Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சிந்து நதியில் தண்ணீர் தருவதை நிறுத்த ஆலோசனை!: பாக்.,கிற்கு பாடம் கற்பிக்க மோடி அரசு தீவிரம்

Posted: 25 Sep 2016 09:40 AM PDT

புதுடில்லி:பயங்கரவாதத்தை துாண்டி விடும், பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், சிந்து நதி ஒப்பந்தப்படி, அதிக அளவு தண்ணீர் திறந்து விடுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்த, பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சமீபத்தில் நடத்திய தாக்குத லில், 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.'பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்' என, பல்வேறு கட்சிகள், அமைப்பு கள் வலியுறுத்தி வருகின்றன. 'பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் வகையில், சர்வதேச அமைப்புகளில் முறையிட ...

சுப்ரீம் கோர்ட்டில் இன்று கர்நாடகா மேல்முறையீடு

Posted: 25 Sep 2016 09:50 AM PDT

பெங்களூரு:தினமும், 6,000 கனஅடி தண்ணீர் திறந்து விடும்படி பிறப்பித்துள்ள உத்தரவை மாற்றக்கோரி, கர்நாடக அரசு தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு, தினமும், 6,௦௦௦ கனஅடி நீர் திறந்து விடும்படி, கர்நாடகா அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றுவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை, சுப்ரீம் கோர்ட்டில் விவரிக்க, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.காவிரி நீர்ப்பாசன பகுதியின், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ்., அணைகளில் உள்ள தண்ணீரை, ...

சசிகலா புஷ்பா மீது: பாய்ந்தது புது வழக்கு

Posted: 25 Sep 2016 09:55 AM PDT

மதுரை:முன் ஜாமின் பெற, சசிகலா புஷ்பா எம்.பி., தரப்பினர், போலி மனு தாக்கல் செய்த தாக, மதுரை புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா, கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா உள் ளிட்டோர் மீது, அவரது வீட்டில் பணிபுரிந்த சகோதரிகள், பாலியல் புகார் அளித்தனர். புகாரை அடுத்து, துாத்துக்குடி போலீசார், மூவர் மீதும், வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில், முன் ஜாமின் கேட்டு சசிகலா புஷ்பா தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வில், சசிகலா புஷ்பா மற்றும் ...

பஞ்சாபி என்.ஆர்.ஐ.,களிடம் ஆதரவு திரட்ட காங்., திட்டம்

Posted: 25 Sep 2016 10:12 AM PDT

புதுடில்லி:பஞ்சாபில், அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், பிரிட்டனில் வாழும் பஞ்சாப் வம்சாவளியினரிடம் ஆதரவு திரட்டும் நோக்கில், உயர்மட்டக் குழு அனுப்ப, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில், அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில், பிரதான கட்சிகள் பிரசார ஏற்பாடுகளை துவக்கி விட்டன.இந்நிலையில், பிரிட்டனில் வாழும் பஞ்சாபை சேர்ந்த இந்திய வம்சாவளியினரிடம் ஆதரவு திரட்டும் ...

'முஸ்லிம்களை சமமாக நடத்துங்கள்!':பிரதமர் மோடி வேண்டுகோள்

Posted: 25 Sep 2016 10:22 AM PDT

கோழிக்கோடு:''முஸ்லிம்களை, பாகுபாடின்றி, சமமாக நடத்த வேண்டும்; அவர்களை ஓட்டு வங்கியாக கருதக்கூடாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில், பா.ஜ., தேசிய கவுன்சிலின், மூன்று நாள் கூட்டம் நடந் தது. இதன் ஒரு பகுதியாக, ஜனசங்கம் உருவாக காரணமானோரில் ஒருவரான, மறைந்த தலை வர், பண்டித தீன்தயாள் உபாத்யாயாவின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் நடந்தது; இதில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:முஸ்லிம்களை, ஓட்டு வங்கியாக மட்டும் கருதக்கூடாது. அவர்களை, சமமாக நடத்த வேண்டும்; நம்மில் ஒருவராக பார்க்க வேண்டும். தற்காலத்தில், ...

அக்டோபா, 17, 19 :உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் நடத்தை விதிகள் அமல்: மேயர் பதவிகள் காங்கிரசுக்கு இல்லை என்கிறது தி.மு.க., :கூட்டணி அமைக்க தி.மு.க.,வுக்கு தூது விடுகிறது பா.ஜ.,

Posted: 25 Sep 2016 10:30 AM PDT

தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல், அக்., 17 மற்றும், 19ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது; தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்தன.

'மேயர் பதவிகள் காங்கிரசுக்கு இல்லை' என, தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதும், கூட்டணி அமைக்க, தி.மு.க.,வுக்கு, பா.ஜ., துாது விடும் தகவலும், அரசியல் களத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், ஊரகம், நகர்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் செயல்படு கின்றன. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உட்பட, 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 ...

சென்னை மாநகராட்சி மேயர் பதவி பெண் 'மாஜி'க்கள் போட்டா போட்டி

Posted: 25 Sep 2016 10:35 AM PDT

சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்பை பெறுவதற்கு, 'மாஜி' பெண் அமைச்சர்கள் இருவருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் இம்முறை, பெண்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 12 மாநகராட்சிகளில், ஆறு மேயர் பதவிகள், பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மேயர் பதவியும், பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்து சென்னை மேயராக வேண்டும் என, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வில் கனவோடு காத்திருந்த ஆண்கள், 'அப்செட்' ஆகி உள்ளனர். அதே நேரம், பெண் பிரமுகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.அ.தி.மு.க.,வை ...

முதல்வர் ஜெ., உடல் நிலை டாக்டர்கள் சொல்வது என்ன

Posted: 25 Sep 2016 10:47 AM PDT

சென்னை:'முதல்வர் ஜெயலலிதா, வெளிநாடு சென்று சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; ஓரிரு நாளில் வீடு திரும்புவார்' என, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால், ஐந்து நாட்களாக சென்னை, அப்போலோ மருத் துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரண மாக, சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிவிக்கபட்டது. நேற்று முன்தினம்,'காய்ச்சல் இல்லை; வழக்கமான உணவுகளை சாப்பிடுகிறார்; தொடர் கண்காணிப்பில் உள்ளார்' என, மருத் துவமனை நிர்வாகம் அறிவித்தது.இதனால், நேற்று வீடு திரும்புவார் ...

கோவையில் நடந்த வன்முறை 'வீடியோ'வில் சிக்கிய 80 பேர் கைது

Posted: 25 Sep 2016 10:50 AM PDT

கோவை:கோவையில், இந்து முன்னணி நிர் வாகி சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போது, நடந்த வன்முறை காட்சிகள் அடங்கிய, 'வீடியோ' பதிவுகளை ஆராய்ந்த போலீசார், மேலும், 80 பேரை கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார், 22ம் தேதி இரவு, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மறுநாள் நடந்த இறுதி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, இந்து இயக்க தொண்டர்கள் உட்பட, 132 பேரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக, 270 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.வீடியோ காட்சிகள் வன்முறை காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு களை ஆராய்ந்த போலீசார், மேலும், 80 பேரை ...

ரயில் கொள்ளை வழக்கில் தனிப்படை கலைப்பா?

Posted: 25 Sep 2016 01:45 PM PDT

ரயில் கொள்ளை வழக்கின் விசாரணை குழுவில், இடம் பெற்று இருந்த, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெவ்வேறு பணிகளுக்கு அமர்த்தப்பட்டு இருப்பதால், தனிப்படை கலைக்கப்படுகிறதா என, சந்தேகம் எழுந்துள்ளது.

சேலம் - சென்னை விரைவு ரயிலின் மேற்கூரையில், மர்ம நபர்கள் துளையிட்டு, ஆறு கோடி ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். ஆக., 8ல், இச்சம்பவம் நடந்தது. இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவான, எஸ்.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம், விருத்தாசலம் பகுதியில், மர்ம நபர்கள் குறித்து துப்பு துலக்க, சேலம் கமிஷனர், சஞ்சய் குமார், தனிப்படை அமைத்து ...

கருவிலேயே குழந்தைகளின் தோல் ஆரோக்கியம் காக்கும் உபாயம்: இங்கிலாந்து மருத்துவர்கள் பரிசோதனை

Posted: 25 Sep 2016 02:32 PM PDT

லண்டன்: குழந்தைகள் கருவில் இருக்கும் போதே அவற்றின் பொது ஆரோக்கியம் மற்றும் தோல் ஆரோக்கியத்தை காக்கும் உபாயத்தை இங்கிலாந்து மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக குழந்தைகள் பிறந்து இரண்டு அல்லது 7 வயது ஆகும் வரை பல விதமான நோய் தொற்றுகளுக்கு ஆளாகிவிடுகின்றன. குறிப்பாக இந்தியா போன்ற வெப்ப நாடுகளில்
குழந்தைகளுக்கு தோல் சம்பந்தமான நோய்கள் அதிக அளவில் வருகின்றன.
தோல் மிருது தன்மை குறைவு, வறண்டு போதல், கரும்புள்ளிகள் தோன்றுதல், சிரங்கு, எக்சிமா, கொப்புளங்கள் போன்ற தோல் நோய்களால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™