Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வெள்ளிக்கொலுசு

Posted: 06 Sep 2016 12:07 PM PDT

உன் வெள்ளிக் கொலுசின்
ஜல் என்ற ஒலியில்
விழித்து எழுந்தது என் மனம்
புன்னகையை பொன்நகையாய் அணிந்தவளே
இவ்வணி சுமந்த
உன் பாதச்சுவடுகள் பதிந்தது
தரையில் மட்டுமல்ல
என் இதயத்திலும்.....

அந்தமான் - இறுதிச்சுற்று..!

Posted: 06 Sep 2016 11:53 AM PDT



அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்

மீசையும் பேராசையும்

Posted: 06 Sep 2016 11:38 AM PDT

நானும் பட்டதாரி அவரும் பட்டதாரி நானும் அரசு ஊழியர் அவரும் அரசு ஊழியர் எனக்கும் ஊதியம் ஆயிரம் அவருக்கும் ஊதியம் ஆயிரம் யார் சொன்னது பெண்ணுக்கு சம உரிமை இல்லை என்று? – சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று மார்தட்டிக் கொள்கிறேன் ஆனால் தட்சணை கேட்கிறார் எதற்கு தட்சணை என்னிடம் இல்லாதது எது அவரிடம் இருக்கிறது இருக்கிறது, இருக்கிறது மீசையும் பேராசையும்..!! – ————————– -பிளாரன்ஸ் வில்லியம் குறிப்பு: மீண்டும் மீண்டும் – கவிதை தொகுப்பிலிருந்து – ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்களால் இத்தொகுப்பு ...

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Posted: 06 Sep 2016 11:31 AM PDT

அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய "சிவா trilogy" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை

1. மெழுக'வின் அமரர்கள் - The Immortals of Meluha
2.நாகர்களின் ரகசியம் - The Secret of the Nagas

மிக்க நன்றி.

தெரிந்து கொள்ளலாம் வாங்க- ஒரோறா எனும் துருவஒளி என்றால் என்ன?

Posted: 06 Sep 2016 11:30 AM PDT

ஒரோறா -Aurora- என்பது லத்தீனிய சொல் - (ரோமானிய) வைகறைப் பெண் தெய்வம் என்பது பொருளாகும். சில தினங்களுக்கு முன்னர் வடதுருவ ஒளி -aurora borealis-  பின்லாந்து அயர்லாந்துப் பகுதியில் காணப்பட்டது. வட காந்த துருவத்தில் தென்படும் ஒளிக்கு வடதுருவ ஒளி-aurora borealis -எனவும், தென் காந்த துருவப்  பகுதியில் காணப்படுவதை தென்துருவ ஒளி-aurora australis -எனவும் சொல்லப்படுகிறது. சூரியனில் இப்படி நடக்கிறது... சூரியக் நடுக்கம்,புள்ளி (Sun Flare/spots) காரணமாக ஏற்படும் சூரியக்காற்றின் போது உருவாகும் ...

வாசகர் கவிதைகள் – குமுதம்

Posted: 06 Sep 2016 11:11 AM PDT

- பொம்மைகளுக்கும் மம்மு ஊட்டச் சொல்லி குழந்தைகள் அடம் பிடிக்கும்போது அம்மா திணறுவதை பொம்மையும் ரசிக்கிறது! - ----------------------- - - டெடிபேரைக் கட்டிக் கொண்டு உறங்கும் குழந்தை நள்ளிரவில் அம்மா கைப்பிடித்து கழிப்பறைக்குள் நுழையும் போது தப்பாமல் சொல்கிறது, "டெடியையும் அழைச்சிட்டு வாம்மா! இல்லேன்னா மெத்தை நனைஞ்சு போயிடும்!" - -------------------------

குற்றம் தவிர்

Posted: 06 Sep 2016 11:10 AM PDT

- மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது" கவிதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் "கவிதை பரிசு", நண்பர் குமரகுருபரனுக்கு வழங்கப்படுகிறது. -விருது பெற்ற தொகுப்பில் எனக்கு பிடித்த குமரகுருபரனின் கவிதை ------------------- குற்றம் தவிர் - தண்டனைகள் நியாயமொன்றை நிறைவேற்றுகின்றன. சில சமயங்களில் நினைவுறுத்துகின்றன. அச்சுறுத்துகிற நியாயத் தீர்ப்பொன்றில் கடைசிக்கணம் அறிந்தவர் யாருமில்லை இறப்பு கொஞ்சமாகவேனும் தினமும் நிகழ்கிறது. நெஞ்சமுடைந்து இறப்போர் ...

*தேசிய ஒப்பாரி*

Posted: 06 Sep 2016 11:02 AM PDT

பிணம் சொல்லும் சாத்திரங்கள்

Posted: 06 Sep 2016 10:58 AM PDT

கர்ப்பிணிப் பெண்கள் இறந்துபோனால் , அப்படியே புதைக்கமாட்டார்கள் . அவள் வயிற்றைக் கீறி , குழந்தையை வெளியே எடுத்த பின்னர்தான் புதைப்பார்கள் . இந்த வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு . இதேபோல சங்ககாலத்தில் ஒரு வழக்கமுண்டு. அதாவது குழந்தை பிறந்து சிறிதுநேரத்தில் இறந்து போனாலும் , அல்லது குழந்தை இறந்தே பிறந்தாலும் அப்படியே புதைக்கமாட்டார்கள் . அந்தக் குழந்தையை வாளால் கீறிய பிறகுதான் புதைப்பார்கள் . சோழ மன்னனுடன் நிகழ்ந்த போரில் சிறை பிடிக்கப்பட்டசேரன் கணைக்கால் இரும்பொறை,தனது தாகத்துக்குத் தண்ணீர் ...

ஆசிரியரும் ஒரு மாணவரே

Posted: 06 Sep 2016 10:55 AM PDT

ஆசிரியரும் ஒரு மாணவரே (1982 -இல் "ஆசிரியர் தினவிழா" அன்று தமிழகத்தின் அனைத்து அரசினர் மேல்நிலைப் பள்ளிகளின் +2 மாணவர்களுக்கென பொதுவாக நடந்த "கட்டுரைப் போட்டி" யில் முதல் பரிசு பெற்ற கட்டுரை. அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடந்த "கட்டுரைப் போட்டி". போட்டியின் தலைப்பு "ஆசிரியரும் ஒரு மாணவரே" ) முன்னுரை :- "தோன்றிற் புகழோடு தோன்றுக - அக்திலார் தோன்றலின் தோன்றாமை நன்று". என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப மாணவர்களால் புகழப்படக்கூடிய ஒரு அற்புதப் ...

பச்சைத் தேநீர் (கிரீன் டீ - Green Tea) ஒரு சர்வரோக நிவாரணி

Posted: 06 Sep 2016 10:49 AM PDT

இதயத்தின் காதலன் பச்சைத் தேநீர் (கிரீன் டீ - Green Tea) ஒரு சர்வரோக நிவாரணி இதயம் அடைப்பு , நீரிழிவு , கேன்சர் போன்ற மனித குலத்தின் கொடூர வியாதிகளை குணப்படுத்தும் சஞ்சீவி கிரீன் டீ., இதயம்நுரையீரல்,குருதி,பல்,எலும்புகள் என உடலின் எல்லா பாகங்களுக்கும் நன்மையை விளைவிக்கிறது இந்தப் பச்சைத் தேநீர். எழுபத்தைந்து விழுக்காடு மக்களும் புகைக்கு அடிமையாகி இருக்கும் ஜப்பானில் இதய நோயாளிகள் குறைவாகவே இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் உள்ள இரகசியம் இந்த பச்சைத் தேநீர் தான். கிரீன் டீ யின் ...

என்னுடைய அறிமுகம்--விவேகானந்தன்

Posted: 06 Sep 2016 10:47 AM PDT

பெயர்:விவேகானந்தா
சொந்த ஊர்:மதுரை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: நெட்ஒர்க்
பொழுதுபோக்கு:வரலாற்று நாவல்கள் படித்து, புல்லாங்குழல், பைக் மற்றும் கார் பந்தயங்களிலும், தோட்டம் பயன்படுத்தி புதிய தொழில்நுட்பம் உருவாக்கி, போன்றவை
தொழில்: ஆராய்ச்சியாளர்
மேலும் என்னைப் பற்றி:சொல்வதற்கு ஒன்றுமில்லை

சீனிவாசன் கோவிந்தசாமி - அறிமுக பதிவு

Posted: 06 Sep 2016 10:46 AM PDT

பெயர்:  சீனிவாசன் கோவிந்தசாமி சொந்த ஊர்:  ஜெயங்கொண்டசோழபுரம் ஆண்/பெண்:  ஆண் ஈகரையை அறிந்த விதம்: தான, தர்மம் பற்றி  வலை தள  தேடுதலின் போது பொழுதுபோக்கு:  திருக்குறள் & பகவத் கீதை படித்து அனுபவிப்பது  பகவான் மீது தீராத காதல். அவனை நேரில் காண ஆசை. ,நாவல்கள் படிப்பது  குறிப்பாக  வரலாற்று நாவல்கள் , போது சேவையில் நாட்டம் , விவாதம் , கலந்துரையாடல்  பங்கேற்பது. நீண்டநாள் விருப்பம் : எளிய நடையில் பகவத் கீதையின்  சாரத்தை  விளக்கி புத்தகம் எழுத விருப்பம். தொழில்:  கார்பொரேட் மேனேஜர் ...

தருமபுரியில் போலி வங்கி! 4 பேர் கைது

Posted: 06 Sep 2016 08:23 AM PDT

தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். "யெஸ்' வங்கி என்ற பெயரில் தனியார் வங்கி ஒன்று கம்பெனி பதிவுச் சட்டத்தில் பதிவு செய்து, கடந்த 2004 முதல் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று நாடு முழுவதும் கிளைகள் அமைத்துச் செயல்பட்டு வருகிறது. இதே பெயரில் "ஏபிஎஸ்' என்ற எழுத்துக்களை நடுவில் சேர்த்துக் கொண்டு, "யெஸ் ஏபிஎஸ் வங்கி' என்ற பெயரில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி ...

வீர பாண்டியன் மனைவி புத்தகம் கிடைக்குமா

Posted: 06 Sep 2016 06:55 AM PDT

அரு ராமநாதன் அவர்கள் எழுதிய வீரபாண்டியன் மனைவி மின்னூலாக்கம் கிடைக்குமா?

நீயே என் இரவு பகல்

Posted: 06 Sep 2016 05:59 AM PDT

ஏதேதோ எண்ணங்கள்அதில் எல்லாமே உன்நினைவுகளின் வண்ணங்கள்…என்ன நினைச்சாலும் உன் நினப்பும் கொஞ்சம் அங்க இருக்கு…  வழியெல்லாம் பூச்செடிகள்விழியெல்லாம் உன் நினைவுகள்..சாரல் அடிக்கும் என் மேல்உன் நினைவுகள் துடிக்கும். எனக்குள்… நீலவானம் வெறுமையாக இருக்கும்போதெல்லாம் நான் தனிமையை உணர்ந்திருக்கிறேன்…நிலவுடன் வானம் பார்க்கும் போதெல்லாம்உன் அருகாமை காட்சிகளாக விரியும்…  மனசுல இருக்கநினைவா வார…கண்ணுல இருக்க காட்சிகளா வாரஇதயத்துல இருக்குறதுடிப்பா வார நிழலா இருக்குற என் கூட நடந்து வார  கடல் தாண்டி வந்தாலும்காலம் ...

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Posted: 06 Sep 2016 03:06 AM PDT

நான் ஆசிரியர் ஆவதற்கு முன் 3 வருடங்களாக ஒரு ப்ளோர் மில்லில் சூப்பர் வைசராக பணியாற்றியிருக்கிறேன். அங்கு கோதுமையை அரைத்து மைதா, ரவை, ஆட்டா, தவிடு இலைத்தவிடு என பல ரகங்களில் பிரித்தெடுக்கும் பணியாளர்களை கண்காணிக்கும் பணி மேலாளர் நான் சிப்ட்டு முறையில் இயங்கும் ஒரு ஆலை அது. கோதுமையை பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊரவைத்து பிறகு குளிர்வித்து சலித்து பிறகு 16 அரவைகளில் அவற்றை இட்டு அரைத்து முதல் தரமாக அதிலிருந்து மைதாவை பிரித்தெடுப்போம். இதில் எந்த கெமிக்கலும் போடுவது கிடையாது.   ஒரு கோதுமை ...

அக். 1 முதல் ஆதார் எண் வழங்கும் அரசு கேபிள் நிறுவனம்!

Posted: 05 Sep 2016 10:03 PM PDT

ஆதார் எண் வழங்கும் பணியை அக்டோபர் 1 முதல் தமிழக அரசின் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்திடம் அளிக்கப்பட உள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் மேற்கொண்ட கணக்கெடுப்பு விவரங்களை பாரத மிகு மின் நிறுவனம் கணினியில் சேகரித்து வருகிறது. இந்த நிலையில், பாரத மிகு மின் நிறுவனத்திடம் இருந்து ஆதார் எண் வழங்கும் பணியை தமிழக அரசின் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி, அக்டோபர் 1 முதல் 400-க்கும் மேற்பட்ட இ. சேவை ...

அரிய புத்தகங்கள்

Posted: 05 Sep 2016 07:35 PM PDT

இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும்

என்றும் அன்புடன்

ஜெ.செந்தில்குமார்

ஆசிரியர் தினத்தையொட்டி மாணவவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார்

Posted: 05 Sep 2016 07:29 PM PDT

புதுடெல்லி, ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாடம் நடத்தினார். ஆசிரியர் தினம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5–ந்தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ராதாகிருஷ்ணன் ஆசிரியராக இருந்து பின் நாளில் அரசியலில் ஈடுபட்டு ஜனாதிபதி ஆனவர். அவரை போலவே தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் அரசியலுக்கு வருவதற்கு முன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். எனவே ...

கர்நாடகத்தில் செப்.9-இல் முழு அடைப்பு போராட்டம்

Posted: 05 Sep 2016 05:38 PM PDT

உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு கர்நாடகத்தில் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்த்துள்ளன. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி மண்டியா, மைசூரு, சாமராஜ்பேட்டை, உப்பள்ளி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™