Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'வாழு... வாழ விடு! கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை:தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு

Posted: 02 Sep 2016 09:19 AM PDT

'வாழு... வாழ விடு என்ற கோட்பாட்டின்படி, கர்நாடக அரசு செயல்பட வேண்டும்; தண்ணீர் இன்றி வாடும் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீரை திறந்து விட வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

'காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும்' என, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ள கர்நாடகத்தை, தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி இருந்தார்.இது தொடர்பாக, கடிதம் எழுதியபோதும், தண்ணீரை திறந்து விடுவது குறித்து கர்நாடக அரசு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, சுப்ரீம் ...

கேரளா அரசுக்கு எதிராக தமிழக கட்சிகள் அனைத்தும்...கைகோாப்பு!:*வரலாற்றில் முதன்முறையாக ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி ஒன்றிசைவு;*சிறுவாணியில் அணை கட்டுவதை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம்

Posted: 02 Sep 2016 10:21 AM PDT

சென்னை:கேரளாவில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்யும் கேரள அரசுக்கு எதிராக, சட்டசபையில் நேற்று, தனி தீர்மானம் கொண்டு வர, முதல்வர் ஜெ., முன் மொழிந்தார். அப்போது, ஆளுங்கட்சியுடன் கைகோர்த்து, தமிழக வரலாற்றில் முதன் முறையாக, எதிர்க்கட்சியான தி.மு.க., உட்பட, அனைத்து கட்சிகளும் அதை வழிமொழிந்தன.

தீர்மான சுருக்கம்: காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத் தும் குழு நடைமுறைக்கு வரும் வரையிலும், நீதிமன்ற வழக்குகளில் இறுதி தீர்ப்பு வெளி யாகும் வரையிலும், கேரள மற்றும் கர்நாடக அரசுகள், எந்த ஒரு திட்டத்தையும் மேற் கொள்ள ...

பல மாநிலங்களில் 'ஸ்டிரைக்'கிற்கு போதிய ஆதரவு இல்லை

Posted: 02 Sep 2016 10:25 AM PDT

புதுடில்லி:நாடு முழுவதும், பல்வேறு தொழிற் சங்கங்கள் நேற்று நடத்திய ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், நாட்டின் சில பகுதி களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது;

இந்த போராட்டத்தால், 18 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. பெரும்பாலான மாநிலங் களில், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. 'விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது; புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்' என்பது உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய தொழிற்சங்கங்கள் நேற்று, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ...

'மிஸ்டர் ரிலையன்ஸ் மோடி!' அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டல்

Posted: 02 Sep 2016 10:27 AM PDT

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடியை, 'மிஸ்டர் ரிலையன்ஸ்' என, கிண்டலடித்துள்ள, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'ரிலையன்ஸ் நிறுவன விளம்பரங்களில், மோடி தொடர்ந்து நடிக்க வேண்டும்' என்றும் கூறிஉள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்துக்கு அர்ப்பணிக்கும் வகை யில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 'ரிலையன்ஸ் ஜியோ' என்ற நிறுவனப் பெயரில், தொலைபேசி சேவை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில், பிரதமர் நரேந்திரமோடியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து, ஆம் ஆத்மி ...

'அர்த்தமற்ற வேலை நிறுத்தம் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும்!'

Posted: 02 Sep 2016 10:30 AM PDT

சென்னை:''அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படும், அர்த்தமற்ற வேலை நிறுத்தப் போராட்டங்கள், தேசத்தின் வளர்ச்சியை பாதிக்கும்,'' என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.

இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில்,அவர் பேசியதாவது:மத்திய அரசு சார்பில் நடந்த, 'திரங்கா' யாத்திரை நிறைவடைந்துள்ளது. இதற்காக நாடு முழுவதும், 75 மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் சுற்றுப்பயணம் செய்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெருமைகளை ...

உள்ளூர் பிரச்னைகளை வைத்து போராட்டங்கள் மாவட்ட செயலர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

Posted: 02 Sep 2016 10:32 AM PDT

'உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு, உள்ளூர் பொது மக்களின் பிரச்னைகளை மையப்படுத்தி, தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும்' என, மாவட்ட செயலர்களுக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே, 1 சதவீத ஓட்டுக்கள் தான் வித்தியாசம். அதனால், 'அக்., மாதம் நடை பெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில், ௮௦ சதவீதம் வெற்றியை பெற வேண்டும்' என, தி.மு.க., மேலிடம் வியூகம் அமைத்துள்ளது.உள்ளாட்சி தேர்தலுக்கு, கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில், முதல் கட்டமாக, ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, மாவட்ட வாரி யாக மேலிட ...

சுவாதி கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு

Posted: 02 Sep 2016 10:37 AM PDT

சென்னை: மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மென் பொறியாளர் சுவாதி, படுகொலை செய்யப் பட்டார்; ஜூன், 24ல் சம்பவம் நடந்தது.இந்த கொலை தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த, ராம்குமார் என்பவனை, போலீசார் கைது செய்தனர்.கொலை வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரி, ராம்குமாரின் தாயார் புஷ்பம், உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தார். அவர் சார்பில், வழக்கறிஞர் ராமராஜ், போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எமிலியாஸ் ...

'ஜெ., தலைமையில் டில்லி செல்ல தயார்' சட்டசபையில் தி.மு.க., அறிவிப்பு

Posted: 02 Sep 2016 10:40 AM PDT

சென்னை:''தமிழகத்தில் பாயும் நதிகள் குறுக்கே, அணை கட்டும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி, முதல்வர் தலைமையில் அனைத்து கட்சிகளும் டில்லி சென்று, பிரதமரிடம் முறையிடலாம்,'' என, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறினார்.

சட்டசபையில் நேற்று, சிறுவாணி மற்றும் காவிரி ஆறுகளில், அணை கட்டும் கேரள மற்றும் கர்நாடக அரசுகளின் நடவடிக்கையை தடுக்க, மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மீது நடந்த விவாதம்: தி.மு.க., - துரைமுருகன்: இந்த தீர்மானம் நிறை வேற்றப்பட வேண்டும் என விவசாயிகள், அரசியல் ...

சிறுவாணி பிரச்னையில் வழக்கு : விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 02 Sep 2016 10:45 AM PDT

கோவை:'சிறுவாணி அணை விவகாரத்தில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்' என, விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே, அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிராக, தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கேரள அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டசபையில் நேற்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதுகுறித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச் செயலர் கந்தசாமி கூறுகையில், ''மத்திய அரசு பலமுறை கடிதம் அனுப்பியும், தமிழக அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர் எழுதிய கடிதம் மீது, மத்திய அரசு ...

மனோகர் பரீக்கர் பேச்சுக்கு எதிர்ப்பு

Posted: 02 Sep 2016 11:23 AM PDT

லாகூர் : 'பாகிஸ்தானுக்கு செல்வது, நரகத்திற்கு செல்வது போல்' என, மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் கூறியதற்கு, பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாண சட்டசபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
'பாகிஸ்தானுக்கு செல்வது, நரகத்திற்கு செல்வது போல்' என, ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர், சமீபத்தில் கூறியிருந்தார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபை கூட்டம், நேற்று நடந்தது. இதில், பரீக்கரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 'இந்திய துாதரை அழைத்து, பாக்., வெளியுறவுத் துறை எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்' என, கூட்டத்தில் ...

பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் கையெழுத்தாவதில் வீண் தாமதம்

Posted: 02 Sep 2016 12:09 PM PDT

புதுடில்லி : பல்துறை வல்லுனர்களுக்கான பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் கையெழுத்தாவதில், வீண் தாமதம் ஏற்பட்டுள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டில்லியில், நுால் வெளியீட்டு விழா ஒன்றில், இதுகுறித்து அவர் பேசியதாவது: இந்தியா, பல்வேறு நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. அதில், பல்துறை வல்லுனர்களுக்கான பரஸ்பர அங்கீகார ஒப்பந்தமும் அடங்கும்.இந்த ஒப்பந்தம், இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர்கள், இயன்முறை மருத்துவர்கள், பொறியாளர்கள், கட்டடக் கலை வல்லுனர்கள் உள்ளிட்டோர், பல்வேறு ...

தலைமை நீதிபதிகளின்றி இயங்கும் 6 ஐகோர்ட்டுகள்

Posted: 02 Sep 2016 02:06 PM PDT

புதுடில்லி: நாட்டின், ஆறு ஐகோர்ட்டு கள் தலைமை நீதிபதி இல்லாமல் செயல்படுவதாகவும், 24 ஐகோர்ட்டுகளில், 478 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆந்திரா - தெலுங்கானா, கேரளா, மத்திய பிரதேசம், மணிப்பூர், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய, ஆறு ஐகோர்ட்டு களில், தலைமை நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால், நிரந்தர தலைமை நீதிபதிகள் இல்லாமல், இந்த ஐகோர்ட்டுகள் செயல்படுகின்றன. ...

விரைவில் ரஷ்யா, தென் ஆப்பிரிக்காவுடன் ஒப்பந்தங்கள்

Posted: 02 Sep 2016 03:05 PM PDT

புதுடில்லி : திரைப்பட தயாரிப்பு துறையில் ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் விரைவில் ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.
டில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் திரைப்பட விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: திரைப்பட இணை தயாரிப்பில் சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுடனான ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. தற்போது, திரைப்பட தயாரிப்பு துறையில் ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் விரைவில் ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளது. ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™