Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அதிரடி! ஒடிசாவில் போலீஸ் என்கவுன்டரில் நக்சல்கள் 24 பேர் 'அவுட்' ரூ.20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட இரு தலைவர்களும் காலி

Posted: 24 Oct 2016 09:52 AM PDT

புவனேஸ்வர்:ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில், இரு மாநில கூட்டு போலீஸ் சிறப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், தலா, 20 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த இரண்டு முக்கிய தலைவர்கள் மற்றும் ஏழு பெண்கள் உட்பட, 24 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆந்திரா - ஒடிசா எல்லையில், நக்சலைட் பிரச்னை அதிகம் உள்ள பகுதியில், ஆந்திராவின் நக்சலைட் எதிர்ப்பு படையான, 'கிரேஹவுன்ட்' பிரிவைச் சேர்ந்த வீரர்களும், இரு மாநில போலீஸ் சிறப்புப் படையினரும், நேற்று காலை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.துப்பாக்கிச்சண்டைஅப்போது, ஒடிசா மாநிலம், மல்கான்கிரி ...

உ.பி.,யில் ஆளும் சமாஜ்வாதி குடும்ப சண்டை.. முற்றியது ..! முலாயம் - அகிலேஷ் - சிவ்பால் நேரடி மோதல்

Posted: 24 Oct 2016 09:55 AM PDT

லக்னோ,:சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பனிப்போர், சண்டையாக முற்றியுள்ளது; கட்சி கூட்டத்தில், முலாயம், அவரது மகனும், முதல்வருமான அகிலேஷ் யாதவ், முலாயமின் தம்பி சிவ்பால் ஆகியோர், நேரடியாக கடுமையாக மோதியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்தாண்டு துவக்கத்தில், சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள, உ.பி.,யில், சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. கட்சி தலைவர் முலாயம் சிங்கின் மகனும், மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவ், முலாயமின் சகோதரர் சிவ்பால் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பதிலடி
இரு மாதங்களாக, இருதரப்பினர் இடையே ...

'உ.பி.,யை உத்தம பிரதேசமாக மாற்றுவேன்' : பிரதமர் மோடி சூளுரை

Posted: 24 Oct 2016 09:58 AM PDT

மஹோபா,:''உ.பி., மாநில மக்கள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் விரித்த வலையிலிருந்து மீண்டு, பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்; பா.ஜ., ஆட்சியில், அடுத்த, 10 ஆண்டுகளில், உ.பி., உத்தம பிரதேசமாக உருவெடுக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உ.பி.,யில், சமாஜ்வாதியைச் சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
மாயவலை
இதையொட்டி, உ.பி., சென்றுள்ள பிரதமர் மோடி, மஹோபா மாவட்டத்தில், நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது:உ.பி., பல்வேறு அரசியல் ...

தி.மு.க., திடீர் அழைப்பு மக்கள் நல கூட்டணியில் பிளவு?

Posted: 24 Oct 2016 10:15 AM PDT

காவிரி பிரச்னை தொடர்பாக, தி.மு.க., கூட்டியுள்ள, அனைத்து கட்சி கூட்டம், மக்கள் நலக் கூட்டணியில், பிளவை ஏற்படுத்தி உள்ளது.

தர்ம சங்கடம்காவிரி பிரச்னைக்கு தீர்வாக, மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தி.மு.க., சார்பில், இன்று அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. இதற்காக, அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும், அழைப்பு அனுப்பி உள்ளது.தி.மு.க., கூட்டணி கட்சிகள் தவிர, த.மா.கா., மட்டும், இதில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி குழப்பத்தில் உள்ளது. ...

தீபாவளிக்கு 3,000 கிலோ தங்கம் விற்பனை? நகை கடைகளில் அலைமோதும் கூட்டம்

Posted: 24 Oct 2016 10:24 AM PDT

தீபாவளியை முன்னிட்டு தங்கம் வாங்க, நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, இந்த ஆண்டு தீபாவளிக்கு, 3,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 35 ஆயிரம் தங்க நகை கடைகளில், தினமும் சராசரியாக, 1,200 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன. தீபாவளியை முன்னிட்டு, பல நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு, 'போனஸ்' வழங்குகின்றன. அதன் காரணமாக, தங்கம் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, தீபாவாளியை ஒட்டிய நாட்களில், தங்கம் விற்பனை வழக்கத்தை விட, மிக கூடுதலாக இருக்கும்.கடந்த ஆண்டு தீபாவளிக்கு, சென்னை, காஞ்சி, ...

லண்டன், டில்லி டாக்டர்கள் ஜெ.,வுக்கு மீண்டும் சிகிச்சை

Posted: 24 Oct 2016 10:27 AM PDT

சென்னை, : லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே, நேற்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்.

அவர், நேற்று முன்தினம் இரவு, மீண்டும் சென்னை வந்தார். அதேபோல் டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனை, நுரையீரல் நிபுணர் டாக்டர் கில்நானியும், சென்னை வந்தார். இருவரும், நேற்று காலை அப்பல்லோமருத்துவமனை சென்று, முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். முதல்வர் உடல்நிலை குறித்து, நேற்று மருத்துவமனை சார்பில், அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
வேகமாக குணமடைந்து வருகிறார்
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான, நடிகை குஷ்பு, பகல், 12:45 மணிக்கு, அப்பல்லோ மருத்துவமனை ...

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்

Posted: 24 Oct 2016 10:34 AM PDT

உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தனி அதிகாரிகள் நியமனம் செய்து, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.

இன்று காலை பொறுப்பேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம், நேற்றுடன் நிறைவு பெற்றது. அவர்களின் பதவி காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் பணிகளை துவக்கியது. வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில், தேர்தல் பணிகளை நிறுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நியமனம்
இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தி, டிச., 30க்குள் தேர்தல் நடத்தவும், அதுவரை, உள்ளாட்சிகளைநிர்வகிக்க, தனி ...

அமைச்சரவை கூட்டம் நடந்தது என்ன?

Posted: 24 Oct 2016 10:38 AM PDT

சென்னை:தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று, இரண்டாவது முறையாக, அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.

தற்போது, முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 19ம் தேதி, அவரது தலைமையில், முதல் அமைச்சரவை கூட்டம்நடந்தது.
புகைப்படம் மட்டும்
இரண்டாவது முறையாக, நேற்று அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், தலைமைச் செயலகத்தில், அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் ...

ரிசர்வ் வங்கி விதிமுறையை காற்றில் பறக்க விடும் வங்கிகள்

Posted: 24 Oct 2016 10:50 AM PDT

'வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்களுக்கு, பரிவர்த்தனை பற்றிய தகவல்களை உடனுக்குடன் அனுப்ப வேண்டும்' என்ற, ரிசர்வ் வங்கியின் உத்தரவை, பல வங்கிகள் பின்பற்றாததால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் தொடர்கிறது.

அச்சம்
நாடு முழுவதும், 32 லட்சம் பேரின், 'டெபிட் கார்டு' விபரங்கள் திருடப்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தில், வங்கிகள் அவற்றை முடக்கிய தகவல் வெளியானது. இதனால், டெபிட் கார்டு வைத்துள்ளோர் அதிர்ச்சி அடைந்தனர். பாரத ஸ்டேட் வங்கி, ரகசிய எண்ணை அடிக்கடி மாற்றும்படி வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பியது.
சில வங்கிகள், ...

டில்லியில் தொடரும் பறவை காய்ச்சல் பீதி: அரசு தீவிர நடவடிக்கை

Posted: 24 Oct 2016 11:35 AM PDT

டில்லி: டில்லியில் பறவை காய்ச்சல் பீதி நிலவுகிறது. நேற்று மட்டும் 6 பறவைகள் இந்த நோய் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பறவை காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
டில்லியில் இன்று நடந்த ஒருங்கிணைந்த கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட அபிவிருத்தி அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது:பறவை காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டில்லி சக்தி சால் அருகே மான் பார்க்கில் இரண்டு வாத்துகள் உட்பட நான்கு பறவைகள் நேற்று பலியாகியுள்ளதையடுத்து இது வரை மொத்தம் 64 பறவைகள் ...

பலுசிஸ்தான்: 200 போலீசாரை சிறைப்பிடித்துள்ள பயங்கரவாதிகள்

Posted: 24 Oct 2016 12:49 PM PDT

குவெட்டா: பலுசிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகள் 200 பயிற்சி போலீசாரை சிறைப்பிடித்துள்ளனர். குவெட்டா நகரின் ரியாப் ரோடு பகுதியில் போலீஸ் பயிற்சி மையம் உள்ளது. அதில் சுமார் 700 போலீசார் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று நள்ளிரவு அந்த மையத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்த துவங்கினர். இதில் 4 பயிற்சி போலீசார் காயம் அடைந்ததாகவும் 200க்கும் மேற்பட்ட பயிற்சி போலீசார் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.மையத்திலிருந்து தப்பி வந்த ஒருவர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™