Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எல்லையில் உளவு விமானங்கள் : தயார் நிலையில் ராணுவம்

Posted: 04 Oct 2016 09:32 AM PDT

புதுடில்லி: இந்தியா - பாக்., எல்லையில், ஆளில்லா உளவு விமானங்கள் பறந்ததால், அங்கு பதற்றம் நீடிக்கிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இந்தியா - பாக்., எல்லையை ஒட்டிய பகுதிகளில், நேற்று, ஆளில்லா உளவு விமானங்கள் வலம் வந்தன. பாக்., ராணுவம், உளவு விமானங்களை அனுப்பி, இந்திய ராணுவத்தின் பலம் குறித்து அறிய முயற்சி செய்திருக்கலாம் என்பதால், எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில எல்லைகளில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. எல்லை பாதுகாப்புப் படையினர், ரோந்து பணியில் ...

பாக்., பெண்களுக்கு பாதுகாப்பு : சுஷ்மா கருத்துக்கு வரவேற்பு

Posted: 04 Oct 2016 09:34 AM PDT

புதுடில்லி: 'சர்வதேச இளைஞர் அமைதி திருவிழாவில் பங்கேற்பதற்காக, இந்தியா வந்துள்ள, பாக்., இளம்பெண்களுக்கு, முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்' என, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' கருத்துப் பதிவு செய்துள்ளார்.

சுஷ்மாவின் இந்த கருத்தை, சர்வதேச பெண்கள் அமைப்பினர் வரவேற்றுள்ளனர். 'சர்வதேச இளைஞர் அமைதி திருவிழா' வரும், 27ல், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடக்கிறது. இதையடுத்து, பாக்., இளம்பெண்கள், 19 பேர், இந்தியா வந்துள்ளனர்.இந்நிலையில், இந்தியா - பாக்., எல்லையில் பதற்றம் நீடிப்பதால், பாக்., பெண் களின் பெற்றோர் ...

பிரதமர் சந்திக்காததால் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஏமாற்றம்!: நடைபயணமும் பயனளிக்காததால் விரக்தி

Posted: 04 Oct 2016 09:43 AM PDT

'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது' என, மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, இது தொடர்பாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கோரினர். ஆனால், பிரதமர் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, அரை கி.மீ., நடந்து சென்று, பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துவிட்டு, ஏமாற்றத்துடன், சென்னைக்கு திரும்பினர்.

காவிரி விவகாரம் இரண்டு வாரங்களாக டில்லி அரசியல் வட்டாரங்களை சூடேற்றியபடி இருந்தது. கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையா, அந்த மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், - எம்.பி.,க்கள், - பா.ஜ., - காங்கிரஸ், - ...

ஜெ., உடல்நிலை: ஐகோர்ட் அதிரடி

Posted: 04 Oct 2016 10:06 AM PDT

சென்னை: முதல்வரின் உடல்நிலை குறித்து, புகைப்படத்துடன் கூடிய விரிவான அறிக்கை கோரிய மனுவுக்கு, அரசிடம் விளக்கம் பெறும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 'முதல்வரின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ள, மக்களுக்கு உரிமை உள்ளது' எனவும், நீதிபதிகள் தெரிவித்தனர்.

சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனு: முதல்வர் ஜெயலலிதா, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வரின் உடல்நிலை குறித்து, சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப் படுகின்றன; இதனால், பொது மக்கள் சுதந்திர மாக வெளியில் செல்ல ...

பாதுகாப்பு சாதனங்களை முடக்கி கொள்ளையடித்த பலே திருடர்கள்

Posted: 04 Oct 2016 10:17 AM PDT

பரீதாபாத்: ஹரியானா மாநிலத்தில் உள்ள கம்ப்யூட்டர் விற்பனை நிலையத்தின் பாதுகாப்பு சாதனங்களை முடக்கி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 'லேப் - டாப்'கள் கொள்ளையடிக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.1 கோடி மதிப்பு :
ஹரியானா மாநிலத்தில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பரீதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்ரம் சிங்; இவர், 'மைக்ரோ வேர்ல்டு' என்ற பெயரில், 'லேப் - டாப் ஷோரூம்' நடத்தி வருகிறார். இந்த கடையின் பாதுகாப்பு சாதனங்களை முடக்கி, பூட்டை உடைத்து, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள லேப் - டாப்கள், ...

தமிழகத்தில் இம்மாதம் நடக்கவிருந்த உள்ளாட்சி தேர்தல்...ரத்து!:வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில் ஐகோர்ட் திடீர் உத்தரவு;தி.மு.க., தொடர்ந்த வழக்கின் தீர்ப்பால் தேதிகள் மாற வாய்ப்பு

Posted: 04 Oct 2016 10:24 AM PDT

சென்னை:தமிழகத்தில், இம்மாதம் நடக்க விருந்த உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும், வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், சென்னை உயர் நீதிமன் றம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலை எதிர்த்து, தி.மு.க., தொடர்ந்த வழக்கின் தீர்ப்பால், தேர்தல் தேதிகள் மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு:உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தலில், பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப, இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை. பழங்குடி யின மக்களுக்கு, உரிய ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, அரசியலமைப்பு சட்டத்தில் ...

பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியா - சிங்கப்பூர் உறுதி

Posted: 04 Oct 2016 10:26 AM PDT

புதுடில்லி:'பயங்கரவாதத்தை ஒடுக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இந்தியா வும், சிங்கப்பூரும் இணைந்து செயல் படும்' என, இரு நாடுகளின் பிரதமர்கள், கூட்டாக தெரிவித்து உள்ளனர்.

அரசுமுறை பயணமாக, இந்தியா வந்துள்ள, சிங்கப்பூர் பிரதமர் லீ லுாங், பிரதமர் நரேந்திர மோடியை, டில்லியில் நேற்று சந்தித்தார். பொருளாதார மேம்பாடு, தொழில், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து, இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். 'உலகளாவிய பங்கரவாதத்தை ஒடுக்க, இரு நாடுகளும் இணைந்து செயல்படும்' என, மோடி மற்றும் லீ, செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். ...

காவிரி வழக்கில் தமிழகத்திற்கு பின்னடைவு:மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவு நிறுத்திவைப்பு

Posted: 04 Oct 2016 10:36 AM PDT

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை, சுப்ரீம் கோர்ட், நேற்று நிறுத்தி வைத்ததால், தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை, காவிரியில் இருந்து திறந்து விடும்படி, சுப்ரீம் கோர்ட், அடுத்தடுத்து பிறப்பித்து வரும் உத்தரவுகளை, கர்நாடக அரசு, தொடர்ந்து மீறி வருகிறது.இதனால், கோபமடைந்த நீதிபதிகள், இம்மாதம், 4ம் தேதிக்குள்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில், திடீர் திருப்பமாக, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற வேண்டும்' ...

ரேஷனில் பருப்பு, பாமாயிலுக்கு சிக்கல் அரசாணைக்கு காத்திருக்கும் அதிகாரிகள்

Posted: 04 Oct 2016 10:46 AM PDT

சிறப்பு பொது வினியோக திட்டத்துக்கு காலக்கெடுவை நீட்டித்து, அரசாணை வெளி யிடாததால், ரேஷனில் பருப்பு , பாமாயில் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இவற்றை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்புகிறது. தமிழக அரசாணையின் படி, சிறப்பு பொது வினி யோக திட்டகாலக்கெடு, 2016 செப்டம்பரில் முடிந்தது. காலக்கெடுவை நீட்டித்து அரசாணை ...

ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக களமிறங்கியது கூகுள் நிறுவனம்; சுந்தர் பிச்சை அதிரடி

Posted: 04 Oct 2016 11:15 AM PDT

சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் தங்களது புதிய தயாரிப்பான கூகுள் பிக்ஸல் போன் அறிமுக விழாவை இன்று நடத்தியது. கூகுள் நிறுவன சி.இ.ஓ., சுந்தர் பிச்சை விழாவை துவக்கி வைதார். தொடர்ந்து கூகுள் தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

கூகுள் பிக்ஸல் , பிக்ஸல் எக்ஸல் போன்
கூகுள் தனது புதிய தயாரிப்பான கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் எக்ஸல் போனை அறிமுகப்படுத்தியது. இது பார்க்க ஏற்கனவே கசிந்த புகைப்படத்தில் உள்ள போன் போன்றே தெரிகிறது. முக்கிய அம்சமாக இந்த கூகுள் போன் ‛‛கூகுள் அசிஸ்ட்டன்ட்'' ...

'ஜிசாட்-18' செயற்கைகோள் ஏவுதலை ஒத்திவைத்தது இஸ்ரோ

Posted: 04 Oct 2016 12:53 PM PDT

பிரெஞ்ச் கயானா: பிரான்சிலிருந்து விண்ணில் செலுத்தவிருந்த இஸ்ரோவின் 'ஜிசாட்-18' செயற்கைகோள், மோசமான வானிலை காரணமாக ஒருநாள் ஒத்தி வைக்கப்பட்டது.
மோசமான வானிலை:
பிரான்ஸ் நாட்டின் பிரெஞ்ச் கயானாவின் 'கவ்ரவ்' ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, ஏரியன்-5 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் 'ஜிசாட்-18' செயற்கைகோள் நாளை(அக்.,5) விண்ணில் செலுத்தப்படவிருந்தது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக திட்டமிட்டபடி செயற்கைகோளை விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஒருநாள் ஒத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
15 ...

அ.தி.மு.க.,வில் மீண்டும் 1984: அள்ளித்தட்டிய அமைச்சர்கள்!

Posted: 04 Oct 2016 01:55 PM PDT

தமிழக அரசியல் வரலாற் றில், மறக்க முடியாத ஆண்டு 1984. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., உடல் நலக்குறைவால், அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, அந்தக்கட்சி சட்டசபை தேர்தலைஎதிர் கொள்ள வேண்டிய நிலைமை எம்.ஜி.ஆர்., என்ற மாபெரும் வசீகர சக்தியை வைத்து, தேர்தலில் வெற்றி கொள்வதற்கான வியூகத்தை வகுத்தது, அன்றிருந்த 12 சீனியர் அமைச்சர்கள்.

அன்று 12 பேர்அவர்கள் தான், தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.,வேட்பாளர்களையும் தேர்வு செய்த னர். நிச்சயமாக ஜெயிப்போம் என்ற நம்பிக்கை யில்,சொத்துக்களை விற்று லட்சங்களில், அந்த அமைச்சர்களை ...

இந்திய செய்தித்தாள் நிறுவனத்தின் நிர்வாகிகள் தேர்வு

Posted: 04 Oct 2016 02:51 PM PDT

பெங்களூரு : ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய செய்தித்தாள் நிறுவனத்தின் நிர்வாகிகள், தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு :
இந்திய செய்தித்தாள் நிறுவனத்தின், 77வது ஆண்டு பொதுக் குழுக் கூட்டம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்தது; இதில், 2016 - -17ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் :
'ராஷ்டிரதுாத்' வார இதழை சேர்ந்த சோமேஷ் சர்மா, தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 'பிசினஸ் ஸ்டாண்டர்ட்' பத்திரிகையின் அகிலா உரன்கார், உதவி தலைவராகவும்; 'தி ஹிந்து வீக்லி'யின் ...

5 மாநில சட்டசபை தேர்தல்; நீதிபதிகள் மாநாட்டில் ஆலோசனை

Posted: 04 Oct 2016 03:31 PM PDT

புதுடில்லி: அடுத்தாண்டு, ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியலில் குற்றவாளிகளின் பின்னணி, தேர்தல் சட்டங்கள், தேர்தல் கமிஷனின் அதிகார எல்லை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, ஐகோர்ட் நீதிபதிகள், அடுத்த மாதம் ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஐகோர்ட் நீதிபதிகளுக்கான மாநாடு:
ம.பி., மாநிலம், போபாலில் உள்ள, தேசிய நீதித் துறை அகாடமி, ஐகோர்ட் நீதிபதிகளுக்கான, வருடாந்திர மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இரண்டு நாள் நடக்கும் இந்த மாநாட்டில், தேர்தல் கமிஷனின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகார வரம்பு தொடர்பான ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™