Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


துளசி, மஞ்சள் – மருத்துவம்

Posted: 11 Oct 2016 09:47 AM PDT


-

-
கொதிக்கும் நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடிப்பதால்
கிடைக்கும் நன்மை:

உறவு முறைகள் ….பற்றி ….

Posted: 11 Oct 2016 09:36 AM PDT

மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு ———————————- அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட ...

மோனலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது

Posted: 11 Oct 2016 09:14 AM PDT

உலகில் நமக்கு தெரியாத பல ரகசியங்கள் உள்ளன. அதனை அறியும் போது அப்படியா!!! என்று வியக்க தோன்றும் அப்படிப்பட்ட ரகசியங்களில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன., -- -- *உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. - *தேசிய கோடியை முதலி உருவாக்கிய நாடு டென்மார்க். 1219-ஆம் ஆண்டு உருவாக்கியது. - *எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும். - *எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்து ப டுக்கும் மிருகம் நாய். - - *பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்-பொது அறிவு தகவல்

Posted: 11 Oct 2016 09:10 AM PDT

ஒரு பென்சிலை கொண்டு 52 கி.மீ கோடு வரையலாம். *நண்டிற்கு தலை கிடையாது. அதன் பற்கள் அதனுடைய வயிற்றில் இருக்கும். *வெள்ளை என்பது நிறம் அல்ல. அது ஏழு வர்ணங்களின் கலவை. *முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் பகலில் விழாது. இரவில் தான் விழும். *நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும். *சிலந்தி பூச்சிக்கு எட்டு கண்கள் உண்டு. - - *இறாலின் இதயம் அதன் தலையில் இருக்கும். *இந்தியாவில் தமிழில் தான் 'பைபிள்' முதன்முதலில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. *ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. *வாத்து ...

(இந்த கதை சிரிக்க மட்டுமல்ல…. :(

Posted: 11 Oct 2016 09:04 AM PDT

ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார். ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டு விட்டது. நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை. இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான். பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான். அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி. வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது. கடல் நீரோ பொதுச் சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக ...

ஒரே கேள்விக்கு ரெண்டு தடவை விடை எழுதியிருக்கியே..!

Posted: 11 Oct 2016 09:01 AM PDT

"ஒரே கேள்விக்கு ரெண்டு தடவை விடை எழுதியிருக்கியே" – "இது ஆக்ஷன் ரிப்ளே டீச்சர்!" – ஜோ.ஜெயக்குமார், – ———————————————- – • "லண்டன், அமெரிக்கா, டூர் போயிட்டு வந்தியேடா…, அங்க என்ன அதிசயம் பார்த்தே?" "அங்க சின்னச்சின்னப் பசங்க கூட இங்கிலீஷில்தான் பேசறாங்க…ஒரே ஆச்சரியம்டா" – எஸ்.பி.நவீன்பாரதி, – ——————————————— – • "ரெண்டே ரெண்டு கேள்விக்கு பதில் எழுதாமல் விட்டதுக்கா இத்தனை மார்க் கம்மியாச்சு?" ""நாலு கேள்விக்கு விடை தப்பாப் போச்சே…" – பர்வதவர்த்தினி, —————————————- • ...

காலபைரவர் கோவில் , அதியமான் கோட்டை

Posted: 11 Oct 2016 09:00 AM PDT

- – காலபைரவர் கோவில் இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது. முதல் இடம் காசியில், இரண்டாம் இடம் தர்மபுரி அதியமான் கோட்டை. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர பைரவர் இக்கோவிலில் வீற்றிருக்கிறார். அதியமான் மன்னரால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன. இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார். அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள், ஜாதக தோஷங்கள் ...

ரூ.60 கோடி கொடுத்து காருக்கு பேன்ஸி நம்பர் வாங்கிய இந்தியர்!

Posted: 11 Oct 2016 08:58 AM PDT

- துபாயிலுள்ள JW மேரியாட் நட்சத்திர ஓட்டலில் வாகனங்களுக்கான பேன்ஸி நம்பர் பிளேட் ஏலத்திற்கு போக்குவரத்து துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பேன்ஸி நம்பர் பிளேட்டுகளை ஏலத்தில் எடுக்க 300க்கும் மேற்பட்ட பெரும் பணக்காரர்கள் குழுமியிருந்தனர். அந்த அரங்கத்தில் இருந்த பிரம்மாண்ட திரையில் பேன்ஸி நம்பர்கள் காண்பிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. பல பேன்ஸி நம்பர் பிளேட்டுகள் ஏலம் விடப்பட்டன. அதில், அதிகபட்ச விலை கொண்ட D 5 என்ற பேன்ஸி நம்பர் பிளேட்டும் ஏலத்திற்கு வந்தது. அதற்கு அடிப்படை ...

நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள்

Posted: 11 Oct 2016 08:57 AM PDT

பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது,  சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு  பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது,  தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார். ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக் ...

ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட ஹூண்டாய் இயான் கார்கள் திரும்ப அழைப்பு!

Posted: 11 Oct 2016 08:56 AM PDT

- ஹூண்டாய் இந்தியா நிறுவனம், க்ளாட் மற்றும் பேட்டரி கேபிள் பழுதால் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பிருக்கிற 7,000க்கும் மேற்பட்ட இயான் கார்களை ரீகால் (திரும்ப அழைப்பு) செய்துள்ளது. – ஹூண்டாய் நிறுவனத்தின் நுழைவு நிலை ஹேட்ச்பேக் வகையைச் சேர்ந்த இயானில், க்ளாட்ச் கேபிளில் ஏற்படும் பழுதால் பேட்டரி கேபிளும் பழுதாவது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி 1, 2015 லிருந்து ஜனவரி 31, 2015 ஆகிய தேதிகளுக்கு இடையே தயாரிக்கப்பட்ட 7,657 கார்களில் இந்த பாதிப்பு இருக்கலாம் என கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே ...

கார் உற்பத்தியில் உலக நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்

Posted: 11 Oct 2016 08:55 AM PDT

- புதுடெல்லி: இந்தியா கார்கள் உற்பத்தியில் இந்தாண்டு உலக நாடுகள் மத்தியில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தனது நேரடி போட்டி நாடான தென்கொரியாவை இந்தியா ஆறாவது இடத்திற்கு தள்ளி உள்ளது. ஜெர்மனி, சீனா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் கார் உற்பத்தியில் உலக அளவில் முதல் நான்கு இடங்களில் உள்ளன. 2016ல் மட்டும் இன்றைய தேதி வரை இந்தியாவில் மொத்தம் 25.7 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் நேரடி போட்டி நாடான தென்கொரியாவில் ஹுன்டாய் கியா கம்பெனி தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ...

வாழ்த்தலாம் a ram -10000-ஐ தாண்டிய தலைப்புகளில் பதிவு

Posted: 11 Oct 2016 08:18 AM PDT

வாழ்த்தலாம் திரு ayyasami ram அவர்களை --10000 ஐ தாண்டிய தலைப்புகளில் பதிவு . திரு ayyasami ram அவர்களை , அயராத அர்பணிப்புகள் 10002 தலைப்புகளில் இதுவரை திரிகள் தொடங்கி , உறவுகளை ரசிக்க வைத்ததற்கு . ரமணியன்

வரலாற்று நாயகன்!

Posted: 11 Oct 2016 07:50 AM PDT

வரலாற்று நாயகன்!
துள்ளலாக திரிபவர்
வள்ளலாக வாழ்பவர் - என்பதைவிட
வாழ்நாளில் பிறருக்கு
எள்ளளவு தீங்கில்லாமல்
இயன்றளவு துயரில்லாமல்
வாழ்ந்து வருபவரே
வான்புகழ் கொண்ட
வரலாற்று நாயகன்!

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Posted: 11 Oct 2016 06:55 AM PDT

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! எனக்கு கண்ணில் காட்ராக்ட் இருக்கிறது .............கடந்த 15 நாட்களாக படிப்பது கொஞ்சம் கலங்கலாக தெரிகிறது என்று இன்று check up காக சென்றோம் ......டாக்டர் check up செய்து, வரும் ஞாயிறு காலை ஆபரேஷன் செய்வதாக சொல்லிவிட்டார்.............. எப்படியும் குறைந்தது 15 -20 நாட்கள் கழித்து தான் என்னால் இங்கு வர இயலும் என்று தோன்றுகிறது. அன்புடன், கிருஷ்ணாம்மா

உண்மை விஜயதசமி...

Posted: 11 Oct 2016 06:52 AM PDT

உண்மை விஜயதசமி... எந்த ஒரு விஷயம் கீதையில் அதர்மத்தை அழிப்பதற்காக சொல்லப்பட்டதோ..அந்த காலகட்டத்தில் தான் நாம் வசிக்கின்றோம்.. கண்கள் திறக்கட்டும்.காதுகள் உணர்வு பெறட்டும்.இப்பொழுது பரமாத்மாவின் வருகை பிரத்யட்சம் மெல்ல..மெல்ல.,பூமியில் ஆகிக் கொண்டுள்ளது..இந்த உலக அழிவு இயற்கையின் சீற்றங்களாலும், உலகப் போர்களாலும் சூழப்பட போகின்றது என்பது நிதர்சனமான உண்மை..பிறகு, பூமியில் ஸ்ரீ கிருஷ்ணருடைய ராஜ்ஜியம் தோன்றும் என்பதும் நிதர்சனமான உண்மை.இதை கேட்டு ஆஹா, ஓஹோ, என்றெல்லாம் சொல்லுவதால் என்ன பலன் ? அந்த ...

தமிழக மேன்மைக்காக பிரார்த்திப்போம்

Posted: 11 Oct 2016 06:43 AM PDT

அன்னை யுத்த முழக்கம் செய்துவிட்டாள் வெற்றித்திலகம் இட்டு விட்டாள் கடிந்துகொள் என்கிறாள் தமிழகத்தை விடுதலை ஆக்க தியானத்தில் தொடர்ந்து கடிந்து வா குறுகிய பிழைப்புவாத இனவாத அரசியல் வாதிகளையும் சீரழிவு கலாச்சார சினிமாக்காரர்களையும் அவர்களுக்கு பக்கபலமான ஆவிமண்டல சக்திகளையும் நான்கு அதிதேவர்கள் நாமத்தால் கடவுள் கடிந்துகொள்வாராக என மட்டும் அனுதினமும் சொல்லி வா என்கிறாள் இது இறைவன் சித்தம் எந்த கெடுதலும் நேராது சங்கீதம் 8:2 பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் ...

வாட்ஸ்அப்- படித்தில் பிடித்தது

Posted: 11 Oct 2016 06:39 AM PDT

எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..! எழுத்திடம் பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும். பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது :-)) குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் மீசை வளர்ந்து விடுகிறது கூகுளில் எதை தேடினாலும் கிடைக்கும்...! உண்மைதான்...! ஆனால் 2G யில் தேடாதீர்கள்...! கூகுளே கிடைக்காது.! தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை ...

பொன்மொழிகள்!

Posted: 11 Oct 2016 06:32 AM PDT

(உன்னத மாந்தனுக்குள் ஒலிக்கும்) பொன்மொழிகள்!
"எவரும் எனக்கு அடிமையில்லை
எவருக்கும் நான் அடிமையில்லை"

அலைப்பேசி கோபுரம்! (Cellphone Tower)

Posted: 11 Oct 2016 04:48 AM PDT

அலைப்பேசி கோபுரம்!
உயர்ந்து உயர்ந்து நிற்கிறது
உலகை அழைத்து நிற்கிறது – கதீர்வீச்சால்
உன்னத பறவைகளை அழித்துவிட்டு!

உலகம் உன் கையில்!

Posted: 11 Oct 2016 04:36 AM PDT

உலகம் உன் கையில்!
உன்மீது நம்பிக்கை கொள்
உலகம் உன் கையில்
உன்மீது தன்நம்பிக்கை கொள்
உலகம் உன் கையில்
முடியுமென்று முயற்சி செய்
உலகம் உன் கையில்
விடியுமென்று விடாமுயற்சி செய்
உலகம் உன் கையில்
விடாமுயற்சியை விடாமல் செய்
உலகம் உன் கையில்

அறிமுகம்--பொ.இராமன்

Posted: 11 Oct 2016 01:10 AM PDT

அறிமுகம்
என் பெயர் : பொ.இராமன்
அப்பா பெயர் : மு.பொன்னன்
சொந்த ஊர் : தெ.ஆண்டிபட்டி
மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
தொழில் : கணினி வேலைகள்
தொடர்புக்கு : 9788557215
மின்னஞ்சல் : raman.tkm@gmail.com
ஈகரையை அறிந்த விதம் : இணையத்தில் உலாவும்போது...
இறைவனின் ஈகையாக கிடைத்தது ஈகரை!

திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்:

Posted: 11 Oct 2016 01:07 AM PDT

திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்:பக்தர்கள் கடும் அதிர்ச்சி திருக்குவளை, பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்த, 1,000 ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம் மாயமானது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஏழாம் நுாற்றாண்டை சேர்ந்த இக்கோவில், தேவார மூவரால் பாடல் பெற்றது. இக்கோவிலில், ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த, விலைமதிப்பற்ற மரகத லிங்கம் உள்ளது. இக்கோவிலில் ...

கோவை-பெங்களூரு இடையே விரைவில் டபுள் டக்கர் விரைவு ரயில் சேவை: கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா

Posted: 11 Oct 2016 12:23 AM PDT

கோவை-பெங்களூரு இடையே டபுள் டக்கர் விரைவு ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார். கோவை, இந்திய தொழில் வர்த்தக சபையில் நடைபெற்ற தொழில் அமைப்புகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் வியாழக்கிழமை பேசியதாவது: கோவை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இங்கு  போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடிய பயணிகள் மற்றும் ரயில்களின் எண்ணிக்கையைக் கருத்தில் ...

நான் அதிபரானால் ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்: டொனால்ட் டிரம்ப் ஆவேசம்

Posted: 11 Oct 2016 12:18 AM PDT

- வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக நான் பொறுப்பேற்றால் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை சிறையில் தள்ளுவேன் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 2005-இல் தனிப்பட்ட உரையாடலில் பெண்களைக் குறித்துப் பாலியல் ரீதியான பல கருத்துகளை டிரம்ப் பேசினார். இதன் ஒலிப்பதிவு இணையதளத்தில் வெளியாகிப் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தான் முன்பு வெளியிட்ட கருத்துக்கு டிரம்ப் வருத்தம் தெரிவித்தார். அவருடைய மனைவி மெலானியா, குடியரசுக் ...

பிரம்மபுத்திராவில் அணை கட்டுவதால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீனா

Posted: 11 Oct 2016 12:12 AM PDT

பெய்ஜிங்: பிரம்மபுத்திராவில் அணை கட்டுவதால் இந்தியாவின் நீர்வரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று சீனா தெரிவித்தது. திபெத்தின் ஜியாúஸ பகுதியில் பாயும் ஜியாபகு நதியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்துக்காக, அதன் நீரோட்டத்தை கடந்த 1-ஆம் தேதி முதல் சீனா நிறுத்தியது. சீனாவின் இந்தச் செயல், பிரம்மபுத்திரா நதியின் நீர்வரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அது பிரம்மபுத்திரா பாயும் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்தியா கவலை தெரிவித்தது. இந்நிலையில், ...

வாணியைச் சரண் புகுவோம்!

Posted: 10 Oct 2016 11:47 PM PDT

- தன்னைப் பிழிந்து தமிழ் செய்த பாரதியின் உன்னதக் காவியம் பாஞ்சாலி சபதம். "பிரமதுதி'யோடு தொடங்கும் அக்காப்பியத்தில் அடுத்து அவர் வணங்குவது சரஸ்வதியை. அவர் காட்டும் அருள்வாணி முற்றிலும் புதுமையானவள். மகாகவியின் கேசாதிபாத வருணனையில், அத்தேவியின் திருவுருவ அடையாளங்கள் பின்வருமாறு பொலிகின்றன. "அவளின் திருவிழி - வேதம்; அதனை விளக்கத் தோன்றிய பற்பல உரை - கண் மை; சீதக்கதிர் மதியாம் நெற்றியின் மேல் விளங்கும் கூந்தல் - சிந்தனை; வாதம் தருக்கம் என்னும் இரண்டும் அவளது செவிகளுக்கு ...

அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு

Posted: 10 Oct 2016 10:22 PM PDT

சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 12-ம் தேதி மொகரம்க டைப்பிடிக்கப்படும் என மாநில தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார். கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து ஷியா பிரிவு முஸ்லிம்களால் துக்க தினமாக மொகரம் அனுசரிக்கப்படுகிறது. அதேவேளையில், ஷியா முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனைய இஸ்லாமியர், மொகரம் மாதத்தின் பத்தாவது நாளில் நோன்பிருந்து, தன்னைத்தானே கடவுள் என்று பிரகடணப்படுத்திய ஃபிர்அவ்ன் என்ற மன்னன் மற்றும் படைகளை கடலில் ...

குறளில் காணும் நிறை

Posted: 10 Oct 2016 10:04 PM PDT

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7  – ( திருக்குறள் ) பொருட்பால் அரசியல் அதிகாரம் 40 கல்வி. பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும்  அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும். கல்வி ...

இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை இன்று அறிமுகம் செய்தது உத்தரப் பிரதேச அரசு

Posted: 10 Oct 2016 09:59 PM PDT

- உத்தரப் பிரதேச அரசு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை இன்று அறிமுகம் செய்தது. உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. இந்த மாநிலத்தின் முதல்வராக அகிலேஷ் யாதவ் பதவி வகிக்கிறார். அடுத்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இலவச ஸ்மார்ட் போன் திட்டமான :"சமாஜ்வாதி ஸ்மார்போன் யோஜனா" என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் இன்று அறிமுகப்படுத்தினார். பதினெட்டு வயது நிரம்பிய ,பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த ...

நோபல் பரிசை நன்கொடையாக அளித்த கொலம்பியா அதிபர்

Posted: 10 Oct 2016 09:44 PM PDT

பொகோட்டா: - கொலம்பிய அதிபர் மேனுவல் சாண்டோஸ், தனக்கு கிடைத்துள்ள அமைதிக்கான நோபல் பரிசுத் தொகையை, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நன்கொடையாக அளிக்க உள்ளதாக அறிவித்து உள்ளார். அமைதி உடன்படிக்கை: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், அரசுப் படைகளுக்கும் - இடதுசாரி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, 52 ஆண்டுகளாக, உள்நாட்டு சண்டை நடந்தது. இதில், 2.60 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்; 60 லட்சத்துக்கும் அதிகமானோர், உள்நாட்டு அகதிகளாக உள்ளனர். இதை முடிவுக்கு கொண்டு வர, கிளர்ச்சியாளர்களுடன், ...

மாற்றி யோசித்தால் என்ன?

Posted: 10 Oct 2016 07:29 PM PDT

மக்களாட்சியில் ஆளுகை என்பது முழுவதும் அரசியல் கட்சிகள் கையில் இருப்பதாகவே கட்சிகளும் எண்ணுகின்றன மக்களும் நம்புகின்றனர். எல்லாம் கட்சிமயமாக்கப்பட்டதன் விளைவு இன்று அனைத்துச் செயல்பாடுகளுக்கும் நாம் கட்சிச்சாயம் பூசிவிடுகின்றோம். அரசியல் கட்சிகளைத்தாண்டி பல நிறுவனங்களில், அமைப்புகளில் அரசியல் செயல்பாடுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அரசியல் கட்சிகளின் இடத்தை வேறு நிறுவனங்களால் பிடிக்க முடியவில்லை. அரசியல் கட்சிகளும் கட்சிக்காரர்களைத் தாண்டி எந்தப் செயல்பாட்டிற்கும், பதவிக்கும் ...

மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்

Posted: 10 Oct 2016 07:02 PM PDT

ஸ்ரீகுருவே நம: மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள் உலகின் ஞான பீடம், நமது பாரததேசம் என்பதில் ஐயம் இருக்க முடியாது. நமது பரத கண்டத்தில் எங்கேனும் ஓர் இடத்தில் எப்போதும் உலக மக்களுக்கு நமது கொடையாகும் வேதங்கள் ஒலித்துக் கொண்டே இருப்பவை என்பதிலும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை. ரிக், யஜுர், சாம , அதர்வணம் என வேதங்கள் நான்கு. இவை சதுர்வேதம் என்னும் ஒரே சொல்லால் குறிப்பிடப்படுபவை. நம் அமுதத்தமிழ் சதுர்வேதத்தை நான்மறை என நவிலும் . பொதுவாக மறை என்றும் வேதங்கள் , குறிப்பிடப்படுபவை. மறை நான்கிலும் ...

அடுத்த தசராவுக்குள் அமராவதி 'ரெடி': சந்திரபாபு நாயுடு உறுதி

Posted: 10 Oct 2016 05:26 PM PDT

விஜயவாடா: 'அடுத்த தசரா பண்டிகைக்குள், உலகத்தரம் வாய்ந்த தலைநகரமாக, அமராவதி தயாராகி விடும்' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். புதிய தலைநகர் : ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலம், ஆந்திரா, தெலுங்கானா என, இரு மாநிலமாக பிரிக்கப்பட்டது. ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமாக இருந்த ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமாக மாறியது. இதையடுத்து, ஆந்திராவுக்கான புதிய தலைநகரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. விஜயவாடா அருகேயுள்ள அமராவதியை தலைநகரமாக மாற்ற, சந்திரபாபு ...

2 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

Posted: 10 Oct 2016 05:23 PM PDT

- ஸ்டாக்ஹோம்: 2016ம் வருடத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அலிவர் ஹார்ட், பெங்க் ஹோம்ஸ்ட்ரோம் ஆகியோர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அலிவர் ஹார்ட் ஹார்வர்டு பல்கலையிலும், பெங்க் எம்.ஐ.டி., கல்வி நிலையத்திலும் பணிபுரிகின்றனர். பொருளாதாரத்துறையில் ஒப்பந்தங்கள் கோட்பாடு தொடர்பான ஆய்வுக்கு இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பிரச்னை இல்லாமல் ஒப்பந்தங்கள் அமைப்பது குறித்து இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 1969ம் ஆண்டு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™