Tamil News | Online Tamil News |
- உலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா
- வெள்ள பாதிப்பில் இருந்து தப்புமா தமிழகம்? : பேரிடர் குழுவினருடன் அரசு ஆலோசனை
- 'இஸ்ரேல் ராணுவம் செய்ததை நம் ராணுவமும் செய்துள்ளது'
- உ.பி., மாநில தலைவர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம்!: தேர்தல் நேரத்தில் கலகலக்கிறது காங்கிரஸ்
- உள்ளாட்சி தேர்தல் ரத்து நீடிப்பு : தி.மு.க.,வுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
- விஜயகாந்த் முடிவு: கதறும் மா.செ.,க்கள்
- 2,000 கன அடி! மறு உத்தரவு இடும் வரை தமிழகத்திற்கு தண்ணீர் கொடுங்கள் :கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் கண்டிப்பு
- ரேஷன் கடைகளில் தனியார் பொருட்கள்
- ஜி.எஸ்.டி., வரி இழப்பீடு: கவுன்சில் கூட்டத்தில் தீர்வு
- 3 தொகுதி தேர்தல் ஸ்டாலின் ஆலோசனை
- 'கட் அவுட்' வைத்து மாணவியை மிரட்டிய திரிணமுல் காங்.,
- உற்பத்தி திறனை பாதிக்கும் சமூக வலைதளங்கள்
- பிரணாப், சுஷ்மாவுடன் ஆங் சான் சூகி சந்திப்பு
- தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது
| உலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா Posted: 18 Oct 2016 10:40 AM PDT
ஆமதாபாத் : உலக கோப்பை கபடி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. கடைசி லீக் : ஆமதாபாத்தில் உலக கோப்பை கபடி தொடர் நடக்கிறது. இதில், பங்கேற்கும் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்றைய கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்தை சந்தித்தது. வலுவான முன்னிலை: கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய இந்திய அணி முதல் பாதியில் 45-6 என, அசைக்க முடியாத முன்னிலை வகித்தது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் அசத்திய இந்தியா, 24-12 என வலுவான ... |
| வெள்ள பாதிப்பில் இருந்து தப்புமா தமிழகம்? : பேரிடர் குழுவினருடன் அரசு ஆலோசனை Posted: 18 Oct 2016 09:31 AM PDT வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், கடந்த ஆண்டு போல வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது குறித்து, பேரிடர் தடுப்பு குழுவினருடன், தமிழக அரசு முக்கிய ஆலோசனை நடத்தியது. தமிழகத்தில், கடந்த ஆண்டு இறுதியில், வானத்து சுனாமி போல, விடாது மழை கொட்டித் தீர்த்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மற்றும் நாகை மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்தது, மக்கள் உடைமைகளை இழந்து தவித்தனர்; உயிர் இழப்புக்களும் ஏற்பட்டன. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, சில நாட்களில் துவங்க உள்ளது. கடந்த ஆண்டைப் போல ... |
| 'இஸ்ரேல் ராணுவம் செய்ததை நம் ராணுவமும் செய்துள்ளது' Posted: 18 Oct 2016 09:37 AM PDT மண்டி: ''பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் எடுத்ததை போன்ற அதிரடி நடவடிக் கையை, நம் ராணுவம் செய்து காட்டியுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள, முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கும் ஹிமாச்சல பிரதேசத்தில், மூன்று நீர்மின் திட்டங்களை, நேற்று, நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. பிரதமரான பின், முதன்முறையாக, ஹிமாச்சல பிரதேசத்துக்கு சென்றுள்ள மோடி, மண்டியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:இந்த மாநிலம், ஒரு வீர பூமி; ராணுவத்திற்கு நிறைய ... |
| உ.பி., மாநில தலைவர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம்!: தேர்தல் நேரத்தில் கலகலக்கிறது காங்கிரஸ் Posted: 18 Oct 2016 09:42 AM PDT உ.பி.,யில், அடுத்தாண்டு துவக்கத்தில், சட்ட சபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்.,ன் மூத்த தலைவர்கள், பா.ஜ., உள்ளிட்ட கட்சி களுக்கு ஓட்டம் பிடிக்க துவங்கி உள்ளனர். இதனால், காங்., மேலிட தலைவர்கள், கலக்கமடைந்து உள்ளனர். உ.பி.,யில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, அனைத்து கட்சிகளும், இப்போதே தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த தேர்தலில், ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பதை, தற்போது சரியாக கணிக்க முடியாது. அதே நேரத்தில், யாருக்கு வாய்ப் பில்லை என்பதை, அரசியலில் அரிச்சுவடி படிப் பவர்களும், சுலபமாக கூறி விட ... |
| உள்ளாட்சி தேர்தல் ரத்து நீடிப்பு : தி.மு.க.,வுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்' Posted: 18 Oct 2016 09:59 AM PDT சென்னை: உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் தி.மு.க., வுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது. தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப் பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, தெரிவித்தார். தனி நீதிபதியின் ... |
| விஜயகாந்த் முடிவு: கதறும் மா.செ.,க்கள் Posted: 18 Oct 2016 10:05 AM PDT 'மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு, பலத்தை நிரூபிக்க வேண்டும்' என, கட்சியின் மாவட்ட செயலர்களுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டு உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு, 2.5 சதவீத ஓட்டுகளை, தே.மு.தி.க., பெற்றது; போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், 'டிபாசிட்' இழந்தது. இதனால், கட்சிக்கு பெரும் பின்ன டைவு ஏற்பட்டது; கட்சியினர், மாற்று முகாம் நோக்கி ஓடினர். இந்நிலையில், திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி களுக்கு, இடைத் தேர்தல் ... |
| Posted: 18 Oct 2016 10:34 AM PDT 'ஏற்கனவே உத்தரவிட்டபடி, காவிரியில், தமிழகத்திற்கு வினாடிக்கு, 2,000 கன அடி வீதம் தண்ணீரை, மறு உத்தரவு இடும் வரை திறந்து விட வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி அமைக்கப்பட்ட நிபுணர் குழு, தமிழகம் மற்றும் கர்நாடகாவில், கள ஆய்வு செய்து, 40 பக்க அறிக்கையை, நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.சட்டம் - ... |
| ரேஷன் கடைகளில் தனியார் பொருட்கள் Posted: 18 Oct 2016 10:37 AM PDT புதுடில்லி: கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில், தனியார் நிறுவனங்களின் தயாரிப்பு களை விற்பனை செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. நாடு முழுவதும், 5.3 லட்சம் ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில், 80 கோடி வாடிக்கையாளர் கள், குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை வாங்குகின்றனர்.நாடு முழுவதும் கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு தேவையான உணவு தானியங்களை, ரேஷன் கடைகளில் மட்டுமே வாங்கும் நிலை உள்ளது. மற்ற பொருட்களை, நகரங்களுக்கு சென்று வாங்க வேண்டிய நிலை உள்ளது.இந்நிலையில், ரேஷன் கடைகளில், பிரபல தனியார் நிறுவனங் களின் தயாரிப்புகளை ... |
| ஜி.எஸ்.டி., வரி இழப்பீடு: கவுன்சில் கூட்டத்தில் தீர்வு Posted: 18 Oct 2016 10:44 AM PDT புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையால், மாநிலங் களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடு செய்வது தொடர்பாக, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஒருமனதாக தீர்வு காணப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி., வரிவிதிப்பை, 2017 ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வர, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக அமைக்கப் பட்டுள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சிலின் மூன்று நாள் கூட்டம், நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி தலைமையில், டில்லியில் நேற்று துவங்கியது. கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ள, மாநில நிதியமைச்சர் கள் இதில் பங்கேற்றனர். இந்த ... |
| 3 தொகுதி தேர்தல் ஸ்டாலின் ஆலோசனை Posted: 18 Oct 2016 10:51 AM PDT தமிழகத்தில், அடுத்த மாதம் நடக்க உள்ள, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் குறித்து, மாவட்ட செயலர்களுடன், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ஆலோசனை நடத்தினார். தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளுக்கு, நவ., 19ல், தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்தலில், தி.மு.க.,வினர் போட்டியிட்டு வெற்றி பெறுவது குறித்து, அறிவாலயத்தில், கட்சியின் மாவட்ட செயலர்களுடன், ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதற்காக, தஞ்சாவூர் தெற்கு மாவட்டசெயலர், துரை.சந்திரசேகரன், மதுரை தெற்கு மாவட்ட செய லர் மணிமாறன், கரூர் மாவட்ட செயலர் நன்னியூர் ... |
| 'கட் அவுட்' வைத்து மாணவியை மிரட்டிய திரிணமுல் காங்., Posted: 18 Oct 2016 11:47 AM PDT
கோல்கட்டா: மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில், முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து, 'பேஸ்புக்' சமூக வலை தளத்தில், கல்லுாரி மாணவி வெளியிட்ட பதிவை, பிரம்மாண்ட, 'கட் அவுட்'டில் இடம்பெறச் செய்து, மாணவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர் கோல்கட்டாவில், சமீபத்தில், நவராத்தியை முன்னிட்டு, துர்கை சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி, முதல்வர் மம்தாவின் உத்தரவுப்படி நடந்தது; இதில், ஏராளமானோர் பங்கேற்றனர் . ... |
| உற்பத்தி திறனை பாதிக்கும் சமூக வலைதளங்கள் Posted: 18 Oct 2016 01:07 PM PDT
புதுடில்லி: கட்டுப்பாடற்ற வகையில், சமூக வலைதளங்களை பயன்படுத்துவது, பணியிடங்களில், உற்பத்தித் திறனை பாதிப்பதாக, சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வு : சமூக வலைதள பயன்பாடு குறித்து, சமீபத்தில் நடந்த ஆய்வு முடிவு விபரம்: சராசரியாக ஒவ்வொரு வரும், ஒரு நாளில், 32 சதவீத நேரம், சமூக வலைதளத்தில் செலவிடுகிறார். பணியிடங்களில், சராசரியாக, ஒவ்வொரு ஊழியரும், 2:35 மணி நேரம்,சமூக வலைதளங்களே கதி என கிடக்கின்றனர். இதனால், உற்பத்தித் திறன், 13 சதவீதம் பாதிக்கிறது. வேலைக்கே முக்கியத்துவம் ... |
| பிரணாப், சுஷ்மாவுடன் ஆங் சான் சூகி சந்திப்பு Posted: 18 Oct 2016 01:58 PM PDT
புதுடில்லி : இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சுஷ்மா சுவராஜ்,மேனகாவை சந்தித்து பேசினார். இந்திய பயணத்தில் சூகி : கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூகி, டில்லியில் நேற்று(அக்., 18) ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகாவை சந்தித்து பேசினார். வேண்டுகோள் ... |
| தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது Posted: 18 Oct 2016 02:54 PM PDT
சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம், இன்று காலை, 9:30 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. பன்னீர்செல்வம் தலைமையில்.. மே மாதம், சட்டசபை தேர்தல் முடிந்து, அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், முதல் அமைச்சரவைக் கூட்டம், ஜூலையில், முதல்வர் ஜெயலலிதா தலைமை யில் நடந்தது. தற்போது, மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், இன்று அமைச்சரவை கூடுகிறது. கூட்டத்தில் விவாதம் : |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 19,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |