Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ருத்ர வீணை

Posted: 04 Sep 2016 11:08 AM PDT

ருத்ர வீணை 3 & 4 கிளாரிட்டி பிடிப் நீடெட். ப்ளீஸ் அப்லோட் பிரோதெரஸ் .

தெரிந்து கொள்வோம் வாங்க - ஊசல் எனப்படும் பெண்டுலம் தொழில்நுட்பத்தின் அசத்தல்.

Posted: 04 Sep 2016 09:32 AM PDT

பழைய சுவர்கடிகாரம் ஊசல்குண்டு-பெண்டுலம்- கடிகாரத்தை 1656 இல் ஒல்லாந்து நாட்டு பௌதீகவியலாளர் கிறிஸ்தியன் குகென்ஸ் கண்டு பிடித்ததார். அவர் சுகவீனமுற்று படுக்கையில் இருந்த போது அருகருகே தொங்கிக் கொண்டிருந்த பெண்டுலம் கடிகாரங்கள்  அரைமணிக்கொரு தடவை ஊசல்குண்டுகள் நின்று பின் எதிர்திசையில் அசைவதைக் கவனித்தார். இது ஏன்? சரியான முடிவைக் காண முடியாத நிலையில்,சமீபத்தில் லிஸ்பன் பல்கலைக்கழக கணிதவியலாளர் கென்றிக் ஒலிவேரியா உதவியாளர் லூயிஸ் மெலோ வும் அதற்கான விடையைக் கண்டு பிடித்தார்கள்.குகென்ஸ் சந்தேகம் ...

காதலின் சில அசைவுகள்

Posted: 04 Sep 2016 09:28 AM PDT

என்ன(னை) மறக்கிறேன் ஆனா ஒத்த நொடி கூட உன்ன மறக்கல.. என் இரவு உன் மடி கேட்கும் கனவுகள் உன் முகம் தேடும் விடியல் உன் குரல் வேண்டும்… இதயம் உனக்குனு துடிக்குது.. என் மனசு என்னபத்தி நினைக்கல என் பேச்சு கேட்கல   ராஜா பாடல்கள் ராஜாவுக்காக அல்ல அதில் நீ வருவாய்… சின்ன பூவாய் மெல்ல சிரிப்பாய்.. உன் கூந்தல் என் முகம் மோதும்.. உன் பார்வை என் இதயம் நனைக்கும்..   உன் குட்டி குட்டி பேச்சுக்கு நான் ஒவ்வொரு நொடியும்  காத்துருப்பேன்.. உன் முத்து சிரிப்புக்கு என் மொத்த பேச்சையும் எழுதிதருவேன்..   உன் ...

சாதி மல்லிப்பூச்சரமே – அழகன்

Posted: 04 Sep 2016 09:22 AM PDT


-
பாடல்: சாதி மல்லிப்பூச்சரமே
திரைப்படம்: அழகன்
இசை: மரகதமணி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தொடத் தொடத் தொல்காப்பியம்(439)

Posted: 04 Sep 2016 09:14 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

திரிகோண ஸ்தானங்கள்

Posted: 04 Sep 2016 08:43 AM PDT

ஜென்ம ராசிக்கு மறைவு ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 3, 6, 8, 12-க்கு அதிபதிகள் பொதுவாக கெடுதிகளையும் அதன் திசை புத்தி காலத்தில் பல்வேறு வகையான பிரச்சினைகளையும், வீண் செலவு, வீண் விரயத்தையும் உண்டாக்குவது இயல்பு. ஜெனன ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 3, 6, 8, 12 க்கு அதிபதிகள் சில கிரகச் சேர்க்கை அல்லது சில ஸ்தான ஆதிபத்தியம் பெற்றால் கெடுதிகளை ஏற்படுத்தாமல் நற்பலன்களை உண்டாக்குவார்கள். மறைவு ஸ்தானாதிபதிகளை தூய்மைப்படுத்தும் பலம்பெற்ற ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்கினத்திற்கு திரிகோண ...

கபாலி

Posted: 04 Sep 2016 08:05 AM PDT

டாஸ்மாக்கில் கபாலி ,  மூச்சு  முட்டக் குடித்துவிட்டு டேபிளின்மீது சரிந்து கிடந்தான் . வெயிட்டர் வந்து பக்கத்தில் நின்று , " சார் ! " என்று குரல் கொடுத்தான். லேசாகக் கண்விழித்த கபாலி , வெயிட்டர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தவுடன்,  ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டி  , " இந்தா ! மீதிப் பணத்தை நீயே வெச்சுக்க ! " என்று சொல்லிக் கொடுத்தான் . தன்னிடமிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தான் கபாலி. சரியாக பத்தாயிரம் இருந்தது. அதை அப்படியே தன் பேண்டின் பின்புறத்தில் இருந்த பாக்கெட்டில் வைத்துவிட்டு ...

'தங்க மீன்கள் ' லிங்க் கிடைக்குமா ?

Posted: 04 Sep 2016 07:03 AM PDT

'தங்க மீன்கள் ' லிங்க் கிடைக்குமா நண்பர்களே ? புன்னகை இருந்தால் தாருங்களேன் !

சசிகுமாரின் ‘கிடாரி’ பட விமரிசனம் – ரத்தக் காட்டேரி!

Posted: 04 Sep 2016 04:19 AM PDT

-- பழைய திருவிளையாடல் திரைப்படத்தின் வசன பாணியில், பிரிக்க முடியாதது… என்கிற கேள்விக்கு 'சசிகுமாரும் - தாடி, அரிவாளும்' என்று புதிதான பதில் ஒன்றை இணைத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. அந்தளவுக்கு மனிதர் இரண்டையுமே கைவிடும் உத்தேசம் இல்லாமலிருக்கிறார். 'சார்.. உங்க நண்பனுக்காக நீங்க அரிவாளை எடுத்துக்கிட்டு எங்கயோ ஆவேசமா ஓடறீங்க..' என்று கதை சொல்ல வரும் இயக்குநர் முதல் வரியை முடிக்கும் முன்னரே அவரை இயக்குநராக உறுதிப்படுத்தி, தயாரிப்பையும் உடனே ஏற்றுக்கொள்வார் போலிருக்கிறது. தமிழில் ...

ருத்ர வீணையை வாசிக்கும் ஒரே பெண் கலைஞர் ஜோதி ஹெக்டே

Posted: 04 Sep 2016 04:09 AM PDT

- ருத்ரவீணை என்கிற பெயரே நாம் கேள்விப்பட்டிராதது. இசைக்கலைஞர் பலருக்கும் கூட அப்படியொரு வாத்தியம் இருப்பது தெரியாது. அப்படிப்பட்ட அபூர்வ இசைக்கருவியில் ஈடுபட்டு, உலக அளவில் கவனம் ஈர்த்துக் கொண்டிருப்பவர் ஜோதி ஹெக்டே. அபூர்வமானதொரு விஷயத்தில் ஈடுபட்டிருப்பது ஒரு சாதனை என்றால், காலம் காலமாக பெண்களுக்கு மறுக்கப்பட்டு வந்த அந்த இசைக்கருவியில் இன்று நிபுணத்துவம் பெற்று, ஒன் உமன் ஷோ நடத்திக் கொண்டிருப்பது ஜோதியின் மெகா சாதனை! ஜோதியின் தொடர்பைத் தேடிக் கண்டுபிடிப்பதில் இருந்த ...

சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்

Posted: 04 Sep 2016 02:42 AM PDT

இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தற்கொலை செய்ததாக கூறப்படும் நாகப்பனின் மகள் ராதிகா இன்று புகார் கொடுத்துள்ளார். புகாரில் கூறியிருப்பதாவது: என்னுடைய தந்தை நாகப்பன். அவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நாகப்பன், லாரி டிரைவராக கடந்த இருபது ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். என்னுடைய தந்தைக்கும், தாய் அம்பிகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்தனர். நான் வாரம் ஒரு முறை என் தந்தையை சந்திப்பேன். இந்நிலையில் ...

அரிய வகை மீனுக்கு ஒபாமாவின் பெயரை சூட்டிய விஞ்ஞானிகள்

Posted: 04 Sep 2016 01:30 AM PDT

ஹவாய் தீவுகளின் வடமேற்கு கடல் பரப்பில், கடல்வாழ் உயிரினங்களுக்கான பாதுகாக்கப் பட்ட பகுதி உள்ளது. பபஹனோ மோகுவாகி என்ற பெயரில் கடல்சார் தேசிய நினைவுச் சின்னமாக அமெரிக்கா பராமரித்து வரும், இந்த சர்வதேச பாரம்பரிய முக்கியவத்துவம் வாய்ந்த கடல்பகுதியை அதிபர் ஒபாமா அண்மையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்தார். இதன் மூலம், மொத்தம் 5 லட்சத்து, 82 ஆயிரத்து 578 சதுர மைல்கள் பரப்புடன், உலகிலேயே மிகப் பெரிய கடல்வாழ் உயிரனங்களின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இது மாறியுள்ளது. மிகப் பழமையான பவளப் பாறை கள் ...

இந்த வார சினிமா செய்திகள்

Posted: 04 Sep 2016 01:11 AM PDT

கதைக்கு தேவையென்றால் கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்: சஞ்சிதா படுகோனே --- - விஜய் நடித்த வேட்டைக்காரன், ஜித்தன் ரமேஷ் நடித்த பிள்ளையார் கோவில் கடைசி தெரு ஆகிய படங்களிலும் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்த சஞ்சிதா படுகோனே. - கர்நாடகாவைச் சேர்ந்த மாடல் அழகி.   ராவணா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான இவர்  ஜெயம்ரவி, சிம்பு, தனுஷ், கார்த்தி, விஷால், நட்டி மற்றும் முன்னணி ஹீரோக்களுடனும் மணிரத்னம், கௌதம் மேனன், சுந்தர் சி, சுசீந்திரன், ...

பூரி கடற்கரையில் அன்னை தெரஸா மணல் சிற்பம்: சுதர்சன் பட்நாயக் காணிக்கை

Posted: 04 Sep 2016 12:36 AM PDT

- - கொல்கத்தா நகரில் உள்ள ஏழைகளுக்கு சுமார் 45 ஆண்டுகள் சேவை புரிந்த அன்னை தெரஸாவுக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி இன்று வாடிகன் நகரில் கோலாகலமாக நடக்க உள்ளது. இதையொட்டி ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் அன்னை தெரஸா மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். அவர் அந்த மணல் சிற்பத்தில், ஆதரவற்றோருக்கு எல்லாம் தாயாக இருந்து அன்பு செலுத்திய அன்னைக்கு காணிக்கை என புகழாரம் சூட்டியுள்ளார். இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் ...

செய்திகள் என்ன சொல்லுது?

Posted: 04 Sep 2016 12:31 AM PDT

1. ஐயப்பன் பிரம்மச்சாரிதான் ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல. கேரள மூத்த தலைவர் பேச்சு. பெண்களை வெறுக்காதவர் ஐயப்பன் என்கிறதாலேயே தான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி கேட்கிறாங்க. அனுமதி கொடுங்களேன். அதை ஏன் மறுக்கிறீங்க. 2. ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும். வங்கி ஆளுநர். ரகுராம் ராஜன். சரிதான். அரசியல்வாதிகளின் ஆதிக்கமும செல்வாக்கும் மதிக்கப்படாது என்பதாலே தானே அவங்க தலையீடு உள்ளது. 3. விஜய் மல்லையாவின் ரூ.பாய்.6,630 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம் ...

ஒரு நன்றிக்காகத்தான் பங்கு கொடுக்கணும்னேன்…!!

Posted: 03 Sep 2016 08:46 PM PDT

– தலைமுடி தினம் கொட்டுது டாக்டர்…! – ஒரு மருந்து எழுதித் தரேன்….சாப்பிடுங்க, வலி தெரியாது…!!! – ——————————- – பையன் நடத்தை எப்படி? – என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க! பையனோட நன்னடத்தைக்காகவே மூணு மாசம் முன்னாடியே அவனை ரிலீஸ் பண்ணிடாங்க…!! – ———————————- – ராப்பிச்சை: - தாயே…! புதுசா கல்யாணமாவன்… சீக்கிரம் பிச்சை போட்டு அனுப்புங்க மகராசி! – ———————————-

எதிர்பாராத நேரத்திலே கொடுத்த முத்தம்…!!

Posted: 03 Sep 2016 08:20 PM PDT

– தாலி கட்டுகிற நேரத்திலே மாப்பிள்ளை உன் காதிலே என்னடி கிசுகிசுத்தார்? – எனக்கு சேர்ந்த மொய்ப்பணத்திலே ஆயிரம் ரூபாய் கைமாத்து கேட்டார்டி…! – ———————————– – எமன்: சென்னை செந்தில்வேலன் உயிரைக் கவர்ந்து வரச்சொன்னா, கிங்கரர்கள் போக முடியாது என்கிறார்களா…ஏன்? – சித்திரகுப்தன்: எய்ட்ஸ் தொத்திக்கிடும்னு பயமாருக்காம்…!! – ——————————— – நான் எழுதின இந்தக் கதையைப் படிச்சுப் பாரேன்! – திரும்பி வந்ததும் சாவகாமாய் படிச்சுக்கிறேன், இப்ப அவசர வேலையிருக்கு…!! – —————————————- –

காஷ்மீரில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க புதுவகை குண்டு ஒப்புதல் அளித்தார், ராஜ்நாத் சிங்

Posted: 03 Sep 2016 08:20 PM PDT

புதுடெல்லி, காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8–ந்தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கடந்த 50 நாட்களுக்கு மேலாக வன்முறை தலைவிரித்தாடுகிறது. எதிர்க்கட்சிகள் கோரிக்கை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க பாதுகாப்பு படையினர் ரவை குண்டுகளை பயன்படுத்தி வந்தனர். இது போராட்டக்காரர்களின் கண் பார்வையை பறித்து விடுவதால் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. காஷ்மீரில் அமைதி நிலவுவதற்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய கோரிக்கைகளில் ...

இடிபாடுகள் வாஸ்துபடி இல்லையாம்...!!

Posted: 03 Sep 2016 07:49 PM PDT

உலகம் உய்ய வந்த சிங்கப்பிரான்

Posted: 03 Sep 2016 07:15 PM PDT

- எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பக்தப் பிரஹ்லாதனை ஒரு பாதையாக வைத்து உலகம் உய்ய வந்த அழகிய சிங்கமே - உதைத்த ஹிரண்யனின் காலுக்குத்தான் எத்தனை புண்ணியம். நம் ஸ்வாமியின் காருண்யத்துக்கு ஏது அளவு. கண்ணில் கண்ணீர் வழியும் பிரஹ்லாதனை அணைத்து அரசனாக்கிய வள்ளல். - ஜன்மம் முழுவதும் தன்னை வைரியாகப் பாவித்த அசுரன் புனிதனாக அவனைத் தன் மடியில் கிடத்திக் குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டு அவன் வயிற்றினில் ,இதயத்தில் தடவிப் பார்த்ததாம் நம் சிங்கம். ஏதாவது ஒருமூலையில் நாராயண நாமம் ...

மனவளர்ச்சி குன்றியவர்களை குணப்படுத்தும் குதிரையேற்றம்

Posted: 03 Sep 2016 07:07 PM PDT

- திருச்சி: குதிரையேற்ற பயிற்சி மூலம், மனவளர்ச்சி குன்றியவர்களை குணப்படுத்தும் சிகிச்சை முறையை, திருச்சியில் உள்ள தனியார் சிறப்பு பள்ளி செயல்படுத்தி வருகிறது. திருச்சி, கே.கே., நகர் உடையான்பட்டியில், மனவளர்ச்சி குன்றியவர்கள் மேம்பாட்டுக்காக, 'இன்டேக்ட்' தனியார் சிறப்புப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர் தங்கி படித்து, பல்வேறு தொழிற்பயிற்சிகளை பெற்று வருகின்றனர். 'ஹைப்பர் ஆக்டிவிட்டி' இவர்களை குணமாக்க, குதிரையேற்ற சிகிச்சை அளிக்கப் படுகிறது. ...

ஆபாச ''சி.டி''. விவகாரம்: 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட சந்தீப் குமார் கைது

Posted: 03 Sep 2016 06:51 PM PDT

புதுடில்லி: ஆபாச, 'சிடி' வெளியான விவகாரம் தொடர்பாக, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி, எம்.எல்.ஏ., சந்தீப் குமார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவதாக, அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட சந்தீப் குமாரை டில்லி போலீசார் கைது செய்தனர். டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. மாநில அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சந்தீப் ...

உறவுகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

Posted: 03 Sep 2016 06:49 PM PDT

- – பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா. வினையெல்லாம் தீர்த்துவைப்பாய் விநாயகா. – அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்

ஜி 20 மாநாடு : சீனாவில் குவியும் தலைவர்கள்

Posted: 03 Sep 2016 06:47 PM PDT

- பீஜிங் : ஜி-20 எனப்படும் வளர்ந்த நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் சீனாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று ஹாங்ழோ நகரை வந்தடைந்தார். - ஹாங்ழோ விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் தொடர்பாக இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானம் நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சீனாவுடன் மறைமுகமாக பனிப்போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அதிபரான ஒபாமா, தனது பதவிக்காலத்தில் கடைசியாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™