனுமதிக்காதீர்கள்; அவ்வாறு செய் தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

ஏழை, எளிய மக்களுக்காக துவங்கப்பட்டுள்ள ஜன் தன் வங்கிக் கணக்கில், கறுப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, பிரதமர் மோடி பேசியதாவது:கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் தான், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, ...

'ஜன்தன்' கணக்குகளில் ரூ.10 ஆயிரம் டிபாசிட்? அடுத்த அதிரடிக்கு பிரதமர் தயார்

Posted: 20 Nov 2016 08:30 AM PST

புதுடில்லி:கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என, அறிவித்த பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்த அதிரடி, மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சியை அளிக்க உள்ளது.

கறுப்புப் பணத்தை ஒடுக்கவும், கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், 500 - 1,000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என, சமீபத்தில், பிரதமர் மோடி அறிவித்தார்.அதைத் தொடர்ந்து, பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு, வங்கிகளுக்கும், ஏ.டி.எம்.,களுக்கும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; பல்வேறு கட்டுப்பாடுகளால் மக்களும் ...

ஜி.எஸ்.டி., அதிகார பகிர்வில் இழுபறி:மத்திய - மாநில அரசுகள் கருத்து வேறுபாடு

Posted: 20 Nov 2016 08:41 AM PST

புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மீதான நிர்வாக அதிகாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் இடையே நடந்த பேச்சில், சுமுக முடிவு ஏற்படாமல் இழுபறி தொடர்கிறது.

நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் நோக்கில், பார்லிமென்டில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த வரி விதிப்பு, அடுத்த ஆண்டு ஏப்., முதல் அமல்படுத்தப் படும் எனக் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, ஜி.எஸ்.டி., வரி செலுத்துவோ ரில் குறிப்பிட்ட வருமான வரம்புக்கு உட்பட் டோர், யார் கட்டுப்பாட்டில் வருவர் என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் இடையே இணக்கம் ...

புதிய நோட்டுகளை வினியோகிக்க47,000 ஏ.டி.எம்.,கள் மாற்றியமைப்பு

Posted: 20 Nov 2016 08:42 AM PST

புதுடில்லி:நாடு முழுவதும், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்கும் வகையில், 47 ஆயிரம், ஏ.டி.எம்.,கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த நோட்டுகளை வங்கிகளில். 'டிபாசிட்' செய்ய, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, ஏ.டி.எம்.,களில், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்கும் வகை யில், அவற்றை மாற்றியமைக்கும் பணி, ஒரு வாரமாக நடக்கிறது. மொத்தமுள்ள, இரண்டு லட்சம் ஏ.டி.எம்.,களில், இதுவரை, 47 ஆயிரம் ஏ.டி.எம்.,கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ...

உ.பி.,யில் ரயில் தடம் புரண்டதில் பலியானவர்கள்... 120 போ்!:200க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மரண ஓலம்:அதிகாலை பயங்கர விபத்தில் நொறுங்கின 14 பெட்டிகள்

Posted: 20 Nov 2016 09:27 AM PST

புக்ராயன்:உத்தர பிரதேச மாநிலத்தில், இந்துார் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட கோர விபத்தில்,120 பேர் உயிரிழந்த னர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்துாரில் இருந்து, பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், உ.பி.,யின் கான்பூருக்கு அருகே உள்ள புக்ராயன் பகுதியில்,நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் திடீரென தடம் புரண்டது. இதில், ரயிலின், 14 பெட்டிகள் கவிழ்ந்தன. ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிக கோரமான இந்த ரயில் ...

பிறர் வங்கி கணக்கில் 'டிபாசிட்' ஏழு ஆண்டு சிறை நிச்சயம்

Posted: 20 Nov 2016 09:29 AM PST

புதுடில்லி:'பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு களை, வேறு ஒருவரின் வங்கிக் கணக்கில், 'டிபாசிட்' செய்தால், பினாமி பரிவர்த்தனை சட்டத்தில், அபராதத்துடன், ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக் கப்படும்' என, வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்து மாற்ற, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி,ஏழைகளின் வங்கிக் கணக்குகளில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை ...

'கடவுள் - மனித உறவில் யாரும் தலையிட கூடாது'

Posted: 20 Nov 2016 09:38 AM PST

புதுடில்லி:''கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையிலான உறவு, மிகவும் தனிப்பட்ட ஒன்று; இதில், யாருமே தலையிடக்கூடாது,'' என, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்குர் கூறியுள்ளார்.

அதிக உயிரிழப்பு:
டில்லியில் நேற்று, சுப்ரீம் கோர்ட் நீதிபதி, ஆர்.எப்.நாரிமன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில், தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் பங்கேற்றார்; அப்போது, அவர் பேசியதாவது: உலகில் அரசியல் போர்களை காட்டிலும், மதம் காரணமாக நிகழ்ந்த போர்களால் தான், அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தாம் பின்பற்றும் மதமே உயர்ந்தது என ஒவ்வொருவரும் கருதுகின்றனர். ...

நேரடி போருக்கு தயார் பாக்., தளபதி திமிர் பேச்சு

Posted: 20 Nov 2016 09:38 AM PST

இஸ்லாமாபாத்:''பாக்., ராணுவம் நேரடி போரு க்கு எப்போதும் தயாராக உள்ளது; உலகின் எந்த ராணுவத்திற்கும் சளைத்தது அல்ல,'' என, பாக்., ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் கூறியுள்ளார்.

சமீபத்தில் நம் ராணுவம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி, பயங்கரவாத முகாம்களை அழித்தது. 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப் பெயரிடப்பட்ட இந்த துல்லிய தாக்குதல் சம்பவத்துக்கு பின், இந்திய எல்லையோர கிராமங்களில்,பாக்., ராணுவம் தாக்குதல் நடத்துவது அதிகரித்து உள்ளது.இதற்கு பதிலடி தரும் வகையில், நம் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் நம் ராணுவம் ...

'மெகா' கூட்டணிக்கு காங்., மேடையில் அச்சாரம்?

Posted: 20 Nov 2016 09:44 AM PST

காங்கிரஸ் நடத்திய, இந்திரா நுாற்றாண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கில், லோக்சபா தேர்தலுக்கு, தமிழகத்தில் மெகா கூட்டணிக்கு அச்சாரம் போடும் வகையில், தலைவர்கள் பேசியது பரபரப்பைபை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக காங்., சார்பில், நேற்று முன்தினம், சென்னை யில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் நுாற்றாண்டு விழா கருத்தரங்கம் நடந்தது. இதில், கூட்டணி மேடையாக அலங் கரிக்கும் வகையில், தி.மு.க., விடுதலை சிறுத் தைகள், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் பங்கேற்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், காதர் மொய்தீன் ...

'மல்லையாவுக்கு மட்டுமா; எனக்கு தள்ளுபடி இல்லையா!'

Posted: 20 Nov 2016 11:51 AM PST

மும்பை : 'விஜய் மல்லையா உள்ளிட்டோரின் கடனை தள்ளுபடி செய்தது போல, நான் வாங்கிய, 1.5 லட்சம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, துப்புரவு தொழிலாளி ஒருவர், எஸ்.பி.ஐ., எனப்படும் ஸ்டேட் வங்கிக்கு கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மல்லையாவுக்கு தள்ளுபடி :
தொழில் அதிபர் விஜய் மல்லையாவின், 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் வாங்கிய, 1,200 கோடி ரூபாய் உட்பட, 62 பெரும் பணக்காரர்கள் வாங்கிய, 7,016 கோடி ரூபாய் கடனை, எஸ்.பி.ஐ., தள்ளுபடி செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம் திரியம்பகேஷ்வர் ...

'செல்பி'யால் இறந்தவர்களில் முதலிடம் பிடித்த இந்தியா

Posted: 20 Nov 2016 12:30 PM PST

வாஷிங்டன் : உலகில் 'செல்பி' எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. எனஅமெரிக்காவைச் சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக. ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆய்வு :
தற்போது நல்ல விஷயம் முதல் துக்க நிகழ்ச்சி வரை செல்பி எடுக்கும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இதில் ஆபத்தான முறையில் செல்பி எடுத்த பலர் இறந்தும் உள்ளனர். இது குறித்து அமெரிக்கா கார்நிகி மெலன் பல்கலைக்கழக குழுவினர் , செல்பி எடுக்கும்போது இறந்தவர்கள் பற்றிய ஆய்வு நடத்தினர். ...

எதிர்ப்பாளர் ரோம்னிக்கு பதவி; டிரம்ப் திட்டம்?

Posted: 20 Nov 2016 12:42 PM PST

நியூயார்க்: அமெரிக்காவில், குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அதிபர் தேர்தலின்போது, தன்னை கடுமையாக விமர்சித்தவருமான மிட் ரோம்னிக்கு, வெளியுறவு அமைச்சர் பதவி வழங்க, டிரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், 70, வெற்றி பெற்றார். 2017 ஜனவரியில், அவர் பதவி ஏற்க உள்ளார்; புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அவர் ஈடுபட்டு உள்ளார்.இந்நிலையில், தான் சார்ந்துள்ள குடியரசு கட்சியின், மிதவாத தலைவர்களில் ஒருவரான மிட் ...

'ரபேலுக்கு' நிகர் 'தேஜஸ்'; ராணுவ அமைச்சர் பெருமிதம்

Posted: 20 Nov 2016 01:31 PM PST

பனாஜி : ''உலகின் பிரபலமான இலகுரக விமானங்களை ஒப்பிடுகையில், நம்முடைய தேஜஸ் தான், சிறந்த தயாரிப்பு. பிரான்ஸ் நாட்டின் ரபேல் விமானத்திற்கு நிகரானது,'' என, ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அதிக வலிமை :
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, இந்தியாவின் அதிநவீன, 'தேஜஸ்' இலகுரக போர் விமானம், சமீபத்தில், ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. பிற இலகுரக விமானங்களுடன் ஒப்பிடுகையில், தேஜஸ் அதிக வலிமை வாய்ந்தது. சீனா - பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பான, 'பைட்டர்' விமானம், பிரான்சின், 'ரபேல்' விமானங்களை விடவும், அதிக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™