Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


துணை ஜனாதிபதி பதவி கிடைக்க அ.தி.மு.க.,வுக்கு...வாய்ப்பு?: 50 எம்.பி.,க்கள் உள்ளதால் இலக்கை நோக்கி மேலிடம் முயற்சி

Posted: 17 Sep 2016 05:55 AM PDT

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம், ஓராண்டுக்குள் முடிவடைய உள்ளதால், அப்பதவியில் அமர, லோக்சபாவி லும், ராஜ்யசபாவிலும்,50 எம்.பி.,க்கள் கொண்ட, அ.தி.மு.க.,வுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது; அதற்கான முயற்சியில், கட்சி மேலிடம் இறங்கி உள்ளது.

டில்லி அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங் களில், இப்போது அதிகமாக விவாதிக்கப்படும் விஷயம், அடுத்த துணை ஜனாதிபதி யார் என்பது தான். ஆளும் கட்சியான பா.ஜ.,விலி ருந்து எந்த தலைவர் இந்த பதவிக்கு வருவார் என்ற பேச்சும், கூட்டணி கட்சிகளிலிருந்து யாராவது நியமிக்கப்படுவரா என்ற எதிர்பார்ப்பும் ...

ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் தயாரித்து இந்தியா சாதனை ! கடற்பகுதி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த திட்டம்

Posted: 17 Sep 2016 09:39 AM PDT

மும்பை:உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அதிநவீன ஏவுகணைகள் பொருத்தக்கூடிய, பிரம்மாண்ட போர்க்கப்பல், நேற்று முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. உலகின் சிறந்த போர்க்கப்பல்களுடன் ஒப்பிடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள, இதற்கு, 'மர்மகோவா' என, பெயரிடப்பட்டுள்ளது.

கடற்படைக்கு தேவையான போர்க்கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டப்படி, அரசால் நடத்தப்படும், எம்.டி.எல்., எனப்படும், 'மஸ்கவான் டாக் ஷிப்பில்டர்ஸ்' நிறுவனம், அதிநவீன போர்க்கப்பல்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள, இரண்டாவது பிரம்மாண்ட போர்க்கப்பலுக்கு, 'மர்மகோவா' என, ...

4 லட்சம் இலவச காஸ் இணைப்புகள் வழங்கும் பணி தமிழகத்தில் துவக்கம்

Posted: 17 Sep 2016 10:27 AM PDT

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று, தமிழகத்தில், நான்கு லட்சம் இலவச காஸ் இணைப்பு வினியோகம் துவங்கியது; காஸ் ஏஜன்சி அலுவலகங்களில் பெண்கள் குவிந்தனர்.

பிரதமர் மோடியின், 'உஜ்வாலா' திட்டத்தில், நாடு முழுவதும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு, ஐந்து கோடி இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், தமிழகத்தில், நான்கு லட்சம் இணைப்புகள் வழங்கும் பணி நேற்று துவங்கியது.பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ் ஏஜன்சிகள், ...

3 தொகுதி இடைத்தேர்தல் எப்போ? தேர்தல் கமிஷன் முடிவு

Posted: 17 Sep 2016 10:30 AM PDT

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, வரும், 23ம் தேதி டில்லி செல்கிறார். அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து, தேர்தல் கமிஷனில் ஆலோசனை நடைபெற உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபைக்கு, மே, 16ல் தேர்தல் நடந்தது. அப்போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி; தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகளில், தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக, வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்எழுந்தது.மேலும், வேட்பாளர்களின் வீடுகளில் ...

செல்வாக்கு மிக்கவர்களுக்கே உள்ளாட்சி 'சீட்':அ.தி.மு.க., தலைமை அதிரடி முடிவு

Posted: 17 Sep 2016 10:38 AM PDT

மாற்று கட்சியில் இருந்து, அ.தி.மு.க.,விற்கு வந்தவர்களில், செல்வாக்கு மிகுந்தவர்களுக்கு, உள்ளாட்சி தேர்தலில், 'சீட்' வழங்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பெற்ற ஓட்டுகளை விட, ஒரு சதவீதம் மட்டுமே, தி.மு.க., கூட்டணி குறைவாக பெற்றது; இது, அ.தி.மு.க., தலைமைக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.எனவே, உள்ளாட்சி தேர்தலில், 2011 போல், பெரும் வெற்றியை பெற முடியுமா என்ற சந்தேகம், அ.தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல மாவட்டங்க ளில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அதிகம்.அவர்கள், தங்கள் ...

மாபெரும் வெற்றியை தேடி தந்த பிறகே கண்ணை மூடுவேன்:தி.மு.க., முப்பெரும் விழாவில் கருணாநிதி உருக்கம்

Posted: 17 Sep 2016 10:44 AM PDT

சென்னை:''தி.மு.க.,விற்கு மாபெரும் வெற்றியை தேடி தந்துவிட்டு தான் கண்ணை மூடுவேன்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

சென்னை, அறிவாலயத்தில், நேற்று, தி.மு.க., சார்பில், முப்பெரும் விழா நடந்தது. பொதுச் செயலர் அன்பழகன், தலைமை தாங்கினார். விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:தி.மு.க.,வில் இருக்கும் செயல்வீரர்கள், பேச்சாளர் கள், கவிஞர்கள், கலை வல்லுனர் கள், தொண்டர்கள் அனைவரும் இணைந்து, கட்சியை மேலும் வலிமையுடைய தாக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.என் ஏழாவது வயதில், இயக்கத் தொண்டர் களோடு இணைந்தேன். 50 ஆண்டுகளுக்கும் ...

முடிவுக்கு வந்தது குழப்பம் சிவ்பாலுடன் அகிலேஷ் சந்திப்பு

Posted: 17 Sep 2016 10:47 AM PDT

லக்னோ:உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், நேற்று, தன் சித்தப்பாவும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான சிவ்பால் யாதவை சந்தித்து பேசினார். இதனால், சமாஜ்வாதி கட்சியில் நிலவி வந்த குழப்பம், முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் சகோதரரும், மூத்த அமைச்சருமான சிவ்பால் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் இடையே, கடந்த சில நாட்களாக, கடும் கருத்து மோதல் நடந்தது.இதன் காரணமாக, சமாஜ்வாதி கட்சியின், உ.பி., மாநில தலைவர் பதவியிலிருந்து அகிலேஷ் யாதவ், ...

ஷாக்!:நத்தத்துக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்து பறிமுதல்; வருமான வரித்துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்

Posted: 17 Sep 2016 10:59 AM PDT

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை யில், 300 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

கடந்த சட்டசபை தேர்தலின் போது, கரூரில் உள்ள பைனான்சியர் அன்புநாதன் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்; அதில், 4.70 கோடி ரூபாய் சிக்கியது.இதுதொடர்பாக, வருமான வரித்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அன்புநாதனுக்கும், நத்தம் விஸ்வநாதன், அவரது மகன் அமர்நாத் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த தொடர்பு வட்டம், ...

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா பதவிக்கு...ஆபத்து ! உட்கட்சி பூசலால் கூட்டணி ஆட்சி தொடர்வதில் சிக்கல்

Posted: 17 Sep 2016 12:03 PM PDT

ஜம்மு - காஷ்மீரில், அமைதியை நிலைநாட்ட தவறிவிட்டதாக, முதல்வர் மெஹபூபா முப்தி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள, தாரிக் ஹமீது கர்ரா, லோக்சபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததுடன், பி.டி.பி., கட்சியிலிருந்தும் விலகியுள்ளார். இது, பி.டி.பி., தலைவரும், மாநில முதல்வருமான மெஹபூபாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு - காஷ்மீரில், பி.டி.பி., எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த, பர்ஹான் வானி, ஜூலையில் பாதுகாப் புப் ...

முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய பாக்., கோர்ட் உத்தரவு

Posted: 17 Sep 2016 12:34 PM PDT

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் மதகுரு கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் மாஜி அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.முஷாரப் அதிபராக இருந்தபோது 2007ம் ஆண்டு லால் மசூதிக்குள் ராணுவம் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடியது. இந்த மோதலில் மதகுரு அப்துல் ரஷீத் காஜி கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு முஷாரப் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில் இவ்வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முஷாரப் ...

'நான் ஒழுக்கம் நிறைந்த சேவகன்!'

Posted: 17 Sep 2016 02:41 PM PDT

பனாஜி,:கோவா மாநிலத்தைச் சேர்ந்தவரும், பா.ஜ., மூத்த தலைவருமான மனோகர் பரீக்கர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, ராணுவ அமைச்சராக பதவி ஏற்றார். கோவாவில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அம்மாநில, ஆர்.எஸ்.எஸ்., அதிருப்தி தலைவர் சுபாஷ் வெலிங்கர், புதிய கட்சியை துவக்கி உள்ளார். இந்நிலையில், மனோகர் பரீக்கர் கூறியதாவது:யார் வேண்டுமானாலும், புதிய கட்சி துவக்கலாம். என்னைப் பொறுத்தவரை, நான் ஒழுக்கமான சேவகன்; ஆர்.எஸ்.எஸ்.,சை பின்பற்றுகிறேன். என் வாழ்நாளில், ஒழுக்கத்தை எப்போதும் கடைபிடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். ...

ஆம்ஆத்மி கட்சி ரு 854 கோடி வரை டில்லி அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும் : காங்கிரஸ் கோரிக்கை

Posted: 17 Sep 2016 03:07 PM PDT

டில்லி: ஆம்ஆத்மி கட்சி தனது கட்சி வளர்ச்சிக்காக அரசாங்க கஜானா பணத்தை எடுத்து விளம்பரம் செய்த விவகாரத்தில், அக்கட்சி டில்லி அரசுக்கு ரூ 854 கோடி வரை திரும்ப செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆம்ஆத்மி அரசு நிதியிலிருந்து ரூ 284 கோடி வரை கட்சி வளர்ச்சிக்காகவும், கட்சியினர் லாபத்திற்காகவும் விளம்பர செலவு செய்துள்ளது. இந்த பணம் விளம்பர இயக்குநரகம் அதாவது டி,ஏ.வி.பி., மூலம் செலவு செய்யப்பட்டிருந்தால் அதற்கு மூன்று மடங்கு பணம் தேவைப்பட்டிருக்கும். எனவே ஆத்ஆத்மி ரூ 854 கோடி வரை செலவு செய்ய நேர்ந்திருக்கும் என்று டில்லி ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™