Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கேரள மருத்துவ கழிவுகளால் தமிழகத்திற்கு... ஆபத்து!சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைய கோரிக்கை

Posted: 28 Oct 2016 05:59 AM PDT

''மருத்துவ கழிவுகள் பாதிப்பு குறித்து, கேரள மக்களிடம் உள்ள விழிப்புணர்வு, தமிழக மக்களிடமும் ஏற்பட வேண்டும். உறக்கத்தில் இருந்து, தமிழகம் விழித்தெழுவது அவசியம்.

அத்துமீறி தமிழகம் வரும் மருத்துவ கழிவு களுக்கு எதிராக, சமூக ஆர்வலர்கள் ஒன்றி ணைந்து, இதை, மக்கள் இயக்கமாக மாற்றுவது அவசியம். அப்படி செய்தால் மட்டுமே, மருத்துவ கழிவு களால் ஏற்படும் பேராபத்தில் இருந்து, தமிழகம் தப்பும்,'' என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கேரளாவிலிருந்து தமிழக எல்லையில், பல விதமான கழிவுகள் கொட்டப்படுவது குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி ...

வங்கிகளை திறந்தால் தாக்குதல் நடத்தி தகர்ப்பதாக...மிரட்டல்!:காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியத்தால் பீதி

Posted: 28 Oct 2016 06:43 AM PDT

ஸ்ரீநகர்:'ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில்,பிரி வினைவாத அமைப்புகள் போராட்டம் அறிவிக்கும் போது,வங்கிகளை மூடி விட வேண்டும்' என, பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதன் மூலம்பள்ளிகள், அரசு அலுவலகங்களை தொடர்ந்து, வங்கிகளையும் முடக்குவதற்கு,பயங்கரவாதிகள் சதி செய்துள்ளனர்.

ஜம்மு -- காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.அங்கு, பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஜூலை, 9 முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங் களுக்கு, 90-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்; ஆயிரக் ...

தங்கள் பொருட்களை புறக்கணிப்பதால் சீனா...கொந்தளிப்பு!: இரு தரப்பு உறவு பாதிக்கும் என மிரட்டல்

Posted: 28 Oct 2016 06:51 AM PDT

புதுடில்லி:'எங்களுடைய பொருட்களை புறக் கணித்தால், இந்தியாவுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவு கடுமையாக பாதிக்கும்' என, சீனா மிரட்டல் விடுத்துள்ளது.

உற்பத்தி நாடான சீனா, தன்னுடைய பல்வேறு பொருட்களை மற்ற நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. அதன் ஏற்றுமதியில், தெற்காசியாவில் மிகப் பெரிய சந்தையாகவும், உலக அளவில் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில், ஒன்பதாவது இடத்திலும், இந்தியா உள்ளது.பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதற்கு எதிராக, இந்தியா கடுமை யாக பிரசாரம் செய்து வருகிறது. ஆனால், பாகிஸ்தானுக்கு, சீனா ஆதரவு ...

நீதிமன்றங்களை மூடிவிடவா என சுப்ரீம் கோர்ட்... கேள்வி!: நீதிபதி காலியிடங்களை நிரப்பாததற்கு கண்டனம்

Posted: 28 Oct 2016 07:58 AM PDT

'நீதிபதி பணியிடங்களை நிரப்பாமல், அரசு நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வருகிறது; பேசாமல், கோர்ட்டுகளை மூடிவிடலாமா' என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளில், காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பு வது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வு கூறியதாவது:நீதிபதிகள் நியமனம் குறித்து, சுப்ரீம் கோர்ட் டின் தலைமை நீதிபதி அடங்கிய, 'கொலீஜியம்' பல்வேறு பரிந்துரைகளை அளித்தும், அதை ...

இளைஞர் வளர்ச்சியில் பரிதாபம் : 133வது இடத்தில் இந்தியா

Posted: 28 Oct 2016 08:20 AM PDT

லண்டன்: சர்வதேச அளவில், இளைஞர் வளர்ச்சியில், 133வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், அரசியல் உட்பட பல்வேறு துறைகளில், இளைஞர்களின் வளர்ச்சி குறித்து, காமன்வெல்த் அமைப்பின் செயலகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது: உலகளவில், ஐந்து இளைஞர்களில் ஒருவர், இந்தியாவில் வசிக்கிறார். அதனால், இளைஞர்கள் அதிகம் வாழும் நாடாக, இந்தியா உள்ளது. சர்வதேச அளவில், 20 சதவீத இளைஞர் கள், இந்தியாவில் வசிக்கின்றனர். அதாவது, 15 முதல் 30 வயதுக்குட்பட்ட 34.5 கோடி பேர், இந்தியா வில் வசிக்கின்றனர்.இந்திய மக்கள் தொகையில், இளைஞர்களின் பங்கு, 27 ...

'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு

Posted: 28 Oct 2016 08:27 AM PDT

'ஆல் பாஸ்' திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு, தமிழகம் உட்பட, நான்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கேரளா, புதுவை மாநிலங்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 முதல், பள்ளிகளில், ஆல் பாஸ் திட்டம் அமலில் உள்ளது. இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள், எந்த வித நிறுத்தமும் இன்றி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர். இந்த திட்டத்தால், கல்வித் தரம் குறைந்துள்ள தாக, மத்திய அரசின் ஆய்வு குழு தெரிவித்துள் ளது.எனவே,ஆல்பாஸ் திட்டத்தை ரத்து ...

யார் சொல்லை கேட்பது : குழப்பத்தில் விஜயகாந்த்

Posted: 28 Oct 2016 09:21 AM PDT

மூன்று தொகுதி இடைத்தேர்தலில், வேட்பாளர் களை நிறுத்துவதா, வேண்டாமா என்ற குழப்பத் தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தவித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க.,
போட்டி யிட்டது. அனைத்து இடங்களிலும் தோல்வி மட்டுமல்ல; டிபாசிட்டையும் பறிகொடுத்தது. தற்போது, மூன்று தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்,வேட்பாளர்களை நிறுத்த விஜயகாந்த் விரும்புகிறார். ஆனால், கட்சியினரோ, 'ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும்; போட்டியிட்டாலும் தோல்வி நிச்சயம்; மேலும் செலவழிக்கவும், எங்களிடம் பணம் ...

எல்லையில் ராணுவம் பதிலடி:15 பாக்., வீரர்கள் பலி

Posted: 28 Oct 2016 09:35 AM PDT

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கடந்த ஒரு வாரத்தில், நம் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், 15 பாக்., ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரியில் உள்ள ராணுவ முகாம் மீது, செப்., மாதம், பாக்., பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில், 18 வீரர்கள் கொல்லப்பட்டனர்; இது, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதற்கு பழிக்குப் பழியாக, எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, பாக்., ஆக்கிரமிப்பு காஷ் மீரில் புகுந்து, நம் வீரர்கள், பயங்கரவாதிகள் முகாம்களை, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' தாக்குதல் நடத்தி அழித்தனர்; இதில், பயங்கரவாதிகளும், அவர்களுடன் ...

'முப்படை அதிகாரம் யாருக்கு?'

Posted: 28 Oct 2016 09:48 AM PDT

புதுடில்லி:'நம் முப்படைகளும், மத்திய அமைச் சரவை மற்றும் மத்திய அரசுக்கு கட்டுப் பட்டவை; இல்லையென்றால், நாட்டில் ராணுவ சட்டம் இருந்திருக்கும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாமில், பாக்., பயங்கரவாதிகள், கடந்த மாதம் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ் மீரில் இருந்த, பாக்., பயங்கரவாதிகள் முகாமை, நம் ராணுவம்அதிரடி தாக்குதல் நடத்தி அழித்தது. இந்த தாக்குதல் குறித்து, அரசியல் கட்சிகள் இடையே, கடும் விவாதம் நடந்து வருகிறது.இந்நிலையில், 'முப்படைகளும், ஜனாதிபதியின் ...

கோழைத்தனமான தாக்குதல் தொடுக்கும் பாக்., : ராஜ்நாத் சிங்

Posted: 28 Oct 2016 01:24 PM PDT

புதுடில்லி : கோழைகளின் ஆயுதமான பயங்கரவாதம் மூலம் இந்தியா மீது பாக்., தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

டில்லி கிரேட்டர் நொய்டாவில் நடந்த இந்திய - திபெத்திய எல்லைப் படையின் 55-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியாவின் பாதுகாப்பில் இந்திய - திபெத்திய எல்லைப் படையினரின் பங்கு முக்கியமானது. நிகழாண்டில் சீன ராணுவத்தின் அத்துமீறல்களை 60 சதவீத அளவுக்கு அவர்கள் முறியடித்துள்ளனர். அவர்களுக்கு நம் நாட்டு மக்கள் சார்பில் பாராட்டுகளையும், தீபாவளி ...

கோவா முன்னாள் முதல்வர் மறைவு

Posted: 28 Oct 2016 02:33 PM PDT

பனாஜி: கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முதல் பெண் முதல்வருமான சசிகலா ககோட்கர், 81, நேற்று காலமானார்.
முதல் பெண் முதல்வர் :
கோவா மாநிலத்தில், 1973 - 76ம் ஆண்டுகளில் முதல்வராக இருந்தவர், எம்.ஜி.பி., எனப்படும் மஹாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சியின் தலைவர் சசிகலா ககோட்கர். மாநிலத்தின், முதல் பெண் முதல்வர் என்ற, பெருமையையும் பெற்றார். ஆறு மாதங்களாக, உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த சசிகலா, நேற்று காலமானார். அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
துக்கம் அனுசரிப்பு :
சசிகலா ககோட்கர் மறைவுக்கு, கோவா முதல்வர் ...

ஆயுதங்களாக சிறார்கள்: பிரிவினைவாதிகள் மீது மெஹபூபா குற்றச்சாட்டு

Posted: 28 Oct 2016 03:25 PM PDT

உதம்பூர் : காஷ்மீர் பிரிவினைவாதிகள் சிறார்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது : தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி படிக்கவைக்கும் பிரிவினைவாதத் தலைவர்கள், காஷ்மீரில் உள்ள ஏழைக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விரும்பவில்லை. கல்வியறிவு பெற்றுவிட்டால் பின் அவர்கள் கல்வீசி தாக்க மாட்டார்கள் என்ற பயம் அவர்களுக்கு. காஷ்மீரில் கடந்த 3 மாதங்களாக மூடியுள்ள பள்ளிகளை திறக்க, அரசு நடவடிக்கை எடுத்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™