Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Posted: 17 Oct 2016 11:41 AM PDT

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து) உடல் உறுப்புக்களுள் குறைத்தால்  வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை  இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து  இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?             ஊரார்கண் படட்டும் படட்டும்             உற்றார்கண் படட்டும் படட்டும்             ஆடவர்கண் படட்டும் படட்டும்   ...

எப்படியும் படம் எடுக்கலாம்! இப்படியும் படம் எடுக்கலாம்.

Posted: 17 Oct 2016 11:30 AM PDT

- சமீபத்தில், 'பேஸ்புக்'கில் வைரலாக பரவியது, ஒரு புகைப்படம். அப்புகைப்படத்தில், தாய் ஒருத்தி, தன் முதுகுப் பையில், ஒரு குழந்தையை சுமந்தபடி, மார்பு பகுதி பையில் இருந்த மற்றொரு சிறு குழந்தைக்கு இடது கையால் பால் புகட்டியவாறு, வலது கையால், விளையாட்டுப் போட்டியை, படம் எடுக்கிறார். பணிபுரியும் பெண்களின் பெருமையை பேசும் இப்படத்தில் இருப்பவர் பெயர், மெலிசா வார்லோ. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் வசிக்கும் இவர், கடந்த, 12 ஆண்டுகளாக, புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவரது ...

மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது...

Posted: 17 Oct 2016 11:11 AM PDT

மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது... அதிகம் பேசாதவர் அதிகம் செயல்படுவார் என்று சொல்வதுண்டு..வாயினால் பேசாமல் இருந்தால் போதுமா..மனதினாலும் பேசாமல் இருக்கவேண்டும்..அதெப்படி வாயினால் ஒருவரை திட்டமுடியாது, ஆனால் மனதிலாவது திட்டிக்கொள்ளலாமே என்றுதானே சொல்கின்றீர்கள்..வாயினால் கூட ஒருவரை நேருக்கு நேர் பேசிவிடலாம், மனதால் ஒருவரை அவமதிப்பதுதான் மிக ஆபத்தானது.. ஏனென்றால், மனதின் எண்ணங்கள் அவ்வளவு வலுவானவை.. மனதை எப்படி அமைதியாக வைத்துக்கொள்ள முடியும்? மனம் எதையாவது சிந்தித்தவண்ணம் உள்ளதே.. அப்படியானால் ...

தமிழக விவசாயிகள் போராட்டம் எதிரொலி: இன்றும், நாளையும் 19 ரயில்கள் ரத்து

Posted: 17 Oct 2016 09:24 AM PDT

சென்னை: தமிழக விவசாயிகள் போராட்டத்தை அடுத்து அக்டோபர் 17,18 தேதிகளில் 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. * சென்னை எழும்பூர்-மன்னார்குடி, * காரைக்கால் விரைவு ரயில், * வேங்காகண்ணி லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது * சென்னை எழும்பூர்-தஞ்சை உழவன் விரைவு ரயில் ரத்து * எர்ணாகுளம்-காரைக்கால் ரயிலும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. * மன்னார்குடி-கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து * மன்னார்குடி-சென்னை மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து * காரைக்கால்-சென்னை * ...

என் கணவர் கொஞ்சம் சபல கேஸ்…!

Posted: 17 Oct 2016 09:00 AM PDT

- அந்த டாக்டர் ஏன் இவ்ளோ ஃபீல் பண்றாரு? – அவர் எஸ்.எஸ்.எல்.சி படிச்சதுக்கே இவ்வளவு பேஷண்ட் வர்றாங்களே, எம்.பி.பி.எஸ் படிச்சிருந்தா இன்னும் எவ்ளோ பேர் வருவாங்கன்னுதான்…! – கே.அருள்சாமி – ———————————- – டிரெயின்ல தீபாவளிக்கு 'தட்கல்'ல வந்தியா? – இல்லை தொங்கல்ல தான்…! – கடலூர் சார்லி – ————————————- – என் கணவர் கொஞ்சம் சபல கேஸ்…! – நீ சொல்லவே வேணாம், பட்டாசு வெடிக்க பயப்படற தெருப்பெண்களோட காதுகளை ஓடிப்போய் பொத்தும்போதே தெரியுது…! – பர்வின் யூனூஸ் – —————————————

அவர் போலி சாமியார்னு எப்படி சொல்றே!

Posted: 17 Oct 2016 08:58 AM PDT


-

-

காவிரி மேலாண்மை வாரியம்... மோடி அரசின் சதி.. அம்பலப்படுத்தும் பொறியாளர்!

Posted: 17 Oct 2016 08:52 AM PDT

தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்களுக்கிடையில் இருந்து வரும் நதிநீர்ப் பங்கீடு பிரச்னையை நிரந்தரமாகத் தீர்த்து வைக்க, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். - ஆரம்பத்தில் இதை தலையாட்டிக் கேட்டுக்கொண்ட மத்திய அரசு, அடுத்த சில நாட்களிலேயே திடீர் பல்டி அடித்தது. அதாவது, 'நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றிய பிறகே வாரியம் அமைப்போம். - இந்த விஷயத்தில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை' என்று உச்ச நீதிமன்றத்திடமே கறாராகக் ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 17 Oct 2016 08:42 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

Posted: 17 Oct 2016 08:41 AM PDT

எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம் எப்படியோ என்மனதைக் கவர்ந்தவராம் .... என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது . 1964 ம் ஆண்டு S . பாலசந்தர் இயக்கத்தில் உருவான பொம்மை படத்தில் இடம்பெற்ற பாடல் இது . சஹானா இராகத்தில் P .சுசீலா பாடிய இப்பாடலுக்கு நாட்டிய தாரகை L . விஜயலடசுமி நடனம் ஆடியிருப்பார். நாட்டியப் பேரொளி பத்மினியை மிஞ்சும் அளவுக்கு அற்புதமான அபிநயம் ! பரத நாட்டியம் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய நாட்டியம் ! இந்தப் பாடல் முடிந்தவுடனேயே பாகப்பிரிவினை ...

விருந்து

Posted: 17 Oct 2016 08:37 AM PDT

திருமணத்திற்கு சென்று வந்த நண்பர் பலமாக ஏப்பம் விட்டார் . " என்ன சார் ! விருந்து பலமா ? இப்படி ஏப்பம் விடறீங்களே ? ' " ஆமாம்யா ! ஏகப்பட்ட ஐட்டம் வைத்துவிட்டார்கள் ! எதை சாப்பிடுவது , எதை விடுவது என்று தெரியவில்லை ! வைத்தது எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டேன் ! ஒரு இலை 300 ரூபாய் என்று சொன்னார்கள் ! அதை வீணாக்கலாமா ! எனக்கு சர்க்கரை வியாதி வேறு ; என்ன ஆகுமோ தெரியவில்லை ! " " கவலைப்படாதீங்க சார் ! ஒரு மாத்திரை கூடப் போட்டீங்கன்னா எல்லாம் சரியாயிடும் ! " இதுபோன்ற உரையாடல்களை நாம் அடிக்கடிக் ...

ஆங்கிலத்தில் பதிவிடலாமா ?

Posted: 17 Oct 2016 08:33 AM PDT

அனைவருக்கும் வணக்கம்,

என்னால் தயாரிக்கப்பட்ட பட விளக்கங்களுடன் கூடிய வன்பொருள் புதிதாக பொருத்தும் முறைகள்  (server, storage, vmware installation  steps)   (கையடக்க குறிப்பு) உள்ளன.  அதனை ஆங்கிலத்தில் பதிவிடலாமா?   ஆம் என்றால் மிக கூடிய விரைவில் நம் நண்பர்களுக்காக பதிவேற்றுகிறேன். நன்றி. அன்புடன்... இலெனின்குமார் வைத்தியநாதன்

புற்று நோய்க்குப் புது மருந்து

Posted: 17 Oct 2016 08:31 AM PDT

வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.! புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னால் யார் கேட்கப்போறார்கள்!? புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை ...

என் மனைவியோட கைமணம் தூக்கலா இருக்கும்..!

Posted: 17 Oct 2016 07:55 AM PDT

அமைச்சரே, ஏன் அப்படி பார்க்கிறீர்கள்? – உயரம் போதவில்லை என்பதற்காக குதிரைச் சவாரிக்குப் பதில் கழுதைச்சாவாரி போது சகிக்க முடியவில்லை மன்னா…! – கோ.பகவான் – ————————————– – இவர் போலி ஜோசியர்னு எப்படி சொல்றே? – நாகதோஷதுக்கு பாம்பு மாத்திரை சாப்பிட சொல்றாரே…! – எஸ்.ராமன் – —————————————— – பட்டாசு விலையை கேட்டாலே வயிறு எரியுதே…! – அப்ப உங்களுக்கு ஊதுபத்தி வாங்குற செலவு மிச்சம் சார்! – ஏ.பி.ஸ்ரீஹரி – ——————————————— – உங்க வீட்டு ரசத்துல ஏன் நெய்ல் பாலீஷ் வாசம் வருது? – நான்தான் ...

பிரேசில் சிறையில் பயங்கர மோதல்:

Posted: 17 Oct 2016 07:55 AM PDT

பிரேசில் ரோராய்மா மாநிலத்தின் போவா விஸ்ட்டா நகரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் நேற்று பார்வையாளர்கள் நேரத்தின்போது கைதிகளுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கைதிகளை பார்க்க வந்த உறவினர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். உடனே சிறப்பு பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். கைதிகள்மீது தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததுடன் சிறை பிடிக்கப்பட்டிருந்த கைதிகளின் உறவினர்களையும் ...

நான் குரல் கொடுத்தா இமயமலை வரை கேட்கும்!

Posted: 17 Oct 2016 07:48 AM PDT

உங்களுக்கு நாள் குறிச்சாச்சுன்னு எதிர்க்கட்சி சொல்லுது தலைவரே…! – என்னய்யா சொல்றே ? – உள்ளாட்சி தேர்தல் தேதியைச் சொல்றாங்க தலைவரே…! – கோ.பகவான் – ————————————– – புதுசா 'ஐயோ' சிம் வந்திருக்காமே, வாங்கிட்டீங்களா? – அது 'ஜியோ' சிம் தலைவரே! – தூரிகை வேந்தன் – ———————————— – எதப்பார்த்து நீங்க என்னை லவ் பண்றீங்க டியர்? – எதையாவது பார்க்கலாம்னுதான் லவ்வே பண்றேன் டியர்…! – அபிதாசன் – —————————————- – டி.வி.சீரியல் நிகழ்ச்சி எல்லாம் ஒளிபரப்பாகிற நேரத்தை ஏன் டைரில குறிச்சு ...

முக நூலில் ரசித்தவை…

Posted: 17 Oct 2016 05:06 AM PDT


-

-

கைகளை இழந்தவருக்கு ஓட்டுநர் உரிமம்

Posted: 17 Oct 2016 04:57 AM PDT

- போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாலைச் சேர்ந்த 45 வயது விக்ரம் அக்னி ஹோத்ரிக்கு கைகள் இல்லை. ஆனால் கால்களால் லாவகமாக காரை ஓட்டுவதால் அவருக்கு முறைப்படி ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஏழு வயதில் விபத்தில் சிக்கி அவர் கைகளை இழந்தார். இரு கைகள் இல்லாததால் வாகனம் ஓட்ட முடியாது என்று கூறி பல ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் அவருக்குப் பயிற்சியளிக்க மறுத்துவிட்டன. இந்நிலையில் சற்றும் மனம் தளராமல் அவர் ஒரு காலால் 'ஸ்டியரிங்'கை திருப்பியும் மற்றொரு காலால் கியரை மாற்றியும் வாகனத்தை ...

கவலை மறந்து விளையாடு…!

Posted: 17 Oct 2016 04:55 AM PDT

தீபாவளி என்றால் என்ன? -ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

Posted: 17 Oct 2016 04:54 AM PDT

- தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்து விட வேண்டும். சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு. எண்ணெய் தேய்த்துக் ...

மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி?

Posted: 17 Oct 2016 04:51 AM PDT

கடந்த டிசம்பரில் சென்னை புறநகர் பகுதிகளில் வந்த வெள்ளத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம். இதோ கூடிய சீக்கிரத்திலேயோ டிசம்பர் வரவிருக்கிறது. இந்த ஆண்டும் பெருமழை பெய்தால், அதிலிருந்து நம்மையும் நம் வீட்டையும் காப்பாற்றிக் கொள்ள என்ன வழி..?  சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்த யுனிக் ஃப்ளாட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பொறியாளர் ஆத்மா விளக்கமாக எடுத்துச் சொல்கிறார். ''முதலில், புதிதாக வீடு கட்டுபவர்கள் வெள்ளத்தில் சிக்காதபடி தங்கள் வீடுகளை எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை ...

டிப்ஸ்… டிப்ஸ்…(மகளிர் மணி)

Posted: 17 Oct 2016 04:41 AM PDT

மழைக்காலம் தொடங்க இருக்கிறது, மழைக் காலத்தில் மொட்டை மாடியில் பெரிய குவளையின் மேலே வெள்ளை துணியைக் கட்டி வைத்து மழைநீரை அதில் சேகரியுங்கள். சேகரித்த நீரை நன்றாக காய வைத்து கேன்களில் அடைத்து வைத்து நீரை அருந்தி பாருங்கள். தண்ணீர் அப்படி ஒரு சுவையாக இருக்கும். மழை நீரில் சாதம் வடித்தால் சாதம் வெண்மையாகவும் சுவையாகவும் இருக்கும். – பி. கவிதா – ——————————————— – * உங்கள் ஆடையில் "பபுள்கம்' ஒட்டிக் கொண்டதா? அந்த இடத்தில் சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி, ஊற வைத்து எடுத்தால் பபுள்கம் கையோடு ...

சமத்துவம் பயில்வோம்: ஞாயிற்றுக்கிழமையும் நங்கைக்கு இல்லை

Posted: 17 Oct 2016 12:00 AM PDT

- shutterstock ————————– 'பெண் பிறப்பு ஆணுக்கானது'என்பது எழுதப்படாத சமூகச் சட்டம். அதனால், பெண்ணின் பிறப்பு திருமணத்தில்தான் நிறைவு பெறுகிறது என இந்தச் சமூகம் நம்புகிறது. 'ஒருவன் கையில் பிடித்துக் கொடுப்பது', 'இன்னொரு வீட்டுக்குப் போகப் போகிறவள்தானே', 'வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறேன்', 'எப்படா கட்டிக் கொடுத்துச் சுமையை இறக்கப் போறேனோ'போன்ற சொல்லாடல்கள், பெண்ணை அடுத்த வீட்டுக்குரிய வளாகவே வளர்க்கும் பெற்றோர்களின் மனப் பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. குழந்தை வளர்ப்பில் ...

தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது ‘சைத்தான்’

Posted: 16 Oct 2016 11:41 PM PDT

- பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'சைத்தான்' தீபாவளிக்கு வெளியீட்டிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சைத்தான்'. பிரதீப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் தமிழக உரிமையை ஆரோ சினிமாஸ் கைப்பற்றி இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ...

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Posted: 16 Oct 2016 10:21 PM PDT

இந்திய நாட்டில் வாழ்ந்து மறைந்த ஞானிகளில் சாணக்கியர் மிக முக்கியமானவர். இவர் சந்திராகுப்தா மௌரியரின் அமைச்சராக இருந்து அவர்க்கு மீண்டும் அரச பதவி கிடைக்க துணையாக நின்றவர். விதுர நீதி, பிரிகஸ்பதி, ஷூக்ரச்சார்யா, பார்த்தியகரி, விஷ்ணுஷர்மா போன்றவர்கள் நீதி சாஸ்த்திரம் குறித்து பல விஷயங்கள் கூறினாலும் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்ரத்திர்க்கு ஒரு தனி மரியாதை உண்டு, இவர் நீதி சாஸ்த்திரம் மட்டும் அல்லாமல் பொருளாதாரம் குறித்தும் பல விஷயங்கள் கூறியுள்ளார். அவரின் அர்த்த சாஸ்த்திரத்தின் சில முக்கிய அறிவுரைகளை ...

எனக்கு எம்மதமும் சம்மதமே

Posted: 16 Oct 2016 10:02 PM PDT

மத நல்லிணக்க மாநாட்டு ஒருநாள் நிகழ்வு இது : அன்று மத நல்லிணக்க மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். - கிறிஸ்தவ போதகர் என்னிடம் வந்து என் தலைமீது கைகளை வைத்து " ஏசு கிறிஸ்துவின் விருப்பப்படி நீ இன்று நன்கு நடப்பாயாக" என்று ஆசீர் வதித்தார். நான் புன்னகைத்தேன் – நான் ஒன்றும் நடக்க இயலாதவன் அல்லவே. - ரப்பி வந்தார்- என் தலைமீது கைகளை வைத்து " ஆண்டவனின் விருப்பப்படி நீ இன்று நன்கு நடப்பாயாக" என்று ஆசீர் வதித்தார். நான் புன்னகைத்துச் சொன்னேன் – "என்னிடம் நடக்க முடியாத குறை எதும் இல்லையே". - முல்லா ...

சுகப்பிரசவம் இனி ஈஸி!

Posted: 16 Oct 2016 07:52 PM PDT

நன்றி குங்குமம் தோழி - - நீர்த் தொட்டிக்குள் சுகப்பிரசவ முறை சென்னையில் அறிமுகம்! தற்போது மக்கள் இயற்கை உணவுகள், பாரம்பரிய வாழ்க்கை முறை என மீண்டுக் கொண்டிருக்கும் வேளையில், சுகப்பிரசவத்தின் மீதான விழிப்புணர்வும் பெருகி வருகிறது. இதனால், பெண்களின் உடல் நலம் பேணப்படுகிறது. இதற்காக, சென்னையில் உள்ள ப்ளூம் குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவமனையில், இயற்கை முறை பிரசவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பெண்கள் கருத்தரித்தது உறுதி செய்யப்பட்ட உடனேயே, சுகப்பிரசவத்தின் நன்மைகளைச் சொல்லி ...

வேலன்:- வால்பேப்பர் கேலரி.

Posted: 16 Oct 2016 07:49 PM PDT

டெக்ஸ்டாப்பில் விதவிதமான வால்பேப்பர்கள் செட் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 9 எம.பி. கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.   இதில் வலதுபுறம் 16 கேரக்டரில் விதவிதமான புகைப்படங்கள் என மொத்தம் 2100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வைத்துள்ளார்கள்..ஒவ்வொரு கேரக்டரினையும் தேர்வு செய்திட பக்கத்தில் உங்களுக்கு அந்த கேரக்டரில் உள்ள படங்களின் லிஸ்ட்  தெரியவரும். ஏதாவது ஒரு பெயரினை தேர்வு ...

நவம்பர் 18ம் தேதி வெளியாகிறது ‘கத்தி சண்டை’

Posted: 16 Oct 2016 07:30 PM PDT

- 'கத்தி சண்டை' படத்தில் வடிவேலு மற்றும் விஷால் ——— சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் 'கத்தி சண்டை' திரைப்படம் நவம்பர் 18ம் தேதி வெளியாகும் என்று விஷால் அறிவித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார் விஷால். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'துப்பறிவாளன்' படத்துக்கு முன்பாக சுராஜ் இயக்கத்தில் 'கத்தி சண்டை' என்னும் படத்தில் நடித்திருக்கிறார் விஷால். நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு 'ஹிப் ...

ஒரு லட்சத்து 67 ஆயிரம் கோடியில் இந்தியா–ரஷ்யா இடையே இயற்கை எரிவாயு குழாய் பதிக்க முடிவு

Posted: 16 Oct 2016 07:28 PM PDT

- ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இந்தியப் பிரதமர் மோடி. | படம்: பிரசாந்த் நக்வி. உலகிலேயே அதிக பொருட் செலவில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்க இந்தியாவும், ரஷ்யாவும் ஒப்புக் கொண்டுள்ளன. அதன்படி ரூ. ஒரு லட்சத்து 67 ஆயிரம் கோடியில் சைபீரியாவில் இருந்து இந்தியா வரை எரிவாயு குழாய் அமைக்கப்படவுள்ளது. ரஷ்யாவின் எரிவாயு நிறுவனத்தில் இருந்து இந்தியா வரை சுமார் 4,500 கி.மீ முதல் 6,000 கி.மீ வரை இந்தக் குழாய் பதிப்பு அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™