Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இணையப் பாதுகாப்பு - உங்களுக்கு அருகே சந்தேகப்படும்படி ஒருவர் கைபேசியுடன் சுற்றுகிறாரா? எச்சரிக்கை.

Posted: 01 Oct 2016 10:14 AM PDT

கைபேசி ஊடாக தனிப்பட்ட உரையாடல்,தானியங்கி பணம் பெறும் இடம் - ATM - , இணைய மையங்களில்-Internet call center – இப்பாடி ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் போது கைபேசியுடன் அருகே ஒருவர் நடமாடினால் எச்சரிக்கை அடையுங்கள். ஏ.டி.எம் இல் சற்று தூரத்தில் தான் அவர் இருந்தாலும் கவனம் தேவை. எப்படி தகவல் திருட்டு நடைபெறுகிறது? air-gap network hacking என்பது என்ன தெரியுமா? இதுவும் ஒரு முறையில் தகவல்களை கைபேசிகள்,பொது இடங்களில் கணினி (பொதுவாக மடிக்கணினி) , ஏடிஎம் மையங்களில் இருந்து திருடும் ஒரு முறையாகும். ...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று

Posted: 01 Oct 2016 07:39 AM PDT

- நடிப்பு திலகம்', 'செவாலியே' என்று எல்லோராலும் போற்றப்படும் 'சிவாஜி கணேசன்' 1927ம் ஆண்டு இதே நாளில் தான்(அக்டோபர் 1) பிறந்தார். 'விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்' என்பது தான் இவரது இயற்பெயர். 'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. பராசக்தி என்ற திரைப்படத்தின் ...

நவராத்திரி.. நவராத்திரி..!

Posted: 01 Oct 2016 06:27 AM PDT

- *ஸ்ரீ பராசக்தி சண்டிகா தேவிகாளி உக்கிரத்துடன் அவதரித்து மகிசாசுரனுடன் போர் புரிந்து வீழ்த்தினாள். இவ்வாறு சண்டிகா தேவி மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்து அசுரனை அழித்த விழாவே நவராத்திரி மகோற்சவம். *நவராத்திரி, உத்தரபிரதேசத்தில் "ராம்லீலா' என்ற பெயரிலும் வங்காளிகள் "காளிபூஜை', "துர்க்கா பூஜை' என்றும் கர்நாடகத்தில் "தசரா பூஜை' என்றும் கொண்டாடுகின்றனர். *தில்லியில் விஜயதசமி அன்று ராவணன் பொம்மைகளை எரித்து ராவணன் சம்காரமாக கொண்டாடுகின்றனர். *நவராத்திரியின் முதல் மூன்று தினங்கள் துர்க்கா; ...

காலுல ஏன் கட்டு?

Posted: 01 Oct 2016 06:26 AM PDT

நகைச்சுவைக் கதை ஒன்று. அதைக் கொஞ்சம் கேளுங்களேன்… காலுல கட்டு போட்டுக்கிட்டு நோயாளி ஒருத்தர் மருத்துவரை பார்க்க வந்தாரு. என்னையா! என்ன உடம்புக்கு? மருத்துவரு கேட்டாரு. தலைவலிங்க நோயாளி சொன்னாரு. அப்புறம் காலுல ஏன் கட்டு? என்று மருத்துவரு கேட்டாரு. அதுக்கு நோயாளி சொன்னாரு நழுவி வந்துடுச்சுங்க. – இந்தக் கதையை ஒரு நண்பரோட குடும்பத்தினருக்கு சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க. எல்லோரும்தான் ஒரே ஒருவரைத்தவிர… – சாப்பாட்டு மேசைக்கு அந்தப் பக்கம் உட்கார்ந்துகிட்டு இருந்த அவர் என்னை ஒரு தினுசாகவே ...

சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்.

Posted: 01 Oct 2016 06:15 AM PDT

பதிவு நீளமானது என்பதால் பிரித்து தரப்பட்டுள்ளது. 1956-ஆம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு தான். மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது. அதை வைத்து சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்றுதான் முடிவும் செய்யப் பட்டது. அதன்படி கேரள எல்லையை ஒட்டி இருக்கும் தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவைப் பிரிக்கும் போது ...

உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க.

Posted: 01 Oct 2016 06:01 AM PDT

ஒரு விடயம் (விஷயம்-விடயம் என்ற சொல்லுக்கு பற்றியம் என்பது தான் சரியான தமிழ் சொல் என கணினி மொழிமாற்றி அகராதி சொல்கிறது) உண்மை என்றோ, அல்லது அது இருக்கின்றது என்றோ, நிறுவப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படுதல் நம்பிக்கை. ஆங்கிலத்தில் belief எனலாம்.இதற்கு எதிர் மூடநம்பிகை (Superstitious Belief/fetish) என சொல்லலாமா, அவநம்பிக்கை எனலாமா (disbelief/distrust ) தெரியவில்லை. மூடநம்பிக்கை என்பது- அறிவுக்கு பொருந்தாத, பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து அல்லது கோட்பாடு என்று அகரமுதலி விளக்கம் கொடுக்கிறது. ...

சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். பகுதி - 2

Posted: 01 Oct 2016 05:51 AM PDT

அதன் பின்னர் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டன. அவை ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. இதனால் தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இழந்தது. தமிழ்நாட்டில் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கிய 9 வட்டங்களும் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன. தெலுங்கு பேசும் மக்களுக்காக மட்டுமே ஆந்திரா உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன என்பது வருத்தமான ...

தடை உத்தரவு போடுபவள்…!

Posted: 01 Oct 2016 05:43 AM PDT

தன் வீட்டு உறவுகளைத் தணிக்கை செய்யக்கூடத் தயாராய் இல்லாதள் தடை உத்தரவே போட்டு விடுகிறாள் தாலி கட்டியவனின் தாய்க்கும் தந்தைக்கும் —————- – – பெண்ணுரிமைக்காக முழக்கம் செய்பவன் முணுமுணுக்கக்கூட முடியவில்லை மனைவியிடம் தன்னுரிமைக்காக – ——————— – சொல்லி விடுகிறார்கள் பெண்கள் சொல்லொணாக் கொடுமைகளையும் வெளியில் சொல்ல முடியுமா ஆண்கள்… வீட்டுக்குள் நடக்கும் வினோதங்களை..! – ————————- -கவிஞர் மு.மேத்தா

‘யு’ சான்றிதழுடன் அக்.7-ல் வெளியாகிறது ‘றெக்க’

Posted: 01 Oct 2016 05:41 AM PDT

- ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'றெக்க' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது. விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், சதீஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'றெக்க'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ரத்தின சிவா இயக்கி இருக்கிறார். கணேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை சிவபாலன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. அதனிடையே படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன. ...

ஹாலிவுட் நாடக விழாவில் பூஜா தேவாரியாவுக்கு விருது

Posted: 01 Oct 2016 05:40 AM PDT

- வளர்ந்து வரும் கலைஞர்' விருதுடன் பூஜா தேவரியா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நாடக விழாவில் விருது வென்றிருக்கிறார் நடிகை பூஜா தேவாரியா 'மயக்கம் என்ன' படத்தில் தொடங்கி 'இறைவி', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பூஜா தேவாரியா. சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் நாடகங்கள் நடத்தி வந்தார். மேலும், சொந்தமாகவே நாடக தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கிறார். தற்போது பூஜா தேவாரியாவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ஹாலிவுட் நாடக விழாவான 'ஷார்ட் ...

அழகு – ஜென் கதை

Posted: 01 Oct 2016 05:37 AM PDT

ஒரு ஊரில் இரு சென் வழிபாட்டிடங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று மிகப் பெரியது. அதில் நந்தவனம் ஒன்றும் இருந்தது. அவ்விரு வழிபாட்டிடங்களின் நடுவே சிறிய சுவர் மட்டுமே இருந்தது. நந்தவனத்தை ஒருவர் பராமரித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள், ஒரு பெரிய துறவி வருகின்றார் என்பதால் நந்தவனம் முழுமையும் பார்த்துப் பார்த்துச் சுத்தம் செய்தார். செடிகளை வெட்டி அழகு படுத்தினார். காய்ந்த மற்றும் பழுத்த இலைகளை எல்லாம் அங்கிருந்து அப்புறப் படுத்தினார். நந்தவனம் பிரகாசமாய் இருந்தது. இவர் செய்யும் பணிகள் அத்தனையையும் ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(445)

Posted: 01 Oct 2016 05:29 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

நவராத்திரி வழிபாட்டு முறை.

Posted: 01 Oct 2016 05:24 AM PDT

1. முதலாம் நாள் :- சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக் காக்கவே இவள் கோபமாக உள்ளாள். மற்றும் இவளது கோபம் தவறு செ ய்தவர்களை திருத்தி நல் வழிபடுத் தவே ஆகும். மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்ட சராசரங்களைக் காக்கும ராஜராஜேஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர். முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல். 2. இரண்டாம் ...

நவராத்திரி கொலு வைக்கும் முறை

Posted: 01 Oct 2016 05:22 AM PDT

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலுஎன்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். - ஐம் பூதங்களி ல் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களுகு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றார் - இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம். கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும். 1. முதலாம் படி :– ஓரறிவு உயிர்களான புல், செடி, ...

நவம்பரில் தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள் : இஸ்ரோ தகவல்

Posted: 01 Oct 2016 05:04 AM PDT

சென்னை: தகவல் தொழில் நுட்ப செயற்கைகோள் நவம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார். - சென்னை வந்த இஸ்ரோ தலைவர் கிரண்குமார், செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 26-ந்தேதி விண்ணில் ஏவப்பட்ட 'ஸ்கேட்சாட்-1' செயற்கைகோள் வெற்றிகரமாக செயல்படுகிறது. இதில் ஒரு உபகரணம் மட்டும் 7 தினங்களுக்கு பிறகு செயல்படும். மற்ற உபகரணங்கள் சிறப்பாக செயல் படுகிறது. மங்கள்யான் வெற்றிகரமாக 2 ஆண்டுகளாக செயல்படுகிறது. மங்கள்யான் அனுப்பிய தகவல்கள் இஸ்ரோ வலைதளத்தில் ...

சார்க் மாநாடு ஒத்தி வைப்பு: பாக்.,கிற்கு அடுத்த சறுக்கல்

Posted: 01 Oct 2016 05:00 AM PDT

- இஸ்லாமாபாத்: இந்தியா உட்பட 5 நாடுகள் புறக்கணிப்பால் இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த சார்க் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. யூரி தாக்குதல் சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் 19 மாநாடு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் யூரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தினர். இதில் 18 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். தனிமைப்படுத்த வேண்டும் பாகிஸ்தான் ...

ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் சிகிச்சை உடல்நிலை தேறுகிறது

Posted: 01 Oct 2016 04:57 AM PDT

- சென்னை, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த வாரம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்ட அவருக்கு நீர்ச்சத்து குறை பாடும் ஏற்பட்டது. இதையடுத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22-ந்தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப் பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பிரிவு களின் சிறப்பு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இத னால் மறுநாளே அவர் காய்ச்சலில் இருந்து குணம் அடைந்தார். என்றாலும் மற்ற உடல்நல பிரச்சினைகளுக்கு தற்போது அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். ...

ஓ போடுன்னு டாக்டர் ஜாலியா சொல்றாரே…!

Posted: 01 Oct 2016 04:46 AM PDT

– டாக்டர் சீரியசா ஆபரேசன் பண்ணிக்கிக்கிட்டு இருக்கிறதா சொல்றீங்க, ஆனா உள்ளேயிருந்து ஓ போடுன்னு ஏதோ ஜாலியா சொல்றமாதிரி கேட்குதே? – யோவ் புரியாம பேசாதே, அது ஓ க்ரூப் ரத்தத்தைப் போடுன்னு டாக்டர் டென்ஷனா சொல்ற சத்தம்…! – ———————————– – – நர்ஸ் கையிலே ஏன் கத்தி வெச்சிருக்காங்க? - பயப்படாதீங்க, ப்ரியா இருக்குற நேரத்திலே வீட்டுக்கு காய்கறி நறுக்கிப்பாங்க, அதுக்காக வெச்சிருக்கிறது…!! – ————————————- எதிரியை சனி பிடித்து விட்டதா, எப்படி அமைச்சரே? – ஃபேஸ்புக்கில் , நம் மகாராணியாரின் ...

மறைநெறி நவிலும் நிறைமொழி

Posted: 01 Oct 2016 04:34 AM PDT

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் ) {நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது} அவையடக்கம் வெயிலுக்கு இடும்விளக்குப் போலும்யான் நீதிநூல் கூறல் 1.வெயிலினைச் சோதிசெய்வான் விளக்கிடல் போலுங்காகங் குயிலினுக் கிசையுணர்த்துங் கொள்கையே போலு நட்டம் மயிலினுக் குணர்த்துங் கான வாரண மெனவும் யாவும் பயிலுல கிற்கு நீதி பகரயான் துணிவுற் றேனால். பதப்பொருள்: வெயில் – சூரியன் சோதிசெய்தல் – காட்டுதல். விளக்கு – கைவிளக்கு. ...

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Posted: 01 Oct 2016 04:27 AM PDT

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1 மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் (பரஞ்சோதி முனிவரின் சீடரும்  சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய திருவெண்ணைநல்லூர் மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய   சிவஞான போதம்) உலகில் சதாசர்வ காலமும் பிறப்பு -  இருப்பு -  இறப்பு என்னும் சுழலில் சிக்கி, இருப்பிற்காக ஆயுள் முழுவதும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியனவற்றையே  வழிகாட்டும் துணையாகக் கொண்டு அவற்றின் பொருட்டே உழைத்து வாழ்வின் துயரக் கடலினின்று மீளாமல்  அவதியுற்றுக் ...

அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்

Posted: 01 Oct 2016 04:08 AM PDT

ஸ்ரீ குருவே நம: அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது 09.09.2016 அன்று 'நேர்மைக் கடைப்பிடி' எனும் தலைப்பின் கீழ் ( ஆன்மீகம் – இந்து பகுதியில் ) "குரு அஷ்டகம்" அறிமுகம் மற்றும் முதல் ஸ்லோகம் ஆகிய இரண்டையும் இணைத்து நம் ஈகரையில் பதித்தோம். அப்போதுதான் நாம் புதியதாக இணைந்தமையால், பதிவு விதி நுட்பங்களின் அறியா நிலை. இனி குரு அஷ்டகத்தின் எஞ்சிய பாடல்களை "அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்" ...

அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம்

Posted: 01 Oct 2016 04:04 AM PDT

ஸ்ரீ குருவே நம: அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் (வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா - அருட்பெருஞ்ஜோதி அகவல்) வடலூர் அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் – மானுட சமயங்களைக் கடந்த 'சத்' நெறியாளர். அவர் உலக மக்களுக்குக் கண்பிக்க விழைந்தது  ஒளியாகிய அறிவே வடிவான பரம்பொருள் –  உலக ஜீவராசிகள் அனைத்தும் அறிவைக் கொண்டு வாழ்தலால் அது சமயப் பொதுமை .ஆகையால் அருட்பா அகவல் ஈகரையில் இலக்கியப் பகுதியில் பதிவிடம் காண்கின்றது.   தேமதுரத் தமிழில் பரம்பொருளை அழைத்து - வாழ்த்தி மகிழும்  வடலூர் ...

. திருமந்திரம் என்னும் தேன்

Posted: 01 Oct 2016 04:00 AM PDT

தெரிந்துகொள்வோம்  தேன் தமிழை -8 ( திருமூலர் அருளிய திருமந்திரம்) ஓர் அறிமுகம்: திருமந்திரம் என்னும்  நூல் தவயோகத் தந்தை திருமூலரின் படைப்பு. அந்த அற்புதம் ஒரு  யோகமும் ஞானமும் தோய்ந்த ஒரு கல்விக் கருவூலக் களஞ்சியம்.  அந்த யோகமும் ஞானமும்  பக்திநோக்கில் பார்க்கப்பட்டு நமது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. அந்த அமரகாவியத்தை உலக மக்கள் அனைவருக்கும்  ஆக்கும் வகையில்  அமைக்கப்படுவதே, "தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -  திருமந்திரம் என்னும் தேன்" என்னும் ...

நிதானம் – ஜென் கதை

Posted: 01 Oct 2016 03:07 AM PDT

தற்பாதுகாப்புக் கலையினைக் கற்றுக் கொள்ள விரும்பிய ஒரு மாணவன் குருவை அணுகி "இக் கலையினைக் கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் தேவை"? எனக் கேட்டான். – குரு "பத்து வருடங்கள்" எனப் பதில் அளித்தார். – குருவின் பதிலால் மாணவன் பொறுமை இழந்து திருப்தியற்றவனானான். மீண்டும் குருவிடம் – "பத்து வருடங்களைவிட விரைவாகக் கற்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வேன். தேவைப்பட்டால், பயிற்சிகளை 10 மடங்கு அதிகமாகவோ அல்லது அதிக மணித்தியாலங்களோ அதற்காக எடுத்துக் கொள்வேன். ஆகவே இதன்படி கற்றுக் கொள்ள ...

வாட்ஸ் அப், பேஸ்புக் தகவல்கள் திருடப்படுகிறதா..? - நிபுணர்கள் தரும் விளக்கம்

Posted: 01 Oct 2016 01:07 AM PDT

வாட்ஸ் அப்–பேஸ்புக் செயலிகளின் இணைப்பு... பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. இரண்டும் இணைந்தால் போட்டோ, தகவல்கள் திருடப்படும், உபயோகிப்பவரின் அனுமதியின்றி தனிப்பட்ட புகைப்படங்கள் பகிரப்படும் என்ற ரீதியில் வதந்திகள் உலவிக்கொண்டிருக்கிறது. - இவையின்றி... இன்னும் கூடுதலாக இவை இணைந்தால், நம்முடைய தகவல்களை தீவிரவாத அமைப்புகள் திருடக்கூடும் என்ற ரீதியில் வதந்திகள் பரவி வருகின்றன. இது தொடர்பாக இணைய உலக ஜாம்பவான்கள் அளித்திருக்கும் விளக்கத்தை பார்க்கலாம்.... - மார்ஷுகர்பர்க் (பேஸ்புக் ...

ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி.. 88 ரயில்களின் வேகம் அதிகரிப்பு.. !

Posted: 01 Oct 2016 12:22 AM PDT

புதிய ரயில்வே கால அட்டவணையில் 88 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்துள்ளார். புதிய ரயில்வே கால அட்டவணையை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோரி இன்று வெளியிட்டார். இதில் 88 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம், கூப்ளி, ஜோத்பூர் ஆகிய விரைவு ரயில்கள் அதி விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. வேகம் அதிகரிப்பால் சென்னை எழும்பூர்- மானாமதுரை சிலம்பு விரைவு ரயில் பயண நேரம் 90 நிமிடங்களும், சென்னை- ஜோத்பூர் விரைவு ரயில்களின் ...

பிகாரில் மதுவிலக்கு ரத்து: பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 01 Oct 2016 12:21 AM PDT

பிகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு கொண்டுவந்த மதுவிலக்கு சட்டத்தை ரத்து செய்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் , பிகார் அரசு கொண்டுவந்துள்ள மதுவிலக்கு சட்டம் சட்டவிரோதமானது என்று கூறி ரத்து செய்தது. முன்னதாக, பிகாரில் முழு மதுவிலக்கை அமல்படுத்த நிதிஷ்குமார் தலைமையிலான அரசு கொண்டுவந்த மதுவிலக்கு சட்டத்துக்கு அந்த மாநிலத்தின் இருஅவைகளும் கடந்த ஆகஸ்ட் 1-ல் ஒப்புதல் அளித்தன. இதையடுத்து அந்த சட்டத்துக்கு மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளிக்க ...

விடுடி, கல்யாணத்துக்குப் பிறகு சிரிக்கவா போறாரு...!!

Posted: 30 Sep 2016 10:35 PM PDT


-

ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்!

Posted: 30 Sep 2016 09:30 PM PDT

தேசிய ரத்த தான தினம் ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 1ல் கொண்டாடப்படுகிறது. விபத்தால் பாதிக்கப்படுவோர், அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மருத்துவதுறையில் அதிக ரத்தம் தேவைப் படுகிறது. அதனால், அனைவரும் முடிந்த அளவு ரத்த தானம் செய்யுங்கள். ரத்த தானம் செய்வதால் எவ்வித பின்விளைவுகளும் ஏற்படாது. எடை குறைந்து விடுமோ என அஞ்சுவதும் சரியல்ல. ரத்த தானம் செய்வதன் மூலம், புதிய ரத்தம் மீண்டும் உற்பத்தியாகி விடுவதால், மேலும் உடல் நலத்துடனும், உற்சாகத்துடனும் ...

அளவா குடிங்க: சுப்ரீம் கோர்ட் ‛அட்வைஸ்'

Posted: 30 Sep 2016 08:48 PM PDT

புதுடில்லி : நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.,வைச் சேர்ந்த அஸ்வனி உபத்யாயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மதுவால் தான் பெரும்பாலான சாலை விபத்துக்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல குற்றங்கள் நடக்கிறது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என கூறி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அர்ஜன் குமார் சிக்ரி, என்.வி.ரமணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ...

குணம் – ஜென் கதை

Posted: 30 Sep 2016 05:22 PM PDT

ஜென் மாணவன் ஒருவன், தன் குருவிடம் தன்னிடமுள்ள குறை ஒன்றை முறையிட்டு தீர்வு காண முயன்றான். 'நான் விரைவாக உணர்ச்சிவசப்படுகிறேன். அதிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை' 'உன் பிரச்சனையின் தீவிரத்தை நான் இப்போது பார்க்க விரும்புகிறேன்' 'முடியாது குருவே, நினைத்தவுடன் என்னால் காட்ட முடியாது' 'சரி, எப்போது காட்ட முடியும்' 'சொல்ல முடியாது. அது எதிர்பாராமல் நிகழ்வது' 'அப்படியானால் உனக்குள்ள பிரச்சனை இயற்கை குணத்தால் ஏற்பட்டதல்ல. பெற்றோர் மூலமாக பிறக்கும்போது உருவானதும் அல்ல. நினைத்த ...

முத்து முத்தாய்த் தத்துவங்கள்

Posted: 30 Sep 2016 05:07 PM PDT


முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்

1. சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் வேறானால் அவன் மனிதன்- ஜீவாத்மா.
சொல்லும் சொல்லே செய்யும் செயலானால் அவன் புனிதன் – மகாத்மா .
சொல்லும் செயலும் இல்லாதுபோனால் அவன் அனந்தன்- தேவன் - பரமாத்மா

இவரை நாம் பெறவே என்ன என்ன தவம் செய்தோமோ?

Posted: 30 Sep 2016 04:59 PM PDT

- எனக்கு ஏழு வயது இருக்கும். ராஜஸ்தானிக மன்றத்தில் உறுப்பினராவதற்காக என் தந்தையார் போர் பந்தரிலிருந்து ராஜ்கோட்டுக்குச் சென்றார். அங்கே என்னை ஒரு ஆரம்பப் பாடசாலையில் சேர்த்தனர். அந்த நாட்களில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களின் பெயர் உட்பட எல்லா விவரங்களுமே எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. போர்பந்தரில் இருந்ததை போன்றே, இங்கும் என்னுடைய படிப்பைப் பற்றி முக்கியமாகக் குறிப்பிடக்கூடியது எதுவுமில்லை. சாதாரண நடுத்தர மாணவனாகவே நான் இருந்தேன். இந்தப் பள்ளிக்கு என்னை ...

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 30 Sep 2016 04:51 PM PDT

அமைச்சர் உமா பாரதியை கைது செய்ய தடை

Posted: 30 Sep 2016 04:39 PM PDT

போபால்: அவதுாறு வழக்கில், மத்திய அமைச்சர் உமா பாரதியை கைது செய்ய, மாஜிஸ்திரேட் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு, மாவட்ட கோர்ட் தடை விதித்துள்ளது. ஆஜராக உத்தரவு: மத்திய பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, 2003ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., முதல்வர் வேட்பாளராக, தற்போது மத்திய நீர்வளத்துறை அமைச்சராக உள்ள, உமா பாரதி முன்னிறுத்தப்பட்டார். தேர்தல் பிரசாரத்தில் பேசிய உமா பாரதி, காங்கிரஸ் கட்சியின், ம.பி., முன்னாள் முதல்வர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™