ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழில் சந்தேகம்.
- இலங்கையில் வேலைவாய்ப்பு
- தனிமையைக் காதலிப்பது...!
- வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ராஜா அவர்களின் 30,000 பதிவுகளுக்கு
- *யார் இராவணன்* ?
- ரூ.5க்கு டீ குடித்தால் அரை மணி நேரம் இன்டர்நெட் ‛ப்ரீ'
- ஈழத்திலிருந்து
- நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள்
- இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம்
- ஐயையோ நான் சொல்லல.தடுமாறிய ட்ரம்ப்.
- நான் இரசித்த பாடல் - 6
- சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்…
- மனிதன் ஞானி ஆகிறான்…!!
- நவ.1-ந் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுகளுக்கு ‘ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கலாம்
- சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை
- ஏழு மொழிகளில் பேசி அசத்திய உரூசிய நாட்டு நான்கு வயதுக் குழந்தை பெல்லா.
- எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா
- புயல் எச்சரிக்கை கூண்டுகள் …
- கிறிஸ்து தாஸ் காந்தி
- பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
- அந்த புரமோட்டர் பயங்கர புத்திசாலி...!!
- நதிக்கரை ஞாபகங்கள்
- போட்டோசொப் மின்நூல் தேவை
- ஓவர்நைட்டில் பிரபலம்ஆ ன "நீலக் கண்ணன்"
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
- . திருமந்திரம் என்னும் தேன்
- கிரிக்கெட்: இந்திய அணி போராடி தோல்வி
| Posted: 21 Oct 2016 12:14 PM PDT கவிஞன், கஞ்சன், உழவன், புலவன், அமைச்சன், ஒற்றன், தச்சன், வணிகன், மெய்காப்பாளன், வீரன், கொல்லன் இவற்றுக்கு பெண்பால் என்ன? இல்லாள் என்பதற்கு ஆண்பால் என்ன? அல்லது இன்று வழக்கத்தில் உள்ளது போல் இல்லத்தரசி,இல்லத்தரசன் என்பதா? |
| Posted: 21 Oct 2016 12:09 PM PDT இலங்கையில் வேலைவாய்ப்பு Post by Delft Nenasala Today at 1:47 pm ஈகரை தமிழ் களஞ்சிய விதிகள் , 13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள். உங்கள் பதிவு நீக்கப்படுகிறது . தனி மடலே தவிர்க்கப்படவேண்டிய நிலையில் நீங்கள் வெளிப்படையாகவே அழைப்பு விடுகிறீர்கள் . தயவுசெய்து ஈகரை விதிமுறைகளை படித்து அவற்றை அனுசரிக்கவும் . ரமணியன் |
| Posted: 21 Oct 2016 11:46 AM PDT ![]() |
| வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ராஜா அவர்களின் 30,000 பதிவுகளுக்கு Posted: 21 Oct 2016 11:35 AM PDT வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ராஜா அவர்களின் 30,000 பதிவுகளுக்கு யாவரும் விரும்பிய 30000 பதிவுகள் என்பது நிச்சயம் ஒரு மைல்கல் சாதனை . ஓய்வு பெற்றவர்கள் பதிவிடுவது பெரிய விஷயமில்லை , அலுவலகத்தில் ஒரு பொறுப்பான வேலையில் இருப்பவர்கள் , இந்த மைல்கல் சாதனை செய்வது ஒரு அரிய விஷயம் . அதை வாழ்த்துவதும் அதை விட முக்கியம் . தரமான ,வழிகாட்டும் , 30000 பதிவுகளை தந்த ராஜா அவர்களுக்கு வாழ்த்துகள். ( தாமதமான வாழ்த்துக்கு வருந்துகிறோம் ) ரமணியன் |
| Posted: 21 Oct 2016 09:02 AM PDT யார் இராவணன் ? காமம் கோபம் ஆசை பற்று அகங்காரம் அலட்சியம் சோம்பேரித்தனம் அவசரம் சுயநலம் பொறாமை இந்த அவகுணங்களை ஒற்றை வார்த்தையில் இராவணன் என்று குறிப்பிடப்படுகிறது *இராவணன் என்று பிறந்தான்* ? துவாபர யுகத்தின் ஆரம்ப நிலையில் பிறந்தான் *இராவணனின் ஆயுள்* ? துவாபர யுகம் 1250 வருடங்கள் கலியுகம் 1250 வருடங்கள் மொத்தம் 2500 வருடங்கள் *இராவணன் ஆட்சி* ? முழு உலகத்தின் மீதும் அவனுடைய ஆட்சி நடக்கிறது. *இராவணனின் அழிவு* ? ஆன்மா என்னும் சீதைகள் பூமியில் அவகுணங்களால் சிறைபிடிக்கப்பட்டு ... |
| ரூ.5க்கு டீ குடித்தால் அரை மணி நேரம் இன்டர்நெட் ‛ப்ரீ' Posted: 21 Oct 2016 08:57 AM PDT பெங்களூரு குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா சேவை வழங்குவது தொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே கடும்போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் டீ வியாபாரி ஒருவர் வாடிக்கையாளர்களை கவருவதற்காக புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அவர் தனது கடையில் ரூ.5 மதிப்பிலான ஒரு கப் டீ குடித்தால், வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களுக்கு இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பிறகு இவரது கடையில் டீ குடிப்பதற்கு காலை முதல் மாலை வரை ஏராளமானோர் வரிசையில் நின்று ... |
| Posted: 21 Oct 2016 08:49 AM PDT பெயர்:சரவணன் சொந்த ஊர்:யாழ்ப்பாணம் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:வலைத்தளம் பொழுதுபோக்கு:கவிதை தொழில்:அறிவக முகாமையாளர் மேலும் என்னைப் பற்றி:கவிதை கதை எழுதுவது ரொம்ப பிடிக்கும் |
| நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள் Posted: 21 Oct 2016 08:44 AM PDT - தமிழ் திரையுலகின் மார்கண்டேயனான நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாளையும், அவரது திரையுலக வாழ்வின் 50-வது ஆண்டு விழாவையும் வெகுசிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ள நடிகர் சூர்யாவும், கார்த்தியும் அவர் வரைந்த ஓவியங்களை காட்சிப்படுத்தி மாபெரும் கண்காட்சி ஒன்றை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். – நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து 1965-ம் ஆண்டில் வெளியான 'காக்கும் கரங்கள்' படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். – அதன்பின்னர், 'கந்தன் கருணை', ... |
| இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம் Posted: 21 Oct 2016 08:40 AM PDT ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். "அர்ஜுனா,அது புறா தானே.?" என்று கேட்டார் கிருஷ்ணர " ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!" என்றான் அர்ஜுனன். சில விநாடிகளுக்குப் பிறகு, "பார்த்தா, எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது.!" என்றார் கிருஷ்ணர். அடுத்த விநாடியே,"ஆமாம்…..ஆமாம் …அது பருந்து தான்.!" என்று சொன்னான் அர்ஜுனன். மேலும் ... |
| ஐயையோ நான் சொல்லல.தடுமாறிய ட்ரம்ப். Posted: 21 Oct 2016 08:36 AM PDT அமெரிக்க அதிபர் தேர்தல் மூன்றாவது இறுதிச் சுற்று விவாதம் நேற்று முன் தினத்துடன் முடிவுக்கு வந்தது. பிட் எழுதி வந்த ட்ரம்ப், ஹிலாரி மற்றும் தொகுப்பாளரின் கேள்விகளால் தடுமாறினார். தமிழகத்தை மிஞ்சிய அரசியல். பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் வீசப்பட்டன. கைகுலுக்கிக் கொள்ளாமலே விவாதம் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவில்,ஐரோப்பிய நாடுகளில் அரசியல்வாதிகளைக் கேலி செய்யலாம். அவமதிப்பு வழக்கு வராது.இந்தக் காணொளி மல்யுத்த இரசிகர்களுக்காக சிரிக்க மட்டும். இந்த மல்யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட ... |
| Posted: 21 Oct 2016 08:31 AM PDT தாயே யசோதா... என்ற பாடலை எம்.எல்.வசந்தகுமாரி ,குலதெய்வம் படத்திற்காக அன்று பாடி இருந்தார். ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர் எழுதிய இந்தப் பாடல் ராகமாலிக, கமலா நடனத்தில் அமைந்துள்ளது. தோடி இராகத்தில் அமைந்த அதே பாடலை சுதா இரகுனாதன்,ரஞ்சனி இராமகிருஷ்னன் இணைந்து Morning Raga என்ற தெலுங்குப் படத்திற்காக பாடியுள்ளார்கள். கர்நாடக- மேற்கத்திய இசை இரண்டும் இங்கே சங்கமமாகியது. இந்த Morning Raga என்ற படம் தெலுங்குப் படமாக இருந்தாலும் அனேகமான உரையாடல்கள் ஆங்கிலத்திலேயே உள்ளது. |
| சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்… Posted: 21 Oct 2016 08:27 AM PDT பாடியவர்: ஜிக்கி இயற்றியவர்: இசை: ஜி. ராமநாதன் திரைப்படம்: மதுரை வீரன் – ————————– – சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம் சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம் சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம் சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம் உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா – மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஹெஹே.. படித்த வேலைக்குப் பலபேர் நோட்டம் பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம் படித்த வேலைக்குப் பலபேர் நோட்டம் பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம் கொடுத்த வேலையை முடிப்பது சேட்டம் குடிசைத் ... |
| Posted: 21 Oct 2016 08:24 AM PDT சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.! பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.! தண்ணீருடன் பக்தி சேரும்போது அது தீர்த்தமாகிவிடும்.! பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.! ————- இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.! பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.! செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.! வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்.! ————- பிரம்மச்சரியத்தோடு பக்தி சேரும் போது அது துறவறம் ... |
| நவ.1-ந் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுகளுக்கு ‘ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கலாம் Posted: 21 Oct 2016 08:23 AM PDT சென்னை: தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. கடந்த சில வருடங்களாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்க இயலாத நிலையில் உள்தாள் ஒட்டப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்படுகின்றன. கால நீட்டிப்பு செய்யப்பட்ட ரேஷன் கார்டுகள் டிசம்பர் மாதம் வரை மட்டுமே பொருட்கள் வாங்க முடியும். அதனால் புதிய ரேஷன் கார்டு கையடக்க அளவில் (ஸ்மார்ட்) வழங்க அரசு திட்டமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜனவரி மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்க அனைத்து ரேஷன் ... |
| சிறந்த பெயரும் பின்னூட்டமும் தேவை Posted: 21 Oct 2016 08:21 AM PDT எங்களுடைய அறிவக அமைப்பின் ஒருவருடம் முடிவில் எங்களுடைய மாணவர்கள் பங்குதாரர்கள் நலன்விரும்பிகள் அனைவரையும் உள்ளடக்கி புதியதோரட அமைப்பை ஸ்தாபிக்க உள்ளோம் அமைப்பின் குறிக்கோள்கள் ஆவன 1.சுயதொழில் வழிகாட்டுதல்கள் 2.விவசாய வளர்ச்சி மற்றும் மேம்படுத்தல்கள் 3.வலுவிழந்தவர்களுக்கான வைத்தியசேவைகள் 4.வறுமைக்கோட்டு மாணவர்களுக்கான கல்வி 5.தற்கொலைகளுக்கான தீர்வுகள் அதாவது தற்கொலைகளை நினைப்போர் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் எங்களுடைய அமைப்புக்கு தங்களது சார்பில் சிறந்த ஒரு பெயரையும் அதற்கான ... |
| ஏழு மொழிகளில் பேசி அசத்திய உரூசிய நாட்டு நான்கு வயதுக் குழந்தை பெல்லா. Posted: 21 Oct 2016 08:17 AM PDT ரூசிய நாட்டில் ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் (Udivitelniye Lyudi – நம்பமுடியாத மனிதர்கள்) ரூசிய மொழியை தாய் மொழியாகக் கொண்ட பெல்லா என்ற நான்கு வயதுக் குழந்தை ஏழு மொழிகளில் சரளமாக பேசி அனைவரையும் அசத்தியது. இரண்டு வயதில் இருந்தே தாயுடன் ஆங்கிலத்தில் பேசிப் பழகிய பெல்லா மற்ற மொழிகளையும் கற்றுக் கொண்டாள் என்கின்றனர் பெற்றோர்.பெல்லா பேசிய மொழிகள் ரூசிய மொழி ,ஆங்கிலம்,ஜேர்மன்,ஸ்பானிய மொழி,பிரஞ்ச், சீனம்,அரபிய மொழி என்பவையாகும். |
| எனது போதி மரம் - (கவிதைகள்) - ஷோபா Posted: 21 Oct 2016 07:50 AM PDT காதல் என்பது - காண்பது கலப்பது கரைவது காணாமல் போவதே காதல்... அது... உப்புக்கரைசல் ஆவதும் சர்க்கரைக்கரைசல் ஆவதும் அவரவர் இதயத்தின் இயல்பைப் பொறுத்தது - ------------------------- -ஷோபா |
| Posted: 21 Oct 2016 05:35 AM PDT மழைகாலங்களில் தொலைகாட்சிகளில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு ரமணன் அவர்களை அடிக்கடி பார்க்கின்றோம் …. அவர் வழக்கமாக காற்றழுத்த தாழ்வு நிலை … மண்டலம் ….. இப்படி அடிக்கடி சொல்வார் . – செய்திகளிலோ புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற பட்டது என்றும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு எண் சொல்கிறார்கள் அல்லவா ? அதன் விளக்கம் தான் என்ன ? பொதுமக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகளையும், அந்த குறியீடுகள் குறித்த விளக்கங்களையும் பார்க்கலாம் – ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் ... |
| Posted: 21 Oct 2016 05:24 AM PDT கிறிஸ்து தாஸ் காந்தி சென்னை: இந்த நாட்டில் மதச்சார்பின்மை இருப்பதால், ராமரை செருப்பால் அடிக்க எனக்கு உரிமை இருக்கிறது என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகிறிஸ்து தாஸ் காந்தி கூறினார். சமீபத்தில் தந்தி டிவியில் ஒரு விவாதம் நடந்தது. அதில் ஒரு பேச்சாளராக கிறிஸ்துதாஸ் காந்தி கலந்து கொண்டார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர் பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளை வகித்தவர். தலைமை செயலாளர் கிரேடில் பதவி வகித்தவர். விவாதத்தின் போது, பாஜ பிரமுகர் ராகவன் பேச்சின் ஊடே குறுக்கிட்டுப் பேசிய கிறிஸ்துதாஸ், இந்த நாட்டில் ... |
| பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு Posted: 21 Oct 2016 03:44 AM PDT Date: 2016-10-21@ 15:32:08 -- ராமநாதபுரம்: பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் கூண்டு ஏற்றப் பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. - -------------------------- தினகரன் |
| அந்த புரமோட்டர் பயங்கர புத்திசாலி...!! Posted: 21 Oct 2016 03:20 AM PDT ![]() |
| Posted: 21 Oct 2016 02:28 AM PDT நதிக்கரை ஞாபகங்கள் என்ன சொல்ல நினைவலைகள் மணலில் தடம் பதிக்கின்றன... கரை புரண்டோடியும் ,கரையழித்து பொங்கியும் கடல் காதலனை கைபிடித்த காலங்கள் சிறு பிஞ்சு பாதங்களை வருடி, சிறார்களின் துள்ளலில் கொஞ்சி மகிழ்ந்ததும்... காதலர்கள் களிப்பில் மீனாக அவர்தம் மேனி சிலிர்க்க வைத்ததும்.. பரிசலும் படகுகளும் என் மேனியில் அலைந்து கடந்ததும்.. படிமங்களாகின.. நீராடை அணிந்து வலம் வந்தவளின் மணலாடையையும் உரித்தனர்.. உலகுக்கே நாகரீகம் தந்தவளை நாகரீகமற்று ... |
| Posted: 21 Oct 2016 01:19 AM PDT போட்டோ சொப் மின்நூல் தேவை |
| ஓவர்நைட்டில் பிரபலம்ஆ ன "நீலக் கண்ணன்" Posted: 21 Oct 2016 01:07 AM PDT - இஸ்லாமாபாத்: சிலருக்கு எதிர்பாராத வகையில் பிரபலம் வந்து சேரும். அப்படிப்பட்ட அரிய நபர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரர் அர்ஷத் கான். - இவரை இந்த அளவுக்குப் பிரபலப்படுத்தியது ஜியா அலி என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் போட்ட புகைப்படம்தான். - இஸ்லாமாபாத் அர்ஷத் கான்... இஸ்லாமாபாத்தில் உள்ள பிரபல பெஷாவர் செளக், சன்டே பஜாரில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் அர்ஷத் கான். - இவரது கடைக்கு சமீபத்தில் ஜியா கான் ... |
| Posted: 20 Oct 2016 10:46 PM PDT திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
| Posted: 20 Oct 2016 09:17 PM PDT தெரிந்துகொள்வோம் தேன் தமிழை -8 ( திருமூலர் அருளிய திருமந்திரம்) ஓர் அறிமுகம்: திருமந்திரம் என்னும் நூல் தவயோகத் தந்தை திருமூலரின் படைப்பு. அந்த அற்புதம் ஒரு யோகமும் ஞானமும் தோய்ந்த ஒரு கல்விக் கருவூலக் களஞ்சியம். அந்த யோகமும் ஞானமும் பக்திநோக்கில் பார்க்கப்பட்டு நமது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. அந்த அமரகாவியத்தை உலக மக்கள் அனைவருக்கும் ஆக்கும் வகையில் அமைக்கப்படுவதே, "தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - திருமந்திரம் என்னும் தேன்" என்னும் ... |
| கிரிக்கெட்: இந்திய அணி போராடி தோல்வி Posted: 20 Oct 2016 04:59 PM PDT - புதுடில்லி : டில்லி ஒருநாள் போட்டி யில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. பாண்ட்யாவின் கடைசிநேர போராட்டம் வீணானது. – இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தரம்சாலாவில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்தியா, 1-0 என, தொடரில் முன்னிலையில் இருந்தது. – இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி, டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார். – வில்லியம்சன் சதம்: – நியூசிலாந்து ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

