Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நிபந்தனை! நில ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உயர் நீதிமன்றம்... தனிக்குழு அமைக்காவிட்டால் தானே அமைப்பதாக அறிவிப்பு

Posted: 17 Oct 2016 09:44 AM PDT

சென்னை,: நில ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி நிபந்தனை விதித்துள்ளது. அரசு நிலங்களை பாதுகாக்க, தனிக்குழு அமைக்காவிட்டால், உயர் நீதிமன்றமே அதற்கான உத்தரவு பிறப்பிக்கும் என்று அறிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த, வி.பி.ஆர்.மேனன் என்பவர் தாக்கல் செய்த மனு:காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, அரசு நிலங்களை அவ்வப்போது கள ஆய்வு செய்யவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நிரந்தரமாக சிறப்பு அதிரடிப் படையை நியமிக்க வேண்டும்; அரசு
நிலங்களை முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவும் ...

எதிர்பார்ப்பு! காவிரியில் தண்ணீர் கிடைக்குமா என தமிழக விவசாயிகள்... நிபுணர் குழு அறிக்கை மீது சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

Posted: 17 Oct 2016 09:50 AM PDT

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கை, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது; இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வருவதால், தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், கர்நாடகா மற்றும் தமிழகத்திலுள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் தேவையை ஆய்வு செய்ய, மத்திய நீர்வள கமிஷன் தலைவர், சி.எஸ்.ஷா தலைமையில் நிபுணர் குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது.
இதில், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ...

தீபாவளிக்கு கட்டண உயர்வு இல்லை : ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு

Posted: 17 Oct 2016 09:55 AM PDT

'தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஆம்னி பஸ்களின் கட்டணத்தை உயர்த்தவில்லை' என, தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னையிலிருந்து இயங்கும், அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பஸ்களின் கட்டணம், 50 முதல், 130 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக அறிவித்தனர். ஆனால், 'இந்த கட்டண உயர்வு தங்களை கட்டுப்படுத்தாது; கட்டண உயர்வு தற்போது இல்லை' என, மற்றொரு சங்கமான, தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
துறைக்கு கடிதம்
தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ...

மாநிலம் முழுவதும் மறியல்: 19 ரயில்கள் திடீர் ரத்து போராட்டம் தீவிரமானதால் ரயில்வே திணறல்

Posted: 17 Oct 2016 10:26 AM PDT

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. 27 ஆயிரம் பேர் கைதாகி, மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டம் தீவிரமானதால், 19 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்தது.

காவிரி பிரச்னையில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 'தற்போதைக்கு வாரியம் அமைக்க முடியாது' என, மத்திய அரசு கைவிரித்து விட்டது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, மாநிலம் முழுவதும், இரண்டு ...

இனிப்பின்றி எளிமையாக அ.தி.மு.க., ஆண்டு விழா

Posted: 17 Oct 2016 10:32 AM PDT

சென்னை,: முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் உள்ளதால், அ.தி.மு.க.,வின், 45ம் ஆண்டு துவக்க விழா, இனிப்பு வழங்காமல் எளிமையாக கொண்டாடப்பட்டது.

அ.தி.மு.க.,வின், 45ம் ஆண்டு துவக்க விழா, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று எளிமையாக கொண்டாடப்பட்டது. தோரணங்கள் கட்டப்படவில்லை; மேளதாளம் இல்லை.
மிக எளிமை
காலை, 10:00 மணிக்கு, கட்சி அவைத் தலைவர் மதுசூதனன், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடி ஏற்றினார். பின், கட்சி துவக்க நாள் மலரை வெளியிட்டார். முதல் பிரதியை, நாமக்கல் மாவட்ட ...

டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்த ஜெ.,

Posted: 17 Oct 2016 10:35 AM PDT

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக, செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, லண்டனைச் சேர்ந்த, நுரையீரல் தொற்றுநோய் சிகிச்சை நிபுணர், டாக்டர் ரிச்சர்ட் பேல் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த இரு நாட்களாக, சிங்கப்பூரை சேர்ந்த, இரண்டு பெண் பிசியோதெரபிஸ்ட் நிபுணர்களும் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
வீடு திரும்புவார்
மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக, முதல்வர் வேகமாக குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, ...

பாகிஸ்தானுக்கு காதல் கடிதம் வேண்டாம்; மோடிக்கு நிதிஷ் குமார் ஆலோசனை

Posted: 17 Oct 2016 10:46 AM PDT

பாட்னா,:''பாகிஸ்தானுக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும், இந்த நாடே உங்களுக்கு ஆதரவு அளிக்கிறது; இதற்கு மேலும், காதல் கடிதம் எழுத வேண்டாம்; வேகமாக செயல்படுங்கள்,'' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆலோசனை கூறியுள்ளார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசு அமைந்துள்ளது. பாக்., பயங்கரவாதிகள் முகாம்களை, நம் ராணுவம், சமீபத்தில் அதிரடி தாக்குதல் நடத்தி அழித்தது. இந்தநடவடிக்கைக்கு, நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாட்னாவுக்கு அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில், ...

'ஆதார்' சலுகைகள்: ஏழாண்டு சேமிக்க முடிவு

Posted: 17 Oct 2016 10:48 AM PDT

'ஆதார்' அட்டையை பயன்படுத்தி, பொதுமக்கள் பெறும் சலுகைகள் மற்றும் மானிய உதவிகளை, ஏழாண்டு வரை சேமித்து வைக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது, 100 கோடிக்கும் அதிகமானோருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்ப்பு
வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு மானியம் போன்ற பல சேவைகளுக்கு, ஆதார் எண்களை, அரசு கேட்க துவங்கியுள்ளது. ரேஷன் கடைகளிலும், ஆதார் விபரங்கள் இணைக்கப்படுகின்றன. 'அரசு உதவி திட்டங்கள் பெற, ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்படக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் பல்வேறு ...

திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சியில் நவ., 19ல் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் வரும், 26ல் துவக்கம்

Posted: 17 Oct 2016 11:01 AM PDT

'தமிழகத்தில் காலியாக உள்ள, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கும், நவ., 19ல், தேர்தல் நடைபெறும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது; வேட்பு மனு தாக்கல் வரும், 26ல் துவங்குகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் மே, 16ல், நடந்தது. அப்போது, வாக்காளர்களுக்கு அதிக பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுத்த குற்றச்சாட்டு மற்றும் வேட்பாளர்களின் வீடுகளில் கணக்கில் வராத பணம் பறிமுதல் காரணமாக, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகளின் தேர்தலை, தேர்தல் கமிஷன் ஒத்தி வைத்தது.
ஒரே நாளில் தேர்தல்
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ...

மார்க்கண்டேய கட்ஜுவுக்கு சுப்ரீம் கோர்ட் 'சம்மன்'

Posted: 17 Oct 2016 12:20 PM PDT

கேரளாவைச் சேர்ந்த, சவும்யா என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, தெரிவித்த கருத்து குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விவாதிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு, சுப்ரீம் கோர்ட், 'சம்மன்' அனுப்பி உள்ளது.கடந்த, 2013ல், கேரளாவைச் சேர்ந்த பெண் சவும்யா, 23, ரயிலில் பயணித்த போது, கோவிந்தசாமி என்பவன் பாலியல் பலாத்காரம் செய்து, கீழே தள்ளி விட்டதாகவும், அதனால், அந்த பெண் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.இவ்வழக்கை விசாரித்த, திருச்சூர் விரைவு கோர்ட், கோவிந்தசாமிக்கு, மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது; இந்த ...

இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு!

Posted: 17 Oct 2016 01:10 PM PDT

டில்லி: இந்தியாவில் இந்தாண்டு சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை பெருமளவில் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளதாக அனைத்திந்திய வணிகர்கள் சங்கம் தெரிவிக்கிறது,
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் விற்பனை விவரங்களின் அடிப்படையில் இந்தாண்டு சீனப் பொருட்களின் விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கு 30 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
விழிப்புணர்வு
சமூக வலைதளங்களில் சீனப் பொருட்களை தவிர்க்கும் படி செய்யப்பட்ட பிரச்சாரத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. குறிப்பாக நம் இந்திய ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™