Tamil News | Online Tamil News |
- காங்கிரசை விட கூடுதல் ஓட்டு : பா.ஜ.,வுக்கு அமித் ஷா அறிவுரை
- பிரம்மபுத்திரா கிளை நதி நிறுத்தம் : இந்தியாவை சீண்டுகிறது சீனா
- அக்., 6ம் தேதி விசாரணையை எதிர்பார்க்கும் கர்நாடகா : காவிரி நீர் திறக்கவே கூடாது என்று தொடர்ந்து அடம்
- மத்திய அரசு திட்டத்தால் வெளிச்சத்திற்கு வந்த கறுப்பு பணம்... ரூ.65,250 கோடி!: ரூ.30 ஆயிரம் கோடி வரி வசூலாகும் என மத்திய அரசு தகவல்
- தேறி வருகிறார் முதல்வர்
- தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி பற்றாக்குறை...குறைந்தது!:அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை நிறுத்தியதால் திருப்பம்
- பிரதமர் மோடி: தளபதி மோடி
- இலவசம், தள்ளுபடி அறிவிப்புகளை நம்பி... ஏமாறாதீர்!: 'ஆன்லைன்' மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
- பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பயங்கரவாதிகள்... ஓட்டம்!:இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலால் கலக்கம்
- சவுதியில் வேலை இழந்த தொழிலாளர்கள் நாடு திரும்பினர்
- ஸ்மிருதிக்கு 'சம்மன்?': 6ல் கோர்ட் முடிவு
- பாக்.,ல் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு ; 20 ஆண்டுகளாக கணக்கு இல்லை
- பயங்கரவாதிகள் தாக்குதல் அபாயம் அணு மின் நிலையங்களில் 'அலர்ட்'
| காங்கிரசை விட கூடுதல் ஓட்டு : பா.ஜ.,வுக்கு அமித் ஷா அறிவுரை Posted: 01 Oct 2016 08:13 AM PDT 'உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசை விட, கூடுதல் ஓட்டுகளைப் பெற வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், காங்கிரசை விட கூடுதல் பலம் பெற வேண்டும்; திராவிட கட்சிகளுக்கு மாற் றாக வளர வேண்டும் என, பா.ஜ., தலைவர்கள் விரும்புகின்றனர். அந்த எண்ணத்தில், கடந்த லோக்சபா தேர்தலுக்கு, தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் தனி அணி அமைத்து, தேர்தலை சந்தித்தனர்; ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. இருப்பினும், 19 சதவீத ஓட்டுகளை கூட்டணி பெற்றது. அடுத்து நடந்த சட்டசபை தேர்தலுக்கும், தனி அணி அமைத்து, பா.ஜ., ... |
| பிரம்மபுத்திரா கிளை நதி நிறுத்தம் : இந்தியாவை சீண்டுகிறது சீனா Posted: 01 Oct 2016 09:40 AM PDT புதுடில்லி: 'பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பங்கீடு குறித்து, மறுபரிசீலனை செய்யப்படும்' என இந்தியா அறிவித்திருந்த நிலையில், இந்தியாவுக்குள் வரும் பிரம்மபுத்திராவின் கிளை நதியை, சீனா, தடுத்து நிறுத்தியுள்ளது. சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள திபெத்தில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி, இந்தியா வின் வட கிழக்கு மாநிலங்களுக்கு, முக்கிய நீராதாரமாய் விளங்குகிறது. பிரம்மபுத்திரா நதியின் வழித்தடத்தில், ஐந்து புதிய அணை களை கட்ட, சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. ஷாங்மூ என்ற இடத்தில், முதல் நீர்மின் நிலையத்தை கட்டி முடித்துள்ள சீனா, அதை விட பெரிய ... |
| அக்., 6ம் தேதி விசாரணையை எதிர்பார்க்கும் கர்நாடகா : காவிரி நீர் திறக்கவே கூடாது என்று தொடர்ந்து அடம் Posted: 01 Oct 2016 10:17 AM PDT பெங்களூரு: காவிரி நீர் திறப்பில், உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத கர்நாடகா அரசு மீது நடவடிக்கை எடுத்தால், மாநில எம்.பி., - எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.,க்கள் அபிடவிட் தாக்கல் செய்ய தயாராக இருக்க வேண்டும் என, அனைத்து கட்சி கூட்டத்தில், ம.ஜ.த., வலி யுறுத்தியுள்ளது. சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தவும், முதல்வர் சித்த ராமையா முடிவு செய்துள்ளார். காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவுக்கு, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டதை அடுத்து, பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் ... |
| Posted: 01 Oct 2016 10:25 AM PDT மத்திய அரசு அறிவித்த, கறுப்பு பண விபரங் களை தாமாக முன்வந்து தெரிவிக்கும் திட்டத் தில், நாடு முழுவதும் கணக்கில் வராத, 65 ஆயிரத்து, 250 கோடி ரூபாய் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன் மூலம், 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி வசூலாகும் என, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பதுக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணத்தை, வெளியே கொண்டு வருவதற் காக, புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித் தது. அதன்படி, வரி ஏய்ப்பாளர்கள் தாமாக முன்வந்து, கறுப்பு பணம் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த விபரங்களை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது; இத்திட்டம், ஜூனில் அமலுக்கு ... |
| Posted: 01 Oct 2016 10:31 AM PDT சென்னை:'முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தேறி வருகிறார்' என, தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ் தெரிவித்தார். இது தொடர்பாக, கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கை: சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலி தாவை பார்ப்பதற்காக, நேற்று மாலை,6:45 மணிக்கு, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்றார். அவரிடம், மருத்துவ மனை தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்துவிளக்கினார்.அதன்பின், முதல்வர் சிகிச்சை பெறும் வார்டுக்கு சென்ற கவர்னரிடம், அங்கிருந்த டாக்டர்களும் சிகிச்சை பற்றி விவரித்தனர். ... |
| Posted: 01 Oct 2016 10:36 AM PDT தனியாரிடம் இருந்து, அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை நிறுத்தியதால், தமிழக மின் வாரியத்தின் நிதி பற்றாக்குறை, கடந்த நிதியாண்டில், 5,786 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, மின் கட்டணம், அரசு மானியம் மூலம் வருவாய் கிடைக்கிறது. தனியாரிடம் மின் கொள்முதல், எரிபொருள், மின் நிலையங்களில் பழுது, பராமரிப்பு, ஊழியர் சம்பளம், கடனுக்கான வட்டி உள்ளிட்டவைக்கு பெருமளவில் செலவு செய்கிறது.கட்சிகள் எதிர்ப்பு: மின் வாரியம், 2014 டிசம்பர் வரை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து,அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது; இதனால், பல ... |
| Posted: 01 Oct 2016 10:42 AM PDT 'வெறும் பேச்சு தான்; அதைத் தவிர என்ன செய்து விட்டார் மோடி' என, கிண்டலாக பேசியவர்களின் வாயை அடைத்து விட்டார் மோடி. பாகிஸ்தானுக்குள் புகுந்து, அங்குள்ள பயங்கர வாதிகளின் கூட்டத்தை அழித்து, வெற்றியோடு திரும்பியுள்ளது நம் ராணுவம். இப்படி ஒரு தாக்குதல் நடக்கப் போகிறது என்பது யாருக் குமே தெரியாதாம். சீனியர் அமைச்சர்களுக்குக் கூட இதைப் பற்றி சொல்லவில்லையாம் மோடி. ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கருக்கு மட்டும் இதைப் பற்றி தெரியுமாம். மற்ற அமைச்சர்களுக்கு, 'ஏதோ நடக்கப் போகிறது' என்பது மட்டும் யூகமாகத் தெரியும் என்கிறார் ஒரு அமைச்சர். ஆனால், பா.ஜ., ... |
| இலவசம், தள்ளுபடி அறிவிப்புகளை நம்பி... ஏமாறாதீர்!: 'ஆன்லைன்' மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை Posted: 01 Oct 2016 10:53 AM PDT மும்பை:'ஆன்லைன்' வர்த்தகத்தில், பல்வேறு சலுகைகள் வழங்குவதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்ற, மோசடி வலை தளங்கள் முயற்சிப்பதாக புகார் வந்துள்ளது. இதனால், பொதுமக்கள், விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புத்தகங்களில் ஆரம்பித்த ஆன்லைன் வியாபாரம், இப்போது கார், இருசக்கர வாகனம், வீடு வாங்குவது வரை வளர்ந்திருக்கிறது.நேரம் மிச்சம் ஆன்லைன் மூலம், பொருட்கள் வாங்குவதால், நாம் அலைய வேண்டிய நேரம் மிச்சமாகிறது. அத்துடன், நம் வீட்டுக்கே, ... |
| Posted: 01 Oct 2016 11:02 AM PDT புதுடில்லி:இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதிரடியாக புகுந்து, பயங்கரவாதிகள் முகாமை தாக்கி அழித்ததை அடுத்து, அங்கிருந்த, ௩௦௦க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஓட்டம் பிடித்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரியில் உள்ள ராணுவ முகாம் மீது, கடந்த மாதம், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 19 வீரர்கள் பலியாகினர்; தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன் நள்ளிரவில், எல்லையை தாண்டி, பாக்., ... |
| சவுதியில் வேலை இழந்த தொழிலாளர்கள் நாடு திரும்பினர் Posted: 01 Oct 2016 11:07 AM PDT
புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததால், சவுதி அரேபியா நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; அங்கு பணியாற்றிய, ஏராளமான இந்தியர்கள் தாயகம் திரும்பிஉள்ளனர். மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், இந்தியா, பாக்., வங்கதேசம், பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வந்தனர். சமீப காலமாக, கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. எண்ணெய் வர்த்தகத்தை பிரதான வருவாயாக நம்பியிருக்கும் சவுதி அரேபியாவின் பொருளாதாரம், இதனால், கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள ... |
| ஸ்மிருதிக்கு 'சம்மன்?': 6ல் கோர்ட் முடிவு Posted: 01 Oct 2016 12:08 PM PDT
புதுடில்லி: போலி சான்றிதழ் வழக்கில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, 'சம்மன்' அனுப்புவது குறித்து, 6ல், டில்லி கோர்ட் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. மத்திய ஜவுளித்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஸ்மிருதி இரானிக்கு எதிராக, டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில், அஹமர் கான் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனு விபரம்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2004 லோக்சபா தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுவில், டில்லி பல்கலையில், 1996ல், இளங்கலை பட்டம் பெற்றதாக கூறியுள்ளார். 2011ல் நடந்த ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவில், ... |
| பாக்.,ல் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு ; 20 ஆண்டுகளாக கணக்கு இல்லை Posted: 01 Oct 2016 01:22 PM PDT டில்லி: பாகிஸ்தானில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக குழந்தை தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 1991ம் ஆண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அந்த சட்டம் இதுவரை கடுமையாக டைமுறைப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருக்கும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த எந்த வித கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. தற்போது பாகிஸ்தானில் சுமார் 2.5 கோடி ... |
| பயங்கரவாதிகள் தாக்குதல் அபாயம் அணு மின் நிலையங்களில் 'அலர்ட்' Posted: 01 Oct 2016 02:26 PM PDT மத்திய அரசு உத்தரவால், தமிழகத்தில் உள்ள அனல், அணு மின் நிலையங்களுக்கு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, சென்னை, எண்ணுார், சேலம், துாத்துக்குடியில் அனல் மின் நிலையங்கள் உள்ளன. மத்திய அரசுக்கு, காஞ்சிபுரம், நெல்லை, திருவள்ளூர், துாத்துக்குடி,கடலுாரில், அனல் மற்றும் அணு மின் நிலையங்கள் உள்ளன; இங்கு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 02,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |