Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பதற்றம்! தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பால் கர்நாடகாவில்... அரசு அலுவலகங்கள் சூறை; நெடுஞ்சாலைகளில் தடை ஜெ., உருவ பொம்மை எரிப்பு; பஸ்கள் சேவை ரத்து

Posted: 06 Sep 2016 09:57 AM PDT

பெங்களூரு: சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதைக் கண்டித்து, கர்நாடகாவில் நேற்று, விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் போது, அரசு அலுவலகங்களை சூறையாடிய போராட்டக்காரர்கள், நெடுஞ்சாலைகளையும் முற்றுகையிட்டதால், போக்குவரத்து தடைபட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையையும் எரித்தனர்; பஸ் சேவை ரத்து செய்யப்பட்டதால், அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், 'தமிழகத்திற்கு, 10 நாட்களுக்கு, வினாடிக்கு, 15 ஆயிரம் கன ...

அரவிந்த் கெஜ்ரிவால் மீது அன்னா ஹசாரே திடீர்...பாய்ச்சல் ! நம்பிக்கையை வீணடித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு

Posted: 06 Sep 2016 10:02 AM PDT

ராலேகான் சித்தி,:''டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது, நான் வைத்திருந்த நம்பிக்கை வீணாகி விட்டது; இனியும், அவரை நம்பப் போவதில்லை,'' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.

அடுத்தாண்டு, பல மாநிலங்களில் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ள ஆம் ஆத்மிக்கு, ஹசாரேவின் கருத்து, பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மஹாராஷ்டிர மாநிலம், ராலேகான் சித்தியில், அன்னா ஹசாரே வசித்து வருகிறார். சமூக ஆர்வலரான இவர், ஊழலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான ...

உ.பி.,யில் பிரசாரம் துவக்கினார் ராகுல் : 2,500 கி.மீ., பயணம் செய்ய திட்டம்

Posted: 06 Sep 2016 10:08 AM PDT

லக்னோ,: உ.பி.,யில், 2,500 கி.மீ., துார பிரசார யாத்திரையை, காங்., துணைத் தலைவர் ராகுல், நேற்று துவக்கினார்.

உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பா.ஜ., - காங்., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், இப்போதே பிரசாரத்தை துவங்கி விட்டன.
துவக்கம்
உ.பி.,யில், ஆட்சியை காங்., இழந்து, 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த முறை, எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில், முதல்வர் வேட்பாளராக, டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா ...

உள்நாட்டு பிரச்னையை கவனியுங்க! பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரை

Posted: 06 Sep 2016 10:12 AM PDT

கராச்சி,: ''கண்ணாடி மாளிகையில் இருந்தபடி, கல் வீசக் கூடாது; பாகிஸ்தான் முதலில் உள்நாட்டு பிரச்னையை கவனிக்க வேண்டும்,'' என, பாகிஸ்தானுக்கான இந்திய துாதர் கவுதம் பம்பாவாலே தெரிவித்தார்.

சுதந்திர தின உரைபாகிஸ்தானின் கராச்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பாகிஸ்தானுக்கான இந்திய துாதர் கவுதம் பம்பாவாலே கூறியதாவது:இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன; முதலில் உள்நாட்டு பிரச்னையை தீர்ப்பதில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும். கண்ணாடி மாளிகையில் இருந்து கல் வீசக் கூடாது. பலுசிஸ்தான் குறித்து தனக்கு வந்த கடிதங்களை ...

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்

Posted: 06 Sep 2016 10:18 AM PDT

காஷ்மீர் வன்முறைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, உறுதியான அறிவிப்பை வெளியிட, மத்திய அரசு தயாராகி வருகிறது. அதற்கு முன், மீண்டும் அனைத்து கட்சி தலைவர்களை டில்லிக்கு அழைத்து, ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

காஷ்மீரில், 60 நாட்களுக்கும் மேலாக, தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பதற்றத்தை தணிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, 20 கட்சிகளைச் சேர்ந்த, 26 எம்.பி.,க்கள் குழு, காஷ்மீருக்கு சென்று வந்துள்ளது.
மூக்குடைப்பு
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், கடந்த இரு ...

சந்திரகுமார் கோஷ்டியை சந்திக்க கருணாநிதி மறுப்பு

Posted: 06 Sep 2016 10:34 AM PDT

தி.மு.க.,வில் இணைந்த முன்னாள், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., சந்திரகுமார் உட்பட மூன்று பேருக்கு, கட்சியில் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதையடுத்து, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து, ஆசி பெற அவர்கள் விரும்பினர்; ஆனால், அவர்களை சந்திக்க, கருணாநிதி மறுத்து விட்டார்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:தே.மு.தி.க.,வின் அப்போதைய எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோர், மக்கள்தே.மு.தி.க., என்ற அமைப்பை உருவாக்கி, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தனர்; தேர்தலில் தோற்ற பின், தி.மு.க.,வில் இணைந்து விட்டனர்.இந்நிலையில், ...

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 'போனஸ்' உள்ளாட்சி தேர்தலால் முன்னதாக பேச்சு

Posted: 06 Sep 2016 10:37 AM PDT

உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், தீபாவளி போனஸ் சம்பந்தமாக, தொழிற்சங்கங்களுடன், முன்கூட்டியே பேச்சு நடத்த, அரசு நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன.

தமிழக அரசுக்கு சொந்தமான, தமிழ்நாடு மின் வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், அதிகாரிகள் தவிர்த்து, மற்ற பிரிவுகளில், 3.75 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
முதல்வர் அறிவிப்பார்
இவர்களுக்கு, தீபாவளி பண்டிகையின் போது, தமிழக அரசு, போனஸ் வழங்கி வருகிறது. ஒவ்வொரு அரசு நிறுவனமும், போனஸ் தொகையை நிர்ணயம்செய்ய, அங்கீகரிக்கப்பட்ட ...

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு : ஓராண்டில் தமிழகம் சாதித்தது என்ன?

Posted: 06 Sep 2016 10:40 AM PDT

தமிழக அரசு சார்பில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று, நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

தமிழகத்திற்கு போட்டியாக விளங்கும் மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள், சர்வதேச முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி, அன்னிய முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்தன; சலுகைகளை வாரி வழங்கின.
முதன்முறை
இதனால், தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறைய ஆரம்பித்தது. உதாரணத்திற்கு, 10வது ஐந்தாண்டு திட்டக்காலமான, 2002 - 2007 முதல், 2007 - 2012 வரையிலான, 11வது திட்டக்காலம் வரை, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, 11 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.'ஆட்டோ மொபைல், ஜவுளி, ...

கர்நாடகா தர வேண்டிய காவிரி நீர் 96 டி.எம்.சி.,யாக அதிகரிப்பு

Posted: 06 Sep 2016 11:02 AM PDT

தமிழகத்திற்கு, கர்நாடகா வழங்க வேண்டிய காவிரி நீர் அளவு, கடந்த மாதத்துடன், 96 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் தேவைக்காக, ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும். நீர் வழங்கும் காலம், ஒவ்வொரு ஆண்டும், ஜூன் துவங்கி, அடுத்தாண்டு மே வரை நீடிக்கும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி நடுவர் மன்றம் இறுதி செய்துள்ளது. ஆனால், தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் வழங்காமல், கர்நாடகா முரண்டு பிடித்து வருகிறது. 2015 - -16 நீர் வழங்கும் காலத்தில், 35 டி.எம்.சி.,யை கர்நாடகா பாக்கி வைத்தது. இதை வழங்க வலியுறுத்தி, சுப்ரீம் ...

ஒரேநாளில் 264 ஜோடிகளுக்கு திருமணம்: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் புதிய சாதனை

Posted: 06 Sep 2016 11:22 AM PDT

திருவனந்தபுரம்:கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில். கடந்த 4-ம் தேதி முகூர்த்த நாளில் 264 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. ஒரே நாளில் இவ்வளவு ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

இதே போன்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒரே நாளில் 226 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது தான் சாதனையாக கருதப்பட்டது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி நடந்த 264 திருமணம் தான் புதிய சாதனை என கூறப்படுகிறது.
முன்னதாக குரூவாயூர் கோயிலைச்சுற்றியுள்ள திருமண மண்டபங்கள் களைகட்டியிருந்தன. எனவே திருமண நிகழ்ச்சிகளால் கோயில் வளாகம் முழுவதும் மக்கள் ...

கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு: பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர்

Posted: 06 Sep 2016 11:43 AM PDT

பெங்களூரு: சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது. ம் கபினி அணையிலிருந்து 10,000 கன அடி நீரும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 5,000 கன அடி நீரும் திறந்துவிட கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது.நீர் திறப்பையடுத்து கர்நாடகா விவசாயிகள் தீப்பந்தங்களுடன் போராட்டம் நடத்தி வருவதால் அணைப்பகுதிகளில் , இரு அணைகளிலும் துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக போலீசாரும் பாதுகாப்பில் ...

டி.ஜி.பி., அசோக்குமார் பணியில் இருந்து விடுவிப்பு

Posted: 06 Sep 2016 01:14 PM PDT

சென்னை, டி.ஜி.பி., அசோக்குமார், பணியில் இருந்து திடீரென நேற்று, விடுவிக்கப்பட்டார். தமிழக சட்ட ஒழுங்கு டி.ஜி.பி.,யாக, பணியாற்றி வந்தவர் அசோக்குமார். , டி.ஜி.பி.,யின் பதவிக்காலம் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் திடீரென அவர் நேற்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தமிழக காவல்துறை வரலாற்றில், ஓய்வு டி.ஜி.பி.,ராமானுஜத்திற்கு பிறகு, இரண்டாண்டு பணி நீடிப்பை பெற்றிருந்தவர் அசோக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அவர் தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்பட்டதாக வந்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™