Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கடும் விமர்சனங்களால் காங்., துணை தலைவர் ராகுல் அதிர்ச்சி!:சொந்த கட்சியினரே கிண்டலடிப்பதால் வேதனை

Posted: 21 Oct 2016 08:00 AM PDT

நாடு சுதந்திரம் பெற்ற பின், தோன்றிய தலைவர் களில், காங்., துணைத் தலைவர் ராகுலுக்கு, தனி இடம் கட்டாயம் உண்டு; ஆனால், ராகுலுக் கான புகழ், வேறு விதமாக உள்ளது. மக்கள் மற்றும் எதிரணியை சேர்ந்தோரின் நகைப்புக் கும், கிண்டலுக்கும் ஆளாகும் தலைவராக சித்தரிக்கப்படுவதால், அவர் வேதனையடைந்து உள்ளார்.

இந்திய அரசியலில், கட்சி பாகுபாடின்றி, ராகுல், கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். அவர் சார்ந்த, காங்., கட்சியினரும் கூட, ராகுலை கிண்டலடிக்க தவறுவதில்லை. சில வாரங்களுக்கு முன், சத்தீஸ்கர் மாநில, காங்., - எம்.எல்.ஏ., ராஜேந்திர குமார் ராய், ராகுலை சகட்டுமேனிக்கு ...

மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி வழங்க...தடை!: பி.சி.சி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் 'கிடுக்கிப்பிடி'

Posted: 21 Oct 2016 09:09 AM PDT

புதுடில்லி:உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பான, பி.சி.சி.ஐ.,க்கு, சுப்ரீம் கோர்ட் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. லோதா குழு பரிந்துரைகளை ஏற்கும் வரை, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி வழங்க தடை விதித்தது. வரவு - செலவு கணக்குகளை, ஆடிட்டரை கொண்டு ஆய்வு செய்யவும் உத்தரவிட்டது.

ஐ.பி.எல்., தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை காரணமாக, பி.சி.சி.ஐ., எனப்படும், இந்திய கிரிக் கெட் கட்டுப்பாட்டு வாரியம் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, ஓய்வு பெற்ற, நீதிபதி லோதா தலைமையிலான குழு, பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. மாநிலத்திற்கு ஒரு ஓட்டு, நிர்வாகிகளின் ...

ஏ.டி.எம்., கார்டு எண்கள் திருட்டு விவகாரத்தில் ஆர்.பி.ஐ.,மவுனம்!:புலனாய்வு செய்யாததால் வாடிக்கையாளர்கள் கோபம்

Posted: 21 Oct 2016 09:39 AM PDT

சென்னை:பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த, 32 லட்சத்திற்கும் அதிகமான, ஏ.டி.எம்., கார்டு தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி செய்யப் பட்டது குறித்து, ரிசர்வ் வங்கி மவுனம் காப்பது, வங்கி வாடிக்கையாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம், சில வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் இருந்து, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் பணம் எடுக்கப்பட்டதாக, புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, என்.பி.சி.ஐ., எனப்படும், தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் விசாரணை மேற்கொண்டது. அதில், யெஸ் பேங்கிற்கு, பணப் பட்டுவாடா சேவைகளை மேற்கொண்டு வரும், ஹிட்டாச்சி ...

அகிலேஷுக்கு சூனியம்: சித்தி மீது குற்றச்சாட்டு

Posted: 21 Oct 2016 09:49 AM PDT

லக்னோ: உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு அவர் தந்தையின், இரண்டாவது மனைவி, சூனியம் வைத்துள்ளதாக, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்.எல்.சி., குற்றஞ் சாட்டிஉள்ளார்.

உத்தர பிரதேசத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சியில் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது.
சதி திட்டம் :
அகிலேஷுக்கு எதிராக, முலாயம் சிங்கின்
தம்பியே போர்க்கொடி துாக்கியுள்ளார். அதனால், சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக, அகிலேஷை ...

பயங்கரவாதிகளை தேடி காஷ்மீரில் மீண்டும் வேட்டை

Posted: 21 Oct 2016 09:52 AM PDT

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா வில், பயங்கரவாதிகளை பிடிக்க, பாதுகாப்பு படையினர், இரண்டாவது முறையாக, நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளதாக கருதப்படும், பாரமுல்லா மாவட்டத் தில், 17ம் தேதி, ராணுவம், போலீஸ், எல்லை பாதுகாப்பு படை, மத்திய ஆயுதப்படை போலீசார் இணைந்து, தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 44 பயங்கரவாதிகள் சிக்கினர். அவர்கள் பதுங்கியிருந்த வீடுகளில் இருந்து, சீனா ...

ஜெ., உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

Posted: 21 Oct 2016 10:05 AM PDT

சென்னை: 'முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில், படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது' என, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மருத்துவமனை இயக்குனர், சத்ய பாமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல்வருக்கு தொடர்ந்து, செயற்கை சுவாசம் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்பல்லோ மருத்துவமனை, தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், மூத்த இதய நோய் மருத்துவர், சுவாச மருத்துவர், நாளமில்லா
சுரப்பி மற்றும் சர்க்கரை நோய் நிபுணர்கள், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உணவு குழுவினர் ...

தமிழகத்தின் பல மாவட்டங்களில் பட்டாசு வெடிவிபத்து... தொடாகிறது!:போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கை தேவை

Posted: 21 Oct 2016 10:28 AM PDT

சிவகாசி, கோவை, நெல்லை என, பட்டாசு வெடிவிபத்து தொடர்கிறது. இனியும், விபத்தும், உயிரிழப்பும் ஏற்படாமல் தடுக்க, போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்ற கருத்து, பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

*சிவகாசி புறவழிச்சாலையில் உள்ள ஒரு பட்டாசு கடையில், நேற்று முன்தினம், வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், எட்டு பேர் உயிரிழந்தனர்; 14 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். *கோவை மாவட்டம், தடாகம் ரோடு, ஏ.கே.எஸ்., நகரில், 'கே.பி.ஆர்., மில்ஸ்' என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. தரைத்தளத்தில் நுாலகம், மாடியில் இரு தளங்களில், ...

திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த் போட்டி? * தே.மு.தி.க.,வினர் திடீர் நெருக்கடி

Posted: 21 Oct 2016 10:38 AM PDT

'திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், விஜயகாந்த் போட்டியிட வேண்டும்' என, தே.மு.தி.க.,வினர் நெருக்கடி கொடுக்க துவங்கி உள்ளனர்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு, நவ., 19ல், தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க.,விற்கு போட்டியாக, வேட்பாளர்களை களமிறக்க வேண்டும் என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் விரும்புகிறார். இதற்காக, வேட்பாளர் தேர்வு ரகசியமாக நடந்து வருகிறது. .இதுபற்றி தகவலறிந்த, தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள்,விஜயகாந்தை சந்தித்து, 'தேர்தலை புறக்கணிக்க வேண்டும்' என்றனர். ஆனால், ...

அங்கீகாரமற்ற மனை பதிவுக்கான தடை நீடிக்கிறது * நீக்க கோரிய மனுவை ஏற்க ஐகோர்ட் மறுப்பு

Posted: 21 Oct 2016 10:45 AM PDT

சென்னை:விளைநிலங்களை, வீட்டுமனை களாக மாற்றவும், அங்கீகாரம் இல்லாத லே - அவுட்டில் உள்ள வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்யவும், விதிக்கப்பட்ட தடையை நீக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், 'விவ சாய நிலங்களை, வீட்டுமனைகளாக மாற்ற அனுமதியளிக்கக் கூடாது; அங்கீகாரம் இல்லாத நிலம் மற்றும் கட்டடங்களை, பத்திரப்பதிவு செய்யக் கூடாது' என, கோரியிருந்தார்.இம்மனு, கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:அங்கீகாரம் இல்லாத லே - அவுட்டில் உள்ள ...

அக்.24-ல் வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி

Posted: 21 Oct 2016 02:48 PM PDT

வாரணாசி:24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
அடிக்கல் நாட்டுவிழா:
பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் வரும் 24-ம்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டரேகா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, வாரணாசியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் உர்ஜா கங்கா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் வாரணாசி-அலகாபாத் இரட்டை ரெயில் ...

ரூ.2,500 கட்டணத்தில் ஒரு மணிநேர விமான சேவை திட்டம்

Posted: 21 Oct 2016 03:43 PM PDT

புதுடில்லி: ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,500 என்ற குறைந்த கட்டணத்தில் சராசரி மக்களும் பயணம் செய்யும் விமான சேவை ஜனவரி மாதம் அமலுக்கு வருகிறது.
உடன் திட்டம்:
பிராந்திய அளவில் இரண்டாவது நிலை நகரங்களையும், மூன்றாவது நிலை நகரங்களையும் விமான போக்குவரத்தின்மூலம் இணைக்கவும், சராசரி இந்திய மக்களும் விமானத்தில் பயணம் செய்யவும் வகைசெய்து மத்திய அரசு 'உடன்' என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
இது தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ செய்தியார்களிடம் பேசுகையில், ''சராசரி இந்திய ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™