Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கவுரவம்!: அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப் வாடிகனில் நடந்த விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

Posted: 04 Sep 2016 10:02 AM PDT

வாடிகன்:தன் வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காகவே தொண்டாற்றி, இறப்புக்கு பிறகும் அற்புதங்கள் படைத்த அன்னை தெரசாவுக்கு, வாடிகனில் நடந்த விழாவில் புனிதர் பட்டம் வழங்கி, போப் பிரான்சிஸ் கவுரவித்தார்.

இந்த விழாவில், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட, லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.ஐரோப்பிய நாடான அல்பேனியாவில், 1910ல் பிறந்த தெரசா, 1929ல் இந்தியாவுக்கு வந்தார். தொழுநோய், காசநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவை செய்ய துவங்கினார். 'மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்' என்ற அமைப்பை உருவாக்கி, தன் இறுதி ...

பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட சீனாவுக்கு அழைப்பு! பரஸ்பரம் புரிந்து செயல்பட பிரதமர் மோடி வலியுறுத்தல்

Posted: 04 Sep 2016 09:20 AM PDT

ஹாங்க்சு:''இந்தியாவும் - சீனாவும் மற்றவர் களுடைய பிரச்னைகளை, முயற்சிகளை, பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உண்மையாக புரிந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும், பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்பட வேண்டும்,'' என, சீனாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

'ஜி - 20' நாடுகளின் கூட்டம், சீனாவின் ஹாங்க்சு நகரில் நடக்கிறது. இதற்காக சீனா சென்றுள்ள, பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் கை சந்தித்து பேசினார்.இருவருக்கும் இடையே நடந்த, இந்த எட்டாவது சந்திப்பின்போது, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த ...

காஷ்மீர் முதல்வருடன் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழு ஆலோசனை

Posted: 04 Sep 2016 09:30 AM PDT

ஸ்ரீநகர்:வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அமைதிக்கு தீர்வு காணும் நோக்கில் சென்றுள்ள, அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் குழு, முதல்வர் மெஹபூபா முப்தி உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தியது. அதேசமயம், 'அமைதிப் பேச்சுவார்த்தை யில் பங்கேற்க முடியாது' என, பிரிவினைவாதிகள் மறுத்துள்ளனர்.

அமைதி முயற்சிஜம்மு -- காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு, பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, போராட்டங்கள் நடக்கின்றன; இதனால், இயல்பு வாழ்க்கை முடங்கி ...

உ.பி.,யை கைப்பற்ற காங்., அதிரடி வியூகம்

Posted: 04 Sep 2016 09:24 AM PDT

மத்தியிலும், மாநிலங்களிலும், பெரிதும் பலவீனமடைந்துள்ள காங்., கட்சி, செல்வாக்கை மீட்டெடுக்க, உ.பி.,யில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை அரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதற்காக, கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் காங்கிரஸ், மூன்று முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலா வது, பொதுமக்களை சந்திக்கும் வகையிலும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், 'மெகா பாத யாத்திரை'க்கு காங்., ஏற்பாடு செய்துள்ளது.மொத்தம், 39 மாவட்டங்கள் வழியாக, 25 நாட்களில், 2,500 கி.மீ., துாரம் யாத்திரை செய்து பிரசாரம் செய்ய, காங்கிரஸ் ...

'தூய்மை இந்தியா' திட்ட தூதராகும் வீராங்கனைகள்

Posted: 04 Sep 2016 09:47 AM PDT

புதுடில்லி:மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தை பிரபலப்படுத்தும் பிரசாரத்திற்கு, ரியோ ஒலிம்பிக்கில் சாதனை புரிந்த, பி.வி. சிந்து, சாக் ஷி மாலிக் உள்ளிட்ட மூவரை பயன் படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்தியாவில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 'துாய்மை இந்தியா' இயக்கத்தை, 2014ல், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நாடு முழுவதும், 4,000 நகரங்களில், தெருக்களை சுத்தப்படுத்துவதும், சுகாதார கட்டமைப்பை மேம் படுத்துவதும் இதன் நோக்கமாகும். இதை மக்களிடம் பிரபலப்படுத்தும் விதமாக, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்,சச்சின் ...

கோவைக்கு வேண்டிய திட்டங்கள் ஸ்டாலினிடம் கொ.ஜ.க., கோரிக்கை

Posted: 04 Sep 2016 10:59 AM PDT

கோவை:'கோவைக்கு நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து சட்டசபையில் குரல் எழுப்ப வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடம், கொங்கு நாடு ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொங்குநாடு ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் நாகராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அளித்த மனு:கொங்கு மண்டலம், விவசாயம் மற்றும் சிறு, குறு தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதியாக இருந்தது. ஆனால்,நீர்வளம் மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் இன்று விவசாயிகளும், தொழில் முனைவோரும் கடும் சரிவை சந்தித்து வருகின்றனர்.கொங்கு ...

காவிரி வழக்கு இன்று விசாரணை நீர் திறப்பை அதிகரித்தது கர்நாடகா

Posted: 04 Sep 2016 10:19 AM PDT

சுப்ரீம் கோர்ட்டில், காவிரி நீர் தொடர்பான வழக்கின் விரிவான விசாரணை இன்று நடக்க உள்ளதால், நீர் திறப்பை, கர்நாடகா திடீரென அதிகரித்துள்ளது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா வழங்க வேண்டும். இதன்படி, ஜூன் முதல் ஆகஸ்ட், 19 வரை, 74.6 டி.எம்.சி., நீரை வழங்கி இருக்க வேண்டும்; 24.5 டி.எம்.சி., நீரை மட்டுமே, கர்நாடகா திறந்துள்ளது.கடந்த ஆண்டு வழங்க வேண்டிய நீரிலும், 35 டி.எம்.சி., நிலுவை வைத்துள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்துள்ளது. விரைவில் துவங்க வேண்டிய சம்பா சாகுபடியும், பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. ...

உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு காரணம் தேடுது தே.மு.தி.க.,

Posted: 04 Sep 2016 10:24 AM PDT

உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதற்கான காரணத்தை தே.மு.தி.க., தலைமை தேடுவ தாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகலால் விரக்தியடைந்த தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். எஞ்சியுள்ள நிர்வாகிகள் பலரும், விஜயகாந்தின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள். இவர்களும், கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள னர். இதனால், 'வரும் உள்ளாட்சி தேர்தலை, தே.மு.தி.க., புறக்கணிக்க வேண்டும்' என, அவர்கள் விரும்புகின்றனர். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவோ, தேர்தலில் ...

'விவசாயிகளை கொச்சைப்படுத்தலாமா?':அமைச்சரின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

Posted: 04 Sep 2016 10:55 AM PDT

'விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்த முதல்வரை கொச்சைப்படுத்தும் விதமாக, விவசாயிகள் வட்டிக்கு விடுகின்றனர் என, அமைச்சர் பேசியது ஆணவமானது' என, விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.

ஈரோட்டில், 'வியாபாரிகள் கடன் மேளா' நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், 'விவசாயிகள் வசதியாக உள்ளனர்; வட்டிக்கு கொடுத்து வருகின்றனர். ஒரு சென்ட் நிலம் கூட இல்லாத வர்கள், பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வில்லை என, போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக பேசி வருகின்றனர்' என, காட்டமாக பேசினார். இந்த பேச்சு, விவசாயிகள் மத்தியில் கொதிப்பை ...

'நீதிபதிகள் நியமன முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்'

Posted: 04 Sep 2016 01:09 PM PDT

புதுடில்லி: 'நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படை தன்மையும், ஒருமித்த கருத்தும் மிக முக்கியம்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்களுக்கான நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றை, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய, 'கொலீஜியம்' முடிவு செய்கிறது.
'இந்த கொலீஜியம் கூட்டத்தில் வெளிப்படைதன்மை இல்லை; ஒருமித்த கருத்தும் ஏற்படுவதில்லை' என, சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தில் உள்ள மூத்த நீதிபதி சலமேஸ்வர் சமீபத்தில் கூறினார். அதனால், ...

உ.பி.,யில் செப்.7-ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முலாயம் சிங்

Posted: 04 Sep 2016 03:47 PM PDT

உ.பி.,யில் செப்.7-ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முலாயம் சிங்

லக்னோ:உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு(2017) சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 7-ல் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் அழம்கார் பாராளுமன்ற தொகுதியில், தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இங்கு சமாஜ்வாடி-பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. சோனியாவும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். இதனிடையே ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™