Tamil News | Online Tamil News |
- தேர்தலில் போட்டியிட தகுதியிழந்தவர்களுக்கு மீண்டும்...வாய்ப்பு!: மூன்றாண்டு தண்டனை காலம் முடிவடைந்ததால் மகிழ்ச்சி
- ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் இந்திய பொருளாதாரம்... விர்ர்!: மத்திய அரசு நடவடிக்கைக்கு ஐ.எம்.எப்., பாராட்டு
- உள்ளாட்சி இட பங்கீடு இழுபறி காங்., - தி.மு.க., உறவு 'டமார்?'
- அரசு நிதியை கட்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த... தடை!:அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி
- நிர்வாகத்தை ஆட்டிப் படைக்கும் நிழல் முதல்வர்கள்
- 'தயார் நிலையில் இந்திய ராணுவம்!'
- உயர் நீதிமன்றத்தை தபால் அலுவலகமாக... மாற்றாதீங்க!:அரசு செயலர்களுக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை
- முதல்வர் ஜெ., நலமாக இருக்கிறார்; கண் திறந்து பார்த்தார்
- காவிரியில் ஆதாயம் தேடும் கட்சிகள்!
- தனிக்குடித்தனத்திற்கு கட்டாயப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்
- இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மே, 2017க்குள் மின்சார வசதி: பியூஷ் கோயல்
| Posted: 08 Oct 2016 06:14 AM PDT உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், கடந்த தேர்தலில், செலவு கணக்கு தாக்கல் செய்யாமல் தகுதியிழந்தவர்களுக்கான தண்டனை காலம், கடந்த ௬ல் முடிவடைந்தது; இதனால், இவர்கள், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. சட்டசபை, பார்லிமென்ட் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், தாங்கள் தேர்தலில் செலவு செய்த தொகை குறித்த கணக்கு விபரங்களை, குறிப்பிட்ட காலத்திற்குள், தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும்.தேர்தல் செலவு கணக்கு விபரங்களை, குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யாத வர்கள், ... |
| Posted: 08 Oct 2016 06:26 AM PDT வாஷிங்டன்:'ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையால், இந்திய பொருளாதாரம், குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி அடையும்; இது, உற்பத்தித் துறைக்கு சாதகமாக இருக்கும்' என, ஐ.எம்.எப்., எனப் படும், சர்வதேச நிதியம், பாராட்டு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும், பல்வேறு வரிவிதிப்பு முறை கள், தற்போது நடைமுறையில் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு வரி விதிப்பு முறை நடைமுறை இருப்பதால்,தேவை யற்ற குழப்பமும், ஒரே பொருளுக்கு, பல்வேறு கட்டங்களில் வரி செலுத்த வேண்டிய நிலையும் உள்ளது. இந்த குழப்பத்தை தவிர்க்கும் வகையில், ஒரே சீரான ... |
| உள்ளாட்சி இட பங்கீடு இழுபறி காங்., - தி.மு.க., உறவு 'டமார்?' Posted: 08 Oct 2016 07:55 AM PDT தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடந்த பேச்சின் போது, கட்சியினரை, அவமானப்படுத்தி விட்டதாக, தி.மு.க., தரப்பு மீது, காங்கிரசார் கடும் கோபத்தில் உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில், ஏற்பட்ட கடும் தோல்வியை அடுத்து, தமிழக காங்கிரஸ் தலை வராக இருந்த இளங்கோவனை பதவி விலகக் கேட்டுக் கொண்டது, காங்கிரஸ் தலைமை. இதையடுத்து, தன் பதவியை ராஜினாமா செய்தார் இளங்கோவன். உள்ளாட்சி தேர்தல்நீண்ட இழுபறிக்குப் பின், தமிழக காங்.,கின் புதிய தலைவராக, திருநாவுக்கரசர் நியமிக்க பட்டார். அவர் நியமிக்கப்பட்டு, சில நாட்களி லேயே, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளி யானது. ... |
| Posted: 08 Oct 2016 08:31 AM PDT புதுடில்லி:'அரசியல் கட்சிகள், தங்கள் கட்சி சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் விளம்பரத்திற்காக, அரசு நிதியையும், அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தக் கூடாது' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமை யிலான ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி தலைமையிலான ஆட்சியின் போது, மாநிலத்தின் பல பகுதிகளி லும், அந்த கட்சியின் தேர்தல் சின்னமான, யானை சிலைகள் நிறுவப்பட்டன. மாயாவதி, தன் கட்சி சின்னத்தை பிரபலப் படுத்த, அரசு நிதியையும், அரசு ... |
| நிர்வாகத்தை ஆட்டிப் படைக்கும் நிழல் முதல்வர்கள் Posted: 08 Oct 2016 09:53 AM PDT புதுடில்லி: நாட்டின் பல மாநிலங்களில், உயர் அதிகாரிகள் சிலர், ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். முதல்வர்களின் நம்பிக்கையை பெற்று, நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்ப துடன், நிழல் முதல்வர்களாகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அது போன்ற அதிகாரிகள் சிலரை பற்றிய விபரம்:வி.கே.பாண்டியன், ஒடிசா : கடந்த, 2000ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர். ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் முதன்மை செயலர். ஒடிசாவில் நிறைவேற்றப் பட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த திட்டங் களின் பின்னணியில் இவர் உள்ளார்.ஒடிசா மாநில ... |
| 'தயார் நிலையில் இந்திய ராணுவம்!' Posted: 08 Oct 2016 10:16 AM PDT புதுடில்லி: இந்தியா - பாக்., எல்லையில், பாக்., ராணுவம், அடிக்கடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வரும் நிலையில், ''எத்தகைய அச்சுறுத்த லையும் முறியடிக்கும் வகையில், நம் படைகள் தயார் நிலையில் உள்ளன,'' என, விமானப்படை தளபதி அருப் ராஹா கூறியுள்ளார். உ.பி., மாநிலம், காஜியாபாத் மாவட்டத்தில், ஹிண்டன் விமானப்படை தளத்தில், நேற்று, இந்திய விமானப்படையின், 84வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, இலகுரக போர் விமானங்கள், பல்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்டின. போர்விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்த்து, பொதுமக்கள் மகிழ்ச்சி ... |
| உயர் நீதிமன்றத்தை தபால் அலுவலகமாக... மாற்றாதீங்க!:அரசு செயலர்களுக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை Posted: 08 Oct 2016 10:27 AM PDT சென்னை:'உயர் நீதிமன்றத்தை தபால் அலுவலகமாக மாற்றக்கூடாது; பொது மக்கள் மனு மீது, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், அரசு செயலர்களை, நீதிமன்றத்துக்கு வரவழைக்க நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திண்டிவனம் தாலுகா, ஆத்துார் கிராமத்தில், முலச்சூர் - மரக்காணம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, ஆறுமுகம் என்பவர், 2016, பிப்ரவரியில் மனு கொடுத்தார். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த ... |
| முதல்வர் ஜெ., நலமாக இருக்கிறார்; கண் திறந்து பார்த்தார் Posted: 08 Oct 2016 10:53 AM PDT சென்னை: முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும் கண் திறந்து பார்த்ததாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கடந்த 22 ம் தேதி மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா சேர்க்கப் பட்டார். நுரையீரலில் நீர் கோர்த்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டது என மருத்துவர்கள் முடிவு செய்து அதற்கேற்ப சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாசம் கடந்த செவ்வாய்கிழமை (அக்., 4) வரை காயச் சல் இருந்து வந்தது. மருத்துவர்கள் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக வென்டி லேட்டர் பொருத்தினர். ... |
| காவிரியில் ஆதாயம் தேடும் கட்சிகள்! Posted: 08 Oct 2016 11:07 AM PDT காவிரி விவகாரத்தில், ஆதாயம் தேடுவதில், அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. காவிரி நதிநீர் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்' என, உத்தரவிட்டது; ஆனால், 'பார்லிமென்டில் விவாதித்து தான், நடவடிக்கை எடுக்க முடியும்' என, மத்திய அரசு கைவிரித்து விட்டது.இதையடுத்து, இந்த பிரச்னையில் தமிழகத்தின் எதிர்ப்பு, மெல்ல மத்திய அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது. அனைத்து கட்சிகளும், மத்திய அரசுக்கு எதிராக, முழங்க ஆரம்பித்துள்ளன; போராட்டங்களையும்நடத்தி வருகின்றன.பிரதமர் மோடியை, ... |
| தனிக்குடித்தனத்திற்கு கட்டாயப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட் Posted: 08 Oct 2016 12:30 PM PDT புதுடில்லி: தன் வயதான பெற்றோரை உடன் வைத்து பராமரிக்க சம்மதிக்காமல் தனிக்குடித்தனம் செல்ல கட்டாயப்படுத்தும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி அனில் ஆர் தவே வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: மகனின் கடமை பெற்றோரால் வளர்க்கப்பட்ட மகனுக்கு, ... |
| இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மே, 2017க்குள் மின்சார வசதி: பியூஷ் கோயல் Posted: 08 Oct 2016 01:25 PM PDT வதோதரா: இந்தியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் வரும் மே, 2017 க்குள் மின்சார வசதி கிடைத்து விடும் என்று மத்திய மின்சக்தி, எரிசக்தி இணையமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவில் இரண்டு நாட்கள் நடந்த மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இத்தகவலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். மத்திய அரசு நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தும் தேசிய மின் திட்டம் என்ற திட்டத்தை சமீபத்தில் கொண்டு வந்நது, அந்த திட்டத்தின் படி மின் வசதி இல்லாத கிராமங்களில் வசிப்பவர்களுக்கு மின்வசதி ஏறபடுத்தி தர மத்திய ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 09,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |