Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


திருமணத்துக்குத் தடையாகும் செவ்வாய் தோஷம்

Posted: 02 Sep 2016 04:34 PM PDT

- ''ஐயா… என் பையனுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு. எனக்குத் தெரிஞ்சு நான் யாரையும் ஏமாத்தினது இல்லை. அப்படி இருக்கும்போது என் பையனுக்கு எப்படி செவ்வாய் தோஷம் வரும்? நான் பண்ணாத பாவத்துக்கோ அல்லது அப்படியே நான் பண்ணின பாவத்துக்கோகூட என் பையன் எப்படி தண்டனை அனுபவிக்கலாம்'' என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வேப்ப மரத்திலிருந்து வேப்பங்காய்தானே வரும்; அவரைக் கொடியில் புடலை கிடைக்குமா என்ன! அதுபோல பரம்பரையாக வருவது என்றொரு விஷயம் உண்டே. உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதெனில் உங்கள் ...

தேசிய கட்சியானது திரிணமுல் காங்கிரஸ்

Posted: 02 Sep 2016 04:14 PM PDT

புதுடில்லி: மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி, தேசியக் கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. காங்கிரஸ், - பா.ஜ., - தேசியவாத காங்கிரஸ், - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், - இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய, ஆறு கட்சி கள் தேசியக் கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளன. அந்த வரிசையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியால், 1998 ஜனவரி, 1ம் தேதி துவக்கப்பட்ட திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளது. - கட்சிகளுக்கான அங்கீகாரம் மற்றும் மற்றும் சின்னங்கள் தொடர்பான சட்டத்தில், தேர்தல் ...

இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார்

Posted: 02 Sep 2016 04:11 PM PDT

- இறந்து விட்டதாக கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலம் வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல பட்டிமன்ற பேச்சாளர் லியோனி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்தார். இது குறித்து அவர் அளித்த புகார் மனுவில், மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நான் பட்டிமன்ற பேச்சாளராகவும், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணைச் செயலராகவும் இருந்து வருகிறேன். இதற்கிடையே கடந்த மாதம் 27-ஆம் தேதி என்னுடைய நண்பர் இனிகோ இருதயராஜ், என்னை செல்லிடப்பேசி மூலம் ...

தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் பெறும் கன்னட நடிகை!

Posted: 02 Sep 2016 04:08 PM PDT

- யூ டர்ன் என்கிற கன்னடப் படம் மூலமாக கவனம் பெற்றுள்ள பெங்களூருப் பெண் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிகின்றன. Ulidavaru Kandanthe என்கிற கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஷ்ரத்தா ரீநாத் முதலில் ஒப்பந்தமானார். பிரேமம் மலையாளப் படம் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் அழுத்தமாக அறிமுகம் ஆனவர் நிவின் பாலி. நேரம் படத்திலும் இவர் நடித்துள்ளார். மலையாளத்தில் நட்சத்திரமாகியுள்ள நிவின் பாலி, இதில் கதாநாயகனாக நடிக்கிறார். மிஸ்கினிடம் உதவியாளராகப் பணிபுரிந்த ...

பாலாற்றில் புதையுண்ட பழமையான கோயில் கண்டுபிடிப்பு

Posted: 02 Sep 2016 04:01 PM PDT

பள்ளிகொண்டா அருகே கந்தனேரி கழனிப்பாக்கம் பாலாற்றில் புதையுண்ட பழமையான கோயில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பள்ளிகொண்டா அருகே கந்தனேரி பாலாற்றில் தமிழக அரசின் சார்பாக மணல் குவாரி இயங்கி வருகிறது. அங்கு மணல் குவாரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் மணல் குவாரியில் வியாழக்கிழமை மணல் அள்ளிக் கொண்டிருந்தபோது திடீரென கல் தூண்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து அவ்விடத்தில் தோண்டத் தோண்ட கல் தூண்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்தது. அதனால் அங்கு ...

‘மசூதி கட்டித்தரும் இந்துக்கள்’: அயோத்தியின் மறுபக்கம்

Posted: 02 Sep 2016 09:27 AM PDT

- அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு சுமார் 24 வருடங்களுக்கு பிறகு, அதே அயோத்தியில் ஒரு சமூக நல்லிணக்க சம்பவம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. – 17ஆம் நூற்றாண்டில் அயோத்தியில் முகலாயப் பேரரசால் ஆலம்கிரி மஸ்ஜித் கட்டப்பட்டது. 1765-ம் ஆண்டு நவாப் ஷுஜா உத் தவ்லா, ஆலம்கிரி மஸ்ஜித் அமைந்துள்ள இடத்தை அயோத்தி ஹனுமன் கோயிலுக்கு தானமாக வழங்கினார். இதன்பிறகு பல நூற்றாண்டு காலமாக இந்த இடம் அயோத்தி ஹனுமன் கோயில் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. – இந்நிலையில் 300 ஆண்டுகள் பழமை ...

ஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி!

Posted: 02 Sep 2016 09:21 AM PDT

- கோயம்புத்தூர்ல நடந்த கண்காட்சிக்குப் போனபோது, வழியில ஒரு குளத்தைப் பார்த்தேன். குளம் முழுக்க தண்ணியே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை அடைஞ்சு கிடந்தது. இப்படி அடைஞ்சு இருக்கிறதால, நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும்னு எப்பவோ படிச்சது நினைவுக்கு வந்துச்சு. அப்பத்தான் 'இதை அகற்றுவதற்கு ஒரு கருவியை உருவாக்கினா என்ன'ன்னு தோணுச்சு. உடனே அது சம்பந்தமான தகவல்களை சேகரிச்சு, ஆய்வு பண்ணி, கருவியை உருவாக்குற முயற்சியில இறங்கினேன். பல சோதனைகளுக்குப் பிறகு, ஆசிரியர்கள் உதவியோட ஆகாயத்தாமரை ...

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Posted: 02 Sep 2016 09:19 AM PDT

தமிழ் இலக்கண தந்தை என அகத்தியரை சொல்கிறார்கள் அப்போதொல்காப்பியம் அகத்தியத்துக்கு பிந்தையதா ஆதாரத்தோடு விளக்குக

அறிவியல் அறிவோம்- ஆள் அடையாளம் காணும் கருவிழித்திரை உயிரியளவு.

Posted: 02 Sep 2016 09:17 AM PDT

ஒருவரை அடையாளம்காண இன்று பல வழிகள் பயன்படுத்த்ப்படுகின்றன. கைரேகை,முகத்தை அடையாளம் காணுதல், டி.என்.ஏ. ,கருவிழித்திரை-Iris- முறை, குரல், ஒருவரின் நடை,உள்ளங்கை,விழித்திரை-retina-,எழுதும்/தட்டச்சு செய்யும் விதம், கையெழுத்து  என பல பயன்படுத்தப்படுகின்றன.ஆனாலும் உயிரியளவுகளில் (Biometrics ) ஒருவரை அடையாளம் காண (அடையாள அட்டை,கடவுச்சீட்டு போன்றவற்றுக்கு) படத்துடன் கைரேகை,கையெழுத்து,கை அடையாளம் -palm print- , கருவிழித்திரை, விழித்திரை அங்கீகார முறை போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் தற்போது ...

ஒரு ஆணோட உச்சகட்ட பொறுமை எவ்வளவு…!

Posted: 02 Sep 2016 08:23 AM PDT

– @palanikannan04 சொந்தக்காரன், பக்கத்து வீட்டாரிடம் ஒதுங்கி வாழ்ந்து விட்டு, கடைசி காலத்துல ''என்கிட்ட பேசறதுக்கு யாருமே இல்ல''னு பொலம்பறவங்கதான் நகரத்துவாசிகள். – ——————————————– @Nunmathiyon கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் கடைசி ஆசையெல்லாம், 'எப்படியாவது இது படிக்கப்பட்டுவிட வேண்டும்' என்பதாகத்தான் இருக்கும். – ———————————————— – @chevazhagan1 கொஞ்சமாவது நல்லவனாய் மாற முயற்சி செய்யும் போதெல்லாம்… ''நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே'' என்கிறது ...

அந்தமான் - இறுதிச்சுற்று..!

Posted: 02 Sep 2016 07:30 AM PDT



அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்

மாத்தி யோசிக்கும் பார்த்திபனுக்கு அமெரிக்க விருது

Posted: 02 Sep 2016 06:13 AM PDT

- சினிமாத்துறை விருதுகளால் குளித்து முடித்திருக்கிறது. பிரான்சு நாட்டின் செவாலியே விருதை பெற்று பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கிறார் கமலஹாசன். கமலஹாசனுக்கு விருது கிடைத்த பரபரப்பில் அமெரிக்க அமைப்பிடமிருந்து தனது சினிமா சாதனைக்காக விருது பெற்றிருக்கும் பார்த்திபனை கொஞ்சம் மறந்துவிட்டோம். பார்த்திபன் மனிதநேயவாதி. திரைத்துறையில் எதையும் மாத்தியோசிக்கும் மனிதர். சென்னை நகரம் வெள்ளத்தின் பிடியில் சிக்கியிருந்தபோது வெள்ளத்தை மீறிய தங்களது மனிதநேயத்தை வெளிப்படுத்திய நல்ல மனிதர்களில் அவரும் ...

மீசையும் பேராசையும்

Posted: 02 Sep 2016 06:11 AM PDT

நானும் பட்டதாரி அவரும் பட்டதாரி நானும் அரசு ஊழியர் அவரும் அரசு ஊழியர் எனக்கும் ஊதியம் ஆயிரம் அவருக்கும் ஊதியம் ஆயிரம் யார் சொன்னது பெண்ணுக்கு சம உரிமை இல்லை என்று? – சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று மார்தட்டிக் கொள்கிறேன் ஆனால் தட்சணை கேட்கிறார் எதற்கு தட்சணை என்னிடம் இல்லாதது எது அவரிடம் இருக்கிறது இருக்கிறது, இருக்கிறது மீசையும் பேராசையும்..!! – ————————– -பிளாரன்ஸ் வில்லியம் குறிப்பு: மீண்டும் மீண்டும் – கவிதை தொகுப்பிலிருந்து – ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்களால் இத்தொகுப்பு ...

திறமை – ஒரு பக்க கதை

Posted: 02 Sep 2016 05:56 AM PDT

- சிபாரிசு என்றாலே பிடிக்காத மேனேஜிங் டைரக்டர் ராஜசேகர், பிரதீப் தன்னை வேலையில் சேர்த்துக் கொள்வதற்காக நீட்டிய பதினைந்து சிபாரிசுக் கடிதங்களைப் பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். ''எனக்கு சிபாரிசுன்னாவே பிடிக்காது. இது எல்லாருக்குமே தெரியும்! எவ்வளவு தைரியம் இருந்தா நீ இத்தனை பேர்கிட்ட சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருப்பே… வெளியே போ! என் கம்பெனியில திறமை இருக்கிறவங்களுக்குத்தான் வேலை! அடுத்தவங்க லெட்டரைப் பார்த்துட்டு யாருக்கும் வேலை கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு ...

பயம் – ஒரு பக்க கதை

Posted: 02 Sep 2016 05:52 AM PDT

- 'ராமாயி, கதவை நல்லா மூடிக்கோ! யாரு கதவைத் தட்டினாலும் திறக்காதே!'' – எச்சரித்து கதவைச் சாத்தினான் நல்லகண்ணு. ''ஏனுங்க, அமாவாசை இருட்டுல எங்கே போறீங்க?'' ''அமாவாசை இருட்டுதானே, நம்ம தொழிலுக்கு தோதா இருக்கும்! அதான், சந்திரபுரிக்கு போறேன். அங்க போனா, ஏதாச்சும் தேறும்!'' எனக் கிளம்பினான். ''ஏன்தான் இந்த திருட்டுத் தொழிலோ! வேற ஏதாச்சும் தொழில் செஞ்சு பிழைச்சா, கவுரதையா இருக்கும், அத விட்டுட்டு… திருடிப் பொழைக்கிற இந்த மனுஷனைக் கட்டிக்கிட்டு…'' என்று அவள் புலம்பப் புலம்ப கிளம்பி விட்டான் ...

பச்சோந்தி ஏன் தற்கொலை பண்ணிக்கிச்சு….!

Posted: 02 Sep 2016 05:46 AM PDT

@sss_offl சின்ன வயசுல என்கூட விளையாடின பையன், என்னைவிட சின்ன பையன், அவனுக்கு கல்யாணம்னு பத்திரிகை குடுக்க வந்தாங்க. நான் 'சோட்டா பீம்' பாத்துட்டு இருக்கேன்! – ————————————– @kalasal ஒரு பெண் எப்போது பேசத் துவங்குவாள் என்பதில் துவங்கி, எப்போது பேச்சை நிறுத்துவாள் என்பதில் முடிகிறது வாழ்க்கை… – ———————————— @Kannan_Twitz குடிச்சிட்டு போதையோட அளவைத் தெரிஞ்சுக்க ஊதிப் பாத்தது போய், செல்ஃபியை ஷேக் ஆகாம எடுத்து பாக்குறதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்! – ————————————- @aruntwitz குப்பை ...

பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது

Posted: 02 Sep 2016 03:17 AM PDT

-- ஜாக்கி சான் என்றாலே சண்டைப் பட பிரியர்களுக்கு உடல் முறுக்கேறும். திரையுலகில் பொன்விழா காணும் ஜாக்கி சான், நடிகர், தற்காப்புக் கலை நிபுணராக மட்டுமின்றி, தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என்றும் முத்திரை பதித்தவர். ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது நடிகர் ஜாக்கி சானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 30 திரைப்படங்களை இயக்கியுள்ள ஜாக்கிச் சானுக்கு திரைத் துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி ஆஸ்கர் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ...

வீட்டிற்குப் போ! - அம்புலிமாமா கதைகள்

Posted: 02 Sep 2016 02:57 AM PDT

- பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் அங்கு சேனகர் என்ற மாபெரும் யோகியாக போதிசத்வர் அவதரித்திருந்தார். அதே சமயம் அந்நகரை அடுத்து இருந்த ஒரு கிராமத்தில் பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒரு பிராமணன் இருந்தான். - ஒருநாள் அவன் ஏதோ ஒரு ஊரில் பிச்சை வாங்கிக் கொண்டு காட்டு வழியே தன் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு அசŽர வாக்கு "பிராமணா! நீ இன்று வீட்டிற்குப் போகாமல் இருந்தால் இறந்து விடுவாய். நீ வீட்டிற்குப் போனாலோ உன் மனைவி இறப்பாள்" என்று கூறியது. - பிராமணன் சுற்றிலும் பார்த்து ...

அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது- விடுகதைகள்

Posted: 02 Sep 2016 02:52 AM PDT

- 1) விடிய, விடிய பூந்தோட்டம் விடிந்து பார்த்தால் வெறுந்தோட்டம் 2)அத்துவானக் காட்டுக்குள்ளே குடை பிடிக்கிறார். அவர் யார்? 3) காட்டிலே இருக்கும் குடை, வீட்டில் இல்லாத குடை அது என்ன? 4) இரத்தத்தில் வளர்வது ஆனால், இரத்தம் இல்லாதது அது என்ன? 5) தண்ணீரில் நீந்தி வரும், தரையில் தாண்டி வரும் அது என்ன? 6) வெட்டிக் கூறு படுத்தி வைக்கிறார்களே தவிர எவரும் தின்பதில்லை அது என்ன? 7) அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது அது என்ன? 8) எண்ண, எண்ண எண்ணும் போது காசுகளோ… அது எது? 9) குளம்படிச் ...

காலதர் அவர்களின் வீடியோ பதிவு தேவை

Posted: 02 Sep 2016 02:51 AM PDT

கதை ஆசிரியர், ஆசான். காலதர் அவர்களின் வீடியோ டேப்பில் வெளியான (வர்ம சண்டை பயிற்சி) தற்காப்பு கலை சம்பந்த ஒளி பட பதிவு தேவை. உதவி செய்யுங்கள்.

சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு

Posted: 02 Sep 2016 02:39 AM PDT

தமிழகத்தில் உள்ள, 22 சுங்கச்சாவடிகளில், நேற்று முதல் கட்டணம், ஒரு ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. = தமிழகத்தில், 5,004 கி.மீ., நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், 3,006 கி.மீ., சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், 43 இடங்களில், சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மட்டுமின்றி, தனியாரும் கட்டணம் வசூலிக்கின்றன. - சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்த அடிப்படையில், தனியாருக்கு, சுங்க கட்டணம் வசூலிப்பு உரிமை ...

சில்லறை

Posted: 02 Sep 2016 02:24 AM PDT


சட்டையைக் கழற்றி
ஸ்டாண்டில் மாட்டினேன்
மாட்டும்போது பாக்கெட்டிலிருந்து
நோட்டும் விழுந்தது,
சில்லறையும் விழுந்தது
நோட்டு வீழ்ந்தபோத சத்தத்தைக் காணோம்
சில்லறை வீழ்ந்தபோது பெருஞ்சத்தம்
ஓ!..சில்லறை சத்தம் போடும்!!

—————————


அமுதபாரதி

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணத்தான்…!!

Posted: 02 Sep 2016 02:21 AM PDT

- நம்ம தலைவர், தெருவிலே எங்கே ஏழைகளைப் பார்த்தாலும் கிச்சு கிச்சு மூட்ட ஆரம்பிச்சுடுவார்…! – எதுக்கு? – ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணத்தான்…!! – ————————————— – ஐயையோ….! உங்க இடது கண்ணுக்குப் பதில் வலது கண்ணை ஆபரேசன் பண்ணிட்டேன்…! – பரவாயில்லை டாக்டர்! உங்களைப் பத்தி தெரிஞ்சதால் நானும் இடது கண்ணுலே கோளாறுன்னு பொய் சொன்னேன்…! – ————————————— – அமைச்சரே! நான் அறிவித்த மல்யுத்தப் போட்டியில் கலந்து கொள்ள ஒருவரும் முன்வரவில்லையே…! – வெற்றி பெறுபவருக்கு தங்கள் மகளை திருமணம் செய்து ...

ஒரு நிமிடக் கதை: இழப்பு

Posted: 02 Sep 2016 02:20 AM PDT

- அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய கணவன் சுதாகரிடம் காபியையும் பிஸ்கட் தட்டையும் நீட்டியபடியே மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் வாணி. "ஹரிணிக்கும் வினோத்துக்கும் நேத்தோட பரீட்சை முடிஞ்சாச்சு. ஊருக்குப் போறதுக்கு எப்ப டிக்கெட் எடுக்கப் போறீங்க?!" "ஊருக்கா? எதுக்கு? பசங்களுக்குத்தான் லீவு. எனக்குமா லீவு விடுறாங்க?" சிடுசிடுப்பாய்க் கேட்டான் சுதாகர். "எங்களை ஊர்ல விட்டுட்டு வந்திடுங்க. நாங்க பத்து நாள் உங்க அம்மா வீட்ல இருப்போம். பத்து நாள் எங்க அம்மா வீட்ல இருப்போம். பசங்களுக்கு லீவுல ...

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

Posted: 02 Sep 2016 02:18 AM PDT

வெந்தயம், ரொம்பவும் குளிர்ச்சி தரக்கூடியது. ஆனா, அதை நாம சாப்பாட்டுல பயன்படுத்துற அளவு ரொம்பவே குறைவு! வெந்தயத்தை நீராகாரத்துல ஒரு மணி நேரம் ஊற வெச்சு உலர்த்தினா… தூய்மையாயிடும். இந்த வெந்தயத்துல கொஞ்சத்தை வாயில போட்டுட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சா… சூட்டால உடம்புல உண்டாகுற எரிச்சல் குறையும். சீதபேதி, வயிறு இரைச்சல், வயித்துப் பொருமல் மாதிரியான பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும். இதேபோல தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சுட்டு வந்தா… மஞ்சள், ...

ஏறக்குறைய…

Posted: 02 Sep 2016 01:49 AM PDT

– கையில் இருக்கும் பறவையைக் கொஞ்சிக் கூத்தாடாமல் பறப்பதைப் பார்த்து ஏங்கிப் பரிதவிக்கும் மனம்…. – இளம் நரைக் கடந்து முதிர்நடை தொடங்கிய பின்னும் கடவுளிடம் உள்ள அதே நாட்டம் காமத்திடமும்… – வயதாக வயதாகத் தானே முடிவெளுக்க மனம் மட்டும் வெளுக்காமல் ஏறக்குறைய அப்படியே… – சாவதற்குள் சவக்காரம் கிடைக்குமா என்ற தேடலுடன்… – —————————————- -தியாக ரமேஷ் இன்னும் கொஞ்சம் வெட்கம் – கவிதை தொகுப்பிலிருந்து

வியர்வைத் துளி- உவமைக் கவிஞர் சுரதா.

Posted: 02 Sep 2016 01:46 AM PDT

எண்சாண் உடம்புக்கு இருபத்தெட்டுக் குறைகள் உண்டெனக் கூறுவோர் மேலோர் அவற்றுள் ஓர் குறை அடிக்கடி வியர்ப்பதாம் வேலை செய்கையில் மேனி வியர்க்கும் சுடச்சுடத் தின்றால் மேனி வியர்க்கும் வெயிலில் அலைந்தால் விடாது வியர்க்கும் ஊடல் தீர்ந்து கூடும் வேளையில் நிச்சயமாக நெற்றியில் வியர்க்கும் திடீரென வியர்த்துச் செத்தாரும் உண்டு விடந்தீண்டி வியர்த்துப் பிழைத்தோரும் உண்டு முத்துமுத்தாக வியர்த்த போதிலும் வியர்வை முத்தினை விலைக்கு வாங்குவோர் இந்த உலகில் எவருமே இல்லை *******************************************************

எங்க மாமா கும்பகோணத்துக்காரர் னு எப்படி கண்டு பிடிச்சே?

Posted: 02 Sep 2016 01:44 AM PDT

என்னது, உங்களுக்கு ஒரு மாதம் பிரசவ லீவு வேணுமா? – ஆமா சார்! என் மனைவிக்கு பத்தியச் சாப்பாடு சமைச்சுப் போடணுமே…! – —————————————- – எங்க மாமா கும்பகோணத்துக்காரர் னு எப்படி கண்டு பிடிச்சே? – ரெண்டு மாமாங்க வயசாகியும் உருப்படியா ஒரு வேலையிலே சேராம நீ தண்டச்சோறு திங்கறதா என்கிட்டே சொல்லி வருத்தப்பட்டாரு….! – ————————————- – நேற்று இதே வீட்டில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்போட ஒரு பெண்மணியை பார்த்தேனே அவங்க யாரு? – அதுவும் என் மனைவியேதான்….நேற்று சம்பள நாளாச்சே…!! – —————————————- கணவன்: உனக்கு ...

சிரிப்பு - கவிப்பேரரசு வைரமுத்து

Posted: 02 Sep 2016 12:49 AM PDT

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது வாழ்வின்மீது இயற்கை தெளித்த வாசனைத் தைலம் சிரிப்பு எந்த உதடும் பேசத் தெரிந்த சர்வதேச மொழி சிரிப்பு உதடுகளின் தொழில்கள் ஆறு சிரித்தல் முத்தமிடல் உண்ணால் உறிஞ்சல் உச்சரித்தல் இசைத்தல் சிரிக்காத உதட்டுக்குப் பிற்சொன்ன ஐந்தும் இருந்தென்ன? தொலைந்தென்ன? தருவோன் பெறுவோன் இருவர்க்கும் இழப்பில்லாத அதிசய தானம்தானே சிரிப்பு சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே துன்பம் வெளியேறிவிடுகிறது ஒவ்வொருமுறை ...

கடவுளின் ஓட்டம்

Posted: 02 Sep 2016 12:33 AM PDT

– ஓடினர், ஓடினர்! அப்பன் ஓடினார், அம்மை ஓடினாள்! அம்மான் பாற்கடல் பெம்மான் ஓடினார்! ஆனை முகத்தானும் அழகு முருகனும் கால் தலைப்படாமல் கடிதே ஓடினர்! – உள்ளம் பதற உணர்வு பதைக்க ஊரை விட்டே அனைவரும் ஓடினர்! – மார்கழி மாதம் வைகறைப் போதில் ஊர்தோறும் ஒலி பெருக்கியில் பாடும் பக்திப் பாடல்களைக் கேட்டே!! – ————————– கிண்டற்பித்தன் மீண்டும் மீண்டும் – கவிதை தொகுப்பு by ஏர் வாடி ராதாகிருஷ்ணன்

கவி பாடும் கட்டழகி, காடு சுற்றும் கருப்பழகி-விடுகதைகள்

Posted: 01 Sep 2016 07:04 PM PDT

1. கவி பாடும் கட்டழகி, காடு சுற்றும் கருப்பழகி- அது என்ன ? 2. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? 3. ஒத்த கால் குள்ளனுக்கு எட்டு கைகள் அவன் யார்? 4. இங்கே குத்துப்பட்டவன் அங்கே வாயை திறக்கிறான்.அவன் யார்? 5.ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம், அது என்ன ? 6. தாகம் போக்கும் தண்ணீர் இல்லை. களைப்பைப் போக்கும் மருந்தும் இல்லை. சண்டைக்குக் செல்லும் இது ஆயுதமும் இல்லை. இது என்ன? 7. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் ...

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 01 Sep 2016 06:55 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™