Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஐ.நா.,வில் பாக்., பிரதமர் திமிர் பேச்சுக்கு இந்தியா பதிலடி!: 'பயங்கரவாத நாடு' என கடும் விமர்சனம்

Posted: 22 Sep 2016 09:21 AM PDT

நியூயார்க்:'பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு; பயங்கரவாதத்துக்கு ஆதரவு என்ற தேசிய கொள்கையை வைத்துள்ள பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்துவது, போர்க் குற்றமே' என, ஐ.நா., சபை கூட்டத்தில் இந்தியா கடுமையாக பதிலடி கொடுத்தது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., சபை பொதுக் கூட்டம் நடந்து வருகிறது. இதில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், நேற்று முன்தினம் இரவு பேசினார். அப்போது, பயங்கரவாதிகளை ஆதரித்தும், காஷ்மீர் பிரச்னை குறித்தும் பேசினார்.இதற்கு பதிலளிக்கும் உரிமையின் அடிப்படை யில், ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர கத்தின் முதன்மை செயலர், ...

பார்லி., நிலைக்குழு தலைவர் பதவி: கோட்டை விட்ட அ.தி.மு.க.,

Posted: 22 Sep 2016 09:25 AM PDT

உரிய அங்கீகாரத்துடன் கூடிய வாய்ப்புகள் இருந்தும், தானாகவே வந்த பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் பதவியை, அ.தி.மு.க., மேலிடம், அலட்சியம் செய்து, கோட்டை விட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகள் குறித்து அலசி ஆராய்ந்து, அவற்றின் நிறை குறைகள் குறித்து கேள்வி எழுப்ப, பார்லி.,யில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்படுகின்றன. முக்கிய திட்டங்கள், மசோதாக்கள் குறித்து ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைகள் வழங்கி, அரசின் செயல்பாடுகளுக்கு கடிவாளம் போடும் அளவுக்கு, அந்த குழுக்கள் பலம் வாய்ந்தவை.இந்த குழுவில் இடம் பெறுவதன் மூலம், மாநில நலன் ...

ரேஷன் கடைகளில் இனி காகித ரசீதுக்கு குட்பை!: அக்., 1 முதல் மொபைல் போனில் பட்டியல்

Posted: 22 Sep 2016 09:39 AM PDT

ரேஷன் கடைகளில், அக்டோபர், 1 முதல், காகித ரசீது போடும் நிலை இருக்காது; அதற்கு பதில், நவீன கருவியில் ரசீது போடும் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இதனால், ரேஷன் கார்டுதாரர்களின், மொபைல் போனிலேயே, எஸ்.எம்.எஸ்., தகவலாக ரசீது கிடைத்து விடும்.

தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி; சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை, குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. தற்போது, ரேஷனில் வாங்கும் பொருட்களுக்கு, காகிதத் தில், ரசீது தரப்படுகிறது. சென்னை போன்ற நகரங்களில், பலர் ரேஷன் பொருட்கள் வாங்கு வது இல்லை. எஸ்.எம்.எஸ்., தகவல்அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து, கடை ...

கோஹினூர் வைரத்தை மீட்க நடவடிக்கை : சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

Posted: 22 Sep 2016 09:55 AM PDT

'கோஹினுார் வைரத்தை மீட்டு வருவதற்கான அனைத்து வழிகளையும், ஆய்வு செய்து வருகிறோம்' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

ஆந்திராவில் உள்ள, சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட, 105 காரட் மதிப்புடைய கோஹினுார் வைரம் தான், உலகின் மிகப்பெரிய வைரமாக கருதப்படுகிறது. இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம், மன்னர்கள் பலரிடம் கைமாறி, 1849ல், பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று விட்டது.
பிரிட்டன் அரச பரம்பரை : அப்போது முதல், இந்த வைரம், பிரிட்டன் அரச பரம்பரையின் சொத்தாக மாறிவிட்டது. தற்போது, மகாராணியின் மகுடத்தில், இந்த வைரம் ...

நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் தினமும் 16 கோடி லிட்டர் குடிநீர் வீண்

Posted: 22 Sep 2016 10:01 AM PDT

போபால்: நாடு முழுவதும் உள்ள உணவகங் களில், தினமும், 16 கோடி லிட்டர் குடிநீர் வீணடிக்கப்படுவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

உணவகங்களில் வீணாகும் குடிநீர் குறித்த ஆய்வை, 'மார்க்கெட் சாபியென்ஸ்' என்ற சர்வதேச சந்தையியல் ஆய்வு நிறுவனமும், வட மாநில பத்திரிகையும் இணைந்து நடத்தின.
15 நகரங்கள் :
சந்தையியல் ஆய்வு நிறுவன அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின், 15 முக்கிய நகரங்களில் உள்ள, ஓட்டல்களில் பயன்படுத்தப் படும் குடிநீர் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில், உணவகத்தின் ஒவ்வொரு மேஜையிலும், வாடிக்கையாளர்களுக்கு ...

தமிழிலும் ஒலிபரப்பாகிறது மோடியின் 'மன் கீ பாத்'

Posted: 22 Sep 2016 10:05 AM PDT

நாட்டு மக்கள் அனைவரையும் சென்றடையும் வகையில், ரேடியோவில், பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்தி வரும் மாதாந்திர உரையான, 'மன் கீ பாத்' நிகழ்ச்சியை, தமிழ் உள்ளிட்ட, பிராந்திய மொழிகளிலும் ஒலிபரப்ப திட்டமிடப் பட்டு உள்ளது.

பிரதமர் விருப்பம் : பிரதமராக பதவியேற்ற பின், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, மக்களுக்கு தெரிவிக்கவும், இந்த திட்டங்களில், பொதுமக்க ளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி விரும்பினார்.
மின்சாரம், 'டிவி' வசதி இல்லாத கிராமங்களில் உள்ளவர்களையும் அடைய முடியும்என்பதால், ரேடியோவை தேர்ந்தெடுத்தார் மோடி. 2014 ...

கர்நாடக அரசு டிஸ்மிஸ் கோரி காவிரியில் இறங்கி போராட்டம்

Posted: 22 Sep 2016 10:28 AM PDT

திருச்சி:உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத, கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய கோரி, தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி, போராட்டம் நடத்தினர்.

'தமிழகத்திற்கு, 21ம் தேதி முதல், ஏழு நாட்களுக்கு, 6,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது' என, கைவிரித்து விட்டார்.இந்நிலையில், தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், 30க்கும் மேற்பட்டோர், ...

ஜெ., வரவேற்கிறாரா எதிர்க்கிறாரா? ஸ்டாலின் கேள்வி

Posted: 22 Sep 2016 10:30 AM PDT

சென்னை:சென்னை, கோபாலபுரம் வீட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, பொருளாளர் ஸ்டாலின் சந்தித்தார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, இருவரும் ஆலோசனை நடத்தினர்.

பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:தமிழகத்திற்கு, 6,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என, கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது; அதை அனைவரும், மகிழ்ச்சி யோடு வரவேற்றுள்ளனர்.கர்நாடகாவில், அனைத்து கட்சிகளும் சேர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பைஎதிர்த்துள்ளன; தண்ணீர் தர முடியாது என முடிவு செய்திருக்கின்றன. அதற்காக, அனைத்துக் கட்சி கூட்டங்களை, பலமுறை கூட்டி இருக்கின்றனர். அமைச்சரவை ...

கறுப்பு பண பட்டியலில் 475 இந்தியர்கள்

Posted: 22 Sep 2016 10:33 AM PDT

புதுடில்லி:மத்திய அமெரிக்க நாடான பனாமா வில், கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் பட்டியல் வெளியாகி, விசாரணை நடந்து வருகின்றன.

இந்நிலையில், கரீபியன் தீவுகளில் ஒன்றான, பஹாமஸ் நாட்டில், கறுப்பு பணத்தை பதுக்கி யுள்ள, 475 இந்தியர்கள் அடங்கிய பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
பனாமாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், கறுப்பு பணத்தை பதுக்கியுள்ளதை, சர்வதேச புலனாய்வுபத்திரிகையாளர் சங்கம், 'பனாமா லீக்ஸ்' என்ற பெயரில் அம்பலப்படுத்தியது.
இந்தப் பட்டியல் வெளியாகி, ஐந்து மாதங்களாகி யுள்ள நிலையில், கரீபியன் தீவுகளில் ஒன்றான பஹாமஸ் ...

வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,: டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

Posted: 22 Sep 2016 11:30 AM PDT

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகர் மீது அந்நாட்டு போர் விமானங்கள் பறந்ததாகவும் இதனால் பீதியில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியதாகவும் பாக்., மூத்த பத்திரிகையாளர் ஒருவர் டுவிட்டரில் செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஐ.நா.,சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருந்த பாக்.பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா., தலையிட வேண்டும் என, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் வலியுறுத்தினார். இதனை ஏற்காத பான் கீ மூன் இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. உங்கள் பிரச்னையை இந்தியாவிடமே பேசி ...

முதல்வர் ஜெ., உடல்நிலை சீராக உள்ளது

Posted: 22 Sep 2016 12:50 PM PDT

சென்னை : திடீர் உடல் நலக்குறைவால், முதல்வர் ஜெயலலிதா, நேற்று(செப்., 22) இரவு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று(செப்., 22) இரவு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, இரவு, 11:30க்கு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள, சிறப்பு சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்தனர்.
மூத்த டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர், ...

கறுப்பினத்தவர் கொலை; அமெரிக்காவில் பதற்றம்

Posted: 22 Sep 2016 01:59 PM PDT

சார்லோட்: அமெரிக்காவில் கறுப்பினத்தவரை போலீசார் சுட்டுக் கொன்றதால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால் அமெரிக்காவில் பதற்றம் நிலவி வருகிறது.
அமெரிக்காவின் சார்லோட் நகரில், குற்றவாளி ஒருவனை கைது செய்வதற்காக குடியிருப்பு பகுதிக்கு போலீசார் சென்றனர். அப்போது, ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவரும், அமெரிக்க குடியுரிமை பெற்று கறுப்பினத்தவராருமான ஸ்காட், 43, என்பவர் கையில் துப்பாக்கியுடன் நின்றதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கியை கீழே போடும்படி போலீசார் கூறினர்; துப்பாக்கியை கீழே போடாததால், போலீசார், ஸ்காட்டை சுட்டுக் கொன்றனர். ...

குஜராத்தில் மின் துறை அமைச்சர்கள் மாநாடு

Posted: 22 Sep 2016 03:04 PM PDT

வதோதரா : குஜராத்தில் அடுத்த மாதம் 7ம் தேதி(அக்.,7) மின் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து குஜராத் மாநில எரிசக்தித் துறை அமைச்சர் சிமன்பாய் சபாரியா தெரிவித்ததாவது: குஜராத் மாநிலம், வதோதராவில் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுரங்கத் துறையைச் சேர்ந்த அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் மாநாடு அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெறவுள்ளது. மத்திய மின் துறை இணையமைச்சர் பியூஸ் கோயல் இம்மாநாட்டை துவக்கி வைக்க உள்ளார்.
இதில் மின்துறை, நிலக்கரி மற்றும் ...

கோவை இந்து முன்னணி பிரமுகர் படுகொலை; பதற்றம், போலீஸ் குவிப்பு

Posted: 22 Sep 2016 03:37 PM PDT

கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தனது பணிகளை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோவை சுப்பிரமணியம்பாளையம், சக்கரை விநாயகர் கோயில் அருகே அவர் வந்தபோது, அப்பகுதியில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு பேராடிய சசிகுமாரை மீட்ட அப்பகுதியினர் அவரை ஆஸ்பத்திரிக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™