Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


விளக்கம் தேவை.?

Posted: 25 Sep 2016 11:26 AM PDT

அன்பிற்கினிய தமிழ் சான்றோர்களுக்கு இனியவனின் இனிய வணக்கங்கள்.? சமீபத்தில் எனக்கேற்பட்ட இரு சந்தேகங்களுக்கு தங்களிடம் விளக்கம் பெற ஆவலாக உள்ளேன். சந்தேகம் 1 : மகாகவி பாரதியின் "தேடிச்சோறு நிதந்தின்று" எனும் கவிதையை நாம் அனைவருமே படித்திருப்போம்..அதில் வரும் "கொடுங்கூற்று" என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் விளக்கம் என்ன.?? சந்தேகம் 2 : தமிழ் மொழி திராவிட மொழியின் குடும்பமென்று ஒரு கருத்தும், "த்ரவிட" என்னும் வார்த்தையே "தமிழ்" என்று திரிந்ததாய் ஒரு கருத்தும், "தமிழ்" மொழியே திரிந்து "த்ரவிட" ...

உடல் வலி ஏற்பட வாயு காரணமா?

Posted: 25 Sep 2016 10:58 AM PDT

பொதுநல மருத்துவர் டாக்டர் கு.கணேசன் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரை. வயிற்று வலி, நெஞ்சு வலி, தசை வலி என எல்லா உடல் வலிகளுக்கும் வாயுக் கோளாறு ஒரு காரணம் என்கிறார்கள். இது சரியா? சரியில்லை. இந்த இடத்தில் பொருத்தமான ஓர் உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம். என் நண்பரின் தந்தைக்குத் திடீரென நெஞ்சில் வலி வந்தது. அவரோ, அது 'கேஸ் டிரபி'ளாக இருக்கும் என நினைத்துக் கவனிக்காமல் விட்டுவிட்டார். நாளாக ஆக வலி அதிகரித்தது, நண்பர் வலுக்கட்டாயமாக என்னிடம் அவரை அழைத்துவந்தார். பரிசோதித்துப் பார்த்தபோது, ...

குட்டி இளவரசன் - புதுவரவு

Posted: 25 Sep 2016 10:14 AM PDT

ஈகரையின் தலைமை நடத்துனரான நம் ராஜா-அர்ச்சனா தம்பதியருக்கு இன்று காலை 11.30 மணியளவில் ஒரு குட்டி இளவரசன் பிறந்திருக்கிறான். தாயும், சேயும் நலம். புது உலகை காண வந்திருக்கும் குட்டி ராஜாவுக்கு வரவேற்புகளும், அர்ச்சனாவுக்கு நன்றிகளும், வழக்கம் போல ராஜாவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.   வாழ்த்துக்கள் ராஜா!

திரும்பி வந்த மான்குட்டி - சிறுகதை தொகுப்பு

Posted: 25 Sep 2016 09:31 AM PDT

குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் எழுதிய 'திரும்பி வந்த மான்குட்டி' சிறுவர்கள் சிறுகதை தொகுப்பு

https://drive.google.com/file/d/0B7m_6bc3CbRuTEkzOGlEb3B5Z0E/view?usp=drivesdk

நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது…!

Posted: 25 Sep 2016 09:09 AM PDT

- நாளை நமக்கு காபியா? பாலா?' என்பதில் புதைந்திருக்கிறது வாழ்க்கையின் ரகசியம்! – பாலா சேலம் – —————————————– - ''இந்த நாள உன் டைரில குறிச்சிக்கோ''ன்னு வாழ்க்கைகிட்ட சவால் விட முடியவில்லை. ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாய் பிரச்னைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது… – நாஸீர் மொஹமத் – —————————————- - காலையிலே செம கடுப்பு , பல் டாக்டரை பார்க்க போனேன் , அங்க லேடி டாக்டர் இருந்தாங்க திரும்பி வந்துட்டேன். - ஏன் என்றால் நாம் எந்த பொண்ணுகிட்டயும் #பல்லை காட்டி நிற்க கூடாது !!! - ----------------------------------- படித்ததில் ...

விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்

Posted: 25 Sep 2016 08:36 AM PDT

கண் டாக்டரிடம் சென்றால் , ஒவ்வொரு லென்ஸாக மாற்றிப்போட்டு , " இப்போ நல்லா தெரியுதா ? " என்று நம்மிடம் கேட்பார். எந்த லென்ஸில் நம்முடைய பார்வை நன்றாகத் தெரிறதோ , அந்த லென்ஸை வைத்து நமக்குக் கண்ணாடி செய்து கொடுப்பார்கள் . எந்த லென்ஸ் போட்டாலும் , பொருந்துகிற கண் யாருக்கும் இருக்காது . ஆனால் அய்யன் வள்ளுவர் , எந்த வார்த்தை போட்டாலும் , பொருந்தி வருவதுபோல சில குறட்பாக்களை எழுதியிருக்கார் . அவற்றைப் பார்க்கலாமா ? வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் . ( குற்றங்கடிதல் ...

மகரிஷிகளின் வாக்கு - தொடர் பதிவு

Posted: 25 Sep 2016 08:13 AM PDT

நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…!

Posted: 25 Sep 2016 07:16 AM PDT

- நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு உன் கையைப் பிடிக்கும் வாய்ப்பு கிட்டியதால். ======================= உன் விழியில் கருவண்டு. அது துளைப்பதோ என் மனத்தை. ======================= நீ யாரெனக் கேட்டவரிடம் என் சொந்தம் என்றேன். எனக்குச் 'சொந்தம்' ஆவாயா? ======================= அச்சச்சோ என நீ உச்சுக் கொட்டுவது இச்சுக் கொட்டுவது போல இனிக்கிறது. ======================= தக்காளி பிடிக்காது என்றாய் நீ. அதைக் கேட்டு அழுது அழுது மேலும் மேலும் எப்படி சிவந்துவிட்டது ...

உப பாண்டவம் புத்தகம் தேவை

Posted: 25 Sep 2016 06:04 AM PDT

நண்பர்களே!

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் உப பாண்டவம் புத்தகம் இருந்தால் பகர்ந்திடுங்கள்

யார் தலைவன்.??

Posted: 25 Sep 2016 05:54 AM PDT

நின் பசிபோக்க தன் ஊண் தந்து - நின் துயர்
தாங்க துனையாய் நின்று - நின் உரிமை
மீட்க தன் குருதி சிந்தி நிற்பவன்
யாரோ அவனே தலைவன்.!!

- தி.கோ இனியவன்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook

Posted: 25 Sep 2016 05:54 AM PDT

ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...

The Secret Tamil Ebook
தரவிறக்கம் செய்ய

சுய அறிமுகம்

Posted: 25 Sep 2016 05:51 AM PDT

பெயர்: தி.கோ இனியவன்
சொந்த ஊர்: மதுரசேனபட்டினம் (எ) தற்போதைய சென்னை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம்
பொழுதுபோக்கு: தமிழ் படிப்பது
தொழில்: சுயதொழில்
மேலும் என்னைப் பற்றி:
நான் புரட்சிகவி பாரதிதாசன் அவர்களின் நல்ல ரசிகன்.
தூயத்தமிழை பயில்வதில் ஆர்வமுள்ளவன்..தமிழனும் ஆழ்கடலில்
நீந்தவந்த கத்துகுட்டி.

செய்திகள் என்ன சொல்லுது?

Posted: 25 Sep 2016 05:12 AM PDT

1. ஐயப்பன் பிரம்மச்சாரிதான் ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல. கேரள மூத்த தலைவர் பேச்சு. பெண்களை வெறுக்காதவர் ஐயப்பன் என்கிறதாலேயே தான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி கேட்கிறாங்க. அனுமதி கொடுங்களேன். அதை ஏன் மறுக்கிறீங்க. 2. ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும். வங்கி ஆளுநர். ரகுராம் ராஜன். சரிதான். அரசியல்வாதிகளின் ஆதிக்கமும செல்வாக்கும் மதிக்கப்படாது என்பதாலே தானே அவங்க தலையீடு உள்ளது. 3. விஜய் மல்லையாவின் ரூ.பாய்.6,630 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம் ...

மதுரை விமான நிலையத்திற்கு மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு

Posted: 25 Sep 2016 05:09 AM PDT

மதுரை : மதுரை விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவிற்கு நேற்று மாலை கடிதம் ஒன்று வந்துள்ளது. இதில், மதுரை விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தஞ்சையில் இருந்து வந்த அந்த மிரட்டல் கடிதத்தில், என்னைப் போன்ற இடைநிலை ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையான மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாமல் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். இல்லாவிட்டால் மதுரை விமான நிலையம் ஆர்டிஎக்ஸ் வைத்து தகர்க்கப்படும் ...

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்!

Posted: 25 Sep 2016 04:26 AM PDT

– கல்வி என்பது மிக, மிக இன்றியமையாதது. இப்பொழுதல்ல, எப்போதுமே அது உண்மை. இப்போது மட்டுமல்ல எப்போதுமே கல்விக்கான பாடுகள் நிறையவே உண்டு. கல்வி மறுக்கப்பட்டவர்கள்; கல்வி அனைவருக்கும் வேண்டும் என குரல் கொடுத்தவர்கள். இவர்களை மறந்து கல்விப்பணி கிடையாது. – நாம் ஆசிரியர் தினமான நிகழ்வு நடக்கும் இந்த வாரத்தில் அதிகம் அறியப்படாத பெண் ஆசிரியரின் மேன்மையை படித்து நெகிழ்வோம். மகாராஷ்டிராவில் உள்ள நைகான் என்ற சிற்றூரில் 1831ம் ஆண்டு சாவித்ரிபாய் புலே பிறந்தார். இவர் பள்ளியில் படிப்பதற்கு சமூகத்தில் ...

புதுக்கவிதைகள்.

Posted: 25 Sep 2016 04:16 AM PDT

மனதிற்கிசைவாய்…!!

தொடங்கிய வேலைகள் இன்னும்
முடிவுபெறாமல் அப்படியே இருக்கிறது.
அதற்கடுத்ததாய் காத்திருக்கும் வேலைகள்
எப்பொழுது தொடங்குவதென
வழியறியாமல் திகைக்கிறது மனம்
திட்டமிட்ட வேலைககள் முடிக்கவே
இயலாத சுமையின் பாரம் தாங்காமல்
தவிக்கையில் சட்டென எதிர்பாராமல்
நிறைவேறி விட்டது எந்தவொரு
வில்லங்கமுமில்லாமல் திட்டமிடாத
சிலவேலைகள் மனதிற்கிசைவாய்…!!
ந.க.துறைவன்
*

என் காதல் வெள்ளம்

Posted: 25 Sep 2016 12:51 AM PDT

அணை தடுத்தாலும் அணையாது என் காதல் வெள்ளம்   உயிர் எடுத்தாலும் உறங்காது என் காதல் உள்ளம்   மொழி புரிந்தும் மொழியாது என் காதல் மௌனம்   வழி அறிந்தும் வழியாது என் காதல் ஜனனம்   காதல் இருந்தும் காதலிக்காது என் காதல் எண்ணம்   -ஜ.கு.பாலாஜி-

மனைவியை பெயர் சொல்லாமல் ‘அன்பே, கண்ணே, மணியே’ என்று அழைக்கிறாயே…

Posted: 24 Sep 2016 11:44 PM PDT

@sankarshri பஸ்ல ஜன்னல் கண்ணாடிய திறக்கறதுக்குன்னு தனியா ஜிம்முக்கு போவணும் போல… முடியல! – ————————————- @iamVariable 'கடைக்குப் போயிட்டு வா'னு சொன்னாக்கூட பேசாம போவோம். 'சும்மாதானே இருக்க… கடைக்குப் போயிட்டு வா'னு சொல்லும்போதுதான் எரிச்சல் வரும். – —————————————- - ''கண்ணே! என் நண்பன் வந்திருக்கான்… காபி எடுத்துட்டு வா தங்கமே!'' ''கல்யாணமாகி 25 ஆண்டுகள் ஆகியும் மனைவியை பெயர் சொல்லாமல் 'அன்பே, கண்ணே, மணியே' என்று அழைக்கிறாயே… பாராட்டுகிறேன் நண்பா!'' ''அட, நீ வேறப்பா! ...

ஏ வந்தேறியே.!!

Posted: 24 Sep 2016 11:31 PM PDT

வஞ்சக சூழ்ச்சினாலே வந்தேறிகள்
எமை வந்து ஆண்டால் - அஞ்சிடும்
இனமென்று நினைத்தாயோ, நின்
குருதியும் சிவப்பென்று மறந்தாயோ.??

- தி.கோ இனியவன்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (180)

Posted: 24 Sep 2016 11:25 PM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…!

Posted: 24 Sep 2016 10:02 PM PDT

படம் : நெஞ்சில் ஓரு ஆலயம் இசை : MS விஸ்வநாதன் பாடியவர் : PB ஸ்ரீநிவாஸ் வரிகள்: கண்ணதாசன் – நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை – முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை – ஆயிரம் வாசல் இதயம் ...

ஆயிரம் முறை அணைத்தாலும்…

Posted: 24 Sep 2016 08:05 PM PDT


-
என்னை நீ
ஆயிரம் முறை
அணைத்தாலும்

நான்
நேசிப்பதெல்லாம்

அந்த
ஆயிரத்து ஒன்றாவது

அணைப்பைத்தான்!


——————-

-கோகிலா தங்கசாமி
புதிய தாலாட்டுகள் – தொகுப்பிலிருந்து

குங்குமம் டாக்கீஸ்

Posted: 24 Sep 2016 07:54 PM PDT

- * உலகில் அதிக சம்பளம் வாங்கும் டி.வி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் பாலிவுட் குயின் பிரியங்கா சோப்ரா! கடந்த 2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரை சுமார் 65 கோடி ரூபாய் வரை சம்பாதித்திருக்கிறாராம். 'குவான்டிகோ' தொடரில் நடிக்கும் பிரியங்கா, விரைவில் வரவிருக்கும் 'பே வாட்ச்' தொடரிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். * ''இனிமேல் நடிகர்களை நம்பி சினிமா இருக்காது; இப்போது கதையும் உள்ளடக்கமும்தான் ஒரு படத்தை ஓட வைக்க முடியும்'' என்றிருக்கிறார், இயக்குநர் கரண் ஜோஹர். * ''பல ...

கூக்கூ கீக்கீ

Posted: 24 Sep 2016 07:08 PM PDT

ஆஹா! உலகம் வளருதே! ஆசை ஆசை மலருதே! ஏஹேய்! எங்கும் புதுமையே! எல்லாம் எல்லாம் இனிமையே! – கூக்கூ கீக்கீ பாடுவோம் குட்டிக் கரணம் போடுவோம் பூக்கும் பூவை நோக்குவோம் புத்தம் புதுசாய் ஆக்குவோம்! – விஞ்ஞா னத்தின் விந்தைகள் விண்ணைத் தாண்டும் சிந்தைகள் பிஞ்சுக் குள்ளே மேதைகள் பேட்டை தோறும் வேட்டைகள்! – எக்கச் சக்கம் வாய்ப்புகள் எட்டுத் திக்கும் வெற்றிகள்! துக்கம் தோல்வி அச்சமா? தூக்கிப் போடு மொத்தமா! – கிழக்கும் மேற்கும் ஒன்றுதான் கருப்பும் வெளுப்பும் ஒன்றுதான் சுழலும் ஆண்பெண் ஒன்றுதான் சமச்சீர் ...

தோல்வி என்பது…

Posted: 24 Sep 2016 07:07 PM PDT

- – தோல்வி என்பது வாழ்க்கையின் முடிவல்ல வெற்றியின் துவக்கம்! – தோல்வி என்பது விதியின் வலி அல்ல விதியை மாற்றும் வழி! – தோல்வி என்பது தலைகுனியும் அவமானமல்ல தலை நிமிரும் அடையாளம்! – தோல்வி என்பது வெட்கப்படும் செயல் அல்ல வெல்லத் தூண்டும் வீரம்! – தோல்வி என்பது முள் குத்தும் பாதை அல்ல முன்னேறச் சொல்லும் பாடம்! – தோல்வி என்பது மிரள வைக்கும் பூதம் அல்ல அனுபவம் தரும் தேவதை! – தோல்வி என்பது துன்பத்தின் நினைவு அல்ல தூங்க விடாத கனவு! – தோல்வி என்பது கிழிந்த புத்தகம் அல்ல வாழ்க்கையின் ...

நான் பாதி இலக்கிய எழுத்தாளர் ஆயிட்டேன்யா...!!

Posted: 24 Sep 2016 06:43 PM PDT


-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™