Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மின்சார ஒயரை கடித்து தற்கொலை

Posted: 18 Sep 2016 08:53 AM PDT

சென்னை:மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டான்.

சென்னை, சூளைமேடு, தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தான கோபாலகிருஷ்ணன்; இவரது இளைய மகள் சுவாதி, 24; மென்பொறியாளர். செங்கல்பட்டு அடுத்த பரனுாரில் பணியாற்றி வந்தார். தினமும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து, மின்சார ரயில் மூலம் வேலைக்கு சென்று வந்தார். ஜூன், 24 காலை, 6:40 மணிக்கு, நுங்கம்பாக்கம் ரயில் நிலைய இருக்கையில் அமர்ந்து ரயிலுக்காக காத்திருந்த போது, மர்ம நபரால் சுவாதி ...

மக்கள் நல கூட்டணியில் தொடர விஜயகாந்த் விருப்பம்

Posted: 18 Sep 2016 09:09 AM PDT

உள்ளாட்சி தேர்தலிலும், மக்கள் நலக் கூட்டணியில் தொடர, விஜயகாந்த் விரும்புவ தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தலின் போது, 'தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, தே.மு. தி.க.,வினர் விரும்பினர். ஆனால், மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., தேர்தலை சந்தித்தது. இந்த முடிவால், விரக்தி அடைந்த மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் பலர், கட்சியில் இருந்து விலகினர். அத்துடன், சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., படுதோல்வி அடைந்ததும், மேலும் பலர் கட்சியில் இருந்து வெளியேறினர். இதனால், கட்சியில் உள்ள நிர்வாகிகள் பலரும், ...

அட்டூழியம்! ராணுவ முகாம் மீது பாக்., கைக்கூலிகள் தாக்குதல்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறிக்கு 17 வீரர்கள் பலி

Posted: 18 Sep 2016 09:25 AM PDT

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில், உரி நகரில் உள்ள, ராணுவப் படைப்பிரிவு முகாமில்,அத்துமீறி ஊடுருவிய பயங்கர வாதிகள், கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில், 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்; 30 பேர் காயமடைந்த னர். தாக்குதலை அரங்கேற்றிய, நான்கு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீரில், பி.டி.பி., எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் உரி நகரில், ராணுவப் படைப்பிரிவு முகாம் உள்ளது. இதன் மீது, துப்பாக்கிகளுடன் ஊடுருவிய பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கூடாரம் எரிந்ததுஅந்த சமயத்தில், ...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை

Posted: 18 Sep 2016 10:22 AM PDT

அலகாபாத் : உத்தர பிரதேச மாநிலத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. அலகாபாத் நகரில் வசித்து வந்தவர், மொஹர்ராம், 58; பழைய இரும்பு வியாபாரி. நேற்று காலை வெகுநேரமாகியும், அவரது வீட்டின் கதவு திறக்கப்பட வில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவை திறந்து பார்த்தபோது, மொஹர்ராமும், அவரது இருமகள்கள் மற்றும் இரு மகன்கள் கழுத்து அறுக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை ...

வேலை வாங்கி தருவதாக மோசடி:ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மீது புகார்

Posted: 18 Sep 2016 10:33 AM PDT

புதுடில்லி:டில்லியில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ஒன்பது லட்சம் ரூபாய் பணம் வாங்கி, மோசடி செய்து விட்டதாக, ஆம் ஆத்மியைச் சேர்ந்த பெண், எம்.எல்.ஏ., மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அந்த கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து புகாரில் சிக்கி வருகின்றனர்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள், அமானத்துல்லா கான், தினேஷ் மெகானியா உள்ளிட்டோர் பாலியல் புகாரில் சிக்கினர்; சுரீந்தர் சிங் மீது, மோசடி வழக்கு பதிவானது.இந்நிலையில், அக்கட்சியின் பெண், எம்.எல்.ஏ., சரிதா சிங், அரசு வேலை ...

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்...ஏமாற்றம்!: வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை விவகாரங்களில் 'கப்சிப்': கருணாநிதி, ஸ்டாலின் பேசாமல் மூன்றாம் மட்ட தலைவர்கள் 'உரை'

Posted: 18 Sep 2016 10:33 AM PDT

சட்டசபை கூட்டத்தொடரில், தி.மு.க.,வுக்கு தரப்பட்ட நெருக்கடி மற்றும் விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தல் விவகாரங்கள் குறித்து, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தலைவர் கருணாநிதியும், பொருளாளர் ஸ்டாலினும் எந்த கருத்தையும் வலியுறுத்தி பேசாமல் மூன்றாம் மட்ட தலைவர்களை மட்டும் பேச விட்டு 'கப்சிப்' என இருந்தது, மாவட்ட செயலர்கள், தொண்டர் களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.காவிரி பிரச்னை, உள்ளாட்சி தேர்தல் குறித்து கலந்தாலோசிக்க, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத் ...

'மோடிக்கு எதிராக பேசியதால் தான் கெஜ்ரிவால் நாக்கின் அளவு குறைப்பு'

Posted: 18 Sep 2016 10:34 AM PDT

பனாஜி:''பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பேசியதால் வளர்ந்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நாக்கின் அளவு, குறைக்கப்பட்டுள்ளது,'' என, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான மனோகர் பரீக்கர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் டில்லியின் முதல்வராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தொடர்ந்து இருமல் ஏற்பட்டதால், பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார்; அங்கு அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், கோவா மாநிலம் பனாஜியில், ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் கூறியதாவது: பிரதமர் மோடிக்கு ...

தனியார் மருத்துவமனைகளுடன் மருத்துவ சேவை: மத்திய அரசு திட்டம்

Posted: 18 Sep 2016 10:35 AM PDT

போபால்:''நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்கும் வகையில், தனியார் மருத்துவ மனைகளுடன் இணைந்து, சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்,'' என, மத்திய சுகாதார அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

பயன்படுத்துவதில்லை:மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்த கருத்தரங்கில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஜே.பி.நட்டா பேசியதாவது:மக்களுக்கான
வசதிகள் அளிப்பதில், நிதி ஒரு பிரச்னையே அல்ல; ஆனால், சில மாநிலங்கள், இதற்காக அளிக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்துவதில்லை. உதாரணமாக, பல்வேறு திட்டங்களுக்கு அளித்த, ...

'தமிழகத்தில் வேரூன்ற தெலுங்கு தேசம் கட்சி திட்டம்'

Posted: 18 Sep 2016 10:41 AM PDT

கோவை:''தெலுங்கு தேசம் கட்சி தமிழகத்தில் வேரூன்ற திட்டமிட்டுள்ளது,'' என்று ஆந்திர மாநிலம், ராஜமகேந்திரபுரம் எம்.பி., மாகந்தி முரளிமோகன் கூறினார்.

கோவை கம்ம மகா சமாஜம் டிரஸ்ட் சார்பில், கம்ம மகா சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இதில் எம்.பி., மாகந்தி முரளி மோகன் பேசுகையில், ''தாய் மண்ணுக்கும், தாய் மொழிக்கும்முக்கியத்துவம் தர வேண் டும். தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவுதான் தாய்மொழி உறவு. தாயைப்போன்றது தாய்மொழி. தமிழகத் தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களை ஒன்றிணைத்து, விரை வில் இங்கு, தெலுங்கு தேசம்கட்சி வேரூன்றும்,'' என்றார்.இந்திய தொழில் ...

ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடக்குமா?

Posted: 18 Sep 2016 10:44 AM PDT

'வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, ஊரக உள்ளாட்சி தேர்தலை, இரு கட்டங்களாக நடத்த வேண்டும்' என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்பு கள் செயல்படுகின்றன. ஊரக உள்ளாட்சியில், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கிறது. வாக்காளர்கள் நான்கு ஓட்டுகளை அளித்து, பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சிகளில், மாநகராட்சி,
...

காவிரியில் கூடுதல் நீர் கிடைக்குமா? கண்காணிப்பு குழு இன்று கூடுகிறது

Posted: 18 Sep 2016 01:02 PM PDT

புதுடில்லி : காவிரி நதி நீரை பங்கிடுவது தொடர்பான, காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டில்லியில் இன்று நடக்கிறது; இதில் தமிழகத்திற்கு கூடுதலாக எவ்வளவு நீர் கிடைக்கும் என்பது பற்றி இறுதி செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், 'காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டம், 12ல் நடந்தது. அப்போது, 'இரு மாநிலங்களும், தங்களுக்கு கிடைத்த நீரின் அளவு உள்ளிட்ட விபரங்களை தாக்கல் ...

ரஷ்ய பார்லி., தேர்தலில் புடின் கட்சி வெற்றிமுகம்

Posted: 18 Sep 2016 01:21 PM PDT

மாஸ்கோ : ரஷ்யாவில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஆதரவான கட்சிகளுக்கு பெரும்பான்மை ஓட்டுகள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனால், நான்காவது முறையாக, 2018ல், புடின், மீண்டும் அதிபர் பதவியை ஏற்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
ரஷ்யாவில், அதிபர் புடின் ஆட்சியில் மோசமான பொருளாதார சூழல் நிலவுகிறது. பல்வேறு பிரச்னைகளால் புடின் ஆட்சி சிக்கல் மிக்கதாகவே உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவில் நேற்று நடந்த பார்லிமென்ட் தேர்தலில், ஆளும் ஐக்கிய ரஷ்யா மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகளுக்கு ஆதரவாக, ஓட்டுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் ...

23ல் கையெழுத்தாகிறது 'ரபேல்' விமான ஒப்பந்தம்?

Posted: 18 Sep 2016 03:04 PM PDT

புதுடில்லி : இந்திய விமானப்படைக்கு, 'ரபேல்' ரக போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டுடன், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம், வரும், 23ம் தேதி கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப் படைக்கு தேவையான, 36 போர் விமானங்களை, பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்குவது என திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக, பல சுற்றுகள் நடந்த பேச்சுக்கு பின், இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும், 23ல், இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, பிரான்ஸ் ராணுவ அமைச்சர் ஜீன் யூஸ் லீ டிரையன், 22ல், இந்தியா ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™