Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஒருவர் ஒரு பதவிக்கே போட்டி உள்ளாட்சி தேர்தலில் அதிரடி

Posted: 08 Sep 2016 07:50 AM PDT

'உள்ளாட்சி தேர்தலில், ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட முடியும்' என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ளது. சட்டசபை, லோக்சபா தேர்தல்களில், ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிட முடியும். இரு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஒரு தொகுதி பதவியை, ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், உள்ளாட்சி தேர்தலில், ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட முடியும்.
இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஊரக உள்ளாட்சிகளில், நான்கு பதவிகள் உள்ளன. ஒருவர், அனைத்து ...

மத்திய பல்கலைகளில் சேர பொது நுழைவுத்தேர்வுஅதிரடி!: விரைவில் அமல்படுத்த அரசு தீவிர ஆலோசனை

Posted: 08 Sep 2016 09:03 AM PDT

புதுடில்லி:நாடு முழுவதும் உள்ள, 40க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைகளுக்கு, பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து, மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, அடுத்த ஆண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைகளில் மாணவர்களை சேர்ப் பதற்கும், பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.100 சதவீத 'கட் - ஆப்':தற்போது, ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், ஜார்க் கண்ட், கேரளா, ராஜஸ்தான் மற்றும் தமிழகத் தில் ...

கெஜ்ரிவாலை ரயிலில் ஏறவிடாமல் முற்றுகையிட்ட பா.ஜ., மகளிர் அணி

Posted: 08 Sep 2016 09:32 AM PDT

புதுடில்லி:டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வாலை, டில்லி, லுாதியானா ரயில் நிலையங் களில், பா.ஜ., - காங்., கட்சியினர் முற்றுகை யிட்டு, ஆர்ப்பாட்டம் செய்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கி றது. முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமை யிலான, அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பஞ்சாபில், அடுத்த ஆண்டு துவக்கத் தில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த மாநிலத்தில், ஆம் ஆத்மியின் தேர்தல் பிரசாரத்தை துவங்கி வைக்க, நான்கு நாட்கள் பயணமாக, பஞ்சாபுக்கு, கெஜ்ரிவால் சென்றார். டில்லி - ...

புகுந்து விளையாடும் ஆளுங்கட்சி: கொந்தளிக்கும் விவசாயிகள்

Posted: 08 Sep 2016 09:47 AM PDT

முதல்வர் அறிவித்த சிறு, குறு கடன் தள்ளுபடியில், ஆளுங்கட்சி நிர்வாகிகளின் துணையோடு, கடன் தள்ளுபடிக்கான பயனாளி கள் பட்டியல் மோசடியாக தயார் செய்யப் பட்டுள்ளதாக, விவசாயிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம், கடந்த மே மாதம், முதல்வர் ஜெயலலிதாவால்அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத் துக்காக, 5,780 கோடி ரூபாய் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, மார்ச், 31, 2016 வரை, சிறு, குறு விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்களை
தள்ளுபடி செய்யும் பணிகள் துவங்கின; இதற்கான ...

'பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாக்.,!' பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Posted: 08 Sep 2016 10:18 AM PDT

வியன்டியன்:'நம் அண்டை நாடுகளில் ஒன்று, பயங்கரவாதத்தை உருவாக்கி ஏற்றுமதி செய்கிறது' என, பாக்., மீது, பிரதமர் மோடி, மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ், தலைநகர் வியன்டியனில் நடக்கும், 'ஆசியான்' மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்றார்.
ஆசியான் மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் கிழக்கு சட்ட கொள்கை மையமாக, ஆசியான் திகழ்கிறது. நல்லிணக்கம் மூலம், இந்த பிராந்தியத்தில் எங்களின் உறவு அமைந்துள்ளது. இந்த முக்கியமான நட்புறவு, பொருளாதாரம், பாதுகாப்பு, சமூக கலாசாரம் ஆகியவற்றை ...

ராகுலுக்கு நட்புக்கரம் நீட்டும் அகிலேஷ் யாதவ்

Posted: 08 Sep 2016 10:21 AM PDT

லக்னோ:''காங்., துணைத் தலைவர் ராகுல் ரொம்ப நல்லவர்; அவருடன் நட்பு வைக்க விரும்புகிறேன்,'' என, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியது, அரசியலில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி உள்ள உ.பி.,யில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அடுத்த லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக, இந்த தேர்தல் கருதப்படுவ தால், அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஏற்கனவே இறங்கியுள்ளன. காங்., சார்பில்,2,500 கி.மீ., விவசாயயாத்திரையை துவக்கியுள்ளார், அதன் துணைத் தலைவர் ராகுல்.இதுகுறித்து, ...

முதலீட்டாளர் மாநாடு முடிந்து ஓராண்டு நிறைவு நிறுவனங்களிடம் 'ரிப்போர்ட் கார்டு' கேட்கும் அரசு

Posted: 08 Sep 2016 10:40 AM PDT

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடந்து, ஓராண்டு முடிந்த நிலையில், திட்டப் பணி களின் தற்போதைய நிலை குறித்து, 'ரிப்போர்ட் கார்டு' தருமாறு, நிறுவனங்களுக்கு, தமிழக அரசு, 'கெடு' விதித்துள்ளது.

தமிழகத்தில், தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்காக, 2015ல், சென்னை யில் முதலீட்டாளர் மாநாட்டை, அரசு நடத்தியது. இதில், இரண்டு லட்சத்து, 42 ஆயிரத்து, 160 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான, 98 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாநாடு நடந்து, ஓராண்டு முடிந்தாலும், எதிர்பார்த்த வேகத்தில் முதலீடுகள் குவிய வில்லை.திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்த, 98 ...

அரசு அதிகாரிகள் மாற்றம்:மாநில தேர்தல் கமிஷன் கோபம்

Posted: 08 Sep 2016 10:43 AM PDT

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, மாநில தேர்தல் கமிஷன், ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகத் துறை இணைந்து செய்து வருகின்றன.

தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அக்., மாதத்திற்குள், தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில், மாநில தேர்தல் கமிஷன் உள்ளது.ஆனால், தமிழக அரசு, அவ்வப்போது சட்டத் திருத்தங்களையும், அதிகாரிகளையும் மாற்றம் செய்து வருகிறது. இதனால், தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படுவதால், மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள்அதிருப்தியடைந்து உள்ளனர்.இதுகுறித்து, மாநில ...

தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் கொடுக்க மறுத்து கர்நாடகா... தந்திரம்!:நிபுணர்களை அனுப்ப காவிரி கண்காணிப்பு குழுவுக்கு கடிதம்: 134 டி.எம்.சி., வழங்க கேட்டு விடாப்பிடியாக தமிழக அரசும் மனு

Posted: 08 Sep 2016 10:55 AM PDT

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட்டாலும், கூடுதல் தண்ணீரை தராமல் இருப்பதற்கான தந்திரத்தில் கர்நாடகா ஈடுபட்டுள்ளது.

'காவிரி டெல்டா பகுதிகளின் நீர் இருப்பு குறித்த உண்மை நிலவரத்தை ஆராய்வதற்கு நிபுணர்களை அனுப்ப வேண்டும்' என, காவிரி கண்காணிப்பு குழுவிடம் கர்நாடகா கோரியுள்ளது. எனினும், தமிழக அரசும் விடாப்பிடியாக, '134 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட,கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்' என, கண்காணிப்பு குழுவில் மனு செய்துள்ளது.தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, 'காவிரியில் இருந்து, 10 நாட்களுக்கு, வினாடிக்கு, 15 ...

சரியான சவால்: சந்தித்தால் புலிவால்!: முன்னாள் மேயர்கள் மீது இந்நாள் மேயர் குற்றச்சாட்டு:ரூ.1,016 கோடி நிதி இழப்புக்கு பதில் தர அழைப்பு

Posted: 08 Sep 2016 11:04 AM PDT

சென்னை மாநகராட்சி மேயர்களாக ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் இருந்த போது 1016.79 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை குற்றச்சாட்டு கூறி இருப்பதற்கு, 'இருவரும் மாநகராட்சி கூட்டத்திற்கு நேரில் வந்து பதில் தர வேண்டும்' என, மேயர் சைதை துரைசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

வராவிட்டால் நிதி இழப்பு ஏற்படுத்தியவர்கள் பட்டியலில், இவர்கள் பெயரும் இடம் பெறும் என்றும் எச்சரித்து உள்ளார்.மேயர் சைதை துரைசாமி தலைமையிலான சென்னை மாநகராட்சி மன்றத்தின் கடைசி மன்ற கூட்டம், நேற்று நடந்தது. கமிஷனர் கார்த்திகேயன், அதிகாரிகள் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் ...

கேரளாவில் தெரு நாய்களை பிடிக்க பெண்களுக்கு சிறப்பு பயிற்சி

Posted: 08 Sep 2016 11:50 AM PDT

திருவனந்தபுரம் : கேரளாவில், தெரு நாய்களைப் பிடிக்க, பெண்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கேரளாவில், பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி அரசு நடக்கிறது. மாநிலத்தில், சமீபகாலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இருப்பினும், நாய்களைக் கொல்வதற்கு, பிராணிகள் நல ஆர்வலர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பெண்கள் நல அமைப்பான, 'குடும்பஸ்ரீ' மூலம், பெண்களுக்கு, நாய்களைப் பிடிக்கும் பயிற்சியளிக்க, மாநில அரசு ஆலோசித்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன், பெண்களுக்கு நாய் பிடிக்கும் ...

நேதாஜி தப்பிச்சென்ற காரை புதுப்பிக்கிறது ''ஆடி'' கார் நிறுவனம்

Posted: 08 Sep 2016 12:36 PM PDT

கோல்கட்டா: ஆங்கிலேயரின் ஆட்சியின் போது வீட்டுக்காவலில் இருந்த நேதாஜி , அங்கிருந்து தப்பித்து செல்ல உதவிய காரை புதுப்பிக்கும் பணியை துவங்கியுள்ளது ''ஆடி'' கார் நிறுவனம்.இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி என அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை (INA) நிறுவினார். இவரை கைது செய்த பிரிட்டீஸ் அரசு , மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள அவரது மூதாதையர் வீட்டில் வீட்டுச்சிறையில் வைத்தனர்.இந்நிலையில் கடந்த 1941-ம் ஆண்டு ஜனவரி மாதம் , தனது உறவினர் சிசார் போஸ் உதவியுடன் , வீட்டுச்சிறையில் இருந்து ...

காற்று அதிக அளவு மாசு அடைவதால் நீரழிவு நோய் ஏற்படும் அபாயம்!

Posted: 08 Sep 2016 01:39 PM PDT

மின்சன்: காற்று அதிக அளவு மாசு அடையும் சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு நீரழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பெரும்பாலும் நீரழிவு நோய் உணவுப்பழக்கம் மற்றும் பரம்பரை மூலமாக வரக் கூடியது என இதுவரை மருத்துவர்களால் அறியப்பட்டு வந்தது. இதையும் தாண்டி நீரழிவு நோய் சுற்றுப்புற சூழ்நிலை, முக்கியமாக காற்று மாசு அடையும் பகுதிகளில் வசிக்க கூடிய மக்களுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஜெர்மன் மருத்துவ பேராசிரியர் அன்னெட்டே பீட்டர்ஸ் தெரவித்துள்ளார். ...

100 கொசுக்களுடன் பார்லிக்கு வந்த அமெரிக்க எம்.பி.,

Posted: 08 Sep 2016 02:41 PM PDT

வாஷிங்டன் : ஸிகா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து, அமெரிக்க எம்.பி., 100 கொசுக்களை பாட்டிலில் அடைத்து அமெரிக்க பார்லிமென்டுக்கு கொண்டு வந்து பரபரப்பை உண்டாக்கினார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஸிகா வைரஸ் பரவல் அதிகம் உள்ளது. ஸிகா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குடியரசு கட்சி எம்.பி., டேவிட் ஜோலி தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை(07-09-16) 100 கொசுக்களை பாட்டிலில் அடைத்து பார்லிமென்ட் எடுத்து வந்து எம்.பி.,க்களிடையே பரபரப்பை ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™