Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'ஸ்மார்ட்' போலீஸ் ஸ்டேஷன்கள் நாடு முழுவதும் அமைக்க திட்டம்

Posted: 23 Sep 2016 09:35 AM PDT

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை தொடர்ந்து, காவல் துறையை நவீனப்படுத்தும் நோக்கத்துடன், 'ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன்' அமைப்பது குறித்து, மத்திய அரசு, தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

நாடு முழுவதும், நிர்வாக நடவடிக்கைகளை எளிமைப்படுத்தி, நவீன தொழில்நுட்ப வசதி களை பயன்படுத்தும் வகையில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை, பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு எடுத்து வருகிறது.
அரசு உத்தரவு :
அதன் ஒரு கட்டமாக, 'ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன்' அமைப்பது குறித்து ஆராயும்படி, மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட, ...

'பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைத்தால் நிதி பெறுவதில் சிரமம் இருக்காது'

Posted: 23 Sep 2016 09:48 AM PDT

சென்னை: ''பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டை இணைப்பது நல்லதே; ரயில்வே திட்டங்களுக்கு, நிதி பெறுவதில் சிரமம் இருக்காது,'' என, ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோஹன் கூறினார்.

சென்னையில் நடந்து வரும், ரயில்வே திட்டப் பணிகளை ஆய்வு செய்த பின், அமைச்சர் ராஜன் கோஹன் கூறியதாவது: ரயில் சேவையில், நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
ரயில்களை தாமதம் இன்றியும், விபத்து இன்றியும் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.
ரயில்வே பட்ஜெட்டை, பொது பட்ஜெட்டு டன் இணைப்பது, ரயில்வே துறைக்கு நல்லது தான்; திட்டங்களுக்கு நிதிபெறுவதில், சிரமம் இருக்காது; ...

உள்ளாட்சி தேர்தல் தள்ளி போகுமா? : மாநில தேர்தல் கமிஷன் திடீர் யோசனை

Posted: 23 Sep 2016 09:50 AM PDT

உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போடும் யோசனையில், மாநில தேர்தல் கமிஷன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில், ஊரகம் மற்றும் நகர்ப்புறம் என, இரு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. மொத்தம், 1.50 லட்சத்திற்கும் மேற் பட்ட பதவிகள் உள்ளன; இதில், பெண்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், அடுத்த மாதம், 24ம் தேதியுடன் முடிகிறது; அதற்குள் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் தேதி, எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, சில நாட்களாக இருந்து வருகிறது. ஆனால், பெண்கள் மற்றும் எஸ்.சி., - -எஸ்.டி., ...

முதல்வர் ஜெ., வீடு திரும்புவது எப்போது? : பூரண குணமடைய வேண்டி கட்சியினர் வழிபாடு

Posted: 23 Sep 2016 09:53 AM PDT

திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப் பட்டுள்ள, முதல்வர் ஜெயலலிதா, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார். தீவிர சிகிச்சைக்கு பின், அவர் உடல் நலம் தேறியுள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம், நேற்று தெரிவித்தது.

'பூரண நலம் பெற்றுள்ள முதல்வர், தற்போது ஓய்வில் இருக்கிறார்; விரைவில் வீடு திரும்பு வார்' என, ஆளுங்கட்சி நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் ஆகியோர் தெரிவித்தனர். அதே நேரத்தில், முதல்வர் பூரண குணமடைய வேண்டி, அ.தி.மு.க.,வினர், சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.
திடீர் உடல்நலக் குறைவு : ...

கறுப்பு பணம் பதுக்கல் புள்ளிகள்: வருமான வரித்துறை எச்சரிக்கை

Posted: 23 Sep 2016 10:13 AM PDT

தமிழகத்தில், கறுப்பு பண பதுக்கல்காரர்களுக்கு தரப்பட்ட காலக்கெடு முடிய, சில நாட்களே உள்ளன. இதையடுத்து, அவர்களுக்கு வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்ப துவங்கியுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய், வரி ஏய்ப்பு மூலம் கிடைக்காமல் போகிறது. அதனால், கறுப்பு பணத்தை வெளிக் கொண்டு வர முடிவு செய்தோம்; அதற்காக, தாமாக முன்வந்து, வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தை, ஜூனில் அறிவித்தோம். இதற்கு வரவேற்பு இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு கறுப்பு பணம் வெளியே வரவில்லை. அதனால் தான், அதிக அளவில் அதிரடி ...

தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் கொடுக்க 'முடியாது!': இருக்கும் நீர் பெங்களூரு, மைசூருக்கு மட்டுமே*: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது கர்நாடக அரசு

Posted: 23 Sep 2016 10:34 AM PDT

பெங்களூரு:'கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர், பெங்களூரு, மைசூரு மற்றும் காவிரி படுகையில் உள்ள பகுதிகளின் குடிநீர் தேவைக்காக மட்டுமே திறந்து விடப்படும்; தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க முடியாது' என, கர்நாடகா சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, இரு மாநிலங்களிலும் பதற்றம் உருவானது; கர்நாடகாவில் வன்முறை வெடித்தது.இந்நிலையில், 'தமிழகத்திற்கு, வினாடிக்கு, 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, காவிரி கண்காணிப்பு குழு, 19ம் தேதி ...

இந்திய விமான படையின் பலம் மேலும் வலுவடைகிறது! :'ரபேல்' போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்

Posted: 23 Sep 2016 10:47 AM PDT

புதுடில்லி:இந்திய விமானப் படைக்கு, அதிநவீன ஏவுகணையுடன் கூடிய, 36, 'ரபேல்' ரக போர் விமானங்களை வாங்குவதற்காக, பிரான்ஸ் நாட்டுடன், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது.

இந்திய விமானப் படைக்கு, நவீன போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக, பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன், முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பேச்சு நடத்தியது. பின் வந்த மோடி அரசு, பிரான்ஸ் நாட்டின், 'டசால்ட்' நிறுவனம் கோரியிருந்த விலை, மிகவும் அதிகமாக இருப்பதாக தெரிவித்தது.
மோடி பேச்சு
தொடர்ந்து, பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, இது தொடர்பாக பேச்சு ...

சசிகுமார் இறுதி ஊர்வலத்தில் வன்முறை கோவையில் பஸ்கள் உடைப்பு; போலீஸ் வாகனம் எரிப்பு

Posted: 23 Sep 2016 11:57 AM PDT

கோவை:கோவையில் கொலை செய்யப்பட்ட, இந்து முன்னணி நிர்வாகியின் இறுதி ஊர்வலத்தில், வன்முறை வெடித்தது. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் உடைக்கப் பட்டன; பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன.

துடியலுாரில், இரண்டு மணி நேரம் நடந்த களேபரத்தில், போலீஸ் வேன் கொளுத்தப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டன. கோவை மாவட்ட, இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார், 35, நேற்று முன் தினம் இரவு, மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். அவரது உடல், கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்து முன்னணி, பா.ஜ., மற்றும் இந்து அமைப்பினர், நேற்று காலை மருத்துவமனை யில் திரண்டனர். ...

பத்திரிகையாளர் கொலை வழக்கில் லாலு மகனுக்கு கோர்ட் 'நோட்டீஸ்'

Posted: 23 Sep 2016 12:12 PM PDT

புதுடில்லி: பத்திரிகையாளர் கொலை வழக்கில், பீஹார் அரசு, லாலு பிரசாத்தின் மகன், அக்கட்சியின் முன்னாள் எம்.பி.,க்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம், கட்சி தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், பத்திரிகை நிருபர் ராஜ்தேவ் ரஞ்சன், மே மாதம், சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக, அவரது மனைவி ஆஷா ரஞ்சன், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு:
ராஷ்ட்ரீய ஜனதா தள முன்னாள் எம்.பி., சஹாபுதீன் மீது, கொலை உட்பட, பல்வேறு வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக எழுதியதால், என் கணவர், ...

இந்தியாவில் தாக்குதலுக்கு இலக்குகளை நிர்ணயித்துவிட்டோம்: பாக்., ராணுவம்

Posted: 23 Sep 2016 12:15 PM PDT

புதுடில்லி: 'இந்தியா தாக்குதல் நடத்தினால், எதிர் தாக்குதல் திட்டம் தயாராக உள்ளது; இந்தியாவில் எங்கெங்கு தாக்குதல் நடத்துவது என்ற இலக்குகளை நிர்ணயித்து விட்டோம்' என, பாகிஸ்தான் ராணுவத்தை மேற்கோள் காட்டி, அந்நாட்டு, 'டிவி' செய்தி வெளியிட்டு உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாம் மீது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இரு நாடுகள் இடையே யான உறவு, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 'பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை, சர்வதேச அமைப்புகளில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி ...

திபெத் வம்சாவளியினருக்கு 'பாஸ்போர்ட்' வழங்க உத்தரவு

Posted: 23 Sep 2016 01:55 PM PDT

புதுடில்லி: இந்தியாவில் வசிக்கும், திபெத்திய வம்சாவளியினருக்கு, 'பாஸ்போர்ட்' வழங்கும்படி, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
'இந்தியா குடியரசான, 1950, ஜன., 26க்கு பின் பிறந்த அனைத்து திபெத்தியர்களும் இந்திய குடிமக்கள்' என்ற சட்டம், 1955ல் இயற்றப்பட்டது. பின், '1987, ஜூலை, 1க்குள் பிறந்திருக்க வேண்டும்' என, 2003ல், இந்திய குடிமக்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், லோப்சாங் வாங்யால் உள்ளிட்ட, மூன்று பேர், தமக்கு, 'பாஸ்போர்ட்' வழங்க உத்தரவிடக் கோரி, வழக்கு தொடர்ந்தனர்.
விசாரித்த, டில்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் ...

நடுவானில் குழந்தை மரணம்; பெற்றோர், பயணிகள் கண்ணீர்

Posted: 23 Sep 2016 03:02 PM PDT

ராய்ப்பூர்: இதய நோயால் பாதிக்கப்பட்ட, இரண்டு மாத குழந்தை இறந்ததை அடுத்து, பெங்களூரு செல்ல வேண்டிய விமானம், ராய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவிலிருந்து, கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு, தனியார் விமானம், நேற்று முன் தினம் காலை, 9:00 மணிக்கு புறப்பட்டது.இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த, இரண்டு மாத ஆண் குழந்தைக்கு, பெங்களூரில் சிகிச்சை அளிக்க திட்டமிட்டிருந்த பெற்றோர், அந்த விமானத்தில் பயணித்தனர்.
ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, குழந்தையின் உடல்நிலை மோசமானது. இதனால், விமானத்தை, ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™