Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சர்ஜிக்கல் தாக்குதல் நடந்தது உண்மைதான்; பாக்., போலீஸ் எஸ்.பி. ஒப்புதல்

Posted: 05 Oct 2016 09:57 AM PDT

மிர்பூர்: இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்றும் அத்தாக்குதலில் தனது எல்லைக்குட் பட்ட பகுதியில் 12 பேர் பலியானதாகவும் பாகிஸ்தான் போலீஸ் எஸ்.பி., ஒப்புக்கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.

ஆத்திரபட வைத்த யூரி தாக்குதல்
கடந்த செப்.,18 ம் தேதி காஷ்மீர் மாநிலம் யூரி ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ...

குறைந்தது காற்றாலை மின்சாரம் : அதிகரித்தது அனல் மின் உற்பத்தி

Posted: 05 Oct 2016 09:35 AM PDT

காற்றாலை சீசன் முடிந்ததால், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 7,616 மெகாவாட் திறனுடைய, காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில், உற்பத்தியாகும் மின்சாரத் தை, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. மே மாதம் முதல் செப்., வரை காற்றாலை சீசன். அதன்படி, மே மாதத்தில் இருந்து, தினமும் சராசரியாக, 2,500 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் கிடைத்தது. இதனால், மின் வாரியம்,
அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை குறைத்தது. இந்நிலையில், செப்., மாதத்துடன் காற்றாலை சீசன் முடிவடைந் தது. சில ...

முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 05 Oct 2016 10:09 AM PDT

புதுடில்லி: பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாக்., எல்லையில் பதற்றம் நீடிப்பதை அடுத்து, பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு வழங்கப் படும் பாதுகாப்பு, மேலும்அதிகரிக்கப்பட்டுள்ளது.
பதற்றமான சூழல் :
இதன்படி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை
ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, காங்., தலைவர் சோனியா, துணை தலை வர் ராகுல் உள்ளிட்ட முக்கிய தலைவர் களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ...

23 நாட்களுக்கு பின் தமிழகம் - கர்நாடகா இடையே சரக்கு போக்குவரத்து...துவங்கியது!: பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட லாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கம்

Posted: 05 Oct 2016 10:29 AM PDT

ஓசூர்:கர்நாடக மாநிலத்திற்கு, 23 நாட்களுக்கு பின், நேற்று முதல் மீண்டும் வாகன போக்குவரத்து துவங்கியது. சரக்கு லாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. ''இன்று முதல் அரசு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, கிருஷ்ணகிரி மாவட்ட, எஸ்.பி., மகேஷ்குமார் கூறினார்.

காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில், செப்., 12ல் வன்முறை வெடித்தது. இதில், தமிழக பதிவு எண் லாரிகள், ஆம்னி பஸ் மற்றும் இரு சக்கர வாகனங்கள் கொளுத்தப் பட்டன. தமிழர்களின் உடைமைகள்சூறையாடப் பட்டன. இரு மாநிலங்கள் இடையே, வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.தமிழக வாகனங்கள், ...

உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் 'அப்பீல்'

Posted: 05 Oct 2016 10:33 AM PDT

சென்னை:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை யை ரத்து செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கிடையில், தி.மு.க.,தரப்பிலும், 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

டிசம்பருக்குள் தேர்தல்
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த, உயர் நீதி மன்ற நீதிபதி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப் பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். புதிதாக அறிவிப்பாணை யை வெளியிட்டு, டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.
இதையடுத்து, ...

இந்தியாவில் தாக்குதல் நடத்த 100 பயங்கரவாதிகள்...சதி!:குளிர்காலம் துவங்குவதற்குள் ஊடுருவ திட்டம்

Posted: 05 Oct 2016 10:41 AM PDT

புதுடில்லி:இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதிக்கு அருகே, இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு, 100 பாகிஸ் தான் பயங்கரவாதிகள் தயாராக இருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடியிடம், பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர்காலம் துவங்குவதற்குள், இந்தியாவுக்குள் ஊடுருவி, தாக்குதல் நடத்தவும், பயங்கரவாதி கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரி ராணுவ முகாம் மீது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதி கள் ...

காவிரி ஆய்வுக்கு நிபுணர் குழு அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு

Posted: 05 Oct 2016 10:44 AM PDT

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, காவிரி விவ காரம் தொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, உயர்மட்ட நிபுணர் குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது.

மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக உள்ள, ஜி.எஸ்.ஜா தலைமையில், காவிரி விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு, உயர்மட்ட நிபுணர் குழுவை, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அமைத்துள்ளது.மத்திய நீர்வள ஆணைய அதிகாரி மசூத் உசேன், கிருஷ்ணா கோதாவரி படுகை தலைமை பொறி யாளர் ஆர்.கே.குப்தா ஆகியோர்,இதன் உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச் சேரி மாநிலங்களின் தலைமைச் ...

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு சித்தராமையா புது விளக்கம்

Posted: 05 Oct 2016 10:47 AM PDT

பெங்களூரு:''கர்நாடகாவுக்கு தேவையான காவிரி தண்ணீர் போக, மீதமுள்ள தண்ணீர் தான் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது; தேவையில்லாத குழப்பம் வேண்டாம்,'' என, கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையா கூறினார்.

கர்நாடகாவில் உள்ள துமகூரு சித்தகங்கா மடத்துக்கு சென்று, சிவகுமார சுவாமிகளிடம், முதல்வர் சித்தராமையா ஆசி பெற்றார்; இதன் பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
அநியாயம்
காவிரி நீர் விஷயத்தில், நம் மாநில மக்களுக்கு அரசு அநியாயம் செய்யாது. நமக்கு தேவையான அளவு தண்ணீரை வைத்து கொண்டு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, ...

வறட்சிக்கு மத்திய அரசு தயாரா? சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

Posted: 05 Oct 2016 11:57 AM PDT

புதுடில்லி:'கடந்த ஆண்டு ஏற்பட்டது போல், வறட்சி ஏற்பட்டால், அதை சமாளிக்க மத்திய அரசு தயாராக உள்ளதா' என, சுப்ரீம் கோர்ட் கேள்விக் கனைகளை தொடுத்தது.

'பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட வறட்சியை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை' என, ஒரு அரசு சாரா அமைப்பு, கடந்த ஆண்டு, சுப்ரீம் கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தது.
மீண்டும் விசாரணை:
அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வறட்சி நிவாரணப் பணிகள் குறித்து பல்வேறு உத்தரவு களை பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு, நீதிபதி கள், எம்.பி.லோகுர், என்.வி.ரமணா அடங்கியசுப்ரீம் கோர்ட் அமர்வு ...

220 கிலோ போதை பொருள் பறிமுதல்: விமான படை அதிகாரி, விஞ்ஞானி கைது

Posted: 05 Oct 2016 12:15 PM PDT

ஐதராபாத்: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட, இந்திய விமானப் படை அதிகாரி மற்றும் பெங்களூரை சேர்ந்த விஞ்ஞானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து, 45 கோடி ரூபாய் மதிப்பிலான, 220 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரகசிய தகவல்:
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலில், விமானப்படை அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து நடந்த விசாரணையில், விங் கமான்டர் ராஜசேகர் ரெட்டி மற்றும் பெங்களூரை சேர்ந்த விஞ்ஞானி வெங்கட்ராம ராவ் ஆகியோருக்கு போதைப் ...

கனவு கலைந்தது... காசு கரைந்தது!ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சியில் வேட்பாளர்கள்:இதுவரை செலவு செய்த ரூ.50 லட்சம், 'அம்போ?

Posted: 05 Oct 2016 12:34 PM PDT

உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, ஐகோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆளும்கட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் கடும் விரக்தியடைந்துள்ளனர்.

மறுதேர்தலின்போது, தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் ஒருபுறமும், இதுவரை செய்த, 50 லட்சம் ரூபாய்க்கும் மேலான செலவுகள் மறுபுறமும், அவர்களை கவலையடைய செய்துள்ளன.சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தல், வரும், 19ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்கு சென்னை மாநகராட்சியில் உள்ள, 200 வார்டுகளில் போட்டியிட, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சுயேச்சைகள் என, 3,155 பேர் வேட்புமனுக்களை தாக்கல் ...

வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்

Posted: 05 Oct 2016 01:51 PM PDT

தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.
இ - சேவை மையங்கள்
இது குறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள, இ - சேவை மையங்களில், தற்போது, 100 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன; இந்த ஆண்டுக்குள், சேவைகளின் எண்ணிக்கை, 300 ஆக உயர்த்தப்படும்.
அதன் ஒரு பகுதியாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வழங்கப்பட உள்ளது. அரசு கேபிள், ...

ஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Posted: 05 Oct 2016 02:48 PM PDT

டில்லி: இந்தியாவின் ஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தகவல்தொடர்பு மற்றும் ஒளிப்பரப்பு சேவைக்கு 15 ஆண்டுகள் வரை தன் உழைப்பை செலுத்த தயாராகிறது.

இந்தியாவின் இஸ்ரோவிற்கு சொந்தமான ஜிசாட் 18 தகவல் தொடர்பு செயற்கைகோளை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிரெஞ்ச் நாடு கயானா கொருவில் இருந்து ஏரியன் 5 வி.ஏ. 231 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ முடிவு எடுக்கப்பட்டது. இந்த ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்படுவதாக கூறப்பட்டது.
வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்நிலையில் நேற்று அதிக காற்றழுத்தம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™