Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பெண்

Posted: 04 Oct 2016 09:56 AM PDT

1980- உடைகள் மாறின உலக்கைகள் தடை செய்தன வெளியை நிம்மதியான உறக்கம் நிகழ மறுத்த காலம் இச்சைக்கு கால்கள் விரியக்கூடாதென ரிப்பனால் கட்டிப்போடப்பட்டன... அன்று முதல் இன்று வரை இருகால்களும் கைகளும் சுதந்திரமிழந்தன... எங்கு சென்றாலும் ஒருகை இல்லாதவள் போலவே பழக்கப்படுத்தப்பட்டது.. ஓடியகால்கள் தடுக்கிவிழாமல் நடக்கவே சிரமப்பட்டன.. வெடிச்சிரிப்பு மத்தாப்பானது.. நான்குசுவர்களுக்குள் எல்லை சுருங்கியது. ரேடியோ ஒன்றே உலகு காட்டியது. ஆண்களிடம் பேசுவதும் அவர்களைப்பார்ப்பதும் தீண்டாதவையாகின. கல்வியைவிட ...

பெண்களைக் கிறங்கடிக்கும் பூவும் பொம்மையும் !

Posted: 04 Oct 2016 07:04 AM PDT

பெண்களைக் கிறங்கடிக்கும் பூவும் பொம்மையும் !





new india insurance company

Posted: 04 Oct 2016 06:08 AM PDT

மோட்டார்இன்சூரன்ஸ் கம்பெனியில் ஏஜென்ட்டாக சேர வழிமுறைகள் பற்றிய விளக்கம் வேண்டும்

ஜெயலலிதா உடல் நிலை ; 6ம் தேதிக்குள் விளக்கம் வேண்டும் : உயர் நீதிமன்றம் அதிரடி

Posted: 04 Oct 2016 05:37 AM PDT

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் "முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவருக்கு என்ன நோய்? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அவ்வப்போது, முதல்-அமைச்சர் நன்றாக இருக்கிறார் ...

திருப்பூர் குமரன்

Posted: 04 Oct 2016 05:30 AM PDT

- திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) - இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, ...

நான் சுத்திவளைச்சு பேசவிரும்பல..

Posted: 04 Oct 2016 05:22 AM PDT

நான் சுத்திவளைச்சு பேசவிரும்பல.. நான் சுத்திவளைச்சு பேசவிரும்பல.. அப்போல்லாவை பார்த்து கேட்கிறேன்.. நீ ஹாஸ்பிட்டல் நடத்துரியா இல்ல கொடநாடு எஸ்டேட் நடத்துரியா?.. என்னடா ஆச்சு எங்க அம்மாவுக்கு?.. காய்ச்சல்னு உங்கிட்ட வந்தவங்களை நீ என்ன பண்ணிருக்கனும்.. இரண்டு ஊசியையும்,நாலு குளுகோஸையும் போட்டு இரண்டே நாள்ல வீட்டுக்கு அனுப்பிருக்கனும்.. அதுதானய்யா உலகவழக்கம்.. அதவிட்டுட்டு இப்படி பத்துநாள் கொண்டுபோய் வெச்சுக்கிட்டா தமிழ்நாட்டை யார் பாத்துக்கறது எங்களை எல்லாம் யார் காப்பாத்துறது.. இதே ...

தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து

Posted: 04 Oct 2016 05:16 AM PDT

தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை ஐக்கோர்ட் உத்தரவு தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு இரு அரசாணைகள் பிறப்பித்தன. அதேபோல, சென்னை மாநகராட்சிகளும் அறிவிப்பாணை வெளியிட்டது. தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வில்லை என்றும் எஸ்.டி. பிரிவு மக்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் ஒதுக்கவில்லை என்றும் எனவே, இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்யவேண்டும் என்றும் ...

சித்திரமும் கைப்பழக்கம்

Posted: 04 Oct 2016 05:09 AM PDT

சித்திரமும் கைப்பழக்கம்



மிகவும் இயற்கையாக உள்ளது .

அருமை
நன்றி அரவிந் ஸ்ரீனிவாசன் ......முகநூல்

ரமணியன்

தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த வெள்ளை மாளிகை

Posted: 04 Oct 2016 04:44 AM PDT

தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த வெள்ளை மாளிகை அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்று மொழியாக ஏற்றது மிகுந்த மனவலியை தருகிறது என மாணவி வாசித்த கவிதை அனைவரையும் வெகுவா கக் கவர்ந்தது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தேசிய மாணவர்களுக்கான கவிதைப் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மாணவ, மாணவிகள் உட் பட 4 பேரின் கவிதை களைப் பாராட்டி ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா கவுரவித்தார். ''தலைமுடியைப் போல ...

பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம்

Posted: 04 Oct 2016 03:46 AM PDT

- பழனி மலைக்கோயில் ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக புதன்கிழமை (அக். 5) முதல் ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படவுள்ளது. இது குறித்து திங்கள்கிழமை பழனிக்கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனியில் இயக்கப்படும் ரோப்கார் பராமரிப்புப் பணிக்காக நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரமும், மாதம் ஒன்றுக்கு ஒரு நாளும் நிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக அக்.5 முதல் ஒரு மாதத்துக்கு ரோப் கார் நிறுத்தப்படவுள்ளது. ...

படித்ததில் இடித்தது

Posted: 04 Oct 2016 01:18 AM PDT

. "ஆமை புகுந்த  வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது " என்ற ஒரு பழமொழி தமிழ்நாட்டில் உண்டு. அருப்புக்கோட்டை திரு .பொன் . சரவணன் அவர்கள் இப்பழமொழி தவறு என்று கூறுகிறார் . " ஆம்பி பூத்த வீடு உருப்படாது " என்ற பழமொழிதான் காலப்போக்கில் " ஆமை புகுந்தவீடு உருப்படாது " என்று மாற்றம் பெற்றுவிட்டது என்று கூறுகிறார். " ஆம்பி " என்றால் காளான் ; அதாவது ஒருவீட்டில் காளான் வளர்ந்தால் அந்த வீடு உருப்படாது என்பது ஆசிரியரின் கருத்தாகும் . ஆசிரியரின் வாதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . ' ஆமை ஒரு வீட்டிற்குள் ...

ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு

Posted: 04 Oct 2016 12:46 AM PDT

- நிகழாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு ஜப்பானைச் சேர்ந்த உயிரணுவியல் விஞ்ஞானி யோஷினோரி ஓசுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். – - பழுதடைந்த உயிரணுக்கள் தம்மைத் தாமே அழித்து சுத்தம் செய்துகொள்ளும், "ஆட்டோஃபஜி' என்று அழைக்கப்படும் "சுய துப்பரவு' செயல்நுட்பம் குறித்த ஆய்வுகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப் படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. – இதுகுறித்து அந்தக் குழு திங்கள்கிழமை கூறியதாவது: – உயிரிணுக்களின் சுய துப்பரவு செயல்நுட்பம் குறித்து மிகக் குறைவாகவே அறியப்பட்டிருந்த ...

பாரதம் அழியாத ஞான பூமி(

Posted: 03 Oct 2016 11:05 PM PDT

பாரதம் அழியாத ஞான பூமி(உயர்வு நிலை)  படைப்பவரான பரம பிதா சிவபரமாத்மா இந்த எல்லையற்ற சிருஷ்டியின்(படைப்பின்)காலச்சக்கரத்தின் முதல்-இடை-கடைமூன்றும் உணர்ந்தவர் ஆதலால்தான் அவருக்கு திரிமூர்த்தி சிவாஎன்ற மகிமையும் உண்டு.பிரம்மா மூலம் படைத்தல்,விஷ்ணு மூலம் காத்தல்,சங்கர் மூலம் அழித்தல்.இம்முத்தொழிலையும் செய்பவர் செய்விப்பவர் பரம்பொருளே.இதனால் இந்த காலச்சக்கரம் அழிவற்ற கடிகாரம் போல் சுற்றிக்கொண்டே இருக்கும்.இதனை முதலில் இருந்து இறுதி வரை யார்யார் எந்தெந்த சமயத்தில் ஆத்மாக்கள் இறங்கி எப்படி வாழ்ந்தனர் ...

“பசுமை கேரளம்’ திட்டத்தின் பிரசாரத் தூதராகிறார் யேசுதாஸ்

Posted: 03 Oct 2016 10:09 PM PDT

- "பசுமை கேரளம்' திட்டத்தின் பிரசாரத் தூதராகச் செயல்படுவதற்கு பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், பின்னணிப் பாடகருமான கே.ஜே.யேசுதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். – கேரளத்தில் உள்ள நீர் நிலைகள், ஆறுகள் மற்றும் குளங்களைத் தூர்வாரவும், குப்பைகளை ஒழிக்கவும் பினராயி விஜயன் தலைமையிலான அந்த மாநில அரசு திட்டமிட்டது. – இதற்கு "பசுமை கேரளம்' எனப் பெயரிடப்பட்டது. இந்தத் திட்டத்துக்கான பிரசாரத் தூதராக செயல்படுமாறு பாடகர் யேசுதாஸிடம் வலியுறுத்தி இருந்ததாகவும், ...

ரயில்களில் வெளிநாட்டு முதியோருக்கு கட்டணச் சலுகை ரத்து

Posted: 03 Oct 2016 10:08 PM PDT

வெளிநாடுகளைச் சேர்ந்த முதியோருக்கு ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வரும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய முறையானது கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில் சேவையில் முதியவர்கள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணச் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டொன்றுக்கு ரூ.1,400 கோடி அளவுக்கு பயணக் கட்டணத்தில் அவர்களுக்கு சலுகைகள் வழங்கப் படுகின்றன. அதில் அதிகமாக பயன்பெறுவோராக முதியோர்கள் உள்ளனர். 60 ...

மகாராணியின் வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறான் மன்னா..!’’

Posted: 03 Oct 2016 10:06 PM PDT

- நம்ம படத்தோட ஷூட்டிங்கை எங்கே வச்சுக்கலாம்..?'' - ''கடன் கொடுத்த பைனான்சியர்கள் திரும்பக் கேட்டு வர முடியாத இடத்துல வச்சுக்கலாம்!'' - ----------------------------------------------------------------- - இந்தப் படத்துல உங்களுக்கு மன நிறைவைத் தந்த இடம் எது..?'' - ''வேற எது? பேசின சம்பளத்தை புரொடியூசர் குறைக்காம கொடுத்த இடம்தான்!'' - -------------------------------------------------------------------- - ம ன்னா! அண்டை நாட்டு மன்னன் கடைசியாக அனுப்பிய புறாவைப் பார்க்க வேண்டும் ...

மனத்தில் பதிக்க மனீஷா பஞ்சகம்

Posted: 03 Oct 2016 08:12 PM PDT

ஸ்ரீ குருவே நம: 13. மனத்தில் பதிக்க மனீஷா பஞ்சகம் (ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது) உலகில் எங்கும் அஞ்ஞானமாகிய இருள் மூடியிருந்த அந்த காலத்தில் , ஞானமாகிய சுடர் ஒளிர்ந்து பிரகாசித்ததால் நமது நாடு பாரதம் என்னும் பெயர் பெற்றது. பாரதம் என்னும் சொல்லிற்கு , 'ஒளிரும் ப்ரகாசம் (shining brightness) என்று பொருள். அஞ்ஞானம்(அறியாமை) என்றால் உண்மை அல்லாத ஒன்றை உண்மை என்று தவறாகப் புரிந்து கொள்ளுதல். ஞானம்(அறிவுடைமை) என்பது உண்மையை உண்மை என்றும், உண்மை அல்லாததை உண்மை அல்லாதது என்றும் அறிந்து கொள்ளுதல். ...

அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்

Posted: 03 Oct 2016 07:59 PM PDT

ஸ்ரீ குருவே நம: அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது 09.09.2016 அன்று 'நேர்மைக் கடைப்பிடி' எனும் தலைப்பின் கீழ் ( ஆன்மீகம் – இந்து பகுதியில் ) "குரு அஷ்டகம்" அறிமுகம் மற்றும் முதல் ஸ்லோகம் ஆகிய இரண்டையும் இணைத்து நம் ஈகரையில் பதித்தோம். அப்போதுதான் நாம் புதியதாக இணைந்தமையால், பதிவு விதி நுட்பங்களின் அறியா நிலை. இனி குரு அஷ்டகத்தின் எஞ்சிய பாடல்களை "அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்" ...

. திருமந்திரம் என்னும் தேன்

Posted: 03 Oct 2016 06:48 PM PDT

தெரிந்துகொள்வோம்  தேன் தமிழை -8 ( திருமூலர் அருளிய திருமந்திரம்) ஓர் அறிமுகம்: திருமந்திரம் என்னும்  நூல் தவயோகத் தந்தை திருமூலரின் படைப்பு. அந்த அற்புதம் ஒரு  யோகமும் ஞானமும் தோய்ந்த ஒரு கல்விக் கருவூலக் களஞ்சியம்.  அந்த யோகமும் ஞானமும்  பக்திநோக்கில் பார்க்கப்பட்டு நமது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. அந்த அமரகாவியத்தை உலக மக்கள் அனைவருக்கும்  ஆக்கும் வகையில்  அமைக்கப்படுவதே, "தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -  திருமந்திரம் என்னும் தேன்" என்னும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™