Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தொடரை வெல்வது யார்? இந்தியா-நியூஸி. இன்று பலப்பரீட்சை

Posted: 28 Oct 2016 04:26 PM PDT

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா இரு வெற்றிகளுடன் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. கடைசி ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்றுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. நியூஸிலாந்து அணி இதுவரை இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றதில்லை. அந்த குறையை இந்த முறை தீர்ப்பதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் கடந்த 18 ...

கொசுவை விரட்டும் டி.வி.!

Posted: 28 Oct 2016 09:08 AM PDT

- உலகம் எங்கும் மக்களை பயமுறுத்திக் கொண்டிருப்பவை, மலேரியா, ஜிகா வைரஸ், டெங்கு காய்ச்சல். அவற்றைப் பரப்பும் கொசுக்கள். கொசுவை விரட்ட இலை,தழைகளைக் கொளுத்துவது போன்ற நம் முன்னோர்கள் வழிமுறைகளிலிருந்து மாறுபட்டு, கொசுவை விரட்ட ஏகப்பட்ட கொசு விரட்டிகள் வந்தாயிற்று. அதிலும், புகையும் கொசுவிரட்டிகள், புகை வராத திரவ கொசு விரட்டிகள் என நிறைய வகைகள். கொசு விரட்டிகளைப் பயன்படுத்த முடியாத இடங்களில் உடலில் கொசு விரட்டி மருந்துகளைத் தடவிக் கொண்டு நம்மை மட்டும் கொசுவிலிருந்து ...

அமைதியாக தீபாவளி கொண்டாடும் கிராமம்: யாருக்காகத் தெரியுமா?

Posted: 28 Oct 2016 09:01 AM PDT

- காஞ்சிபுரம்: பல ஆண்டுகளாக மரங்களில் குடியிருக்கும் வவ்வால் பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடிக்காமல் விஷார் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். காஞ்சிபுரம் வட்டத்துக்கு உள்பட்டது விஷார் கிராமத்தில் உள்ள பீமேஸ்வரர் கோயில் அருகே தாமரைகுளம் உள்ளது. இக்குளத்தின் அருகே 200 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வசித்து வருகின்றன. இம்மரங்களில் குடியிருக்கும் வெளவால்களை தங்கள் கிராமத்தின் நினைவுச் ...

வெடிப்பு ஒரு வரிக்கதை.

Posted: 28 Oct 2016 08:59 AM PDT



வெடிகள் வேண்டுமா? என்று கேட்டான் அவன்

அவள் வாயாலேயே வெடித்து தள்ளினாள்

இருவரும் மூலைக்கொருவராகச் சிதறிப் போனார்கள்.

ந.க.துறைவன்.
*

நவம்பர் 11-ஆம் தேதி ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

Posted: 28 Oct 2016 08:58 AM PDT

- புது தில்லி, ஜப்பானுக்கு அடுத்த மாதம் 11, 12-ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அந்நாட்டு மன்னர் அகிஹிடோவையும், பிரதமர் ஷிண்டே அபே ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். இதுகுறித்து வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: அடுத்த மாதம் 11-ஆம் தேதி இருநாள் பயணமாக ஜப்பானுக்குச் செல்லும் பிரதமர் மோடி, இருதரப்பு மற்றும் பிராந்திய உறவுகள் குறித்தும் பரஸ்பர நல்லெணத்துடன் சர்வதேச பிரச்னைகளை அணுகுவது குறித்தும் பேச்சுவார்த்தை ...

முன்னோட்டம்: 'காஷ்மோரா'-வில் கவனிக்கத்தக்க 10 அம்சங்கள்

Posted: 28 Oct 2016 07:44 AM PDT

--- நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்துவரும் 'காஷ்மோரா', தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை கோகுல் இயக்கி இருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. - இப்படம் குறித்து 10 தகவல்கள்: - * செய்வினை வைப்பது, எடுப்பது போன்ற விஷயங்கள் அடங்கிய கதைதான் 'காஷ்மோரா'. அவையெல்லாம் உண்மைதானா என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தின் ட்ரெய்லர் ...

உஷார் உஷா...

Posted: 28 Oct 2016 03:38 AM PDT

iஹைபுன்

Posted: 28 Oct 2016 02:49 AM PDT

நொடியில்..!! * மகிழ்ச்சியான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? துக்கமான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? இரண்டுமே இல்லை. எல்லாமே மனம் தீர்மானிப்பது தானே தவிர வேறொன்றுமில்லை. ஒரு நொடியிலே இரண்டும் மாறி மாறி நிகழ்ந்தேறும். இதனை நேரடியாக அனுபவத்திலே காணலாம். இரவு – பகல் அமாவாசை, பௌர்ணமி என எல்லாம் மாறி மாறி வருவது போன்று தான் மகிழ்ச்சியும் துக்கமும் வாழ்வில் நிகழ்ந்தேறி வருகின்றன. இயற்கை தகவமைத்துள்ள செயல்பாட்டு முறைப்படியே மனித மனமும் செயல்படுகின்றன என்பதை இதன் வாயிலான அறிந்துக் கொள்ள முடிகின்றது. பூமியின் ...

ஃபீலிங் தத்துவம்...!!

Posted: 28 Oct 2016 02:37 AM PDT

ஹெச்எம்டி டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 28 Oct 2016 01:32 AM PDT

ஹரியாணா மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (ஹெச்எம்டி) டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. - பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான அந்த ஆலையின் ஊழியர்களின் ஊதியம், இதர நிலுவைத் தொகைகளை வழங்குவதற்காக, ரூ.718.72 கோடியை ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. - தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, ...

கோகுல் சேஷாத்திரியின் இராஜகேசரி புத்தகம் கிடைக்குமா ?

Posted: 28 Oct 2016 01:26 AM PDT

கோகுல் சேஷாத்திரியின் இராஜகேசரி புத்தகம் கிடைக்குமா ?

பூலோகத்தை காக்க வந்த அவதாரம் மருத்துவமனையில் அனுமதி!

Posted: 28 Oct 2016 12:29 AM PDT

கடவுள் விஷ்னுவின் பத்தாவது அவதாரம் நான் தான், பூலோகத்தை காக்க வந்த அவதாரம் நான் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய விஜயகுமாரு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் கல்கி பகவான் ஆசிரமம் என்ற பெயரில் பல்வேறு ஆசிரமங்களை நடத்தி வருகிறார். இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட தற்போது முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோவில் கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் அனுமதிக்கப் பட்டுள்ள விஜயகுமாரை பார்க்க அவரது பக்தர்கள் ...

புதுவை வங்கியிலிருந்து அனுப்பிய பணத்தில் கள்ள நோட்டுகள்? ரிசர்வ் வங்கி அதிகாரி புகார்

Posted: 27 Oct 2016 07:54 PM PDT

புதுச்சேரி வங்கியில் இருந்து அனுப்பிய பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்ததாக ரிசர்வ் வங்கி அதிகாரி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புதுவை ரெட்டியார் பாளைத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த ஜூலை மாதம் செலுத்தப்பட்ட பணத்தை வங்கி அதிகாரிகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி உள்ளனர். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அந்த பணத்தை சோதனை செய்தபோது அதில் 100 ரூபாய் நோட்டுகள் 10, 500 ரூபாய் நோட்டு ஒன்று, ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று என கள்ள நோட்டுகள் இருந்ததை கண்டு ...

அருணாசல் செல்கிறார் தலாய் லாமா: சீனாவுக்கு நெருக்கடி?

Posted: 27 Oct 2016 07:02 PM PDT

- திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் அருணாசலப் பிரதேசம் செல்கிறார். ஏற்கெனவே, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ராகுல் வர்மா அண்மையில் அருணாசலப் பிரதேசத்துக்கு சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், தலாய் லாமா அருணாசலப் பிரதேசம் செல்வது சீனாவுக்கு நெருக்கடி அளிக்கும் இந்தியாவின் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையிலும், அணு விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராகச் ...

அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்

Posted: 27 Oct 2016 04:46 PM PDT

ஸ்ரீ குருவே நம: அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது 09.09.2016 அன்று 'நேர்மைக் கடைப்பிடி' எனும் தலைப்பின் கீழ் ( ஆன்மீகம் – இந்து பகுதியில் ) "குரு அஷ்டகம்" அறிமுகம் மற்றும் முதல் ஸ்லோகம் ஆகிய இரண்டையும் இணைத்து நம் ஈகரையில் பதித்தோம். அப்போதுதான் நாம் புதியதாக இணைந்தமையால், பதிவு விதி நுட்பங்களின் அறியா நிலை. இனி குரு அஷ்டகத்தின் எஞ்சிய பாடல்களை "அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்" ...

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Posted: 27 Oct 2016 04:42 PM PDT

தெரிந்து கொள்வோம்   தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)  "தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி"                                       ஆத்திச்சூடி                            (ஔவையார் அருளியது) 01. அறஞ் செய விரும்பு. பதவுரை: அறம் – தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவை. செயல்  -  கடந்த கால நிகழ்வுகளை அனுபவமாகக் கொண்டு நிகழ் காலத்திலும்   எதிர்காலத்திலும் எண்ணம் , சொல் ,செயல் ஆகிய மூன்றினாலும் தூய்மையோடு வாழ்தல். விரும்புதல் ...

குறளில் காணும் நிறை

Posted: 27 Oct 2016 04:37 PM PDT

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7  – ( திருக்குறள் ) பொருட்பால் அரசியல் அதிகாரம் 40 கல்வி. பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும்  அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும். கல்வி ...

அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம்

Posted: 27 Oct 2016 04:34 PM PDT

ஸ்ரீ குருவே நம: அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் (வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா - அருட்பெருஞ்ஜோதி அகவல்) வடலூர் அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் – மானுட சமயங்களைக் கடந்த 'சத்' நெறியாளர். அவர் உலக மக்களுக்குக் கண்பிக்க விழைந்தது  ஒளியாகிய அறிவே வடிவான பரம்பொருள் –  உலக ஜீவராசிகள் அனைத்தும் அறிவைக் கொண்டு வாழ்தலால் அது சமயப் பொதுமை .ஆகையால் அருட்பா அகவல் ஈகரையில் இலக்கியப் பகுதியில் பதிவிடம் காண்கின்றது.   தேமதுரத் தமிழில் பரம்பொருளை அழைத்து - வாழ்த்தி மகிழும்  வடலூர் ...

ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Posted: 27 Oct 2016 04:31 PM PDT

தெரிந்து கொள்வோம்  தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)                                           ஔவைக்குறள்                                    (ஔவையார் அருளியது)                                     வீட்டு நெறிப்பால்                                 1.பிறப்பின் நிலைமை. 4.            தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்                உருவத்தா லாய பயன். (1-04) தெளிவுரை : உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™