Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உலக கோப்பை கபடி: அரையிறுதிக்கு முன்னேறியது தாய்லாந்து

Posted: 19 Oct 2016 11:12 AM PDT

ஆமதாபாத் : உலக கோப்பை கபடி தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, தாய்லாந்தை சந்திக்கிறது.
ஆமதாபாத்தில் உலக கோப்பை கபடி தொடர் நடக்கிறது. இதில், பங்கேற்கும் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்திய அணி பங்கேற்ற 5 லீக் போட்டியில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்தது. கொரியா (25) முதலிடம் பெற்றது.
தாய்லாந்து வெற்றி :
இன்று(அக்.,19) நடந்த கடைசி லீக் போட்டியில் தாய்லாந்து, ஜப்பான் அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் 17-17 என, இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. இரண்டாவது ...

6.5 லட்சம் ஏ.டி.எம்., கார்டுகளுக்கு தடை : மோசடியை தடுக்க எஸ்.பி.ஐ., அதிரடி

Posted: 19 Oct 2016 09:27 AM PDT

மோசடியை தடுத்து நிறுத்தும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள, 6.5 லட்சம் வாடிக்கையாளர் களின், 'டெபிட் கார்டு' எனும் வங்கி பரிவர்த் தனை அட்டைகளை, பாரத ஸ்டேட் வங்கி தடை செய்துள்ளது.

இதுகுறித்து, எஸ்.பி.ஐ., வங்கி வட்டாரம் கூறியதாவது: சமீபத்தில், ருமானியா நாட்டைசேர்ந்த சிலர், இங்குள்ள ஏ.டி.எம்., மையங்களில் இருந்து,பணத்தை திருடினர்.கேரளாவில், பெண் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயை, வெளிநாட்டில் இருந்த படி
யாரோ எடுத்துள்ளனர். இது போன்ற மோசடிகள் தொடர்கின்றன. மோசடி நபர்கள், நுாதன மென் பொருளை பயன்படுத்து கின்றனர்; ரகசிய எண்ணை பிரதி ...

ரஷ்யாவுடன் இணைந்து புதிய ஏவுகணை தயாரிக்க...திட்டம்!: பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை தாக்க முடியும்ரஷ்யாவுடன் இணைந்து புதிய ஏவுகணை தயாரிக்க...திட்டம்!: பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை தாக்க முடியும்

Posted: 19 Oct 2016 09:31 AM PDT

புதுடில்லி:ரஷ்யாவுடன் இணைந்து, 600 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கைக் கூட தாக்கக் கூடிய புதிய, 'பிரம்மோஸ்' ரக ஏவுகணையை, நம் நாடு தயாரிக்க உள்ளது.

ரஷ்யாவுடன் இணைந்து, 300 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய, பிரம்மோஸ் ஏவுகணையை, நம் நாடு தயாரித்து வருகிறது. இந்நிலையில், எம்.டி.சி.ஆர்., எனப்படும் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப் பில், ஜூனில், நம் நாடு இணைந்தது. 300 கி.மீ., துாரத்துக்கு மேற்பட்ட ஏவுகணைகளை, இந்த அமைப்பில் இல்லாத நாடுகளுக்கு விற்கவோ, இணைந்து தயாரிக் கவோ, தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளவோ கட்டுப்பாடு உள்ளது.அதே நேரத்தில், 35 நாடுகள் ...

காவிரி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 19 Oct 2016 09:41 AM PDT

புதுடில்லி: காவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், சுப்ரீம் கோர்ட், ஒத்தி வைத்தது. இந்த தீர்ப்பு வெளியாகும் வரை, தமிழகத்திற்கு, வினாடிக்கு, 2,000 கன அடி காவிரி நீரை, கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்த விசாரணை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமிதவ் ராய், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய
அமர்வு முன் நடந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, ''காவிரி ...

அமைச்சரவை கூட்டத்தில் ஒரு மணி நேரம் விவாதம்

Posted: 19 Oct 2016 10:06 AM PDT

முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் நடந்த, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளை, தனி அதிகாரிகளின் அதிகாரத் தின் கீழ் கொண்டு வருவது உட்பட, பல பணிகள் குறித்து விவாதித்து, முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.

அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், ஜூலை மாதம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், முதல் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. தற்போது, ஜெயலலிதா உடல் நலக் குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று, இரண்டாவது முறையாக,
அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
அறிவிப்பு இல்லை :
காலை, 9:30 மணிக்கு, தலைமைச் செயலக, அமைச்சரவைக் ...

இடைத்தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., தவிர மற்றவை...போட்டியில்லை!:டெபாசிட் கூட கிடைக்காது என்ற பயத்தில் விலகல் அறிவிப்பு

Posted: 19 Oct 2016 10:47 AM PDT

தமிழகத்தில், அடுத்த மாதம், 19ல் நடக்கும், மூன்று தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., தவிர, மற்ற கட்சிகள் போட்டி யிடவில்லை. டெபாசிட் கூட கிடைக்காது என்ற பயத்தில், அக்கட்சிகள் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில், அளவுக்கு அதிகமான பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக, புகார் எழுந்தது. தேர்தல் கமிஷன் நடத்திய சோதனையில், கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிப் ...

ஜி.எஸ்.டி., வரியில் முடிவு எட்டப்படவில்லை

Posted: 19 Oct 2016 11:12 AM PDT

புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் தொடர்பாக, மத்திய நிதி யமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த, ஜி.எஸ்.டி.,கவுன்சில் கூட்டத்தில் முடிவு எட்டப்படாததால், நவ., 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மத்திய அரசு திட்டம்நாடு முழுவதும், ஒரே சீரான வரிவிதிப்பை கொண்டு வரும் வகையில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை, 2017 ஏப்., 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர,அரசு திட்டமிட்டு உள்ளது.இதற் கான வரி விகிதம், ஜி.எஸ்.டி., சட்டம் குறித்து முடிவெடுக்க, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி தலைமை யில், மாநில நிதியமைச்சர்கள் ...

வேட்பாளர்கள் அறிவிப்பு: அ.தி.மு.க., அதிரடி

Posted: 19 Oct 2016 11:36 AM PDT

இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியலையும், வழக்கம் போல், முதலில் வெளியிட்டு, அரசியல் வட்டாரத்தில் அ.தி.மு.க., பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், மூன்று சட்டசபை தொகுதிகளுக் கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும், நவ., 19ல், தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, சட்டசபை, லோக்சபா, ராஜ்ய சபா, உள்ளாட்சி தேர்தல் என, எந்த தேர்தலாக இருந்தாலும், அ.தி.மு.க., முதலில் தேர்தல் பணிகளை துவக்கும்; வேட்பாளர் பட்டியலை யும், முதலில் வெளியிடும்.தற்போது, முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு உள்ளார். எனவே, இடைத்தேர்தல் ...

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' சட்ட விரோதமில்லை என ஐகோர்ட்டில் பதில்

Posted: 19 Oct 2016 11:45 AM PDT

சென்னை:'தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'சஸ் பெண்ட்' செய்யப்பட்டதில், சட்ட விரோதம் எதுவு மில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், சட்டசபை செயலர் பதிலளித்து உள்ளார்.

சட்டசபையில் இருந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள், 79 பேரை, 'சஸ்பெண்ட்' செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார்; அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். அதற்கு பதிலளிக்கும்படி, தலைமை நீதிபதி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சட்டசபை செயலர் தாக்கல் செய்த பதில் ...

ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வு கூடாது கடந்த தீபாவளி கட்டணமே தொடரும்: ஐகோர்ட் உத்தரவு

Posted: 19 Oct 2016 12:01 PM PDT

மதுரை:'தனியார் ஆம்னி பஸ்களில், கடந்தாண்டு, தீபாவளியின் போது நிர்ணயிக்க ப்பட்ட கட்டணத்தையே, வரும் அக்., 27 முதல் 31 வரை வசூலிக்க வேண்டும்; உயர்த்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்கக் கூடாது' என உயர் நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் இளங்கோவன் தாக்கல் செய்த பொதுநல மனு: தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், பண்டிகை காலங் களில் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை வரன்முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப் பிட்டிருந்தது. இதை, நேற்று ...

சவுதி அரேபிய இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Posted: 19 Oct 2016 12:19 PM PDT

ரியாத்: நண்பனை சுட்டுக் கொன்ற வழக்கில், சவுதி அரேபிய இளவரசருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், 'ஷரியத்' சட்டம், தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இந்த சட்டத்தின்படி, கொலை, போதை மருந்து கடத்தல், கொள்ளை, பாலியல் பலாத்காரம் ஆகிய குற்றங்களை செய்பவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்படுவது வழக்கம்.
கொலை :
சவுதி அரேபிய அரச கும்பத்தைச் சேர்ந்தவர், இளவரசர் டர்க்கி பின் சவுத் அல் -கபீர்; இவரது நண்பர், அதெல் அல் மகிமித். 2012 டிசம்பரில், இருவருக்கும் வாக்குவாதம் ...

டில்லி ஜெ.என்.யு., வளாகத்தில் நள்ளிரவில் மாணவர்கள் தர்ணா

Posted: 19 Oct 2016 01:11 PM PDT

டில்லி: ஜெ.என்.யு., எனப்படும் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் காணாமல் போன விடுதி மாணவரை மீட்க கோரி மாணவர் அமைப்பினர் நள்ளிரவில் பல்கலை. வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

மாணவர் மாயம்
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை. வளாகத்தில் நேற்று இரவு 11 மணியளவில் 200-க்கும் மேற்பட்டமாணவர்கள் பல்கலை. நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அப்போது பல்கலை. விடுதியில் தங்கி படித்து வந்த நஜிப் அகமது என்ற மாணவர் கடந்த நான்கு நாட்களாக காணவில்லை எனவும் அவரை கண்டு பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.
நள்ளிரவில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™