ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்களுக்கும் அனுமதி
- வங்க கடலில் புயல் சின்னம்
- இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
- நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
- நூலிழையில் உயிர் தப்பினார் மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபி
- ஜவுளித் துறையில் களம் காணும் பதஞ்சலி
- ஜன்னல் நிலவு : கவிஞர் இரா .இரவி
- ஜன்னல் நிலா: பொன். குமார்
- வெளிநாடு சென்றுள்ள அன்புமணி போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றார்
- கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த விலையில் தீபாவளி பட்டாசுகள் தமிழக அரசு தகவல்
- இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
- ஏம்பா, பருப்புக்கு மட்டும் இனிஷியலைச் சேர்த்துச் சொல்றே?
- தலைவரின் உயில்…
- யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
- செட்டிநாடு பாசிப்பருப்பு நெய் உருண்டை
- அம்மா! அம்மா!
- வாழ்க்கையை அநுபவிக்க கற்றுக்கொள்வோம்..
- ஒரு நிமிடக்கதை: தீபாவளி
- உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை
- கப்பலோட்டிய தமிழர்
- கண்ணனை நினைக்காத நாளில்லையே!
- தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
- அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு!
- எஸ்கலேட்டர்ல நடந்து செல்பவர்கள்...1!
- தீபாவளி ஸ்வீட்ஸ்!
- குலோப் ஜாமூன் டிப்ஸ்!
- கூழாங்கற்கள்...!!
- ஹைமா புயல் : சீனாவில் 16 லட்சம் பேர் பாதிப்பு
- புதுச்சேரியிலிருந்து ரயில்கள் புறப்படும் நேரம்
- கோஹ்லி அசத்தல் சதம் : இந்திய அணி அபார வெற்றி
- உள்ளார் கொல்லோ தோழி !
- விடைபெறுகிறது ஐ.என்.எஸ்., விராட்
- நல்லதை கற்றுக் கொடுப்போம்!
- தேவனே என்னை பாருங்கள்
- திருநாள் கொண்டாடுவோம்!
- தீபாவளி என்றால்...
- நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்..
- பூஜை அறையில் குற்றப்பபத்திரிகை..!
- கம்பரின் சொல்லாட்சி
| ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்களுக்கும் அனுமதி Posted: 24 Oct 2016 03:56 PM PDT புதுடில்லி: ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்கள் உள்ளே நுழைய அனுமதி வழங்குவதாக, சுப்ரீம் கோர்ட்டில் தர்கா நிர்வாகம் கூறியுள்ளது மும்பையின் வொர்லி பகுதியில், கடலோரத்தில் அமைந்துள்ளது, 15ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, ஹாஜி அலி தர்கா.கடந்த, 2012ம் ஆண்டு வரை, தர்காவின் உள்பகுதிக்குள் செல்ல பெண்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டது. தர்கா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு தடை விதித்து, பெண்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட வலியுறுத்தி, 'பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன்' ... |
| Posted: 24 Oct 2016 03:53 PM PDT வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அந்தமானின் போர்ட் பிளேரில் இருந்து, வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில், 520 கி.மீ., துாரத்திலும்; மியான்மர், யாங்கூனில் இருந்து தென் மேற்கு திசையில், 310 கி.மீ., துாரத்திலும் மையம் கொண்டுள்ளது; இது, இன்று புயலாக மாறலாம் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல், மியான்மரை நோக்கியோ அல்லது ஒடிசா மற்றும் ஆந்திர கடற்பகுதியை நோக்கியோ திரும்பலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பக்கம் திரும்பினால், நாளை மறுநாள் ... |
| இன்றைய (அரசியல்) கார்ட்டூன்... Posted: 24 Oct 2016 03:48 PM PDT ![]() |
| நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு Posted: 24 Oct 2016 03:45 PM PDT ![]() |
| நூலிழையில் உயிர் தப்பினார் மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபி Posted: 24 Oct 2016 03:39 PM PDT 24th October 2016 07:44 PM | - தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபி இன்று அம்மாநிலத்தின் உக்கர் மாவட்டத்திலுள்ள ஹங்புங் பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்றை திறந்து வைக்க இருந்தார். இதற்காக அவர் உக்கர் நகருக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். - ஹெலிபேடை விட்டு அவர் இறங்கியதும் தீவிரவாதிகள் சிலர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது அருகிலிருந்த பாதுகாப்பு படையினர் ... |
| ஜவுளித் துறையில் களம் காணும் பதஞ்சலி Posted: 24 Oct 2016 03:35 PM PDT ஆயுர்வேதப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பதஞ்சலி நிறுவனம் ஜவுளித் துறையிலும் களமிறங்க உள்ளதாக அதன் நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். பாரம்பரிய ஆடைகளான குர்தா-பைஜமா ஆடைகள் மட்டுமல்லாமல் ஜீன்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு ஆடைகளின் தயாரிப்புகளையும் மேற்கொள்ள அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த 2-3 ஆண்டுகளில் பால் பொருள்கள் உள்ளிட்ட புதிய துறைகளில் களமிறங்கி ரூ.10,000 கோடி வருவாய் ஈட்டத் திட்டமிட்டுள்ளோம் என்கிறார் பாபா ராம்தேவ். ஒவ்வொரு ஆண்டும் ரூ.24 லட்சம் கோடி முதல் ... |
| ஜன்னல் நிலவு : கவிஞர் இரா .இரவி Posted: 24 Oct 2016 03:33 PM PDT அமாவாசையன்றும் தோன்றும் ஜன்னல் நிலவு அந்த எதிர் விட்டு நிலவிற்கு விடுப்பே இல்லை ! சூரியன் ஒளியை வானத்து நிலா பிரதிபலிக்கும் சுந்தரியின் ஒளியை சுந்தரன் பிரதிபலிக்கின்றேன் ! வானத்து நிலாவால் அல்லி மலர் மலரும் வஞ்சி என்ற நிலாவால் நான் மலர்கிறேன் ! வானத்து நிலவோ தினமும் ஒரு வடிவம் வஞ்சி அவளோ தினமும் ஒரே வடிவம் ! இரவில் மட்டுமே தெரியும் வான் நிலா பகலிலும் இரவிலும் தெரியும் நிலா அவள் ! முழு நிலவாய் என்றும் அழகாய் ஒளிர்பவள் முகத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி அவள் ! ஒரே ... |
| Posted: 24 Oct 2016 03:31 PM PDT இரவிலேயே காண முடியும் வானத்து நிலா. பகலிலே மட்டும் தோன்றும் ஜன்னல் நிலா. வயதானாலும் வனப்பாகவே இருக்கிறது வானத்து நிலா. வயதானதால் பொலிவிழந்து விடுகிறது ஜன்னல் நிலா. - வானத்து நிலாவிற்கு உண்டு கறை . ஜன்னல் நிலாவை அடைத்திருப்பது சிறை. - வானத்து நிலாவிற்கு துணையாக நட்சத்திரங்கள். ஜன்னல் நிலாவிற்கு துணையாக குடும்பஸ்தர்கள். - வானத்து நிலாவிற்கு ரசிகர்கள் உண்டு. வாழ்க்கைத் தர வேண்டியதில்லை. - ஜன்னல் நிலாவிற்கும் ரசிகர்கள் உண்டு. வாழ்க்கைத் தர எவரும் முன் வருவதில்லை. - ------------------------ நன்றி- ... |
| வெளிநாடு சென்றுள்ள அன்புமணி போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றார் Posted: 24 Oct 2016 03:29 PM PDT - பா.ம.க.,இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார். ரோம்நகர் சென்ற அவர் அங்கு புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவலாயத்தில், போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றார். அவருடன் அவரது மனைவி சவுமியா சென்றுள்ளார். இந்த சந்திப்பு குறித்து அன்புணி போட்டுள்ள பதிவில், போப்பாண்டவரை சந்தித்தோம். அவரது எளிமையும், அன்பும் எங்களை நெகிழ வைத்து விட்டது என்று கூறியுள்ளார் அன்புமணி. போப்பாண்டவர், அன்புமணியிடம் சில வார்த்தைகள் பேசியுள்ளார். ... |
| கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த விலையில் தீபாவளி பட்டாசுகள் தமிழக அரசு தகவல் Posted: 24 Oct 2016 03:27 PM PDT தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த விலையில் தீபாவளி பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். வெளிச்சந்தையைவிட 50 சதவீதம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பட்டாசுகள் விற்பனை சூடு பிடித்து வருகிறது. அதன்படி, தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விற்பனை- பாதுகாப்பு ஏற்பாடுகளை திங்கள் கிழமை ... |
| இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது? Posted: 24 Oct 2016 01:04 PM PDT இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது? இரண்டு பிறந்த நாளைக் கொண்டாடப் போகும் குழந்தை. சில சமயம் இப்படி பிறந்த நாள் கொண்டாடும் குழந்தைகளைக் காண முடியும்.மாசி மாதம் 29 இல் பிறந்தால் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை பிறந்த நாள் வரும். நம்மில் சிலருக்கு இரண்டு பிறந்த நாள்.ஒன்று திகதி அடிப்படையில்,இன்னொன்று நட்சத்திர அடிப்படையில். ஆனால் லின்லே கோப் என்ற இந்தக் குழந்தை அப்படியல்ல. நிசமாகவே இரண்டு பிறந்த நாளைக் கொண்டாடப் போகிறாள்.வருடத்தில் இரண்டு பிறந்த நாள் பரிசுக்காக பெற்றோரிடம் அடம் ... |
| ஏம்பா, பருப்புக்கு மட்டும் இனிஷியலைச் சேர்த்துச் சொல்றே? Posted: 24 Oct 2016 08:55 AM PDT "என்னோட பெரிய பையன் பல் டாக்டர்….., சின்ன பையன் மனநல டாக்டர்…" "அப்ப பெரியவன் டெண்டல் டாக்டர்…. சின்னவன் மெண்டல் டாக்டர்னு சொல்லுங்க…" ஜோ.ஜெயக்குமார், – • "எங்க தாத்தா அந்த காலத்துலே சென்னையிலே இருக்கிற சிங்கங்களையெல்லாம் வேட்டையாடுவாரு" ""சும்மா கதை விடாதே….சென்னையிலே ஏது சிங்கம்?" "அதான் எங்க தாத்தா எல்லா சிங்கங்களையும் வேட்டையாடிட்டாரே…!" வி.எம்.ராஜன், – • "ஐம்பூதங்கள் எவை?" "தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் சார்!" சி.சடையப்பன், – • "ஹாண்ட் ... |
| Posted: 24 Oct 2016 08:49 AM PDT – ஆடாமல் இருக்க முடியவில்லை கயிறு அறுந்த பொம்மைகளால்! – ————————– – வருமானம் இல்லை ஊர் சுற்றும் குடைராட்டினக்காரன் – ———————- – பதவியை விட்டவன் பிடித்து விட்டான் பேருந்தை விட்டவன் இன்னும் நிற்கிறான் – ———————— – முதியோர் இல்லம் ஒருவருக்கு ஒருவர் அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை – —————————– – பிள்ளை முதுகில் தாளம் காணோம் பாகவதரின் சப்ளாக்கட்டை – ————————– – கவிழ்ப்பு பயமில்லாத தலைமைப்பதவி உறுப்பினர் இல்லாத கட்சி – —————————— – அப்பா சட்டைப்பையில் பணம் காணோம் தாத்தா ... |
| யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா? Posted: 24 Oct 2016 08:42 AM PDT திருமணம் முடிந்த புதிதில் அம்மா, உறவினர், நண்பர் என எல்லோரும் கேட்கும் கேள்வி ஏதாவது நல்ல செய்தி இருக்கா? அல்லது ஏதாவது விஷேசம் உண்டா? எ ன்பதுதான். நாம் கூட பல திரைப்படங்களில் இந்த வசனம் இடம் பெறுவதைப் பார்த்திருப்போம். அதாவது தனது மகள் கருவுற்று இருக்கிறாளா? என்பதை அம்மாக்கள் நாசுக்காக கேட்கிற கேள்வியாம். இந்தக் கேள்வியை மையமாக வைத்துக் கொண்டு 3 நிமிடங்களுக்கு ஓடக்கூடிய Any Good News என்ற ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார் சோபியா அஷ்ரப். இவர் ஏற்கெனவே கொடைக்கானல் வோன்ட் (Kodaikkanal ... |
| செட்டிநாடு பாசிப்பருப்பு நெய் உருண்டை Posted: 24 Oct 2016 08:41 AM PDT -- பாசிபருப்பு நெய் உருண்டையானது சத்துமிக்கது. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த பாசிப்பருப்பு நெய் உருண்டையை எப்படி செய்வது என்று பார்க்கலாம். செட்டிநாடு பாசிப்பருப்பு நெய் உருண்டை தேவையான பொருட்கள் : பாசிப் பருப்பு – 2 கப் சர்க்கரை – 2 கப் நெய் 200 கிராம் ஏலக்காய் – 6 முந்திரி உடைத்தது – 50 கிராம் செய்முறை : * ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும். * முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். * பாசிப் ... |
| Posted: 24 Oct 2016 08:27 AM PDT ✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று : கடைசி உருண்டையில்தான் எல்லா சத்தும் இருக்கும், இத மட்டும் வாங்கிக்கோடா கண்ணா! ✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் 'அம்மா'வின் பால்தான். ✏ தன் 'அம்மா' தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை. அவன் அதை உணரும்போது, அவள் உயிரோடு இருப்பதில்லை. ✒ 'அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான். * ✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் ... |
| வாழ்க்கையை அநுபவிக்க கற்றுக்கொள்வோம்.. Posted: 24 Oct 2016 08:25 AM PDT தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை: "ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது. மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக…. இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார். எல்லா மாணவர்களும் பல வகையான ... |
| Posted: 24 Oct 2016 08:20 AM PDT - அன்று அலுவலகத்தி லிருந்து வரும்போதே மிகவும் சந்தோஷமாக இருந்தார் அகிலன். – "கல்பனா..! போனஸ் வந்தி டுச்சு.. தீபாவளி செலவுக்கு பட்ஜெட் போடுவோம். ஜவுளிக் கடையில பழைய பாக்கியை அடைச்சிடுறேன். தீபா, விஷ்ணு..! – லேட்டஸ்டாக வந்த டிசைன்ல உங்களுக்கு என்ன பிடிக்குதோ வாங்கிக்கங்க.. கல்பனா..! ஹேண்ட்லூம்ல கிரடிட்ல உனக்கு பிடிச்ச பட்டு சேலை வாங்கிக்க. மாசாமாசம் என் சம்பளத்துல பிடிச்சுக்குவாங்க." – "தீபாவளிக்கு முறுக்கும், அதிரசமும் பண்ணலாம்னு இருக்கேன். சொந்தக்காரங்களுக்கும், பிரண்ட்ஸ்க்கும் ... |
| உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Posted: 24 Oct 2016 08:18 AM PDT - கோயம்புத்தூரை சேர்ந்தவர் செல்லதுரை. வணிக நிறுவனங்களுக்கான நிழற்கூரைகள், முன்கூரைகள், டென்ட், வர்த்தக நிழல் குடை அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பூர்வீகம் திருச்சி என்றாலும், பிறந்தது படித்தது எல்லாம் கேரள மாநிலத்தில். இவரது வெற்றிக் கதைக்கு பின்னால் வேலைதேடி மதுரை வந்து ஏமாந்த அனுபவம் இருக்கிறது. ''ஒருவேளை வேலை கிடைத்திருந்தால் தொழில்முனைவோராக உருவாகியிருப்பேனா தெரியாது'' என்று குறிப்பிடும் செல்லதுரை தனது தொழில் அனுபவத்தை `வணிகவீதி'க்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து.. டீ ... |
| Posted: 24 Oct 2016 08:16 AM PDT ![]() |
| Posted: 24 Oct 2016 08:12 AM PDT - குழந்தையாக, தோழனாக, நாதனாக, தலைவனாக மற்றும் தெய்வமாக என்று கண்ணனை பல விதங்களில் போற்றி களிப்புறுகின்றனர், அவரது அடியவர்கள். – அத்தகையோரில் ஒருவர் தான், மகான் லீலாசுகர்; அவர், கண்ணனை தான் நேரில் கண்டு களித்த அனுபவத்தை கூறுகிறார்… – 'காயாம் பூ வண்ண மேனி, சிவந்த அதரங்களில் குறும்பு சிரிப்பு, நீண்ட கண்களில் கருணை பொங்க, இடைச்சேரி முழுவதும் தவழ்ந்து விளையாடும் என் கண்ணனை நமஸ்காரம் செய்கிறேன்…' என்று சொல்லி, கண்ணனின் லீலையை, வர்ணிக்கத் துவங்குகிறார்… – 'அம்மா…' என்று அழைத்தபடியே, ... |
| தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை Posted: 24 Oct 2016 07:52 AM PDT தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் புத்தகம் விளக்க உரையுடன் இருந்தால் தரவும்.... மக்களே அன்புள்ள முத்துக்குமரன் |
| அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Posted: 24 Oct 2016 06:47 AM PDT தபால்களைக் கொண்டுவருவதும் கொண்டு செல்வதும்தான் அஞ்சல் அலுவலகங்களின் முக்கிய வேலை என்று நாம் நினைக்கிறோம். அஞ்சல் அலுவலகங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளையும் வழங்குவது பலருக்கும் தெரியாத உண்மை. இன்று நேற்றல்ல,1884-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வழங்கி வருகின்றன அஞ்சல் அலுவலகங்கள். அஞ்சல் அலுவலகங்களில் எடுக்கப்படும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு அதிக போனஸ் கிடைக்கும் என்பதால்தான் பலரும் இதில் சேர்ந்து பலனடைந்து வருகின்றனர். அஞ்சல் ஆயுள் காப்பீடு குறித்து முழுமையாக ... |
| எஸ்கலேட்டர்ல நடந்து செல்பவர்கள்...1! Posted: 24 Oct 2016 06:25 AM PDT - குழந்தைகளிடம் பிடித்ததே அவர்கள் கவனம் ஈர்க்க காரியம் சாதிக்க, அழுகையை மட்டுமே பயன்படுத்தி சிரிப்பைத் தூய்மையாகவே வைத்திருப்பதுதான்! - கிருத்திக் - ------------------------------------- - காதல்ல பிரிஞ்சு போன வருத்தத்தை விட பேச்சுலர் லைப்ல சமைக்கும்போது தோசை பிஞ்சு போன வருத்தம்தான் ரொம்ப கவலையா இருக்கு...! - ------------------------------------ - எஸ்கலேட்டர்ல நடந்து செல்பவர்கள்தான் இந்தியா வல்லராசாக காரணமாக இருக்கப் போகிறார்கள். அப்படி அவசமா எங்கதான்யா போறீங்க...!! - ------------------------------------ - எந்தெந்த ... |
| Posted: 24 Oct 2016 05:45 AM PDT - டபுள் கா மீட்டா - ரபடி! - தேவையான பொருட்கள்: - பிரட் துண்டுகள் - 6 சர்க்கரை - 1 கப் முந்திரி மற்றும் பாதாம் பருப்பு - தலா, 50 கிராம் எண்ணெய் - தேவையான அளவு பால் - அரை லிட்டர் மைதா மாவு - 1 தேக்கரண்டி குங்குமப்பூ - சிறிதளவு - செய்முறை: - பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி, அதை, முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ளவும். மிதமாக, காய்ந்த எண்ணெயில், பிரட் துண்டுகளை பொரித்தெடுக்கவும். பின், சர்க்கரையுடன், ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கி, கம்பி பாகு பதம் வந்ததும் இறக்கவும். பாகு ... |
| Posted: 24 Oct 2016 05:14 AM PDT - * குலோப் ஜாமூனுக்கு பாகு வைக்கும் போது, சம அளவு சர்க்கரை, தண்ணீர் இருக்கும்படி செய்தால், நன்றாக இருக்கும். - * மாவை அழுத்திப் பிசையாதீர்கள்; உள்ளே, கெட்டியாக நின்று விடும். - * பாகு, ஜாமூன் இரண்டுமே சூடாக இருக்கும் போது தான், நன்றாக வரும். ஆறிய பாகில் போட்டால், ஜாமூன், 'மொழுக்'கென்று அழகாக இல்லாமல், குழி போல வந்துவிடும். - * அகலமான பாத்திரத்தில், பாகை ஊற்றி, அதில் தான் ஜாமூன்களை போட வேண்டும். அப்போது தான், ஜாமூன்களை எடுக்கும் போது, கரண்டி பட்டு உடையாது. - * மாவை ... |
| Posted: 24 Oct 2016 03:43 AM PDT இரண்டு கவிதைகள். 1. குழிப்புண்கள் * மேம்பாலத்தைக் கடக்கும் போதெல்லாம் பாலாற்று நதியைப் பார்க்கிறது கண்கள். மணல் வாரி வாரி எடுத்துள்ளதால் உடம்பெல்லாம் குழிப்புண்கள். * 2. கட்டணம் *. நகராட்சி கட்டணக் கழிப்பிடத்தில் இலவசமாக சிறுநீர் கழிக்கிறது நாய். ந.க.துறைவன். * |
| ஹைமா புயல் : சீனாவில் 16 லட்சம் பேர் பாதிப்பு Posted: 24 Oct 2016 02:54 AM PDT பீஜிங் : பிலிப்பைன்ஸ் நாட்டை தொடர்ந்து சீனாவின் தென் பகுதியை ஹைமா தைபூன் புயல் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையாக தாக்கியது. இதில் குவாங்டாங் மாகாணம் அதிக அளவில் பாதிப்புக்குள்ளானது. 16 லட்சம் பேர் பாதிப்பு : சீனாவை தாக்கிய ஹைமா புயலுக்கு 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சிவில் விவகாரத் துறை தெரிவித்துள்ளது. சுமார் 6 லட்சத்து 68 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மற்றும் காயங்கள் தொடர்பான எவ்வித தகவலும் இன்னும் ... |
| புதுச்சேரியிலிருந்து ரயில்கள் புறப்படும் நேரம் Posted: 24 Oct 2016 01:49 AM PDT ![]() |
| கோஹ்லி அசத்தல் சதம் : இந்திய அணி அபார வெற்றி Posted: 24 Oct 2016 01:17 AM PDT மொகாலி: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் விராத் கோஹ்லி சதம் விளாச, இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டி முடிவில் தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி பஞ்சாப்பில் உள்ள மொகாலியில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் டிவ்ரிச் ... |
| Posted: 24 Oct 2016 12:17 AM PDT உள்ளார் கொல்லோ தோழி வினைவயின் கள்ளிக் கானகம் கடந்து சென்றார் தேம்படு பனையின் மேற்புறந் தழீஇ ஆங்குப் படர்ந்த அரசின் செழுங்கிளை காண்குறுங் காலை காரிகை எந்தன் தோற்புறம் தழீஇ தோகைச் செவியில் இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றே இனிது மொழிந்த நசையறு மொழியை ? நெருப்பினும் கொடிதே தோழி ! விரும்பினும் மறக்கினும் ஆங்கவன் பிரிவு . பொருள் : ======== தோழி ! பொருள் தேடுவதற்காகக் கள்ளிச் செடிகள் நிரம்பிய காட்டைக் கடந்து தலைவன் செல்கின்றான் . அவ்வாறு செல்லும்பொழுது , ஓங்கி வளர்ந்த ஒரு பனைமரத்தின் ... |
| விடைபெறுகிறது ஐ.என்.எஸ்., விராட் Posted: 23 Oct 2016 11:17 PM PDT - புதுடில்லி ; உலகின் மிகப் பழமையான, விமானந்தாங்கி போர்க்கப்பல், ஐ.என்.எஸ்., விராட், இந்திய கடற்படையில் இருந்து, இந்தாண்டு இறுதியில் விடைபெறுகிறது. 28 ஆண்டுகள் சேவை: இந்திய கடற்படையில், 28 ஆண்டுகளாக சேவையாற்றிய, பிரம்மாண்ட போர்க்கப்பல், ஐ.என்.எஸ்., விராட்; இது, பிரிட்டனில், 27 ஆண்டுகள் திறம்பட சேவையாற்றிய பின், இந்திய கடற்படைக்கு வாங்கப்பட்டது. இந்த போர்க்கப்பல், இந்தாண்டு இறுதியில் இந்திய கடற்படையில் இருந்து விடைபெறுகிறது. இந்த கப்பலை தன்னிடம் ஒப்படைக்கும்படி, மத்திய அரசிடம், ஆந்திர ... |
| Posted: 23 Oct 2016 11:15 PM PDT - அக்., 29 தீபாவளி குழந்தைகளுக்கு, நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுப்பது, பெற்றோரின் கடமை என்பதை உணர்த்துவதே தீபாவளி பண்டிகையின் நோக்கம். நரகாசுரன் நல்லபடியாக வளராததால், தன் பெற்றோர் கையாலேயே, அழிவைச் சந்திக்க நேர்ந்தது. அதனால், தீபாவளிக்கு, குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பட்டாசு வாங்கிக் கொடுப்பதோடு, இதுபோன்ற நல்ல கருத்துகளை சொல்லி, கொண்டாடச் சொல்ல வேண்டும். பிரம்மாவிடம் இருந்த வேதங்களை திருடிய அசுரன் ஒருவன், பாதாள லோகத்தில் ஒளிந்து கொண்டான். அதை மீட்க, வராக அவதாரமெடுத்து, பூமிக்குள் ... |
| Posted: 23 Oct 2016 11:14 PM PDT திரைப்படம்: ஞான ஒளி பாடல் ஆசிரியர்: கண்ணதாசன் இசையமைப்பு: எம். எஸ். விஸ்வநாதன் நடிகர் திலகம்: சிவாஜி கணேசன் பாடியவர்: T.M. சௌந்தரராஜன் – ——————————— – தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள் ஆயிரம் நன்மை தீமைகள் நாங்க செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர் Oh my Lord, pardon me – உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே – தாய் மடியிலே மழலைகள் ஊமையோ சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ காய் ... |
| Posted: 23 Oct 2016 11:13 PM PDT - அன்பு உள்ளங்கள் அணிவகுத்துக்கொண்டால் அகண்ட தீபம் ஏற்றி அகிலமெங்கும் கொண்டாடுவோம்! – ஆசை நெஞ்சங்கள் அரவணைத்துக்கொண்டால் காதல் தீபம் ஏற்றி காலமெல்லாம் கொண்டாடுவோம்! – சந்தோஷ மனங்கள் சந்தித்துக்கொண்டால் மகிழ்ச்சி தீபம் ஏற்றி மனம் நிறைய கொண்டாடுவோம்! – உதவும் உத்தமர்கள் ஒருங்கிணைந்து கொண்டால் நட்பு தீபம் ஏற்றி நன்றி சொல்லி கொண்டாடுவோம்! – உழைக்கும் கரங்கள் ஒன்றிணைந்து கொண்டால் உரிமை தீபம் ஏற்றி உலகமெங்கும் கொண்டாடுவோம்! – நாளைய தலைமுறைகள் நட்புறவு கொண்டால் நம்பிக்கை ... |
| Posted: 23 Oct 2016 11:04 PM PDT ![]() |
| நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்.. Posted: 23 Oct 2016 10:58 PM PDT திரைப்படம்: நான் பெற்ற செல்வம் -பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் -இயற்றியவர்: கு.ம. ஷெரிஃப் இசை: ஜி. ராமநாதன் ஆண்டு: 1956 – ————————————— நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம் நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம் நான் பெற்ற செல்வம் – தொட்டால் மணக்கும் ஜ்வ்வாது சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு தொட்டால் மணக்கும் ஜ்வ்வாது சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு எட்ட இருந்தே நினைத்தாலும் எட்ட இருந்தே நினைத்தாலும் இனிக்கும் மணக்கும் உன் ... |
| பூஜை அறையில் குற்றப்பபத்திரிகை..! Posted: 23 Oct 2016 10:47 PM PDT - தலைவர் தொல்லை தாங்க முடியவில்லை…! – மிருகங்களுக்காக நீங்க குரல் கொடுக்கணும்னு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டு, இப்ப மிமிக்ரி ட்ரை பண்ணி ஆடு, மாடு மாதிரி கத்தறார்…!! – சீ.பிரவீன் – ————————————- – மாமி, அந்த டாக்டர் இல்லாததையும் பொல்லாத்ததையும் சொல்லி பயமுறுத்துவார்னு நினைக்கிறேன்…! – எப்படினு சொல்லும்மா…! – பின்னே, உங்க மூளையிலே கட்டினு சொல்றாரே…!! – க.சங்கரி – ——————————————- – என் கணவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததுக்கு மூவாயிரம் ரூபாய் செலவு…. – அட்டே! அடி பலமோ? – ….இல்லே, ... |
| Posted: 23 Oct 2016 09:10 PM PDT கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில், விடை கொடுத்த படலத்தில் வருகிறது கீழ்க்காணும் பாடல். - "அங்கதம் இல்லாத கொற்றத்து அண்ணலும் அகிலம் எல்லாம் அங்கதன் என்னும் நாமம் அழகுறத் திருத்து மாபோல் அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்ததனை ஈந்தான் அங்கதன் பெருமை மண்மேல் ஆர் அறிந்து அறைய கிற்பார்'' - இப்பாடலில் "அங்கதம்' எனும் சொல்லை இரு இடங்களிலும், "அங்கதன்' எனும் சொல்லை இரு இடங்களிலும் வெவ்வேறு பொருள்களில் கம்பர் கையாண்டுள்ளார். முதல் அடியில் உள்ள "அங்கதம்' என்பதற்குக் "குற்றம்' என்று ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


.jpg)

