Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பிஎஸ்என்எல் மூலம் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி

Posted: 19 Oct 2016 04:06 PM PDT

சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம், கடந்த 3 ஆண்டுகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சார்பில், மாணவர்கள், இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, சென்னை மீனம்பாக்கத்தில் ராஜீவ் காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இளைஞர்களுக்கு இந்த மையத்தில் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு ...

நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர்

Posted: 19 Oct 2016 03:53 PM PDT

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஒரு மாதம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரானது டிசம்பர் 16-ஆம் தேதி நிறைவடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை அமல்படுத்த வகை செய்யும் மத்திய ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மசோதாக்களை அப்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர மேலும் சில மசோதாக்களை நிறைவேற்ற ...

இந்தியா-மியான்மர் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Posted: 19 Oct 2016 03:50 PM PDT

-- இந்தியா, மியான்மர் இடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக, 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வதற்கும் இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூ கீயின் "நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி' கட்சி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக ஆங் சாங் சூ கீ பொறுப்பேற்ற பிறகு, இந்தியா வந்திருப்பது ...

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 19 Oct 2016 03:49 PM PDT

சட்டம்

Posted: 19 Oct 2016 09:59 AM PDT

ஒருவரின் தவறான முறையற்ற செயல்களுக்கு துணை போதல், ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவைகள் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 25ன்கீழ் வருகிறது.
உரிமையியல்டை முறை சட்டம் பிரிவு 91(1908)ன்கீழ் நமக்கு இடையூராய் மற்றவர் செய்யும் செயல் (உ.ம்) நம் வீட்டருகேஇரைச்சல் மிஷின் சத்தம் >>இதை கு.ந.மு.சட்டம் பிரிவு 156(3)ன்கீழ் புகார் செய்து உருத்து கட்டளை பெறலாம்..

குழந்தைகளா இது உங்களுக்கான புதிர்.

Posted: 19 Oct 2016 09:27 AM PDT

1.இந்தப் படத்தில் எத்தனை மிருகங்கள்(உயிரினங்களை) காணுகிறீர்கள்? 2.இந்த பஸ்-பேரூந்து எந்தப் பக்கமாக பயணிக்கிறது? இடப் பக்கமா அல்லது வலப்பக்கமா? 80% குழந்தைகள் உடனே பதில் கொடுத்தன. 3.கார் நிறுத்தியிருக்கும் இடத்தின் இலக்கம் என்ன? 4.ஒரு நத்தை ஐந்து அடி ஆழக் குழியில் விழுந்து விடுகிறது. அது மூன்று அடி மேலே நகரும் போது இரண்டு அடி கீழே சறுக்கி கீழே வருகிறது. அப்படியானால் எத்தனை நாளில் அது வெளியே வர முடியும்?

புதிதாக டீ.வி வாங்க போறீங்களா…

Posted: 19 Oct 2016 09:05 AM PDT

கடந்த நான்காண்டுகளாக எனது வீட்டில் 19″ டோஷிபா Icd டீவி பயன்படுத்தி வருகிறேன். இரண்டாண்டுகளுக்கு முன்பு ரிமோட் முற்றிலும் பழுதாகி புதிய ஒன்றை பெற சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது ₹ 1,000 செலுத்தி விட்டு சென்றால் ஒரு மாதம் கழித்து பெற்று செல்லலாம் என்றார்கள். பிறகு நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி பர்மா பஜாரில் ₹ 100 விலையில் வாங்கிய ரிமோட் இன்றும் சிறப்பாக வேலை செய்கிறது. மீண்டும் கடந்த ஆறேழு மாதமாக அவ்வப்போது தகராறு செய்து கொண்டே இருக்கிறது காட்சி அமைப்பும் பல நேரம் மிகுந்த புள்ளிகளாக ...

பெண்களுக்கு பேர் வைக்கும் உலகம்…

Posted: 19 Oct 2016 09:04 AM PDT

பெண்கள் நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும், எழுந்தாலும் பேர் வைக்க மட்டும் இந்த உலகம் மறப்பதில்லை.. – அழுதால் நீலிக் கண்ணீர்.. அழாவிட்டால் நெஞ்சழுத்தகாரி… – துணிச்சலாய் இருந்தால் திமிர்… துணிவில்லை என்றால் அப்பாவி.. – ஜடமாய் இருந்தால் அமைதி.. கேள்வி கேட்டால் ஆணவம்… – வளைவு நெலிவுகளோடு இருந்தால் சூப்பர் பிகர்.. இல்லையெனில் சப்ப பிகர்… – ஆண்களிடம் சிரித்து பேசிவிட்டால் மேட்டரு… காரமாய் பேசினால் முசுடு… – ————————– படித்ததில் பிடித்தது

கற்பிக்கப்பட்டது கடைசி பாடம்

Posted: 19 Oct 2016 09:02 AM PDT

பாடம் – கற்பிக்கப்பட்டது கடைசி பாடம் எறும்புகளுக்கு சாக்பீஸால்..! – >செல்லமுத்து – ——————- – ஹைக்கூ – எங்கே போதிமரம் வெட்டிய காட்டில் தேடியலைந்தார் புத்தர் – >பா.விஜயராமன் ——————- – கதைகள் – கடவுள் கதைகளை விடவும் பேய்க்கதைகளையே குழந்தைகளுக்குப் பிடிக்கிறது..! – >வீ.சிவசங்கர் ————————– —

நேருவும் டாடாவும்

Posted: 19 Oct 2016 09:01 AM PDT


பண்டித நேருவும் தொழிலதிபர் டாடாவும் ஒரு முறை
சந்தித்துக்கொள்ளும்போது, 'இந்தியாவில் மக்கள் தொகை
நாளொரு வண்ணம் பெருகிக்கொண்டே போகிறதே!
இது இந்தியவாவின் வளர்ச்சியைப் பாதிக்காதா? – என்று
டாடா கேட்டார்.
–
அதற்கு நேரு சொன்னார்:
பிறக்கிற குழந்தைக்கு வயிறு மட்டுமா இருக்கிறது, இரண்டு
கைகளும் இருக்கின்றவே! என பொறுப்புணர்ச்சியுடன்
பதிலளித்தாராம்..!
–
———————————-

குறுங் கவிதைகள்…

Posted: 19 Oct 2016 08:58 AM PDT

முகம் – கவிதை
–
காடு கழனி
வீடு வாசல்
தோட்டம் துரவு
விற்று அள்ளிய
அத்தனை கரன்சியிலும்
அப்பாவின் முகம்!

–
—————–
-ஆர்.சியாமளா

தொட்டில் – ஒரு பக்க கதை

Posted: 19 Oct 2016 08:55 AM PDT

– அண்ணன் வீட்டில் பார்த்தேன்…ஒரு ஸ்பிரிங் தொட்டில். ஜிங்கு ஜிங்குன்னு மேலயும் கீழயும் குதிக்குது. நம்ம குழந்தைக்கும் அதே மாதிரி ஒரு தொட்டில்… எனக் குழந்தையை மார்பில் அணைத்தவாறு கணவன் மகேஷிடம் சொன்னாள் புனிதா – மகேஷூக்கு பகீர் என்றது. ஏற்கனவே மளிகைக்கடன் பால் கடன், தவணைக்கு வாங்கிய பொருட்களுக்கான கடன், குழந்தைக்கான செலவுகளுக்காக வாங்கிய புதுக்கடன்…. ஆனாலும் பாவம், ஆசைப்படுகிறாள் எப்படி மறுப்பது? – என்னங்க காதுல விழலையா? விலை கூட கேட்டுட்டேன். ஒரு ஜோடி ஸ்பிரிங்கோட சேர்த்து ஆயிரத்து ...

விராட் கோலியின் செல்லப்பெயர் ‘சிக்கூ’ …

Posted: 19 Oct 2016 08:54 AM PDT

- புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் 'புயல்' விராட் கோலிக்கு 'சிக்கூ' என்ற வேடிக்கையான செல்லப் பெயர் இருப்பது தெரிய வந்துள்ளது. – விராட் கோலி – இந்திய கிரிக்கெட் வீரர் 27 வயதான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நிறைய சாதனைகளை படைத்துக்கொண்டே இருக்கிறார். சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் என்ற மகத்தான சிறப்பை பெற்றார். – ரன் குவிக்கும் எந்திரமாக உருவெடுத்துள்ள விராட் கோலியின் செல்லப்பெயர் என்ன தெரியுமா? 'சிக்கூ'. தமிழில் சொல்ல வேண்டும் ...

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Posted: 19 Oct 2016 07:42 AM PDT

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1 மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் (பரஞ்சோதி முனிவரின் சீடரும்  சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய திருவெண்ணைநல்லூர் மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய   சிவஞான போதம்) உலகில் சதாசர்வ காலமும் பிறப்பு -  இருப்பு -  இறப்பு என்னும் சுழலில் சிக்கி, இருப்பிற்காக ஆயுள் முழுவதும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியனவற்றையே  வழிகாட்டும் துணையாகக் கொண்டு அவற்றின் பொருட்டே உழைத்து வாழ்வின் துயரக் கடலினின்று மீளாமல்  அவதியுற்றுக் ...

ஔவையின் அகவலில் யோக நெறி

Posted: 19 Oct 2016 07:36 AM PDT

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)   தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி (ஔவையார் அருளிய விநாயகர் அகவல்) ஒன்றேயாகிய பரம் பொருளை ஔவையார் ஸ்ரீ குருதேவராகவே காண்பதாக அகவல் வரிகள் அமைந்துள்ளன. இந்த அகவல் ஒரு அற்புதமான யோக நூல். அகவலின் இறுதி அடி, "வித்தக விநாயக! விரைகழல் சரணே"  என்று முடிவடைகிறது. ஆகையால் அகவலின் இரண்டிரண்டு அடிகளையும், 'வித்தக விநாயக' என்பதை முன்னிட்டு பொருள் கொள்வது ஔவையின் உபதேசத்தைப் புரிந்து கொள்ள உதவும். நாயகர் என்றால் மேலானவர்- தலைவர் என்று பொருள். அதாவது ...

எல்.சி.டி. திரையுடன் திருமணப் பத்திரிகை.. கர்நாடக முன்னாள் அமைச்சரின் ஆடம்பரம்!

Posted: 19 Oct 2016 07:21 AM PDT

- - ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளுக்கும் பத்திரிகை அடித்து முறைப்படி வரவேற்பது நம் மரபு. அதுபோல் கோயில் மற்றும் இதர விழாக்களுக்கும் பத்திரிகை அடிக்கப்படுவது உண்டு. ஆதிகாலம் முதல் தற்போதுள்ள நவீன காலம் வரை அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு பத்திரிகைகள் பலவகைகளில் அச்சடிக்கப்படுகின்றன. அந்தவகையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி அனைவரையும் கவரும் வகையில் எல்.சி.டி திரையில் வரவேற்கும்படியான திருமணப் பத்திரிகைகளை வடிவமைத்திருக்கிறார். ...

மடக்கொடி இல்லா மனை .

Posted: 19 Oct 2016 07:18 AM PDT

நெற்றி நிறைய திருமண் இட்டுக்கொண்டு வரதராஜன் , நடராஜன் வீட்டுக்குள் நுழைந்தார் . "வாப்பா ! வரது ! ஒரு வாரமா ஆளையே காணோமே ; என்ன விஷயம் ? " "அதிருக்கட்டும் நட்டு ! உன் பெண்சாதி வீட்டில் இல்லையா ? " " ஆமாம் வரது ! அவளோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி ஊருக்குப் போயிருக்கா ! போய் ஒரு வாரம் ஆவுது . ஆமாம் என் பொண்டாட்டி வீட்டில் இல்லைன்னு எப்படிக் கண்டுபிடிச்சே ? " " இதென்ன கேள்வி ! வீடெல்லாம் ஒரே குப்பைக் கூளமா இருக்குது ; வாசல்ல கோலம் போடல ; அதனாலதான் கேட்டேன் . ஆமாம் உன் பொண்டாட்டி ...

மாந்தனே எச்சரிக்கை!

Posted: 19 Oct 2016 05:55 AM PDT

மாந்தனே எச்சரிக்கை!
பரந்த உலகில்
விளைந்த உயிரே
பணமும் வீண்
சினமும் உள்ள
மனம் கொண்ட
மாந்தராய் வாழ்வது
பாசத்திற்கு மத்தியில் – வெறும்
பதறாய் போய்விடும்!

உயர்ந்த மாந்தன்!

Posted: 19 Oct 2016 05:45 AM PDT

உயர்ந்த மாந்தன்!
உரிமை கொண்டாட
உறவுகள் இல்லையென்று
ஏங்கிக் கிடக்கும்
எளியோருக்கு அன்பும்
அரவணைப்பும் ஆறுதலும்
அடைக்கலமும் தந்துதவி
உயிரூட்டி வளர்க்கும்
உன்னத மாந்தனே
உலகம் போற்றும்
உயர்ந்த மாந்தன்!

திருட்டு – ஒரு பக்க கதை

Posted: 19 Oct 2016 05:05 AM PDT

நிறைமாத கர்ப்பிணியாக நகர்ந்துகொண்டிருந்தது டவுன் பஸ். எனக்கு முன்னே அறுபதைக் கடந்த ஒரு முதியவர். தன் சட்டைப் பையில் துருத்திக் கொண்டிருந்த ரூபாய் நோட்டுகள் எந்த நேரத்திலும் பறி போகலாம் என்ற சிந்தனையே இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். "உங்க பணம்…" என்று நான் சொல்ல ஆரம்பித்தேன். முன்னால் நகர்ந்து விட்டார். சில நிமிடங்களில், நான் பயந்தது நடந்தது. என்னைக் கடந்துபோய் அவரை நெருங்கி நின்ற ஒரு வாலிபனின் கை, இரண்டு முறை பெரியவரின் சட்டைப் பையைத் தடவி விட்டு பின்வாங்கியது. பேருந்தின் ...

என் சமையலறையில்! -வீட்டுக்குறிப்புகள்

Posted: 19 Oct 2016 05:00 AM PDT

- நன்றி குங்குமம் தோழி டிப்ஸ்… டிப்ஸ்… வெஜிடபிள் சமோசா மொறுமொறுப்பாக இருக்க, அவற்றைத் தயாரித்தவுடன், ஒரு தட்டில் வரிசையாக வைத்து, ஃப்ரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து எடுத்து, சற்று நேரம் கழித்து எண்ணெயில் பொரிக்க, க்ரிஸ்பியாகவும் சுவையாகவும் இருக்கும். - -------------------------- வெந்தயக்கீரையில் சாம்பார் செய்யும்போது, தாளிக்கும்போதே கீரையை வதக்கிவிட்டு, பின் பருப்பு சேர்க்க சாம்பார் கசக்காமல் வாசனையாக இருக்கும். மகாலஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி. - --------------------------------------------- - கொண்டைக்கடலை ...

நெகிழ்ச்சி - கவிதை

Posted: 19 Oct 2016 04:55 AM PDT


-
நான் ஊரில் இல்லாவிட்டால்
உணவு உண்ணமறுக்கிறாய்
மூலையிலே முடங்கிக் கிடக்கிறாய்
உன் பாசத்தை காண்கையில்
வன்முறையைக் கையாளும்
சில மனித விலங்குகளிடையே
ஆற்றிவுள்ள ஜீவன் நீதானென
நெகிழ்கின்றேன்..!
–
——————————–
கோமதி மங்கை

உலகத்தில் பழமையான கட்டிடங்கள்...

Posted: 19 Oct 2016 04:40 AM PDT


-

-

-

மாமியாரோட செல்போன்ல எதுக்கு வைப்ரேஷன் செட் பண்றே..?

Posted: 19 Oct 2016 02:30 AM PDT

– அவரை ஏன் டிராபிக் போலீஸ்காரர் திட்டுறார்..! – வாகன கண்ணாடிகளில் கறுப்பு பிலிம் ஒட்டக் கூடாதுன்னு சொன்னதற்கு 'புளூ பிலிம்' ஒட்டலாமான்னு கேட்டாராம்..! – ———————————— – கதவு தட்டற சத்தம் கேட்டதும் , ஏன் போய் ஒளிஞ்சீங்க..? – ஹி..ஹி..நமக்கு கல்யாணம் ஆனதை மறந்துட்டேன்..! – —————————————– – கஞ்சன்னு யாரை சொல்லுவாங்க..? – நூறு மெசேஜ் அனுப்பியும், ஒரு ரிப்ளை கூட அனுப்பாதவங்கள…! – குட், யாருன்னு ஒரு உதாரணம் சொல்லு! – உங்க பொண்ணுதான் சார்..! – ————————————— – "உன் மாமியாரோட ...

ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்...

Posted: 19 Oct 2016 12:51 AM PDT

ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... மனக்குழப்பத்திற்கான மாமருந்து இந்த ஓம் சாந்தி என்ற மகா மந்திரம்.ஒரு மனிதன் தான் பிறப்பிலிருந்து இறப்பு வரை தன்னை ஒரு உடலாக கருதி வாழ்ந்து..இறக்கும் தருவாயில் என் உயிர் போய்ட்டா இந்த சொத்து எல்லாவற்றையும் அண்ணன்,தம்பிக்குள்ள சமபங்கா பிரிச்சு எடுத்துக்குங்க என்று சொல்கின்றான்..வாழும் வரை உடம்பு போகும் பொழுது உயிர்.உயிர் உடம்பை விட்டு போகுமானால் உடம்புக்குள் வந்ததும் உயிராகத் தான் இருக்கவேண்டும். அப்படியானால், பிறப்பது..வாழ்வது..உடலை விட்டு பிரிவது அனைத்தும் உயிர் ...

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி பாஜகவில் இணைந்தார்

Posted: 19 Oct 2016 12:12 AM PDT

- கொச்சி, மாநிலங்களவை ​ உறுப்பினரும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபி பா.ஜ.க.,வில் இணைந்தார்.கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது பா.ஜ.க கட்சியின் சார்பாக பிரச்சாரம் செய்த எம்.பி.சுரேஷ் கோபி தற்போது அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இந்தாண்டு ஏப்ரல் மாதம் சுரேஷ் கோபியை கலைத்துறை சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அரசு நியமித்தது. மலையாள சினிமாவில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் எம்.பி. என்ற பெருமைக்குரியவர் சுரேஷ் கோபி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ...

‘ஏ தில் ஹை முஸ்கில்’ படம் ரிலீசுக்கு போலீஸ் பாதுகாப்பு

Posted: 19 Oct 2016 12:03 AM PDT

- மும்பை, ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள 'ஏ தில் ஹை முஸ்கில்' படம் வெளியாவதற்கு மராட்டிய நவநிர்மாண் சேனா மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, பட ரிலீசின்போது, தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மும்பை போலீஸ் கமிஷனரிடம் படக்குழுவினர் புகார் செய்தனர். பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை - காஷ்மீர் மாநிலம் உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிப்பதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியது. எனவே, நடிகர் ரன்பீர் கபூர், ...

நண்பரை சுட்டுக் கொன்ற சவுதிஅரேபிய இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Posted: 18 Oct 2016 11:57 PM PDT

- ரியாத், சவுதிஅரேபிய அரச குடும் பத்தை சேர்ந்த இளவரசர் டர்கி பின் சவுத் அல்- கபிர்  இவரது நண்பர் அதெல் அல் மகிமித். இவரும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள். கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர்களுக்குள் சண்டை மூண்டது. இதில் ஆத்திரம் அடைந்த இளவரசர் கபிர் தனது நண்பர்   மகிமித்தை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் அதே இடத்தில் பலியானார். மேலும் ஒருவர்  காயம் அடைந்தார்.   இச்சம்பவம் 2012-ம்  ஆண்டு ...

ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா..

Posted: 18 Oct 2016 11:52 PM PDT

படம்: ஆயுத எழுத்து வரிகள்: வைரமுத்து பாடியவர்: அட்னான் சாமி, சுஜாதா இசை: A.R.ரஹ்மான் – —————————- ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா நெஞ்செமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா – காதல் கொஞ்சம் கம்மி காமம் கொஞ்சம் தூக்கல் மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா – (உண்மை சொன்னால்) – பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும் நீ ஒத்தப் பார்வை பாக்கும்போது என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும் – நீதானே மழைமேகம் எனக்கு என் ஹார்மோன் நதியில் ...

சிம்புவின் நாயகி… அடுத்து விஜய்சேதுபதியுடன் டூயட் பாடுவார்!

Posted: 18 Oct 2016 11:51 PM PDT

- தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என்று அடுத்தடுத்து படங்கள் தற்பொழுது விஜய்சேதுபதிக்கு ரிலீஸாகியிருக்கிறன. அடுக்கடுக்காக படங்களை ரிலீஸ் செய்வது மட்டுமின்றி, அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டாகிவருகிறார் விஜய்சேதுபதி. தற்பொழுது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் நடித்துவரும் படத்திற்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. அரசியல் படமாக உருவாகிவரும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் படம் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ...

மரித்தாலும் மறக்காது தோழி!

Posted: 18 Oct 2016 11:50 PM PDT

அவசரம் எதுவுமற்ற கைவிடப்பட்ட பொழுதொன்றில் உன்மீதான நம்பிக்கையை தேர்ந்த கறிக்காரன் போல ஒரே வெட்டில் நீ அறுத்தெரிந்த போது வன்மத்தின் சாயல்களைத் கொண்டிருந்தன உன் நேசங்கள்! – அலட்சியங்கள் துளைத்த என் முதுகை உன் பறக்கணிப்பின் சுவற்றில் சாய்க்கிறேன் – என் பிரியத்தை பிய்த்தெடுக்கும் உரிமையை யார் தந்தது உனக்கு? சொற்கள் எறிந்து தீர்ந்தாகி விட்டதென்றா மௌனத்தை எறிகிறாய்? – சூல் கொண்ட வெட்டுக்கிளியின் அடி இறக்கை விலக்கி உன் பல் குத்தும் குச்சியால் முட்டைகளை நிரடுவது போலவே பிச்சையென்று நினைத்து ...

தேவி – சினிமா விமரிசனம்

Posted: 18 Oct 2016 11:45 PM PDT

- நாகரிக மனைவிக்குக் காத்திருக்கிறவனுக்கு, கிராமத்துப் பெண் மனைவியாக வந்தால்… இறந்து போன ஒரு நடிகையின் ஆவி அவள் உடலில் குடியேறினால்… அதுதான் 'தேவி'. மும்பையில் நண்பர்களுடன் கொட்டமடிக்கிற பிரபுதேவாவிற்கு எப்பவும் நவநாகரிக பெண்மணிகளே இஷ்ட தெய்வங்கள். பலரிடம் காதலைச் சொல்லிச் சொல்லி அலுக்கிறார். பாட்டி சொல்லுக்காக கிராமத்து தமன்னாவை மணக்க நேரிடுகிறது. மும்பைக்கு வந்து சேர்ந்த மனைவியை, அவரின் சாயலிலேயே இருக்கும் ஆவி பிடித்துக்கொள்ள… அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் பரபரப்பு முடிவே க்ளைமேக்ஸ்! ஏற்கனவே ...

சினி செய்திகள்…

Posted: 18 Oct 2016 08:33 PM PDT

- * 'குதிரை சவாரி செய்வது இதயத்திற்கு இதமானது' என யாரோ சொல்லிவிட்டார்கள். உடனே ரைடிங் க்ளப்பில் சேர்ந்து குதூகலமாக குதிரை சவாரியைத் தொடர்ந்து வருகிறார் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ். – ———————————————- - * க்ளைமேக்ஸை நெருங்கி விட்டது 'சிங்கம் 3' ஷூட்டிங். இப்போது மலேசியாவில் நடைபெற்று வரும் ஷெட்யூலோடு படம் நிறைவடைகிறது. 'சிங்கம் 2' போலவே இதிலும் வில்லன் ரோல் பேசப்பட வேண்டும் என்பதற்காக பாலிவுட் நடிகரும், பாடி பில்டருமான தாகூர் அனூப்சிங்கை பிடித்திருக்கிறார்கள். –

பிங்க் ஸ்லிப்ஸ்: கதி கலங்கிய ஊழியர்கள்!!

Posted: 18 Oct 2016 08:22 PM PDT

அமெரிக்க நடைமுறையில், வேலை அல்லது வேலை இழப்பு செய்யப்படும் தொழிலாளி ஒரு மாத சம்பலத்துடன் வெளியேற்றப்படும் நோட்டீஸை அளிப்பது தான் பிங்க் ஸ்லிப் எனப்படும். கார்ப்ரேட், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எனப் போட்டி போட்டுக் கொண்டு 2016 ஆம் ஆண்டு ஊழியர்களை பணியில் இருந்து வெளியேற்றினர். அதில் பிங்க் ஸ்லிப்கள் அளித்து ஊழியர்களை காலி செய்த நிறுவனங்கள் சில: குவிக்கர்: - குவிக்கர் நிறுவனம் மார்ச் மாதம் 150 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப்களை அளித்தது. - பிளிப்கார்ட்: - இந்தியாவின் நம்பர் ...

இது பேச்சிலர் பூரி சார்!

Posted: 18 Oct 2016 08:09 PM PDT

– கர்நாடகாவில் காவிரி தண்ணீரை திறந்ததும் தலைவர் ஏன் கவலையா இருக்கார்? – இனிமேல் மணல் அள்ள முடியாதுன்னுதான்..! – ——————————- – அந்த ஆம்புலன்ஸ் வண்டியில் வெச்சுதான் கொலை நடந்திருக்கும், அதான் விசாரணை பண்றாங்க…1 – அப்ப, ஆம்புலன்ஸ் விசாரணைனு சொல்லுங்க! – கே.அருள்சாமி – —————————————- – எதிரி மகாராணியைசிறைபிடித்து சென்றது கூட மன்னனுக்கு கவலை இல்லையாம்! – வேறு என்ன கவலையாம் அவருக்கு? – மகாராணி இவருக்கு டாட்டா காட்டிச் சென்றதாம்1! – வி.சகிதாமுருகன் – ——————————————– – சாப்பிட்டடு ...

கூடவே ஒன்பதாம் வீட்டிலே இருந்து சிஷ்யனும் பார்க்கிறார்!

Posted: 18 Oct 2016 08:07 PM PDT

லோனுக்கு என்ன செகயூரிட்டி காட்டப் போகிறீர்கள்? – நானே ஒரு செக்யூரிட்டி தான் சார்! – —————————- – அவர் போலி ஜோசியர்னு எப்படி சொல்றே? – ஏழாம் வீட்ல இருந்து குரு பார்க்கிறார்னு சொன்னார், கூடவே ஒன்பதாம் வீட்டிலே இருந்து சிஷ்யனும் பார்க்கிறார்னு ரீல் விடறாரே! – ———————————— – ஏண்டீ உனக்கு திக் ப்ரெண்ட்ஸ் யாரும் கிடையாதா…? – இல்லைடீ! எல்லாரும் திக்திக் ப்ரெண்ட்ஸ்தான்! – சம்பத்குமாரி ———————————– — ஞாபகங்களுக்கு மூன்று பருவங்கள் – உன்னை நினைத்துக் கொண்டேன் உன்னையே நினைத்துக் ...

பிப்.1-இல் மத்திய பட்ஜெட்? ஓரிரு நாள்களில் முடிவு

Posted: 18 Oct 2016 06:50 PM PDT

அடுத்த நிதியாண்டுக்கான (2017-18) பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்வது குறித்து இன்னும் ஓரிரு நாள்களில் மத்திய அமைச்சரவை முடிவெடுக்கும் என்று தெரிகிறது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளதால் இத்தகைய முடிவை மத்திய அரசு எடுக்கத் திட்டமிட்டுள்ளது. பொதுவாக மத்திய பட்ஜெட், பிப்ரவரி மாதம் கடைசி நாளில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். காலங்காலமாக இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™