Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்

Posted: 18 Sep 2016 11:07 AM PDT

அறிந்து கொள்வோம் நம் அமுதத் தமிழை -1 மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் (பரஞ்சோதி முனிவரின் சீடரும்  சைவசமய சந்தானக் குரவர் நால்வருள் முதலாமவரும் ஆகிய திருவெண்ணைநல்லூர் மெய்கண்டார் என்னும் சுவேதவனப்பெருமாள் அருளிய   சிவஞான போதம்) உலகில் சதாசர்வ காலமும் பிறப்பு -  இருப்பு -  இறப்பு என்னும் சுழலில் சிக்கி, இருப்பிற்காக ஆயுள் முழுவதும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியனவற்றையே  வழிகாட்டும் துணையாகக் கொண்டு அவற்றின் பொருட்டே உழைத்து வாழ்வின் துயரக் கடலினின்று மீளாமல்  அவதியுற்றுக் ...

பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம்

Posted: 18 Sep 2016 10:34 AM PDT

பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம் http://www.vikatan.com/news/miscellaneous/68502-auto-drivers-execute-an-idea-to-save-tree-and-vinayagar.art புதுச்சேரி: மரங்களைக் காப்பாற்ற சாமியும், சாமியைக் காப்பாற்ற பூட்டும் போட்டு புல்லரிக்க வைத்திருக்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள். புதுச்சேரி, மிஷன் வீதி - ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் வேப்ப மரம், அரச மரம், கல்யாண முருங்கை மூன்று மரங்களும் ஒன்றாக வளர்ந்திருக்க அதனடியில் இந்த சிறிய அழகிய விநாயகர் வீற்றிருக்கிறார். ஆனால் அவரது கையில் பூட்டு ...

திருக்குறள் (821 - 830) - "வஞ்சகரின் கூடாநட்பு" பற்றிய பத்து குறளின் சிறுகுறிப்பும் விளக்கமும்.

Posted: 18 Sep 2016 08:45 AM PDT

திருக்குறள் (821 - 830) - "வஞ்சகரின் கூடாநட்பு" பற்றிய பத்து குறளின் சிறுகுறிப்பும் விளக்கமும். பத்து குறளின் சிறுகுறிப்பு தொகுதி : கூடநட்பு  பகைவனின் வில்லென வளைந்தும், பரத்தையின் சொல்லென  நெளிந்தும்  இனிமை காட்டும். ஆனால் உண்மையில் அது கொல்லனின் உலைக்கல்லுக்கு ஒப்பாகும். மேலும்  பகைவர் தொழும் கைக்குள் ஆயுதம் போல்  வஞ்சகரின் சதி திட்டமும்  அவரின்  கண்ணீரால்  மறைக்கப்படும்.எனவே  அதனை அகத்தில் விலக்கி புறத்தில் நகைத்து சமயத்தில் விலக்கவும். விளக்கம் : அகத்தே பகைமை கொண்டு முகத்தால் ...

அறிமுகம் தனபால்

Posted: 18 Sep 2016 08:36 AM PDT

பெயர்: தனபால்
சொந்த ஊர்: பொள்ளாச்சி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: தேடுபொறியில் சிக்கியது
பொழுதுபோக்கு: படிப்பது
தொழில்: வேலை தேடும் ஆசாமி
மேலும் என்னைப் பற்றி: சொல்லுவதற்கு நான் என்ன சோழர் பரம்பரையா ?

ரமணியனின் ஹைக்கூ

Posted: 18 Sep 2016 08:19 AM PDT

[b]ரமணியனின் ஹைக்கூ[/b]


மழை
வருகின்ற மழையை  
வரவேற்கிற அழகு
தும்பிகளின் கோலாகலம்  

அரசியல்வாதி வாரிசு
நடைப்பயிற்சி மேடையில்
யாவரும்  வலம்  வருகையில்
எதிரே இடமாக வருபவன்  

வாழை மரம்
 தொங்கிய வாழை குலை
வாழைபூச்சொரிந்து
கன்னுகளை  வாழ்த்தியது

ரமணியன்

ஸ்வாதி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை

Posted: 18 Sep 2016 07:25 AM PDT

ஸ்வாதி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். முதலில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஈடுபட்டது யார் என்பதை கண்டுபிடிக்க ...

புத்தகம் தேவை

Posted: 18 Sep 2016 07:20 AM PDT

புத்தகம் தேவை

உலகின் மனித இனம் தோன்றிய வரலாற்றை அறிய உதவும் மதன் எழுதிய கிமு கிபி புத்தகம்

யாரிடமாவது இணைப்பு இருந்தால் பகிரவும்

முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை

Posted: 18 Sep 2016 07:12 AM PDT

முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை இன்றுடன் ஈகரை பிறந்து 8 ஆண்டுகள் முடிய போகின்றன . தளம் உருவாக்கப்பட்டு 8 பொன்னான ஆண்டுகள் . ஈகரை சிசுவை ஈன்றெடுத்தவர் --தாயுமானவர் எனக் கூறுவோமே -- தாயுமானவர் வேறு யார்  சிவன் தான் . தனி ஒரு மனிதனாக ,one man army , என்பது போல் , அல்லும்  பகலும் உழைத்து , முன்னுக்கு கொண்டுவந்துள்ளார் . அவருக்கு நன்றி கூறுவோம் . வியாபார நோக்குடன் பல தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு ,லாபத்துடன் அவைகள் செயல்படுகின்ற இவ்வுலகில் தமிழுக்காக ஒரு தளத்தை ஆரம்பித்து , விளம்பரங்களை ...

கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்!

Posted: 18 Sep 2016 06:43 AM PDT

தமிழ் கல்வெட்டு எழுத்துக்களைப் படிக்க உதவுகிற எழுத்துருவை வடிவமைத்துள்ளார் மதுரை இளைஞர் உலக அளவில் அதிக கல்வெட்டுக்கள் காணப்படும் ஒரே மொழி தமிழ். இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புராதன தமிழ் கல்வெட்டுக்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் தமிழ் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை தொல்லியல் நிபுணர்களால் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல்தான் இப்போதும் உள்ளது. இதனால் கல்வெட்டுக்களை காட்சிப்பொருட்களாக மட்டுமே காண்கின்ற நிலை. இந்த நிலையை மாற்றும் வகையில் சாதாரண மனிதர்களும் ...

எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில் பிடித்தது.

Posted: 18 Sep 2016 06:27 AM PDT

நிறம் வலைப்பதிவில் படித்தது. பிடித்தது - பகிரப்பட்டது. பலம் பற்றிய கேள்விகளைத் தோற்றுவித்த, தோல்வியோ அல்லது அது போன்ற எண்ண வீச்சோ தோன்றக் காரணமாகவிருந்தது இதுதான் என நாம் பலதையும் சுட்டிக்காட்டலாம். அது வாழுகின்ற சூழலின் பிழை எனலாம். விதியின் விளையாட்டு எனலாம். அடுத்தவரின் பொறாமை எனலாம். சமூகத்தின் இயலாமை எனலாம். எதையும் எப்படியும் எப்போதும் எமது தோல்விக்குக் காரணமென சொல்லிச் செல்லலாம். அதனாலேயே, அடுத்தவர்களோடு எம்மை ஒப்பிட்டுக் கொண்டு கண்கலங்கலாம். எல்லாவற்றையும் பற்றிக் குறை கூறிக் கொண்டு ...

மறைநெறி நவிலும் நிறைமொழி

Posted: 18 Sep 2016 05:07 AM PDT

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் ) {நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது} அவையடக்கம் வெயிலுக்கு இடும்விளக்குப் போலும்யான் நீதிநூல் கூறல் 1.வெயிலினைச் சோதிசெய்வான் விளக்கிடல் போலுங்காகங் குயிலினுக் கிசையுணர்த்துங் கொள்கையே போலு நட்டம் மயிலினுக் குணர்த்துங் கான வாரண மெனவும் யாவும் பயிலுல கிற்கு நீதி பகரயான் துணிவுற் றேனால். பதப்பொருள்: வெயில் – சூரியன் சோதிசெய்தல் – காட்டுதல். விளக்கு – கைவிளக்கு. ...

பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்!

Posted: 18 Sep 2016 01:29 AM PDT

எம்.ஆர். ராதா நாடக மேடைகளில் வாழ்ந்தவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒருபோதும் நடித்திராதவர். நாடகக்காரர், பகுத்தறிவுவாதி, சினிமா நடிகர், பெரியாரின் தொண்டர், அதிரடிப் பேச்சாளார், குடும்பத் தலைவர், சிறைச்சாலைக் கைதி என்று அவருடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட பாத்திரங்கள். ஆனால் எதிலுமே அவர் அரிதாரம் பூசியதில்லை. ராதா, ராதாவாகவே வாழ்ந்தார். தமிழ் நாடகத் துறைக்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பு மிகப்பெரியது. தமிழகத்தில் நாடகங்களின் பொற்காலத்தில் 'நாடக உலக சூப்பர் ஸ்டாராக' வலம் வந்தவர் எம்.ஆர். ராதாவே. அவரது ...

செய்திகள் என்ன சொல்லுது?

Posted: 18 Sep 2016 12:04 AM PDT

1. ஐயப்பன் பிரம்மச்சாரிதான் ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல. கேரள மூத்த தலைவர் பேச்சு. பெண்களை வெறுக்காதவர் ஐயப்பன் என்கிறதாலேயே தான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி கேட்கிறாங்க. அனுமதி கொடுங்களேன். அதை ஏன் மறுக்கிறீங்க. 2. ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும். வங்கி ஆளுநர். ரகுராம் ராஜன். சரிதான். அரசியல்வாதிகளின் ஆதிக்கமும செல்வாக்கும் மதிக்கப்படாது என்பதாலே தானே அவங்க தலையீடு உள்ளது. 3. விஜய் மல்லையாவின் ரூ.பாய்.6,630 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம் ...

இது உங்கள் இடம்!

Posted: 17 Sep 2016 11:15 PM PDT

ஜாதக பைத்தியம்! சமீபத்தில், என் நண்பர், தன் மகனை ஜாமினில் எடுப்பதற்காக என்னையும் கூப்பிட, அதிர்ந்து போய், 'என்னாச்சுப்பா... நல்ல பையன் தானே... என்ன செய்தான்...' என்று கேட்க, அவர் கூறிய பதிலால், மேலும் அதிர்ந்து போனேன். நண்பரின் மகன், குரு பெயர்ச்சியின் போது வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்வான் என, அவனது ஜாதகத்தில் இருந்ததாம். பெரும் பிரச்னைகளில் சிக்கி, பெரிய வழக்காக வரும் முன்பே, 'பாரில்' சும்மா சண்டை போடச் சொல்லியுள்ளார் நண்பர். அவனும், அதுபோலவே செய்து, போலீசிடம் மாட்டி, இப்போது சிறையில் ...

பாமரர் தேவாரம்

Posted: 17 Sep 2016 09:44 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™