Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அரசியல் படுத்தும் பாடு!

Posted: 02 Sep 2016 02:39 PM PDT

மேற்கு வங்க மாநிலம், சிங்கூரில் அரசு கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்காக மிகப்பெரும் மகிழ்ச்சி அடையக்கூடிய நபர் மம்தா பானர்ஜி மட்டுமாகத்தான் இருப்பார்.

திமுக எம்எல்ஏக்களின் கூச்சலுக்கு இடையே 7 துறைகளுக்கான மானியம் - மசோதாக்கள் நிறைவேறின

Posted: 02 Sep 2016 02:35 PM PDT

சட்டப் பேரவையில் திமுகவினர் கூச்சல்-கோஷங்களுக்கு இடையே ஏழு துறைகளுக்கான மானியங்களும், நிதி தொடர்பான மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறின.

காவிரியின் குறுக்கே எந்தத் திட்டத்துக்கும் அனுமதி கூடாது

Posted: 02 Sep 2016 02:32 PM PDT

காவிரியின் குறுக்கே எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த கேரள, கர்நாடக அரசுகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானம் சட்டப் பேரவையில் ஒருமனதாக வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

எம்எல்ஏ விடுதியில் நாய்கள் தொல்லை!

Posted: 02 Sep 2016 02:29 PM PDT

எம்எல்ஏ விடுதியில் நாய்களின் தொல்லை இருப்பதாக பேரவையில் விவாதம் நடைபெற்றது.

ஓய்வூதியருக்கு தனி அடையாள அட்டை: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 02 Sep 2016 02:28 PM PDT

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு தனி அடையாள அட்டை அளிக்கப்படும் என்று நிதி, பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

காவலர்களுக்கான வீட்டு வசதித் திட்ட விவகாரம்: ஜெயலலிதா - ஸ்டாலின் வாக்குவாதம்

Posted: 02 Sep 2016 02:27 PM PDT

காவலர்களுக்கான வீட்டுவசதித் திட்ட விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதாவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே சட்டப் பேரவையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

காவிரி பிரச்னைக்கு தனித் தீர்மானம்: திமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு

Posted: 02 Sep 2016 02:23 PM PDT

காவிரி பிரச்னைக்கு தனித் தீர்மானம் கொண்டு வந்ததற்கு, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அனைத்துக் கட்சிகளும் வரவேற்புத் தெரிவித்தன.

முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கான பரிசுத் தொகை உயர்வு

Posted: 02 Sep 2016 02:22 PM PDT

பள்ளித் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அளிக்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இபிஎஃப்ஓ மூலம் விருப்ப ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு பரிசீலனை

Posted: 02 Sep 2016 01:25 PM PDT

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) பரிந்துரைத்த விருப்ப ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

வாக்குக்குப் பணம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க இடைக்காலத் தடை

Posted: 02 Sep 2016 01:25 PM PDT

வாக்குக்குப் பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை விசாரிக்குமாறு ஊழல் தடுப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

நாட்டின் ஏழாவது தேசியக் கட்சியாக உருவெடுத்தது திரிணமூல் காங்கிரஸ்

Posted: 02 Sep 2016 01:24 PM PDT

மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரûஸ தேசியக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் மீது மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரஸ்

Posted: 02 Sep 2016 01:24 PM PDT

ரிலையன்ஸ் நிறுவனத்தின் "ஜியோ' செல்லிடப் பேசி விளம்பரங்களில் முன் அனுமதியின்றி பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்நிறுவனத்தின் மீது மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

பயங்கரவாதத்தை முறியடிக்க பாதுகாப்புத் துறையில் கூடுதல் ஒத்துழைப்பு

Posted: 02 Sep 2016 01:22 PM PDT

உலக நாடுகள் அனைத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியா - எகிப்து இடையேயான பாதுகாப்பு உறவில் கூடுதல் ஒத்துழைப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணம் உயர்வு: கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 02 Sep 2016 01:16 PM PDT

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில்,அகஸ்தீசுவரத்தில் மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவட்டாறு பகுதியில் ஹோட்டல்களில் சுகாதாரத் துறையினர் சோதனை

Posted: 02 Sep 2016 01:16 PM PDT

திருவட்டாறு பகுதியில் ஹோட்டல்களில் சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தினர். குமரி மாவட்டத்தில் ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்கள் சுகாதாரமான முறையில்

விபத்துகளில் உயிரிழந்த 6 பேர் குடும்பத்துக்கு நிதி உதவி

Posted: 02 Sep 2016 01:15 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 6 பேர்களின் குடும்பத்துக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவியினை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

Posted: 02 Sep 2016 01:15 PM PDT

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

பொது வேலை நிறுத்தம்: களியக்காவிளை வரை இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள்

Posted: 02 Sep 2016 01:15 PM PDT

மத்திய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றதையொட்டி கேரளத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து குமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை இயக்கப்பட்டன.

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: இருவர் கைது

Posted: 02 Sep 2016 01:15 PM PDT

குலசேகரம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை வெள்ளிக்கிழமை பறித்த இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

கேந்திரீய வித்யாலயா பள்ளி: விதிகளைத் தளர்த்த முடிவு

Posted: 02 Sep 2016 01:15 PM PDT

கேந்திரீய வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை தளர்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அருமனை அருகே ஒரே நாளில் கோயில்களில் தொடர் திருட்டு

Posted: 02 Sep 2016 01:14 PM PDT

குமரி மாவட்டம் அருமனை அருகே ஒரு நாளில் 3 கோயில்கள் உள்பட 4 இடங்களில் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

Posted: 02 Sep 2016 01:14 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

"கர்நாடக அணைகளில் நீர் இருப்பு கடந்த ஆண்டைவிட அதிகம் உள்ளது'

Posted: 02 Sep 2016 01:14 PM PDT

கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல மாநில அணைகளில் நீர் இருப்பு கடந்த ஆண்டைவிட அதிகமாக உள்ளது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம்

Posted: 02 Sep 2016 01:14 PM PDT

ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வெள்ளிவிழா திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 8 இடங்களில் மறியல்: 287 பெண்கள் உள்பட 753 பேர் கைது

Posted: 02 Sep 2016 01:13 PM PDT

மத்திய அரசுக்கு எதிராக அனைத்துத் தொழிங்சங்கங்களின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை 8 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 287 பெண்கள் உள்பட 753 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமரியில் ரூ.4 லட்சத்தில் அலங்கார நீரூற்று சீரமைப்பு

Posted: 02 Sep 2016 01:13 PM PDT

கன்னியாகுமரி காவல் நிலையம் அருகேயுள்ள அலங்கார நீரூற்று ரூ. 4 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

வெலிங்கரின் புதிய அமைப்பு அறிவிப்பால் கோவா மாநில ஆர்எஸ்எஸ்-இல் பிளவு?

Posted: 02 Sep 2016 01:13 PM PDT

கோவா மாநில ஆர்எஸ்எஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சுபாஷ் வெலிங்கர் (படம்), புதிய அமைப்பை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் அந்த மாநில ஆர்எஸ்எஸ் அமைப்பில் பிளவு ஏற்பட வாயப்புள்ளதாக கருதப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மறியல்: 515 பேர் கைது: இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை

Posted: 02 Sep 2016 01:12 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இடங்களில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட 515 பேரை போலீஸார் கைது செய்தனர். எனினும், இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

குரூப்-4 தேர்வு: செப். 9இல் இலவச பயிற்சி தொடக்கம்

Posted: 02 Sep 2016 01:11 PM PDT

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

ராகுலை முற்றுகையிட்ட அங்கன்வாடி ஊழியர்கள்

Posted: 02 Sep 2016 01:11 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான அமேதிக்கு வெள்ளிக்கிழமை சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை, அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

வீரபாண்டியன்பட்டணத்தில் நாளை அன்னை தெரசா கெபி திறப்பு

Posted: 02 Sep 2016 01:11 PM PDT

திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) அன்னை தெரசா கெபி திறக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி துறைமுக விரிவாக்கத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு: கப்பல் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு

Posted: 02 Sep 2016 01:11 PM PDT

தூத்துக்குடி வஉசி துறைமுக விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கப்பல் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீனவர் குறைதீர் கூட்டத்தில் மீனவர்கள் தெரிவித்தனர்.

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: கேரளம், தெலங்கானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 02 Sep 2016 01:10 PM PDT

தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால், கேரளம், ஒடிஸா, திரிபுரா, அஸ்ஸாம், தெலங்கானா மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்டது.

"விளையாட்டு வீரர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்'

Posted: 02 Sep 2016 01:10 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்: எட்டயபுரம் மாநாட்டில் வலியுறுத்தல்

Posted: 02 Sep 2016 01:10 PM PDT

விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தின பொது மாநாடு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆறுமுகனேரியில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம்

Posted: 02 Sep 2016 01:10 PM PDT

ஆறுமுகனேரியில் இந்து முன்னணி சார்பில், வெள்ளி விழா விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது.

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Posted: 02 Sep 2016 01:09 PM PDT

தூத்துக்குடியில் கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தி, தனியார் கல்லூரி மாணவர், மாணவிகள் வெள்ளிக்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி நகர்மன்றக் கூட்டம்

Posted: 02 Sep 2016 01:09 PM PDT

கோவில்பட்டி நகர்மன்றத்தின் அவசர மற்றும் உள்ளூர் திட்டக் குழுக் கூட்டம் மன்ற கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூரில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு குறித்து ஆலோசனை

Posted: 02 Sep 2016 01:09 PM PDT

 திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாசரேத்தில் பள்ளி ஊழியருக்கு வெட்டு

Posted: 02 Sep 2016 01:08 PM PDT

நாசரேத்தில் தனியார் பள்ளி ஊழியரை வெட்டியதாக வேன் ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். நாசரேத் கனகராஜ் தெருவைச் சேர்ந்தவர் தே. ரவிதனராஜ் (49). அப்பகுதி தனியார் பள்ளி ஊழியர். அதே

மூதாட்டியைத் தாக்கியதாக மூவர் மீது வழக்கு

Posted: 02 Sep 2016 01:08 PM PDT

கயத்தாறு அருகே மூதாட்டியைத் தாக்கியதாக 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

உடன்குடி அருகே விபத்தில் காயமடைந்தவர் சாவு

Posted: 02 Sep 2016 01:07 PM PDT

உடன்குடி அருகே விபத்தில் காயமடைந்த இறைச்சிக் கடைக்காரர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

பைக் மோதியதில் மதபோதகர் சாவு

Posted: 02 Sep 2016 01:05 PM PDT

சாத்தான்குளம் அருகே பைக் மோதியதில் காயமடைந்த மதபோதகர் இறந்தார்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு: மாணவர்களுக்கு பயிற்சி

Posted: 02 Sep 2016 01:05 PM PDT

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சிக்கு, தலைமையாசிரியை சாந்தினி தலைமை வகித்தார். மாவட்டத் தலைமை சாலைப் பாதுகாப்பு அதிகாரி ஜட்சன், மாணவர்-மாணவிகளிடம் சாலை

திருச்செந்தூரில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு குறித்து ஆலோசனை

Posted: 02 Sep 2016 01:05 PM PDT

திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

குவாரி அனுமதியை ரத்து செய்யாவிடில் போராட்டம் : இ.கம்யூ. மாநில செயற்குழு உறுப்பினர் மகேந்திரன்

Posted: 02 Sep 2016 01:03 PM PDT

கரூர் மாவட்டம் சேமங்கி, நடையனூர், தவுட்டுபாளையம் ஆகிய பகுதிகளில் மணல் குவாரிகளுக்கான அனுமதியை அரசு ரத்து செய்யாவிடில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மகேந்திரன்.

தஞ்சாவூர் பள்ளியில் மாணவருக்கு டெங்கு அறிகுறி

Posted: 02 Sep 2016 01:03 PM PDT

தஞ்சாவூரில், பள்ளியில் படித்து வரும் மாணவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது ரத்தப் பரிசோதனையில் தெரியவந்தது.

வீட்டின் பூட்டை உடைத்து தங்கச் சங்கிலி, வெள்ளிப் பொருட்கள் திருட்டு

Posted: 02 Sep 2016 01:03 PM PDT

கும்பகோணம் சென்னை சாலையில் வசித்து வருபவர் சந்திரிகா (58). கடந்த 26-ம் தேதி சென்னையில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றார். பிறகு, செப். 1-ம் தேதி இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது

"மழையைப் பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்யலாம்'

Posted: 02 Sep 2016 01:03 PM PDT

டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையைப் பயன்படுத்தி சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு செய்யலாம் என மூத்த வேளாண் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.1.71 லட்சம் திருட்டு

Posted: 02 Sep 2016 01:02 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 1.71 லட்சத்தை திருடி சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அரியலூரில் தொழிற்சங்கத்தினர் மறியல்: 224 பேர் கைது

Posted: 02 Sep 2016 01:02 PM PDT

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் 224 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மண்டல கபடி போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு

Posted: 02 Sep 2016 01:01 PM PDT

திருச்சி மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையிலான கபடி போட்டியில் வென்ற மாடர்ன் பாலிடெக்னிக் மாணவர்களை கல்லூரி நிறுவனர் வியாழக்கிழமை பாராட்டினார்.

பசும்பலூர் கோயில் திருவிழா பாதுகாப்பு பணிகள்: ஐ.ஜி. ஆய்வு

Posted: 02 Sep 2016 01:01 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே கோயில் திருவிழாவில் ஒரு தரப்பினர் பங்கேற்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜ், பாதுகாப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

அரசு மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

Posted: 02 Sep 2016 01:00 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.

மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற ஊழியர் சாவு

Posted: 02 Sep 2016 01:00 PM PDT

தஞ்சாவூரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்தக் காயமடைந்த ஓய்வு பெற்ற ஊழியர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

மெலட்டூர் சித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்தி விநாயகர் திருக்கல்யாணம்

Posted: 02 Sep 2016 01:00 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், மெலட்டூரில் உள்ள சித்தி, புத்தி, சமேத தட்சிணாமூர்த்தி விநாயகர் கோயிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவ விழாவையொட்டி, சித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்தி விநாயகர் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணத்தில் 247 பேர் கைது

Posted: 02 Sep 2016 12:59 PM PDT

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கும்பகோணத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 247 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பான் செக்கர்ஸ் கல்லூரியில் கலை விழா: கலைக்காவிரி வெற்றி

Posted: 02 Sep 2016 12:59 PM PDT

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில், தமிழ்த் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற கலை விழாவில் திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரி வெற்றி பெற்றது.

நியமனம்

Posted: 02 Sep 2016 12:59 PM PDT

பாஜக சமூக ஊடகப் பிரிவின் மாநில இணை அமைப்பாளராக தமிழ்த்தாமரை வி.எம். வெங்கடேஷ்  நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல்: பாஜக கோட்ட ஆலோசனை கூட்டம்

Posted: 02 Sep 2016 12:58 PM PDT

உள்ளாட்சித் தேர்தல் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சாவூர், திருச்சி, கடலூர் கோட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை கும்பகோணம் அருகே நடைபெற்றது.

மாவட்டத்தில் தீவிர துப்புரவு, சுகாதாரப் பணிகள்: ஆட்சியர்

Posted: 02 Sep 2016 12:58 PM PDT

கரூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி,பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் ஒருங்கிணைந்த துப்புரவு மற்றும் சுகாதாரப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்றார் ஆட்சியர் கு.கோவிந்தராஜ்.

கட்டுமானத் தொழிலாளர்களின் விபத்து, மரண இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

Posted: 02 Sep 2016 12:58 PM PDT

அமைப்பு சாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் விபத்து, மரண இழப்பீட்டுத் தொகையை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என பாரதிய ஜனதா மஸ்தூர் மகா சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு : வாகனப் பழுதுநீக்கும் கடைகள் அடைப்பு

Posted: 02 Sep 2016 12:57 PM PDT

தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 1,600-க்கும் மேற்பட்ட வாகனப் பழுதுநீக்கும் கடைகள் மற்றும் பட்டறைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்தன.

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர்4 இடங்களில் மறியல், ஆர்ப்பாட்டம்: 129 பெண்கள் உள்பட 448 பேர் கைது

Posted: 02 Sep 2016 12:57 PM PDT

கரூர் மாவட்டத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடைபெற்றது. இதில், 129 பெண்கள் உள்பட 448 பேரைப் போலீஸார் கைது செய்தனர்

வேலைநிறுத்தம்: வழக்கம்போல் பேருந்துகள் இயங்கின

Posted: 02 Sep 2016 12:56 PM PDT

நாடு தழுவிய வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதிலும், கரூர் மாவட்டத்தில் வழக்கம்போல பேருந்துகள், வாகனங்கள் இயக்கப்பட்டன.

வேலைநிறுத்தப் போராட்டம்: பெரம்பலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை

Posted: 02 Sep 2016 12:56 PM PDT

பெரம்பலூரில் 12 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 293 பேரை போலீஸார் கைது செய்தனர்.

"ஆசிரியர் பணி தெய்வீகமானது'

Posted: 02 Sep 2016 12:56 PM PDT

ஆசிரியர் பணி தெய்வீகமானது என்றார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் ராம. மீனாட்சி.

ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்: நன்றி தெரிவித்து விளம்பர பதாகை!

Posted: 02 Sep 2016 12:56 PM PDT

குன்னம் வட்டம், ஓலைப்பாடி ஊராட்சி செயலரை பணியிடை நீக்கம் செய்ததை வரவேற்று, அந்த கிராம பொதுமக்கள் சார்பில் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் வரைவுப் பட்டியல்: கருத்து தெரிவிக்கலாம்

Posted: 02 Sep 2016 12:55 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து வார்டுகளின் வாக்காளர் வரைவுப் பட்டியல் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம ஊராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வரும் 8ஆம்

அச்சகம் தொடர்பான கணினி பயிற்சி பெற அழைப்பு

Posted: 02 Sep 2016 12:55 PM PDT

பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் அச்சகம் சம்பந்தமான கணினி பயிற்சி பெற அழைப்பு விடுத்துள்ளார் மைய இயக்குநர் (பொ) ப. அருள்தாசன்.

ஆசிரியர்களுக்கான விளையாட்டு பயிற்சி முகாம்

Posted: 02 Sep 2016 12:55 PM PDT

அரியலூர் சிஎஸ்ஐ பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

மத்திய அரசைக் கண்டித்து வேலைநிறுத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை மறியல்: 620 பேர் கைது

Posted: 02 Sep 2016 12:54 PM PDT

மத்திய அரசைக் கண்டித்து 10 தொழிற்சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு தொழில் சங்கங்களைச் சார்ந்த 98 பெண்கள் உள்பட 620 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுகை குளங்களில் ஊர்காவல் படையினர் தூய்மைப் பணி

Posted: 02 Sep 2016 12:54 PM PDT

புதுக்கோட்டை நகராட்சியிலுள்ள சில குளங்களை தனியார் பங்களிப்புடன் தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

"அரசு மறுவாழ்வு இல்ல காவலர் பணிக்கு செப். 12-க்குள் விண்ணப்பிக்கலாம்'

Posted: 02 Sep 2016 12:53 PM PDT

புதுக்கோட்டை மச்சுவாடியில் இயங்கி வரும் அரசு மறுவாழ்வு இல்லத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கு தகுதியுடையோர் செப். 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

வீட்டின் பூட்டை உடைத்து தங்கச் சங்கிலி, வெள்ளிப் பொருட்கள் திருட்டு

Posted: 02 Sep 2016 12:53 PM PDT

 கும்பகோணம் சென்னை சாலையில் வசித்து வருபவர் சந்திரிகா (58). கடந்த 26-ம் தேதி சென்னையில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றார். பிறகு, செப். 1-ம் தேதி இரவு வீட்டுக்கு

வேலைநிறுத்தம்: வருவாய், வங்கித் துறை பணிகள் பாதிப்பு: மறியலில் ஈடுபட்ட 700 பேர் கைது

Posted: 02 Sep 2016 12:52 PM PDT

மத்திய அரசைக் கண்டித்து நாடுதழுவிய அளவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் வருவாய், வங்கி, காப்பீடு, அஞ்சல் உள்ளிட்ட துறைகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.

"மழையைப் பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்யலாம்'

Posted: 02 Sep 2016 12:52 PM PDT

டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையைப் பயன்படுத்தி சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு செய்யலாம் என மூத்த வேளாண் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சாஸ்த்ரா பல்கலை. என்சிசி சார்பில் 190 யூனிட் ரத்த தானம்

Posted: 02 Sep 2016 12:52 PM PDT

கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக தேசிய மாணவர் படை சார்பில், ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக ஓய்வுபெற்றோர் அமைப்பு ஆர்ப்பாட்டம்

Posted: 02 Sep 2016 12:52 PM PDT

அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பின் கும்பகோணம் கோட்டம் சார்பில், கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும்: மயிலாடுதுறை நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

Posted: 02 Sep 2016 12:51 PM PDT

நகரின் முக்கிய வீதிகள், போக்குவரத்து நிறைந்த சாலைகளில் பழுதடைந்த நிலையில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என மயிலாடுதுறை நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

நாகையில் திருவுடையானுக்கு அஞ்சலி

Posted: 02 Sep 2016 12:50 PM PDT

நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நாகை கிளை சார்பில் அண்மையில் இறந்த பாடகர் திருவுடையானுக்கு இரங்கல் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

நீச்சல் போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு

Posted: 02 Sep 2016 12:49 PM PDT

நாகப்பட்டினத்தில் அண்மையில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டிகளில் இ.ஜி.எஸ். பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

செப். 7-இல் வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

Posted: 02 Sep 2016 12:49 PM PDT

மயிலாடுதுறையில் வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் செப். 7 ஆம் தேதி நடைபெற உள்ளது என நாகை கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் தொடக்கம்

Posted: 02 Sep 2016 12:49 PM PDT

நாகை மாவட்டத்தில் கோமாரி நோய்த் தடுப்புத் திட்டத்தின் 11-ஆவது சுற்று தடுப்பூசி போடும் பணியின் முதல் கட்ட பணிகள் செப். 1-ஆம் தேதி தொடங்கி செப். 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வட்டார மருத்துவ அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 3 பேர் கைது

Posted: 02 Sep 2016 12:48 PM PDT

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே வட்டார மருத்துவ அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அரசுப் பேருந்து நடத்துநர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

அமெரிக்க ஓபன்: 3-ஆவது சுற்றில் முர்ரே, வாவ்ரிங்கா, செரீனா

Posted: 02 Sep 2016 12:48 PM PDT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

வேலையில்லா பொறியியல் பட்டதாரிகளுக்கு சாஸ்த்ராவில் 6 மாத சான்றிதழ் படிப்பு: செப். 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 02 Sep 2016 12:48 PM PDT

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்படும் வேலையில்லா பொறியியல் பட்டதாரிகளுக்கான 6 மாத சான்றிதழ் படிப்பில் சேர செப். 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தர்னா

Posted: 02 Sep 2016 12:47 PM PDT

மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை அரை நாள் தர்னாவில் ஈடுபட்டனர்.

நாகை, மயிலாடுதுறையில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்: 431 பேர் கைது

Posted: 02 Sep 2016 12:47 PM PDT

 மத்திய அரசைக் கண்டித்து, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையில் பொதுத்துறை தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதொடர்பாக, 431 பேரை போலீஸார் கைது செய்தனர்.

2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து

Posted: 02 Sep 2016 12:46 PM PDT

கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் செப். 3, செப். 4 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

Posted: 02 Sep 2016 12:46 PM PDT

நாகை அருகேயுள்ள அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் செடில் திருவிழாவை முன்னிட்டு, பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

முருகப்பா கோப்பை ஹாக்கி: ஐஓசி, ஏர் இந்தியா, ரயில்வே அணிகள் வெற்றி

Posted: 02 Sep 2016 12:46 PM PDT

90-ஆவது முருகப்பா தங்கக் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டத்தில் ஐஓசி, ஏர் இந்தியா, ரயில்வே ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

அம்மா திட்ட முகாமுக்கு அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் ஏமாற்றம்

Posted: 02 Sep 2016 12:46 PM PDT

சீர்காழி அருகே திருப்புன்கூர் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமுக்கு அரசு அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து, தாங்கள் கொண்டு வந்த மனுக்களை திரும்ப எடுத்துச் சென்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்கள் கவனத்துக்கு...

Posted: 02 Sep 2016 12:45 PM PDT

எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு எழுத தனித்தேர்வர்கள் செப். 2-ஆம் தேதி முதல் செப். 9-ஆம் தேதி வரை இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாவட்ட அளவிலான நடித்தல் போட்டி: மூவலூர் பள்ளி மாணவர்கள் முதலிடம்

Posted: 02 Sep 2016 12:45 PM PDT

நாகை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையேயான நடித்தல் போட்டியில், மயிலாடுதுறை வட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

"மனப்பக்குவம் இல்லாததே ராகிங்குக்கு காரணம்'

Posted: 02 Sep 2016 12:44 PM PDT

மனப்பக்குவம் இல்லாததே ராகிங்குக்கு காரணம் என திருவாரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி கூறினார்.

எம்சிசி வாழ்நாள் உறுப்பினரானார் ஜாகீர்கான்

Posted: 02 Sep 2016 12:44 PM PDT

லண்டனில் உள்ள மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் (எம்சிசி) கெளரவ வாழ்நாள் உறுப்பினராக இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

Posted: 02 Sep 2016 12:44 PM PDT

முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகத்தில், வட்டார அளவிலான டெங்கு மற்றும் மழைக்கால தொற்றுநோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 3 பேர் கைது

Posted: 02 Sep 2016 12:43 PM PDT

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே வட்டார மருத்துவ அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அரசுப் பேருந்து நடத்துநர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பொது வேலைநிறுத்தம்: மறியலில் ஈடுபட்ட 580 பேர் கைது

Posted: 02 Sep 2016 12:43 PM PDT

அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல், வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 580 பேர் கைது செய்யப்பட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™