Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பஞ்சாப் தேர்தலில் பா.ஜ., - காங்., கூட்டணிக்கு...வாய்ப்பு?:கெஜ்ரிவாலை வீழ்த்த இரு கட்சிகளும் வியூகம்

Posted: 24 Sep 2016 07:28 AM PDT

பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலி தளம் ஆட்சி மீது, அனைத்து மட்டத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அக்கட்சியுடன் கூட்டு சேர்ந்து, சட்டசபை தேர்தலை சந்திக்க, பா.ஜ., விரும்பவில்லை. அதனால், பஞ்சாபில் அசுர வேகம் எடுக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, 'அடக்க' காங்கிரசுடன், 'கூட்டு' சேர, பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

பா.ஜ.,வும், காங்கிரசும் எதிரிகள். அப்படியிருக்க, இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க முடியுமா? அதற்கேற்ற சூழ்நிலை, பஞ்சாபில் ஏற்பட்டுள்ள தால், நிச்சயம் கூட்டணி ...

உள்துறை அமைச்சகம் பெயரில் போலி ஆவணம்... அம்பலம்!:78 சீனர்கள் இந்தியா வந்து சென்றதாக அதிர்ச்சி தகவல்

Posted: 24 Sep 2016 07:38 AM PDT

புதுடில்லி:சீனாவைச் சேர்ந்த, 78 பேர், இந்திய உள்துறை அமைச்சகத்தின் பெயரில், போலி யாக, பாதுகாப்பு ஒப்புதல் கடிதம் வழங்கி, டில்லி யில், 2014ல் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில், பங்கேற்றது, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் அம்பலமாகியுள்ளன.

டில்லியில், 2014ல், அக்டோபர் மாதம், ஆசிய - பசிபிக் மருத்துவ மாநாடு நடைபெற்றது. தனி யார் அமைப்பு நடத்திய இந்த மாநாட்டில், பல் வேறு நாடுகளில் இருந்து, பிரதிநிதிகள் பங்கேற் றனர்; சீனாவில் இருந்து, 78 மருத்துவ நிபுணர் கள், கலந்து கொண்டனர். இந்நிலையில், ...

தி.மு.க., கூட்டணியில் த.மா.கா., : ராகுல் முடிவுக்கு காத்திருக்கும் காங்.,

Posted: 24 Sep 2016 08:02 AM PDT

தி.மு.க., கூட்டணி யில், த.மா.கா., சேரும் பட்சத்தில், காங்கிரஸ் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து முடிவு செய்ய, திருநாவுக்கரசர் டில்லி சென்றுள்ளார்.

சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் உட்பட, நான்கு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தி.மு.க., போட்டியிட்டது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கா ததால், உள்ளாட்சி தேர்தலுக்கு, கூட்டணியைபலப்படுத்த முடிவெடுத்துள்ளது. இதனால், த.மா.கா., உள்ளிட்ட கட்சிகளை இணைக்க, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேச்சு நடத்தி உள்ளார். இது,காங்கிரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக காங்., ...

தமிழகத்தில் குறைகிறது சாகுபடி பரப்பு :மத்திய வேளாண் துறை எச்சரிக்கை

Posted: 24 Sep 2016 08:37 AM PDT

தமிழகத்தில், பயிர் சாகுபடி பரப்பு குறைந்து வருவதை, மத்திய வேளாண் துறை அம்பலப் படுத்தி உள்ளது.

தமிழகத்தில், 2016 - -17ல், உணவு தானிய சாகுபடி பரப்பை, 98.4 லட்சம் ஏக்கராக அதி கரிக்க, அரசு திட்ட மிட்டுள்ளது; அதேபோல உற்பத்தியை, 1.47 கோடி டன்களாக உயர்த்தவும் முடிவு செய்துள்ளது. இதற்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசு நிதியில் இருந்தும்,
விவசாயிகளுக்கு, பல சலுகைகள் வழங்கப் படுகின்றன.
ஆனால், கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு, தமிழகத்தில் உணவு தானிய சாகுபடி பரப்பு குறைந் துள்ளது. இதனால், உணவு உற்பத்தி பெருமளவு குறையும் என ...

பலத்த மழையால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள்... தத்தளிப்பு!:மீட்பு பணியில் களமிறங்கினர் ராணுவ வீரர்கள்

Posted: 24 Sep 2016 09:39 AM PDT

ஐதராபாத்:ஆந்திரா, தெலுங்கானா மாநிலங் களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, ராணுவம் கள மிறங்கி உள்ளது. 'மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அங்கு பீதி நிலவுகிறது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்ற ழுத்த தாழ்வு நிலையால், ஆந்திரா, தெலுங் கானா மாநிலங்களில், சில நாட்களாக, கன மழை பெய்து வருகிறது. ஆந்திராவில், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில், பலத்த மழை பெய்து வருகிறது.ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி ...

தமிழகம் முழுதும் 900 'டாஸ்மாக்' கடைகள்...அகற்றப்படுமா?:அரசு முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 24 Sep 2016 09:48 AM PDT

சென்னை:தமிழகம் முழுவதும், பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே, 900 மதுபான கடைகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. 'அந்தக் கடைகளை எப்போது வேண்டுமானாலும், அரசு அகற்றிக் கொள்ள லாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர் நாராயணன் தாக்கல் செய்த மனு:'மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் இருந்து, 50 மீட்டர் தொலைவுக் குள்ளும், மற்ற பகுதிகளில், 100 மீட்டர் தொலைவுக்குள்ளும், மதுபான கடைகளை திறக்கக் கூடாது' என, மதுபான சில்லரை விற்பனை விதிகளில் ...

'யூரி தாக்குதலை மறக்கவே மாட்டோம்':பாக்.,கிற்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

Posted: 24 Sep 2016 10:21 AM PDT

கோழிக்கோடு:''ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரியில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம்; அதில் இறந்த, 18 ராணுவ வீரர்களின் தியாகங் கள் வீண் போகாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில், பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி வந்திருந்தார். இதையொட்டி, பா.ஜ., சார்பில், கோழிக்கோட்டில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; இதில், பிரதமர் மோடி பேசியதாவது:அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கர வாதத்தை ...

முதல்வர் ஜெயலலிதா 'டிஸ்சார்ஜ்' எப்போது?

Posted: 24 Sep 2016 10:43 AM PDT

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, முதல்வர் ஜெயலலிதா, வழக்கமான உணவு களை உட்கொள்வதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல் நலம் சீராகி வருவதால், 'டிஸ்சார்ஜ்' குறித்து, இன்று முடிவாகும் என, தெரிகிறது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட, முதல்வர் ஜெயலலிதா, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், கடந்த, 22ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவால் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. நேற்று முன்தினம் மதியம், 'காய்ச்சல் இல்லை; வழக்கமான உணவுகளை, ஜெயலலிதா உட்கொள் கிறார்' என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ...

உச்சகட்ட பாதுகாப்பில் கோவை; 400 பேர் அதிரடி கைது:5 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு 8 ஐ.பி.எஸ்., அதிகாரிகள்!

Posted: 24 Sep 2016 11:59 AM PDT

கோவை:மத கலவரத்தைத் தொடர்ந்து, கோவை மாநகரில் வரலாறு காணாத போலீஸ் பாது காப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. பதினைந்து போலீஸ் ஸ்டேஷன்களை கொண்ட நகரின் பாதுகாப்பு பணியில், எஸ்.பி., முதல் ஐ.ஜி., அந்தஸ்திலான, எட்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 5,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில், மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட, இந்து முன்னணி நிர்வாகி சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தின்போது, திடீர் கலவரம் வெடித்தது. நகரின் பல இடங்களில் உள்ள ஏழு வழிபாட்டு தலங்கள், கடைகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெரியகடை வீதியில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. ...

திருப்பதி உயிரியல் பூங்காவை தேசிய பூங்காவாக மாற்ற முடிவு

Posted: 24 Sep 2016 01:31 PM PDT

திருப்பதி:திருப்பதி உயிரியல் பூங்காவை, தேசிய பூங்காவாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.திருப்பதியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா 298 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சர்க்கஸ் கூடாரங்களிலிருந்து மீட்கப்பட்ட சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட விலங்குகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.மிகவும் அரிதான வெள்ளைப் புலிகளும் இங்கு உள்ளன. எனினும், இங்கு குறைந்த எண்ணிக்கையிலான விலங்குகளே பராமரிக்கப்படுவதால், மத்திய அரசின் உதவித்தொகையும் குறைவாகவே கிடைத்து வருகிறது. அதனால் மண்டல அளவிலான இந்தப் ...

தந்தை சடலத்தை கை வண்டியில் கொண்டு சென்ற மகன்: வைரலாக பரவுது வீடியோ

Posted: 24 Sep 2016 01:47 PM PDT

பிலிப்பித் (உ.பி.): தந்தையின் சடலத்தை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் தராததால், கைவண்டியில் வைத்து மகன் கொண்டு சென்ற அவலம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.உத்தரபிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் பிலிபித் மாவட்டம் மதினாஷா பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி துளசிராம் 70, உடல்நலக்குறைவால் நேற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகன் சூரஜூடன் வந்தார். காலை 8 மணிக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் தாமதம் செய்ததால், காலை 11 மணியளவில் இறந்தார். சூரஜ், தனது தந்தை ...

வேகமாக கரையும் கிரீன்லாந்து பனிப்பாறைகள்: இயற்கை ஆர்வலர்கள் கவலை

Posted: 24 Sep 2016 02:11 PM PDT

கோபன்ஹேகன்: நாள்தோறும் பெருகி வரும் வாகனப் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வௌியேறும் புகையால் உலகம் வெப்பமயமாதல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பருவநிலை மாற்றம் , கடல் மட்டம் உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் டென்மார்க் நாட்டின் ஆர்கஸ் பல்கலை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் உலகில் மிகப் பெரிய பனித்தீவாக இருக்கும் கிரீன்லாந்து பனிப்படலம் மிக வேகமாக கரைந்து வருவதாக எச்சரித்துள்ளனர்.
சுமார் 23 லட்சம் சதுர கிலோமீ்ட்டர் அதாவது நம் இந்திய ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™