Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உனக்காக.....

Posted: 23 Sep 2016 10:57 AM PDT

உனக்காக   ரோஜாவை பிடிக்கும் போது  எவ்வளவு அழகாய் தெரிகிறாய்  இந்த  ராஜாவை பிடித்து பார்  இன்னும் பேரழகாய் தெரிவாய்....  உன் அருகில்  நான் இருக்கும் போது  பூவுக்கு முத்தம் குடுத்து  என்ன பயன்  அது திரும்பியா தரப்போகிறது....  கடல் நீர் உன்னை ஒரு முறை  தொட்டுவிட்டதால் வாழ்நாள்முழுவதும்  அலையடிக்கிறாயே...  பார்  கடல் அலையும் நுரை தள்ளுகிறது  உன் பாதம் பட்ட இடத்தில்  உனக்காக...  -ஜ.கு.பாலாஜி -

உலகில் நடந்த விசித்திரமான சம்பவங்கள்.

Posted: 23 Sep 2016 10:42 AM PDT

அப்பிள் போன்கள் வெளியான நிலையில்,கூகிள் தனது திறன்பேசியை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்த நிலையில் வந்திருக்கிறது NoPhone Air . ஐபோனில் இயங்குதளம்,ஸ்கிரீன்,பாட்டரி,சேமிப்பு,புளூடுத்  என பல வசதிகள் இருக்கும்.ஆனால் இந்த நொ போனில் எதுவும் இருக்காது. சாதாரண கைபேசி போன்ற பிளாஸ்டிக்கினாலான  ஒன்றின் உள்ளே வெற்றிடமே இருக்கும்.நெடெர்லாந்து நாட்டை சேர்ந்த இங்க்மர் லார்சன் இதை உருவாக்க, கிக்ஸ்டாட்டெர்  நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்னுட்பம் இல்லாத நேரடி உலகுடன் இணைக்கும் இதன் விலை  12 டாலர்களாகும். ...

நான் இரசித்த பாடல் - 2

Posted: 23 Sep 2016 10:32 AM PDT

இந்த வாரம் இரசித்து ருசித்துக் கேட்ட பழைய பாடல் அகத்தியர் என்ற படத்தில், வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால்.....என்று தொடங்கும் பாடல்,உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் வரிகளை, டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் இணைந்து பாடியுள்ளார்கள். நடித்தவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், ஆர்.எஸ்.மனோகர். இசை குன்னக்குடி வைத்தியநாதன்.சுவரங்களும் அட்சரங்களும் சேர்ந்து வந்த இராகமாலிகை பாடல் இதுவாகும். இதுபோல் வேறு பாடல்கள் இருக்கிறதா தெரியவில்லை. இந்தப் பாடலில் உள்ள பல வரிகள் இராகங்களை இணைத்து  எழுதப்பட்டுள்ளது. ...

கம்பன் காட்டும் கன்னல் தமிழ்

Posted: 23 Sep 2016 10:19 AM PDT

கம்பன் காட்டும் கன்னல் தமிழ் இராமாயணத்தில் வரும் குகன் இராமனுக்கு மூத்தவனாகும் அண்ணனா அல்லது இளையவனாகும் தம்பியா ! குகன் இராமனுக்கு அண்ணந்தானாம். ஆம் சுந்தர காண்டம் – காட்சிப்படலப் பாடல் 23 இல் தெய்வமாக்கவி கம்பர் அப்படித்தான் குகனை நமக்கு அடையாளம் காட்டுகின்றார் ஆழநீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு, எம்பி நின்தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவாள். ( சுந்தர காண்டம் - காட்சிப் படலம்-23) ஸ்ரீராமன், கங்கைக்கரையில் குகனிடம் , இலக்குவணனைக் ...

நம்மை நாம் அறிவோமே !

Posted: 23 Sep 2016 10:02 AM PDT

வேதங்களை விளங்கிக் கொள்வோம்: முண்டக உபநிஷத் என்னும் முண்டக வேதாந்தம். கேள்வி : ஒருவர் எது ஒன்றை மட்டும் அறிந்துகொண்டால் உலகில் அனைத்தையும் அறிந்ததாக ஆகும் ? பதில் : தன்னை அறியும் அறிவை அறிந்து கொண்டால். [அதாவது தான் தாங்கி இருக்கும் இந்த உடம்பு என்பது அல்ல நான். ஆனாலும் அதனுள் இருப்பதும் இயங்குவதும் ஆகும் ஆத்மனே என்பதே அந்த எல்லாம் அறிந்த அறிவு] தன்னை அறியத் தனக்கொடு கேடில்லை -- திருமூலர் அருளிய திரிமந்திரம்

. திருமந்திரம் என்னும் தேன்

Posted: 23 Sep 2016 09:41 AM PDT

தெரிந்துகொள்வோம்  தேன் தமிழை -8 ( திருமூலர் அருளிய திருமந்திரம்) ஓர் அறிமுகம்: திருமந்திரம் என்னும்  நூல் தவயோகத் தந்தை திருமூலரின் படைப்பு. அந்த அற்புதம் ஒரு  யோகமும் ஞானமும் தோய்ந்த ஒரு கல்விக் கருவூலக் களஞ்சியம்.  அந்த யோகமும் ஞானமும்  பக்திநோக்கில் பார்க்கப்பட்டு நமது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. அந்த அமரகாவியத்தை உலக மக்கள் அனைவருக்கும்  ஆக்கும் வகையில்  அமைக்கப்படுவதே, "தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -  திருமந்திரம் என்னும் தேன்" என்னும் ...

ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Posted: 23 Sep 2016 09:36 AM PDT

தெரிந்து கொள்வோம்  தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)                                           ஔவைக்குறள்                                    (ஔவையார் அருளியது)                                     வீட்டு நெறிப்பால்                                 1.பிறப்பின் நிலைமை. 4.            தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்                உருவத்தா லாய பயன். (1-04) தெளிவுரை : உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு ...

அறம் உரைக்கும் ஆத்திச்சூடி

Posted: 23 Sep 2016 09:33 AM PDT

தெரிந்து கொள்வோம்   தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)  "தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி"                                       ஆத்திச்சூடி                            (ஔவையார் அருளியது) 01. அறஞ் செய விரும்பு. பதவுரை: அறம் – தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவை. செயல்  -  கடந்த கால நிகழ்வுகளை அனுபவமாகக் கொண்டு நிகழ் காலத்திலும்   எதிர்காலத்திலும் எண்ணம் , சொல் ,செயல் ஆகிய மூன்றினாலும் தூய்மையோடு வாழ்தல். விரும்புதல் ...

ஔவையின் அகவலில் யோக நெறி

Posted: 23 Sep 2016 09:31 AM PDT

தெரிந்து கொள்வோம் தன் தமிழை 5. (ஔவையார் அகவல்)   தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி (ஔவையார் அருளிய விநாயகர் அகவல்) ஒன்றேயாகிய பரம் பொருளை ஔவையார் ஸ்ரீ குருதேவராகவே காண்பதாக அகவல் வரிகள் அமைந்துள்ளன. இந்த அகவல் ஒரு அற்புதமான யோக நூல். அகவலின் இறுதி அடி, "வித்தக விநாயக! விரைகழல் சரணே"  என்று முடிவடைகிறது. ஆகையால் அகவலின் இரண்டிரண்டு அடிகளையும், 'வித்தக விநாயக' என்பதை முன்னிட்டு பொருள் கொள்வது ஔவையின் உபதேசத்தைப் புரிந்து கொள்ள உதவும். நாயகர் என்றால் மேலானவர்- தலைவர் என்று பொருள். அதாவது ...

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

Posted: 23 Sep 2016 09:30 AM PDT

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் ) நன்றே நவிலும் கொன்றை வேந்தன் (ஔவையார் அருளியது) "தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி"                                               நூல். 1. அன்னையும் பிதாவும் முன்னறி  தெய்வம். பதப்பொருள்: அன்னை – தன்னைப் பெற்றெடுத்தத் தாய். பிதா – தன் பிறப்பிற்குக் கரணமாகிய தந்தை. முன் – காலத்தாலும் இடத்தாலும் முதலாவதாக இருத்திக்கொளல். அறி – அறிந்து , அறிகின்ற, அறியும். தெய்வம் – வினை விநாசகர்; ...

மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Posted: 23 Sep 2016 09:27 AM PDT

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1 மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் (பரஞ்சோதி முனிவரின் சீடரும்  சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய திருவெண்ணைநல்லூர் மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய   சிவஞான போதம்) உலகில் சதாசர்வ காலமும் பிறப்பு -  இருப்பு -  இறப்பு என்னும் சுழலில் சிக்கி, இருப்பிற்காக ஆயுள் முழுவதும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியனவற்றையே  வழிகாட்டும் துணையாகக் கொண்டு அவற்றின் பொருட்டே உழைத்து வாழ்வின் துயரக் கடலினின்று மீளாமல்  அவதியுற்றுக் ...

ஆண்டவன் கட்டளை - சினிமா விமர்சனம்

Posted: 23 Sep 2016 08:41 AM PDT

- 'மேட்ச் ஜெயிக்குதோ தோக்குதோ.. நான் எறங்கி நாலு சிக்ஸாவது விளாசுவேன்' என்பதே விஜய் சேதுபதி பாணி. 'காந்தி'யாக இதில் செஞ்சுரியே அடித்திருக்கிறார். சென்னையில் வீடு தேடும் மதுரைக்காரனாக, மாமாவிடம் கெஞ்சும்போது, நாசரிடம் பணிவைக் காட்டும்போது, கோர்ட் கவுன்சிலிங் காட்சியின்போது, கடைசி காட்சியில் ரித்திகாவிடம் பேசும்போது என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உடல்மொழி.. தனித்தனி மாடுலேஷன். - வாய் பேச முடியாதவராக நடிக்க நேரும்போது, கோர்ட்டில் வழக்கறிஞரிடம் சைகை பாஷையில் குமுறுகையில் ...

பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம்

Posted: 23 Sep 2016 08:06 AM PDT

பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் புதுச்சேரி: மரங்களைக் காப்பாற்ற சாமியும், சாமியைக் காப்பாற்ற பூட்டும் போட்டு புல்லரிக்க வைத்திருக்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள். புதுச்சேரி, மிஷன் வீதி - ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் வேப்ப மரம், அரச மரம், கல்யாண முருங்கை மூன்று மரங்களும் ஒன்றாக வளர்ந்திருக்க அதனடியில் இந்த சிறிய அழகிய விநாயகர் வீற்றிருக்கிறார். ஆனால் அவரது கையில் பூட்டு போட்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதை சிலையை நிறுவியவர்களில் ஒருவரான பெட்டிக்கடை வேலுவே சொல்கிறார். "சென்ற ...

திராவிடத்தால் விழ்தோம்-குணா

Posted: 23 Sep 2016 07:41 AM PDT

குணா அவர்கள் எழுதிய திராவிடத்தால் விழ்தோம் புத்தகம்..


பதிவிறக்க இங்கே சொடுக்கவும்


குறிப்பு : 

இரண்டு பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை ஒரு பக்க 
புத்தகமாக மாற்றி கொடுக்கவும்... 
Ezhumalaimfm@gmail.com

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்

Posted: 23 Sep 2016 07:36 AM PDT

-- ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும் திரயோதசி திதியன்று மாலை வேளையில் பிரதோஷ பூஜை சிறப்பாக எல்லா சிவாலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. – இதிலும், ஜோதிமின்னம்மை உடனாய அமிர்தகடேஸ்வரர் அருள்பாலிக்கும் திருக்கடம்பூர் ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ கால பூஜை மிகவும் சிறப்பு பெற்றது. பிரதோஷ கால பூஜையின்போது மட்டுமே உற்சவர் திருமேனியை தரிசிக்க முடியும். – உற்சவர் திருமேனி மற்ற நாட்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும், நாம் காண இயலாது. திருக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள். – நன்றி- ...

அத்தி மரத்தைத் துளைக்கும் பனை !

Posted: 23 Sep 2016 07:12 AM PDT

அத்தி மரத்தைத் துளைக்கும் பனை ! மனிதன் மட்டுமா துளை போடுவான்? ஒரு அத்தி மரத்தைப் பனை மரம் எப்படித் துளைத்தூச் சென்றுள்ளது பாருங்கள் (இடம் - கானகம் , சென்னை) ! -

மாலை கட்ட உதவாத பூ - விடுகதைகள்

Posted: 23 Sep 2016 06:24 AM PDT

விடுகதை 1. இரண்டு குழந்தைகள், மூன்று ஆசிரியர்கள். அது என்ன? - 2. சீப்பு உண்டு; தலை வார முடியாது. பூ உண்டு; மாலை கட்ட உதவாது. அது என்ன? - 3. சிவப்புப் பெட்டியில் மஞ்சள் முத்துக்கள். அது என்ன? - 4. உமி போலப் பூப்பூக்கும். சிமிழ் போலக் காய் காய்க்கும். அது என்ன? - 5. அம்மா சேலையை மடிக்க முடியாது. அப்பா சில்லறையை எண்ண முடியாது. அது என்ன? - 6. பச்சை வீட்டில் சிவப்பு வாசல். அது என்ன? - 7. சின்னஞ்சிறு கதவுகள், செய்யாத கதவுகள், திறந்தாலும் மூடினாலும் சத்தம் போடாத கதவுகள். ...

பறக்கும் பறவைகளே

Posted: 23 Sep 2016 05:03 AM PDT

பறக்கும் பறவைகளே   { கனமழையால் வெள்ளநீரில் மூழ்கிய ஐதராபாத் மார்க்கெட் பகுதி. } பறக்கும் பறவைகளுக்கு தெரியுமா பரிதவிக்கும் மக்கள் படும் பாடு மழை நீர் அதிகமானாலும் கஷ்டம் குறைந்தாலும் கஷ்டம் . பறக்கும் பறவைகளே , நீர் பகர்ந்தீடு கவலையில்லை உங்களுக்கு கொடுத்துவைத்தவர்கள் நீங்கள் . ரமணியன் (  பறவைகள் தெரியவில்லையெனில் zoom செய்யவும் )

செய்திகள் என்ன சொல்லுது?

Posted: 23 Sep 2016 03:57 AM PDT

1. ஐயப்பன் பிரம்மச்சாரிதான் ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல. கேரள மூத்த தலைவர் பேச்சு. பெண்களை வெறுக்காதவர் ஐயப்பன் என்கிறதாலேயே தான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி கேட்கிறாங்க. அனுமதி கொடுங்களேன். அதை ஏன் மறுக்கிறீங்க. 2. ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும். வங்கி ஆளுநர். ரகுராம் ராஜன். சரிதான். அரசியல்வாதிகளின் ஆதிக்கமும செல்வாக்கும் மதிக்கப்படாது என்பதாலே தானே அவங்க தலையீடு உள்ளது. 3. விஜய் மல்லையாவின் ரூ.பாய்.6,630 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம் ...

நண்பா...! நம் வீட்டிற்கு வா....!

Posted: 23 Sep 2016 12:54 AM PDT

நண்பா...!  நம் வீட்டிற்கு வா....! நீ ஒரு இந்தியன் , நாம் பெற்ற சுதந்திரம் ஒன்றும் கழட்டி போட்ட சட்டை கிடையாது.... ஆம் நம் தாய் நாடு தாய் தரும் தந்தை தரும் கல்வி தரும் நல்ல நட்பு தரும் சோதனை தரும் அதில் சாதனை தரும்... ஆனால் உனக்கோ தாயின் மீது அன்பு இல்லை தாய் நாட்டின் மீதும் அன்பு இல்லை அவள் மடியில் விழவும் ஆசை இல்லை அவளை காக்கவும் ஆசை இல்லை. உனக்கு தேவை எல்லாம் யாருக்கும் உதவாத அந்நிய நாட்டு பணம் அது உனக்கும் உதவுவதும் இல்லை உன் தாய்க்கும் ...

ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த போலீஸார் சிக்கினர்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்

Posted: 22 Sep 2016 10:31 PM PDT

- கோவை மதுக்கரை அருகே கடந்த மாதம் 25-ம் தேதி சென்னையில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் நோக்கி ஒரு கார் சென்றது. அந்த காரை, போலீஸ் உடையில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து, காரில் வந்தவர்களை இறக்கிவிட்டு, காரை சோதனையிடுவது போல் நடித்து, காரை கடத்திச் சென்றனர். ரூ.3.90 கோடி பணத்துடன் கார் கடத்தப்பட்தாகக் கூறப்பட்டது. ஆனால், காரின் சொந்தக்காரரான கேரள மாநிலம் மலப்புரம் தங்க நகைக் கடை உரிமையாளர் அன்வர் சதா, கார் மட்டும் கடத்தப்பட்டதாக கோவை மாவட்ட போலீஸாரிடம் புகார் அளித்தார். காரில் இருந்தது ...

வாழ்வாங்கு வாழ வைக்கும் யட்சன்: ஸ்ரீலஷ்மி குபேரர்

Posted: 22 Sep 2016 10:13 PM PDT

- யட்சர்கள் மனிதர்கள் போலவே உருவம் கொண்டவர்கள். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோருக்கும் நன்மைகள் செய்ய விரும்புபவர்கள். - இவர்களின் சக்தி அசாத்தியமானது. அன்பும் தெய்வ நம்பிக்கையும் கொண்ட இவர்கள் மனித குலத்தின் நண்பர்கள் என்றே சொல்லலாம். - இல்லத்திலேயே ஒரு வேலை துரிதகதியில் முடிந்துவிட்டால், இது என்ன யட்சினி வேலையாக இருக்கிறதே என்று சொல்வது கிராம வழக்கம். - நல்லவற்றைச் செய்பவர்களிடம் நவநிதி மட்டுமல்ல, கொடுக்கும் எண்ணமும் இருந்தால், வேறு என்ன வேண்டும்? ...

ரேஷன் கடைகளில் நவீன கருவியில் ரசீது போடும் திட்டம் ...

Posted: 22 Sep 2016 10:03 PM PDT

- ரேஷன் கடைகளில், அக்டோபர், 1 முதல், காகித ரசீது போடும் நிலை இருக்காது; அதற்கு பதில், நவீன கருவியில் ரசீது போடும் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. - இதனால், ரேஷன் கார்டுதாரர்களின், மொபைல் போனிலேயே, எஸ்.எம்.எஸ்., தகவலாக ரசீது கிடைத்து விடும். - எஸ்.எம்.எஸ்., தகவல் - அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து, கடை ஊழியர்கள் பொருட்களை வினியோ கம் செய்தது போல, போலி ரசீது தயாரித்து, கள்ளச்சந்தையில் விற்கின்றனர். - இந்த முறைகேட்டை தடுக்க, விரைவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட ...

முதல் பார்வை: தொடரி - ஒரு நீண்ட பயணம்!

Posted: 22 Sep 2016 10:01 PM PDT

- ரயில் பயணிகளையும், காதலியையும் காப்பாற்றப் போராடும் சாதாரண மனிதனின் த்ரில் முயற்சி 'தொடரி'. - ரயில்வே கேன்டீனில் ஊழியராகப் பணியாற்றுகிறார் தனுஷ். பிடித்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு ஒரு குடும்பத்தை உருவாக்குவதுதான் தனுஷின் விருப்பம். - இதனிடையே கீர்த்தி சுரேஷைக் கண்டதும் காதல்வயப்படுகிறார். அதற்குப் பிறகு சில தடைகள் வருகின்றன. சில பல ஆபத்துகளை தனுஷ் சமாளித்தாரா? த்ரில் பயணம் என்ன ஆனது? என்பதே மற்றவை. - யானையும், மலை சார்ந்த இடமும், காதலும் கடல் சார்ந்த இடமும் என படம் ...

பாலியல், தாக்குதல் வழக்கில் கைதான 2 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஜாமீனில் விடுவிப்பு

Posted: 22 Sep 2016 09:55 PM PDT

- பாலியல் மற்றும் தாக்குதல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமானத் துல்லா கான் மற்றும் சோம்நாத் பாரதி ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவன (எய்ம்ஸ்) பாதுகாவலர்களை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி நேற்று காலை கைது செய்யப்பட்டார். 'கடந்த 9-ம் தேதி டெல்லி கவுதம் நகரில் எய்ம்ஸ் மருத்துவ மனையின் சுற்றுச்சுவர் பொது இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டதாகக் கூறி, சுமார் 300 ஆதரவாளர்களையும், ராட்சத இயந்திரங்களையும் ...

நீதியைத் தேடி ! - கவிதைகள்

Posted: 22 Sep 2016 09:25 PM PDT

நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி! - நீதியைத் தேடி  அலைய வேண்டிய காலம் வந்தது நீதிக்காக உயிர் துறந்த மன்னன் வாழ்ந்த பூமி இது ! தவறு செய்திட்ட மன்னனுடன் ராணியும் சேர்ந்து தன் உயிரை மாய்த்திட்ட மாண்புள்ள பூமி இது ! குடிமக்களுக்கு மட்டுமல்ல பசு வந்து மணியடித்ததும் கேட்டு அறிந்து நீதி வழங்கிய  மண் நமது மண் ! தவறும் செய்தது தன் மகன் என்றும் தெரிந்தும் தண்டனை வழங்கிய மன்னன் வாழ்ந்த பூமி இது ! புறாக்களுக்காக தன் சதையை அறுத்து வழங்கிய பண்டைய மன்னன் வாழ்ந்த வசந்த பூமி இது ! தாமதமான ...

குத்து மதிப்பா அஞ்சு நிமிஷ:துக்கு ஒரு தடவை கை தட்டணும்...!!

Posted: 22 Sep 2016 08:40 PM PDT


-

மின் டவரில் ஏறி இளம்பெண் மிரட்டல்

Posted: 22 Sep 2016 08:22 PM PDT

- திருப்பூர்: உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறால், மனம் வெறுத்து போன இளம்பெண், மின்சார டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். - திருப்பூரை சேர்ந்த குமாரசாமியின் மனைவி சங்கீதா, 23. குமாரசாமி வீட்டுக்கு, 16 அடி பொது பாதை உள்ளது. இவ்வழியே கம்பம் அமைத்து, மின் இணைப்பு கொடுக்கவும், குழாய் பதிக்கவும், நில உரிமையாளர்களான குமாரசாமியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். - அதிகாரிகளிடம் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. மனம் வெறுத்த சங்கீதா, நேற்று மதியம், 12:00 மணியளவில், அங்குள்ள ...

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நவ்தேஜ் சர்னா நியமனம்

Posted: 22 Sep 2016 08:10 PM PDT

புதுடில்லி: அமெரிக்காவுக்கான இந்திய தூதராக, நவ்தேஜ் சர்னா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் இங்கிலாந்துக்கான இந்திய தூதராக உள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த அருண் குமார் சிங் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இதனையடுத்து நவ்தேஜ் சர்னா அமெரிக்காவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. இவரும், அருண் குமார் சிங்கும் முன்னர் இஸ்ரேல் நாட்டு தூதராக பணியாற்றியுள்ளனர். ...

வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,: டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

Posted: 22 Sep 2016 07:15 PM PDT

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகர் மீது அந்நாட்டு போர் விமானங்கள் பறந்ததாகவும் இதனால் பீதியில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியதாகவும் பாக்., மூத்த பத்திரிகையாளர் ஒருவர் டுவிட்டரில் செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். - ஐ.நா.,சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருந்த பாக்.பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா., தலையிட வேண்டும் என, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் வலியுறுத்தினார். இதனை ஏற்காத பான் கீ மூன் இந்த விவகாரத்தில் நாங்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™