Tamil News | Online Tamil News |
- அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை தடுக்க...அதிரடி!: சில்லரை விலையை இனி மத்திய அரசே நிர்ணயிக்கும்
- முதல்வர் பொறுப்புகளை ஏற்கிறார்... பன்னீர்!: கவர்னர் வித்யாசாகர் அறிவிப்பு
- பயங்கரவாதத்தை ஆதரிப்போரை விடமாட்டோம்: பிரதமர் மோடி ஆவேசம்
- காஷ்மீரில் பதுங்கியுள்ள 250 பயங்கரவாதிகள் சதி நம் நாட்டில் தாக்குதல் நடத்த திட்டம்
- தி.மு.க., உறவு: காங்., இன்று முடிவு
- அமைச்சரின் பேச்சு; சிக்கலில் ஆளுங்கட்சி
- காவிரி உயர்மட்ட குழுவுடன் தலைமை செயலர் ஆலோசனை
- தேர்தலில் பங்கேற்பதை ஊக்குவிக்க என்.ஆர்.ஐ.,க்களுக்கு சிறப்பு போட்டி
- முடியவில்லை காற்றின் வேகம் மின் உற்பத்தி தொடர்கிறது!
- ரேஷனில் தரமற்ற பருப்பு: மக்கள் பணம் 'வீண்'
- ஸ்மார்ட் போன் வேண்டாம்: மாயாவதி ஆவேசம்
- காமன்வெல்த் ஊழல் வழக்கு விவரங்களை வெளியிட மறுப்பு
| அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை தடுக்க...அதிரடி!: சில்லரை விலையை இனி மத்திய அரசே நிர்ணயிக்கும் Posted: 11 Oct 2016 08:50 AM PDT புதுடில்லி:அத்தியாவசியப் பொருட்களின் விலை, திடீரென உயர்வதை தடுக்கும் வகை யில்,அவற்றின் சில்லரை விற்பனை விலையை, மத்திய அரசே நிர்ணயிக்கும் விதமாக, அதிரடி யாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட் களின் விலை திடீரென உயர்வதால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சில வியாபாரிகள், குறிப்பிட்ட பொருட்களை பதுக்கி வைத்து, அந்தப் பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்தி விடுகின்றனர். இந்த திடீர் விலை உயர்வு, நாட்டின் பொருளாதாரத்தி லும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.விலை உயர்வு: கடந்த ... |
| முதல்வர் பொறுப்புகளை ஏற்கிறார்... பன்னீர்!: கவர்னர் வித்யாசாகர் அறிவிப்பு Posted: 11 Oct 2016 10:22 AM PDT முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தாலும், 'நீண்ட நாட்கள் அவர் சிகிச்சை எடுக்க வேண்டும்' என, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாலும், அவரது வசமிருந்த இலாகாக்கள் அனைத்தும், நிதி அமைச்சர் பன்னீர் செல்வத்தி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெ., சம்மதத்துடன், இந்த அறிவிப்பை வெளியிடுவ தாக, கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா, செப்.,22ல், காய்ச்சல் மற்றும் நீர்சத்துக் குறைவால்,சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்; அவருக்கு, தொடர் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. ... |
| பயங்கரவாதத்தை ஆதரிப்போரை விடமாட்டோம்: பிரதமர் மோடி ஆவேசம் Posted: 11 Oct 2016 10:27 AM PDT லக்னோ:''பயங்கரவாதம் மனித குலத்துக்கு எதிரி; பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை விடமாட்டோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகா மில்,பாக்.,பயங்கரவாதிகள் தாக்குதல்நடத்தினர்; இதற்கு பதிலடி கொடுக்கும் வகை யில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதி கள் முகாமை, இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி அழித்தது.இது தொடர்பாக, பல்வேறு கட்சிகள் சந்தேகம் எழுப்பின. இதுகுறித்து, இதுவரை, பிரதமர் மோடி நேரடியாக எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை.இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை ... |
| காஷ்மீரில் பதுங்கியுள்ள 250 பயங்கரவாதிகள் சதி நம் நாட்டில் தாக்குதல் நடத்த திட்டம் Posted: 11 Oct 2016 10:37 AM PDT புதுடில்லி:இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில், பாகிஸ்தானை சேர்ந்த, 250 பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீரில் பதுங்கி உள்ளனர்; இவர்கள், நம் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியுள்ள அதிர்ச்சி தகவலும் அம்பலமாகியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரியில்,பாகிஸ்தானி லிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.தொடர்ந்து பதற்றம் இதையடுத்து, யாரும் எதிர்பாராத வகையில், பாக்., ... |
| தி.மு.க., உறவு: காங்., இன்று முடிவு Posted: 11 Oct 2016 10:40 AM PDT தி.மு.க., உறவை முறிக்க, காங்கிரஸ் விரும்பு கிறது. சென்னை, சத்தியமூர்த்தி பவனில், இன்று நடக்கும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், இதற்கான முடிவெடுக்கப்படும் என, காங்., வட்டாரங்கள் கூறின. கடந்த சட்டசபை தேர்தலில், தமிழக காங்கிரஸ், தி.மு.க.,கூட்டணியில்,41 தொகுதிகளில் போட்டி யிட்டு, எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், காங்கிரஸ் மீது, தி.மு.க., கடும் அதிருப்தி அடைந்தது. ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு, காங்கிரசே காரணம் என, தி.மு.க.,வினர் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.காங்., முடிவு: இதற்கிடையில், தமிழக காங்., தலைவராக, திருநாவுக்கரசர் ... |
| அமைச்சரின் பேச்சு; சிக்கலில் ஆளுங்கட்சி Posted: 11 Oct 2016 10:43 AM PDT
திருவனந்தபுரம்: கேரள அமைச்சர் ஒருவரின் பேச்சு, ஆளுங்கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அரசுப்பணியில் உறவினர் கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் ஜெயராஜன்.இவர், தன் உறவினர்களை, அரசு பதவிகளில் நியமித்து இருப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார். போர்க்கொடி அமைச்சரின் இந்த கருத்துக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள, காங்கிரசினர், 'ஜெயராஜனை, ... |
| காவிரி உயர்மட்ட குழுவுடன் தலைமை செயலர் ஆலோசனை Posted: 11 Oct 2016 10:43 AM PDT சென்னை:டெல்டா மாவட்டங்களில், இரண்டு நாள் ஆய்வை முடித்து சென்னை வந்த, மத்திய உயர்மட்ட குழுவினருடன், தலைமை செயலர் ஆலோசனை நடத்தினார். காவிரி நதிநீர் வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவு படி, தேசிய நீர்வள ஆணைய தலைவர், ஜி.எஸ். ஷா தலைமையிலான, உயர்மட்ட தொழில் நுட்பக்குழுவை, மத்திய அரசு நியமித்தது. இந்த குழுவினர் தமிழகம் வந்து, இரண்டு நாட்களாக, டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தினர்; ஆய்வு முடிந்ததால், நேற்றுமுன்தினம் இரவு சென்னை வந்தனர்.நட்சத்திர ஒட்டலில் தங்கி இருந்த குழுவினரை, நேற்று காலை, தமிழக அரசின் தலைமை செயலர் ராம மோகன ராவ், பொதுப்பணித்துறை ... |
| தேர்தலில் பங்கேற்பதை ஊக்குவிக்க என்.ஆர்.ஐ.,க்களுக்கு சிறப்பு போட்டி Posted: 11 Oct 2016 10:44 AM PDT என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு, 'இ - ஓட்டிங்' எனப்படும், மின்னணுவியல் முறை மூலம் ஓட்டளிக்கும் உரிமை வழங்குவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் முன், அவர்களுக்கு, சிறப்பு போட்டிகள், பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. வெளிநாடுகளில், ஒரு கோடிக்கும் அதிகமான, என்.ஆர்.ஐ.,க்கள் உள்ளனர். இவர்களில் பெரும் பாலோர், குறிப்பிட்ட ஐந்து நாடுகளில் வசிக்கின் றனர். அதிகபட்சமாக, சவுதி அரேபியாவில், 17.8 லட்சம் பேரும், ஐக்கிய அரபு எமிரேட்டில், 17.5 லட்சம் பேரும், பிரிட்டனில், 15 லட்சம் பேரும் வசிக்கின்றனர். அமெரிக்காவில், ... |
| முடியவில்லை காற்றின் வேகம் மின் உற்பத்தி தொடர்கிறது! Posted: 11 Oct 2016 10:47 AM PDT கோவை:சீசன் நிறைவடைந்த பின்னும், காற் றின் வேகம் தொடர்வதால், தினமும் சராசரி யாக, 2,500 மெகாவாட் மின்சாரம், காற்றாலை கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மொத்தம், 11,800 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவை, 7,500 மெகாவாட் மின் உற்பத்தி செய் வதற்கான திறன் கொண்டுள்ளன. வழக்கமாக, தென்மேற்கு பருவ காற்று சீசன், ஆண்டுதோறும் மே முதல் செப்., வரை இருக்கும். முன்பே துவங்கியது இக்காலகட்டத்தில், காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால், காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். நடப் பாண்டில், ஏப்ரல் கடைசி ... |
| ரேஷனில் தரமற்ற பருப்பு: மக்கள் பணம் 'வீண்' Posted: 11 Oct 2016 10:50 AM PDT தமிழகத்தில், ரேஷனில் வழங்கப்படும், தரமற்ற பருப்பு வகைகளால், மக்கள் பணம் வீணாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரேஷன் கடைகளில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கிலோ, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ரேஷனில் வழங்க, மாதந்தோறும், 13 ஆயிரத்து, 500 டன் துவரம் பருப்பு; 7,000 டன் உளுத்தம் பருப்பு தேவை. இவற்றை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம், தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்புகிறது. அவை, சரியான தரத்தில் இல்லை என, குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'ரேஷன் பருப்பின் தரம்மிக மோசமாக உள்ளது; வேக அதிக ... |
| ஸ்மார்ட் போன் வேண்டாம்: மாயாவதி ஆவேசம் Posted: 11 Oct 2016 12:45 PM PDT
லக்னோ: ''உ.பி., மாநில மக்களுக்கு, ஸ்மார்ட் போன்கள் தேவையில்லை; காட்டாட்சியில் இருந்து விடுதலை பெறவே அவர்கள் விரும்புகின்றனர்,'' என, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான பிரசாரத்தை, பிரதான எதிர்க்கட்சிகள் இப்போதே துவக்கி விட்டன. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் இந்நிலையில், பகுஜன் சமாஜ் தலைவரும், உ.பி., மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி, ... |
| காமன்வெல்த் ஊழல் வழக்கு விவரங்களை வெளியிட மறுப்பு Posted: 11 Oct 2016 02:57 PM PDT புதுடில்லி : கடந்த 2010-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கு விவரங்களை வெளியிட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மறுத்துள்ளது. ஏற்பாட்டில் ஊழல் டில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2010-ம் ஆண்டு அக்., 3 முதல் 14ம் தேதி வரை நடைபெற்றன. இப்போட்டி ஏற்பாட்டில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் காங்., கட்சியின் சுரேஷ் கல்மாடி, ஷீலா தீட்சித்துக்கு தொடர்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ.,யும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 12,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |