Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சித்திரக்கவி கேட்டதுண்டா?

Posted: 24 Sep 2016 12:34 PM PDT

சித்திரக்கவி கேட்டதுண்டா? ஆசுகவி, மதுரகவி,சித்திரக்கவி(ஓவியக்கவி),வித்தாரக்கவி என நாற்கவி உண்டென்பர். பாடலை வரிவரியாகப் படித்தாலும் சரி சுழல் சுழலாகப் படித்தாலும் சரி ஒரே மாதிரிதான் இருக்கும். நேராக வரிவடிவிலும், சுழியாக ஓவிய வடிவிலும் அமைந்துள்ளது. இதை சுழிகுளம் என்பர். இது பரிதிமால் கலைஞர் பாடல்......... கவிமுதி யார் பாவே விலையரு மாநற்பா முயல்வ துறுநர் திருவழிந்து மாயா பொருள் : வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள், விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும். அப்பாடலைப் ...

இணையத்தில் எங்காவது படங்களை சேமிக்கிறீர்களா? எச்சரிக்கை.

Posted: 24 Sep 2016 09:59 AM PDT

இன்று செல்பீ என படங்களை எடுத்து நண்பர்களிடையே சமூகத் தளங்களில் பரிமாறுவது சாதாரணமாகி விடுகிறது. தனிப்பட்ட படுக்கை அறைக் காட்சிகளைக் கூட இணையத்தில் வெளியிடுவதில் பெண்கள் உட்பட தயக்கம் காட்டுவதில்லை. வேடிக்கையாக உற்சாகத்தின் உச்சியில், இவற்றின் பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாது பதிவு செய்வதில் ஏன் இவ்வளவு மகிழ்ச்சி,தெரியவில்லை. பின்னர் தலை மாற்றி,உடலை மாற்றி, அந்தரங்கம் பொது இடத்திற்கு  வரும் போது  காலம் கடந்து விடுகிறது.இந்தப் படங்களை எப்படி திருடுகிறார்கள்? மிகச் சுலபம். **Flickr,instagram,pinterest,முகநூல் ...

பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா?

Posted: 24 Sep 2016 09:52 AM PDT


நேற்றைய தினம் இரவு இணையத்தில் படித்ததில் பிடித்த, இந்தப் பாடலில் சில விசயங்கள் உண்டு. அவை அப்புறம்,முதலில் பொருள் என்ன? உங்களால் இப்படி கவிதை படைக்க முடியுமா? யார் எழுதிய பாடல்?

அலக கசட தடர ளகட
கலக சயச கதட - சலச
தரள சரத தரத ததல
கரள சரள கள

அலக கசடது அடர் அளம் கட 
கல் அக சய சக தட  - சலச 
தரள சர தத ரத ததல 
கரள சரள கள 

அப்பாவுக்குன்னா தெரியும் !

Posted: 24 Sep 2016 09:45 AM PDT

அப்பாவுக்குன்னா தெரியும் !

ஒருவர் - இது என்ன செடி தெரியுமா?

மற்றவர் - எங்க அப்பாவுக்குன்னா தெரியும் !

ஒருவர் - அப்ப அவரிடம் கேட்டுச் சொல்லேன் !

மற்றவர் - அவர் இறந்து பத்து வருடம் ஆகிறதே!

கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க...

Posted: 24 Sep 2016 09:42 AM PDT

பழைய கணினி CRT  திரை ஊதாக் கதிர்களை வெளியிடுவதாக இருந்தன. தற்போது வரும் LCD,LED,Plasma  திரைகளில் அவற்றின் பாதிப்பு அதிகம் இல்லாவிட்டாலும், நீல ஒளிக்கதிர் கண்களுக்கு பாதிப்பை தரலாம்.இந்த நீல ஒளி கண்களுக்கும் மூளைக்கும்  சோர்வைத் தருவதுடன் கிட்டப்பார்வையையும் ஏற்படுத்துகிறது. தற்போது வரும் கணினிகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் வகையை சேர்ந்த கணினித் திரைகள்,  ஆயிரக்கணக்கான சிறிய பிக்சல்களை உருவாக்குகின்றன. நாம் திரையில் சாதாரணமாக பார்த்தாலும், நம் கண்கள் ஒவ்வொரு பிக்சலையும் தனியாக அவதானிக்க ...

சிவ ஊர்வலத்தில் ஆன்மாவின் பயணம்...

Posted: 24 Sep 2016 09:21 AM PDT

இப்பொழுது முழு உலகின் ஆன்மாக்களின் திரும்பும் பயணம் நடக்கபோகின்றது..எங்கே திரும்பும் பயணம் என்கின்றீர்களா? வேலை முடிந்த பணியாளர் எங்கே செல்வார்?வேஷம் கலைத்த நடிகன் எங்கே செல்வான்?இரை தேடிய பறவை இறுதியில் எங்கே செல்லும்?வீட்டுக்குத்தான்..                           நம் உடல் எனும் கூண்டில் வசிக்கும் ஆன்மா எனும் உயிர் பறவைக்கும் ஓரிடம் உண்டு.. அதைத்தான் பிரம்ம தத்துவம், முக்தி வீடு...என்றழைக்கின்றோம்.. இந்த திரும்பும் பயணம் எதற்கு?ஆன்மா உடலில் அநேக பிறவிகள் எடுத்து கர்மம் செய்து களைத்துவிட்டது...அதற்க்கு ...

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

Posted: 24 Sep 2016 09:02 AM PDT

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

தீய குணங்களை அதாவது...

❌  காமம்
❌  கோபம்
❌  பொறாமை
❌  வெறுப்பு
❌  பிடிவாதம்
❌  ஞானச்செறுக்கு
❌  பற்று
❌  தேக அபிமானம்

இப்படி சொன்னால் உப்பு, காரம், புளி இல்லாத, ருசியே இல்லாத உணவைப் போல் யாரும் காது கொடுத்து கேட்கமாட்டார்கள்.  சரி இப்ப கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்.. 

கிருஷ்ணர் யாரை கொலை  செய்யச்சொன்னார் ?

எல்லாருக்கும் மேல ஒருத்தர் அங்க இருக்கார்...

Posted: 24 Sep 2016 08:55 AM PDT

உலகினர் அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை மேல இருக்குற ஆண்டவன் எல்லார்த்தையும் பாத்துக்குவார்..வெளிநாட்டில் கூட தான் ஒரு தெய்வத்தை வணங்கி கொண்டிருந்தாலும் தன்னையும் அறியாமல் "ஓ மை காட்" என்று அவர்களையும் அறியாமல் சொல்கின்றனர்..                      அந்த நேரத்தில் மேலே இருக்கும் ஒருவராகட்டும், அல்லது காட் என்று சொன்னாலும் சரி, அவர் யாரென்று அறியாமல் சொல்வதுதான் வியப்பாக இருக்கின்றது..உலகத்தில் எந்த ஒரு வேதங்களாகட்டும், புராணங்களாகட்டும், சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆகட்டும், புனித நூல்கள் ஆகட்டும் ...

சொல்

Posted: 24 Sep 2016 08:35 AM PDT

ஒரு வார்த்தையை வீணாக்கிட்டீயே அக்கா.. இன்று தம்பி வில்வத்துடன் பேசிக்கொண்டிருந்த போது என்னக்கா...இந்த வார்த்தையை வீணடிச்சிட்டீயே.. இதற்கு உரியவர்களிடம் சொல்லியிருந்தா...மகிழ்ந்திருப்பாங்களே என்ற கூறினார்கள்... பொட்டில் அடித்த மாதிரி இருந்தது..வார்த்தைகளை நாம் எவ்வளவு எளிதாக செலவு செய்கின்றோம்... செலவழிக்கின்ற வார்த்தைகளால்...நாம் பெறும் பயன்கள் என்ன?தீமைகள் என்ன?யோசித்து வார்த்தைகளை விட கற்றுள்ளோமா? விலங்குகளோ,பறவைகளோ தேவையற்று ஒலிப்பதில்லையே.... சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை ...

சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு...

Posted: 24 Sep 2016 08:21 AM PDT

சிவ தந்தை நினைவில் சாப்பிடு..சிந்தைகள் ஒன்றாகும் பார்த்திடு... பொதுவாக உணவு உண்ணும் பொழுது யாருடனும் பேசாமல்உணவை பார்த்து சாப்பிடு என்பார்கள்.. ஆனால் யாரையும் பார்க்காமல் நாம் சாப்பிட்டாலும் மனதில் ஏதாவது கவலையோ,துன்பமோ..இதை நினைத்துக் கொண்டு பேசாமல் சாப்பிட்டால் அதுவும் நமக்கு பாதிப்புதான்.. சாப்பிடும்பொழுது அந்த உணவு சாத்வீகமானதா என்று பார்க்க வேண்டும்.. அதாவது அந்த உணவில் எந்த ஒரு உயிரினமும் துன்பப்பட்டு அதனுடைய உடலை கொடுத்திருக்க கூடாது.. இரண்டாவது நாம் சாப்பிடும் உணவு புலன்களை தவறான ...

எங்கே போவேன்

Posted: 24 Sep 2016 08:19 AM PDT

இன்றைய பெண் குழந்தையின் கதறலாய்...முடியாது தொடரும் வன்முறையின் வலியாய் .முகநூலில் 15000 பகிர்வுகள் பகிரப்பட்ட கவிதை அப்பான்னு நினச்சேன் அசிங்கமாய்த் தொட்டான் சகோதரன்னு பழகினேன் சங்கடப்படுத்தினான் மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான் உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றது... பாதுகாப்பை நாடி பள்ளிக்குச் சென்றேன் ஆசிரியனும் அரவணைத்து மறுக்காதே மதிப்பெண்ணும் குறையுமென்றான்... நட்புக் கரமொன்று நண்பனாய் தலைகோதி தூங்கென்றான் மரத்த மனம் மருண்டு ...

‘‘தலைவரோட சொத்து மதிப்பு எவ்வளவு தேறும்..?’’

Posted: 24 Sep 2016 08:03 AM PDT

- ''எதுக்குய்யா 'துவரம்பருப்பு கிலோ 30 ரூபாய்'னு மைக்ல அறிவிக்கறே..?'' ''ரெண்டே நிமிஷத்துல மேடையைச் சுத்தி எவ்ளோ கூட்டம் கூடுதுனு மட்டும் பாருங்க தலைவரே!'' – சரவணன், கொளக்குடி. – ———————————————– ''வெளியில போயி தண்ணி குடிச்சுட்டு வாங்க… அப்புறமா டெஸ்ட் எடுக்கணும்!'' ''கடை 12 மணிக்குத்தான் திறக்கும் நர்ஸம்மா..!'' – எல்.இரவி, செ.புதூர். – ——————————————– ''தலைவரோட சொத்து மதிப்பு எவ்வளவு தேறும்..?'' ''அது நூறு கண்டெயினர் லாரியைத் தாண்டும்..!'' – பெ.பாண்டியன் – ——————————————-

சிங்கப்பூர்-சென்னை விமானத்தில் கைபேசி தீப்பிடித்தது

Posted: 24 Sep 2016 07:50 AM PDT

- A Samsung Galaxy Note 2 smartphone caught fire on an IndiGo flight from Singapore to Chennai. ----------------------------------------------- - சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்திற்குள் செல்போன் தீப்பிடித்து புகை வெளியேறியதால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. சிங்கப்பூரில் இருந்து நேற்று (23) சென்னை நோக்கி இண்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. சென்னையை நெருங்கியபோது விமானத்திற்குள் புகை வெளியேறும் வாசனையை சில பயணிகள் உணர்ந்தனர். இதுபற்றி விமான ஊழியர்களுக்கு ...

தவ வாழ்க்கை வாழ ஆசைப்படுவதாக சொன்னாராம் அந்த சீடர்!’’

Posted: 24 Sep 2016 07:48 AM PDT

- ''தகவல் அறியும் உரிமைச் சட்டத்துல என்ன கேட்டாங்கன்னு தலைவர் இப்படிக் கொதிக்கறார்..?'' - ''ஓட்டுக்கு எப்படியெல்லாம பணம் பட்டுவாடா பண்ணினீங்கன்னு கேட்கறாங்களாம்..!'' -- – பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி. - --------------------------------------------------------------------- தத்துவம் மச்சி தத்துவம் -- என்னதான் போர்ட்டர் பாரம் சுமப்பார்னாலும், அவரை நம்ம குடும்ப பாரத்தையெல்லாம் சுமக்கச் சொல்ல முடியாது! – பெ.பாண்டியன் – —————————————– – ''இடைத்தேர்தலிலும் கூட்டணி தொடரும்னு சொன்னதுக்கு ...

வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது

Posted: 24 Sep 2016 07:39 AM PDT

சென்னை: போலி கையெழுத்திட்டு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை எம்.ஆர்.சி.நகர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர் மோகன் என்பவர் கடந்த 17ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். - அதில், "எங்கள் வங்கி கிளையில் பெண் சிறப்பு உதவியாளராக பணியாற்றி வரும் ராஜி பசந்த் ராவ் (54) என்பவர், வாடிக்கையாளர் செயின்ட் தாமஸ் கேத்திரில் பசிலிகா என்பவரின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கு ...

பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது

Posted: 24 Sep 2016 05:25 AM PDT

சென்னை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறியவும், முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வுகள், சூறாவளியை கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு சேவைகள், சுற்றுச் சூழலை அறிவது, காற்றின் திசையை அறிந்து கொள்ளவும் 377 கிலோ எடை கொண்ட 'ஸ்கேட்சாட்–1' என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோளை ...

சங்கதாரா - "காலச்சக்கரம்" நரசிம்மா

Posted: 24 Sep 2016 04:36 AM PDT

பொன்னியின் செல்வனை வாசித்தவரா நீங்கள் அதிர்ச்சி அடைவது உறுதி.   http://www.mediafire.com/download/mbzdoa8x8lzhs9i/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE.pdf என்றும் அன்புடன் செல்லா

மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்

Posted: 24 Sep 2016 04:34 AM PDT

ஸ்ரீகுருவே நம: மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள் உலகின் ஞான பீடம், நமது பாரததேசம் என்பதில் ஐயம் இருக்க முடியாது. நமது பரத கண்டத்தில் எங்கேனும் ஓர் இடத்தில் எப்போதும் உலக மக்களுக்கு நமது கொடையாகும் வேதங்கள் ஒலித்துக் கொண்டே இருப்பவை என்பதிலும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை. ரிக், யஜுர், சாம , அதர்வணம் என வேதங்கள் நான்கு. இவை சதுர்வேதம் என்னும் ஒரே சொல்லால் குறிப்பிடப்படுபவை. நம் அமுதத்தமிழ் சதுர்வேதத்தை நான்மறை என நவிலும் . பொதுவாக மறை என்றும் வேதங்கள் , குறிப்பிடப்படுபவை. மறை நான்கிலும் ...

அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம்

Posted: 24 Sep 2016 04:22 AM PDT

ஸ்ரீ குருவே நம: அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் (வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா - அருட்பெருஞ்ஜோதி அகவல்) வடலூர் அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் – மானுட சமயங்களைக் கடந்த 'சத்' நெறியாளர். அவர் உலக மக்களுக்குக் கண்பிக்க விழைந்தது  ஒளியாகிய அறிவே வடிவான பரம்பொருள் –  உலக ஜீவராசிகள் அனைத்தும் அறிவைக் கொண்டு வாழ்தலால் அது சமயப் பொதுமை .ஆகையால் அருட்பா அகவல் ஈகரையில் இலக்கியப் பகுதியில் பதிவிடம் காண்கின்றது.   தேமதுரத் தமிழில் பரம்பொருளை அழைத்து - வாழ்த்தி மகிழும்  வடலூர் ...

மாக்சிம் கார்க்கி - தாய்

Posted: 24 Sep 2016 03:28 AM PDT

மாக்சிம் கார்க்கி - தாய் நூல் அறிமுகம் - http://www.eegarai.net/t128795-டொபிக் நூல் தரவிறக்கம் - https://upload.wikimedia.org/wikipedia/commons/9/9d/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf

சென்னையில் 26ம் தேதி திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது

Posted: 24 Sep 2016 03:12 AM PDT

-- சென்னை: திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து 21 திருக்குடைகள் உபய உற்சவ ஊர்வலமாக சென்று திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்தாண்டு சென்னை பாரிமுனையில் உள்ள சென்ன கேசவபெருமாள் கோயிலில் இருந்து 21 திருக்குடைகள் விசேஷ பூஜைகளுடன் வரும் 26ம் தேதி காலை 10 மணியளவில் தாரை, தப்பட்டை, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்படுகிறது. ஊர்வலத்தில் ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகுமார், முன்னாள் ...

மறைநெறி நவிலும் நிறைமொழி

Posted: 24 Sep 2016 01:01 AM PDT

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் ) {நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது} அவையடக்கம் வெயிலுக்கு இடும்விளக்குப் போலும்யான் நீதிநூல் கூறல் 1.வெயிலினைச் சோதிசெய்வான் விளக்கிடல் போலுங்காகங் குயிலினுக் கிசையுணர்த்துங் கொள்கையே போலு நட்டம் மயிலினுக் குணர்த்துங் கான வாரண மெனவும் யாவும் பயிலுல கிற்கு நீதி பகரயான் துணிவுற் றேனால். பதப்பொருள்: வெயில் – சூரியன் சோதிசெய்தல் – காட்டுதல். விளக்கு – கைவிளக்கு. ...

ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

Posted: 24 Sep 2016 12:36 AM PDT

ஜோசப் murphy யின் ஆழ்மனத்தின் அற்புத சக்தி தமிழ் pdf
யாராவது தந்து உதவ முடியுமா

ஜோக்கர் திரைப்படம் காலத்தின் தேவை

Posted: 24 Sep 2016 12:01 AM PDT

ஜோக்கர்.-தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல். வாழ்த்துகள் ராஜூ முருகன் சார். இத்தனை பச்சையாக நாட்டை தோலுரித்துக்காட்ட முடியுமா?கைதட்டிக்கொண்டே இருக்க வைத்த நச் வசனங்கள். கதாநாயகன் என்று யாராவது வருவார்களே என பொதுப்புத்தியோடு இருந்த எனக்கு, ஜனாதிபதியாக தன்னை எண்ணி வாழ்கின்ற சோமசுந்தரத்தின் வாழ்க்கையோடு நானும் இணைந்தேன்.... சமூக அக்கறை உள்ளவர்கள் காசு கொடுத்து திரையரங்கில் பார்த்தால் அதில் வரும் பணத்தைக்கொண்டு கழிப்பறை கட்டித்தரப்போகிறோம் என்று இப்படத்தை தயாரித்தவர்களால் மட்டுமே கூற ...

அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்

Posted: 23 Sep 2016 11:17 PM PDT

ஸ்ரீ குருவே நம: அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது 09.09.2016 அன்று 'நேர்மைக் கடைப்பிடி' எனும் தலைப்பின் கீழ் ( ஆன்மீகம் – இந்து பகுதியில் ) "குரு அஷ்டகம்" அறிமுகம் மற்றும் முதல் ஸ்லோகம் ஆகிய இரண்டையும் இணைத்து நம் ஈகரையில் பதித்தோம். அப்போதுதான் நாம் புதியதாக இணைந்தமையால், பதிவு விதி நுட்பங்களின் அறியா நிலை. இனி குரு அஷ்டகத்தின் எஞ்சிய பாடல்களை "அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்" ...

தேசிய பூங்காவாக மாறுகிறது திருப்பதி உயிரியல் பூங்கா

Posted: 23 Sep 2016 11:15 PM PDT

- திருப்பதி உயிரியல் பூங்காவை, தேசிய பூங்காவாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திருப்பதியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா 298 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சர்க்கஸ் கூடாரங்களிலிருந்து மீட்கப்பட்ட சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட விலங்குகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மிகவும் அரிதான வெள்ளைப் புலிகளும் இங்கு உள்ளன. எனினும், இங்கு குறைந்த எண்ணிக்கையிலான விலங்குகளே பராமரிக்கப்படுவதால், மத்திய அரசின் உதவித்தொகையும் குறைவாகவே ...

ஆன்மிக தகவல்கள் - தொடர்பதிவு

Posted: 23 Sep 2016 11:05 PM PDT


-
கோவை -
பாப்பநாயக்கன்பாளையத்தில் புரட்டாசி 2வது சனிக்கிழமையை
முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி - பூதேவியுடன்
பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ சீனிவாச பெருமாள்.
-

உண்மை - படித்ததில் பிடித்தது

Posted: 23 Sep 2016 10:11 PM PDT

உண்மை ஒரிஜினல் எலுமிச்சையை காரில் நசுக்கிவிட்டு, கெமிக்கல் எலுமிச்சையை குடித்து களிக்கிறோம்..!! காது குத்தியதற்கான அடையாளமும், மூக்கு குத்தியதற்கான அடையாளமும், தெரிந்து விடுகின்றன.. ஆனால் முதுகில் குத்தியதற்கான அடையாளம் தெரிவதில்லை..!! இங்கிலிஷ்ல பேசி வெள்ளைக்காரன் கம்பனில வேலை வாங்குறது பெருசில்ல.. தமிழ்ல ஒரு வார்த்தை கூட தெரியாம நம்மகிட்ட வேலை வாங்குற அவன் தான் பெரியாளு.. இருட்டுல திடுக்குனு ஒரு உருவத்த பாத்தா அது கடவுள்ன்னு யாரும் நினைக்கிரதில்ல.. கடவுள் மேல அம்முட்டு நம்பிக்கை..!! நாக்கு ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(443)

Posted: 23 Sep 2016 06:53 PM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™