Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வேலையில்லா திண்டாட்டம் 5 ஆண்டுகளில் மிக அதிகம்

Posted: 29 Sep 2016 09:34 AM PDT

புதுடில்லி: கடந்த நிதியாண்டில், வேலை யில்லாதோர் எண்ணிக்கை, மக்கள் தொகை யில், ஐந்து சதவீதமாக இருந்தது. 5 ஆண்டு களில், குறைந்திருந்தஇந்த சதவீதம், தற்போது அதிகரித்துள்ளது.

மத்திய தொழிலாளர் வாரியம், வேலைவாய்ப்பு குறித்தும், வேலையில்லாதோர் குறித்தும் ஆய்வு நடத்தியது.அதன்படி,கடந்த நிதியாண்டு க்கான அறிக்கை, சமீபத்தில் வெளியிடப் பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்: கடந்த நிதி யாண்டில், வேலையில்லாதோர் எண்ணிக்கை, மக்கள் தொகையில், 5 சதவீதமாக உள்ளதுஇது, 2009-10ல், 9.3; 2011-12ல்,3.8; 2012 - 13ல், 4.7; 2013 - 14ல், 4.9 சதவீதமாக இருந்தது; 2014 - 15ம் நிதியாண்டுக்கான அறிவிக்கை வெளியிடப் பட ...

பாக்.,கிற்கு அளிக்கப்பட்ட வர்த்தக அந்தஸ்து தொடருமா?

Posted: 29 Sep 2016 09:35 AM PDT

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள, எம்.எப்.என்., எனப்படும் வர்த்தகத்துக்கு உகந்த நாடு என்ற அந்தஸ்தை, மறுபரிசீலனை செய்வதற்காக நடக்க இருந்த கூட்டம், திடீரென ஒத்திவைக்கப்பட்டுஉள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரியில், ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் உறவு மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு, 1996ல், நல்லெண்ண அடிப்படையில், எம்.எப்.என்., அந்தஸ்தை, இந்தியா வழங்கியது. இந்த அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய, இந்தியா திட்ட மிட்டுஉள்ளது.
இதற்காக, பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் நேற்று கூட்டம் ...

பழிக்குப்பழி! யூரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி: பாக்., பகுதிக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்தது;எல்லையில் பதற்றம் நிலவுவதால் மக்களை வெளியேற்ற உத்தரவு

Posted: 29 Sep 2016 10:32 AM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் நுழைந்து, பயங்கரவாதிகள் முகாம்களை, இந்திய ராணுவம் அதிரடியாக அழித்தது.

தாக்குதலைத் தொடர்ந்து, பதற்றம் நிலவுவ தால், எல்லை மாநிலங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப, சம்பந்தப் பட்ட மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரியில் உள்ள ராணுவ முகாம் மீது, 18ல், பாகிஸ்தான் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில், 18 வீரர்கள் கொல்லப்பட்டனர்; இது, நாடு முழுவ தும் கொந்தளிப்பை ...

'சார்க்' மாநாடு: நேபாளம் கெஞ்சல்

Posted: 29 Sep 2016 10:36 AM PDT

புதுடில்லி:தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு எனப்படும், 'சார்க்' அமைப்பில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு, அடுத்த மாதம், பாகிஸ்தானில் நடக்கவுள்ளது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரியில், ராணுவ முகாம் மீது, பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவவீரர்கள், 18 பேர் பலியாயினர்; இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானில் நடக்கவுள்ள, சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக மத்திய ...

காவிரி பிரச்னையில் மத்திய அரசு நடத்திய பேச்சு...தோல்வி!:அரசியல் சட்டத்தை கர்நாடகா மீறுவதாக தமிழகம் புகார்

Posted: 29 Sep 2016 10:48 AM PDT

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடகா, தமிழக அரசு பிரதிநிதிகளுக்கு இடையே, மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த கூட்டம், தோல்வியில் முடிந்தது. அரசியல் சட்டத்தை கர்நாடகா அரசு மீறுவதாக, தமிழக அரசு புகார் கூறியுள்ளது.

காவிரி விவகாரத்தில் சுமுக தீர்வை எட்டும் முயற்சியாக, தமிழக, கர்நாடக மாநில முதல்வர்க ளின் கூட்டத்தை கூட்டி, பேச்சு நடத்தும்படி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி இருந்தது.இதையடுத்து டில்லியில் நேற்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான உமா பாரதி தலைமை யில் கூட்டம் நடந்தது. தமிழக முதல்வருக்கு பதிலாக, பொதுப்பணித் துறை ...

ராணுவத்துக்கு பாராட்டு; அரசுக்கு ஆதரவு:ஒன்று சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்கள்

Posted: 29 Sep 2016 10:54 AM PDT

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ள, அனைத்துக் கட்சித் தலைவர்கள், இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்து, ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விளக்குவதற்கு, அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று மாலை, டில்லியில் நடந்தது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை யில் நடந்த இந்தக் கூட்டத்தில், ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ...

மாவட்ட தேர்தல் புகார் மையம் அமைப்பதில் தாமதம் ஏன்?

Posted: 29 Sep 2016 11:00 AM PDT

மாவட்டங்களில், தேர்தல் புகார் மையங்கள் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது.

அடுத்த மாதம், 17 மற்றும், 19ம் தேதிகளில், உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு புகார்களை எழுப்புவதற்கு வாய்ப்புள்ளது. இதற்கு வசதியாக, அனைத்து மாவட்டங்களிலும், 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையங்களை அமைக்க வேண்டியது அவசியம்.சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களை பின் பற்றி, இதுபோன்ற புகார் மையங்கள், உள்ளாட்சி தேர்தலிலும் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், பல மாவட்டங்களில், இதுவரைபுகார் மையங்கள் அமைக்கப்படவில்லை. ...

சீட்டுக்கும் ஓட்டுக்கும் பகிரங்க பேரம் உள்ளாட்சி தேர்தலில் பண புழக்கம் தாராளம்

Posted: 29 Sep 2016 11:03 AM PDT

உள்ளாட்சி தேர்தலில், பணம் மற்றும் பரிசு பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கவுன்சிலர், 'சீட்' பெறுவதற்காக, அ.தி.மு.க.,- - தி.மு.க.,வில், பலரும் முட்டி மோதுகின்றனர். அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்றி விட்டு, வேட்பாளராகும் முயற்சியிலும் பலர் இறங்கி உள்ளனர். இதற்காக, மாவட்ட செயலர் கள் உள்ளிட்ட நிர்வாகிகளை வளைக்கும் முயற்சிகள், இரு கட்சிகளிலும் நடக்கின்றன. இதற்காக, கார்களில் பணம், பரிசு பொருட்களு டன் வலம் வருகின்றனர். கட்சி அலுவலகங் களிலும், முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும், கட்சியினர் குவிந்துள்ளனர். ...

உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினர் ஒதுக்கீடு தி.மு.க., வழக்கில் தீர்ப்பு எப்போது

Posted: 29 Sep 2016 11:06 AM PDT

சென்னை:உள்ளாட்சி தேர்தலில், பழங்குடி யினருக்கு முறையான ஒதுக்கீடு வழங்க கோரி, தி.மு.க., தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று முடிந்தது. மனு மீதான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், 'உள்ளாட்சி தேர்த லில், பழங்குடியினருக்கான ஒதுக்கீடு முறை யாக வழங்கவில்லை; சென்னை மாநகராட்சி யில், ஒரு இடம் கூட ஒதுக்க வில்லை; எனவே, உள்ளாட்சி தேர்தலில், பழங்குடியின பிரிவின ருக்கு முறையான ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இம்மனு, உயர் நீதிமன்ற தனி நீதிபதி முன், நேற்று ...

சர்ஜிக்கல் ஸ்டிரைக்: பிரதமர் மோடி கருத்து

Posted: 29 Sep 2016 11:10 AM PDT

புதுடில்லி: சர்ஜிக்கல் ஆபரேஷன் குறித்து டுவிட்டரில் மோடி கருத்து தெரிவித்துள்ளார். யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திர ராணுவத்தினர் எல்லையில் புகுந்து அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இதில் 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதுலக்கு ''சர்ஜிக்கல் ஆபரேஷன்'' கை கொடுத்தது. இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியதாவது:இந்திய ராணுவ வீரர்கள், பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்க வி்ல்லை. இந்தியாவிற்குட்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை பாகிஸ்தான் புரிந்து ...

முதல்வர் உடல் நிலை முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்

Posted: 29 Sep 2016 12:57 PM PDT

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை முன்னேற்றமடைந்துள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி இரவு சுமார் 10.30 மணிக்கு சிறுநீரக தொற்று, மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 1 வார காலமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் செய்தி குறிப்பு வெளியிட்டு வருகிறது. தற்போது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ...

இந்தியா-பாக்., இடையே பதற்றத்தை தணிக்க சீனா முயற்சி

Posted: 29 Sep 2016 02:06 PM PDT

பீஜிங்:இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க தொடர்ச்சியாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இரு நாடுகளுடனும் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் கெங் சாங் பீஜிங் நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளை மேம்படுத்தி கருத்து வேறுபாடுகளை களைந்து தெற்கு ஆசிய பிராந்தியத்தின் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய பாடுபடும் என்று சீனா நம்புவதாகவும் , இந்தியா மற்றும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™